Monday, December 24, 2012

திருப்பூர் பதிவர், ட்விட்டர்,ஃபேஸ்புக் சந்திப்பு - 30.12.2012

பதிவர் சந்திப்பு இதுவரை நடந்தவற்றில் பிரமாண்டமான வெற்றி பெற்றவை 


1. நம்ம உணவு உலகம் ஆஃபீசர் நடத்திய நெல்லை சந்திப்பு , அனைவரையும் அழைத்து பிரமாதபப்டுத்தினார் , 


2. அடுத்து மதுமதி யின் சென்னை பதிவர் சந்திப்பு . கலக்கு கலக்குன்னு கலக்கிட்டார் ,


 3. 3 வதா  கோவைல  சின்ன வீடு சுரேஷ் , சித்தார் சங்கவி ( அந்த தொட்டபெட்டா முட்டை புரோட்டா சங்கவி அல்ல)  ரக்சியமா நடத்தினது. அது எந்த அள்வு ஹிட் ஆச்சுன்னு சரியா தெரியல .( அதை ஏன் ரகசியமா நடத்தினாங்கன்னு ஒரு பதிவு போடலாம்னா 2 பேரும் அலைபேசியில் தொடர்பு கொண்டு “ விடுய்யா விடுய்யா நமக்குள்ளே என்ன?  அப்டினு பூசி மெழுகிட்டாங்க ;-)


4.  நாலாவதா  இப்போ நடக்கப்போகும் திருப்பூர் பதிவர் சந்திப்பு


வழக்கம் போல் அவங்க போட்ட பதிவோட காபி பேஸ்ட் பதிவு . நாம டைப் பண்ணி போடும் பதிவு காதலித்து கைப்பிடிக்கும் பெண் போல , ரொம்ப உழைக்கனும், காபி பேஸ்ட்  பதிவு மாமா பொண்ணு , அத்தை பொண்ணு மாதிரி, நமக்கு சொந்தமில்லை , ஆனாலும் ஜாலி ஹி ஹி

வாருங்கள் இணையத்தால் இணைவோம்

இதுவரை இணையம் மூலம் மட்டுமே பழகிய சொந்தங்கள் நேரில் காண ஒரு வாய்ப்பு .

 நாமும் வளர்ந்து நம்முடன் சமுதாயத்தையும் வளர்க்க ஒரு வாய்ப்பு.

தாய்  தமிழ் பள்ளி மாணவர்களின் அருமையான கலை நிகழ்ச்சிகள் காண ஒரு வாய்ப்பு ..

அந்த மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ ஒரு வாய்ப்பு .

தமிழ்நாட்டை கலக்கிய ஒரு அருமையான ஆட்சிபணி அதிகாரியை சந்திக்க நல்ல வாய்ப்பு


வலைதளங்கள் இனி என்ன செய்ய வேண்டும் , வருங்காலம் எப்படி இருக்கும் என மற்றவர்களுடன் விவாதிக்க ஒரு வாய்ப்பு .

நமது தளம் மேலும் வளர , நாமும் பல புது விஷயங்கள் கற்று கொள்ள ஒரு வாய்ப்பு ..

இந்த அனைத்து வாய்ப்புகளும் வேண்டுமா ????

இங்கே  வாருங்கள் :

நாள்      :  டிசம்பர் 30, 2012 ஞாயிற்று கிழமை 

நேரம்   :   மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 

இடம்   :   திருப்பூர் குமார் நகர், 
                 ஸ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் திருமண மண்டபம்,
                 திருப்பூர்.
 
 
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
  நம்மில் ஒன்றுமை நீங்கில்
  அனைவருக்கும் தாழ்வு " 

          இன்று நாம் காணப்போகும் இவ்விழாவானது  "தமிழ் உறவோடு உறவாடுவோம்"    என்னும்  புது சிந்தனையின் அறிமுகத்திற்கான துவக்க விழா ஆகும்.
மக்கள் சந்தை.காம் இணையத்தின் தொழிற்களம் மின் இதழ்  மற்றும் தமிழ் மீட்சி இயக்கம் இணைந்து திருப்பூர் மாநகரில் " உறவோடு உறவாடுவோம் " என்ற தலைப்பில் தமிழ் உறவுகளை ஒரு களத்தில் குவிக்க இவ்விழாவை எதிர்கொள்கின்றது.
நோக்கம் ஒன்றாகியதால் இவ்விழாவை ஒரு நல்ல கருத்தரங்க மேடையாக உருவாக்கி வருகின்றோம். 
பல அமைப்புகளை சார்ந்த நண்பர்களும் இந்த நோக்கத்திற்கு ஆதரவளித்து, தங்கள் ஆற்றல்களையும் உடன் அளித்து வருகின்றனர்.
இவ்விழாவின் முக்கிய நோக்கம் : 

"  ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க  நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள் என்ற சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்துவதே ஆகும்."

       இதில் தொழிற்களம், தமீழ் மீட்சி இயக்கம்  போன்ற இன்னும் பல அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன.



நிகழ்ச்சி நிரல் : 

சரியாக மதியம் 2.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது

2.30  -   :   தமிழ்த்தாய் வாழ்த்து
            :  வரவேற்புரை
2.45  -   :   துவக்கவுரை ( விழாவின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து)

3.00  -   : கருத்தரங்கம் 
         
தலைப்புகள் :

குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பார்வைகள்:

1. தனி மனித ஒழுக்கம்,
2. இலஞ்சம், ஊழல், சாதி, மத வேறுபாடுகளைக் களையெடுத்தல்
3. தமிழன் என்ற அடையாளத்தின் வரலாறும் அதன் முக்கியத்துவமும்
4. சிறந்த தொழில்முனைவோனாக உருவாக தகுதிகளை வளர்க்கும் விதம்
5. தொழில்நுட்பத்தின் உதவியை சரியாக பயன்படுத்துதல் உடன் இயற்கையை நேசித்தல்


என்ற தலைப்புகளின் கீழ் விபரங்களை தொகுத்து ஒரு சுவையான கருத்தரங்கம் உங்களுடனும், உடன் "தாய் தமிழ் பள்ளியை" சேர்ந்த மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சியையும் அரங்கேற்ற உள்ளோம்.

அதைத்தொடர்ந்து இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்
திரு. உ.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் 
மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியாளர்

தன் கரங்களால் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவ செல்வங்களை பாராட்டி சிறப்புரையாற்றுகிறார்.
 



தொழிற்களம் டிசம்பர் விழா அழைப்பிதழ்

பதிவுலகை சார்ந்த நண்பர்களுக்கென்றே இந்த அழைப்பிதழ் பதியப்பட்டுள்ளது.  


அனைத்து பதிவர்களையும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம்.
தொழிற்களம் விழாவில், நிறைவின் சிறப்பு பகுதியாக பதிவர்களின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்...!!


தலைப்பு :


நாளைய வலையுலகம்..?

நன்றி - தொழிற்களம் 




3 comments:

ராஜி said...

நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

நடத்துங்கய்யா! நடத்துங்க! வாழ்த்துக்கள்!

Thozhirkalam Channel said...

ஒற்றுமையுடன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத சமூகம் இணையத்தின் மூலம் உருவாகும்..

இதை உங்கள் மூலம் உணருகிறோம் உறவே!!

திருப்பூரில் சந்திப்போம்.

பகிர்விக்கு நன்றி!!

தொழிற்களம் குழு