Friday, December 28, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 28.12.2012 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை


இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை 28ந் தேதி . அன்றைய தினம் தியேட்டர்கள் அனைத்தும் ஹவுஸ் புல்லாகிறது. அதாவது மக்கள் கூட்டத்தால் ஹவுஸ் புல் ஆகவில்லை. புதுப் படங்களால் ஹவுஸ் புல்லாகிறது. அன்றைக்கு பரங்கி மலை ஜோதி வரைக்கும் புதுப் படங்களால் நிறைந்து வழியப்போகிறது. ஆண்டுதோறும் அரசு திரைப்படங்களுக்கு வழங்கும் மானியத்தை பெறுவதற்காக இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறுவதற்காகவும், அரசு விருது (கொடுத்தால்) பெற இந்த ஆண்டுக்குள் இருப்பதற்காகவும் இந்த தள்ளுமுள்ளு.


 வெளியாகிற படங்களில் விஷால், த்ரிஷா நடித்த சமர் மட்டுமே பெரிய பட்ஜெட் படம். மற்ற அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்.


பத்தாயிரம் கோடி, கோழிகூவுது, புதுமுகங்கள் தேவை, பயபுள்ள, அகிலன், லொள்ளு தாதா பராக் பராக், பாரசீக மன்னன், கண்டுபுடிச்சிட்டேன், உண்மை, மாமன் மச்சான், குறும்புக்கார பசங்க, நண்பர்கள் கவனத்திற்கு போன்ற படங்கள் வெளிவருகிறது. இன்னும் சில படங்கள் வெளிவரலாம். அல்லது வெளிவருவதாக அறிவித்துள்ள படங்கள் பின் வாங்கலாம்.



அதுசரி... வாரத்துக்கு 3 படங்கள்தான் ரிலீசாகணுங்ற தயாரிப்பாளர் சங்க விதி என்னாச்சுங்கோ...!


சி.பி - கடைசி நிமிடத்தள்ளுபடி - சமர் , 10000 கோடி   -வர்லை 
http://twitchfilm.com/assets_c/2012/11/ChineseZodiacPoster2-thumb-630xauto-35236.jpg




1. CZ12 - உலகம் முழுவதிலும் பல கோடி ரசிகர்களைக் கொண்டவர் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான். இவரது அதிரடி ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த ஆக்ஷன் மூலம் ஆறிலிருந்து அறுபது வரை சகலமானவர்களையும் தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார்.



நூறு படங்கள் வரை ஆக்ஷன் நாயகனாக வலம் வந்த ஜாக்கிசானின் முடிவில் திடீர் மாற்றம். 101 வது படமாக உருவாகி உள்ள “CZ12″ என்ற படத்தோடு தனது ஆக்ஷன் அவதாரத்தை முடித்துக் கொள்ள இருப்பதாக அவரே அறிவித்து உள்ளார்.


இப்படத்தை ஜாக்கிசானே நடித்து இயக்கி இருக்கிறார். வழக்கமாக ஜாக்கியின் படங்களில் முக்கிய வேடங்களில் சீனர்கள் நடித்திருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஜாக்கிசானைத் தவிர மற்றவர்கள் அனைவருமே ஹாலிவுட் படங்களில் நடிப்பவர்கள் என்பது இன்னொரு சிறப்பம்சம்.

நமது ஜோசியப்படி 12 ராசிகள் போல சீனர்களின் 12 ராசியை அடக்கி CZ12 என்று சொல்வார்கள். இது Armour of the God படத்தின் மூன்றாம் பாகம் ஆகும். இப்படம் 28ம் தேதி தமிழகம் முழுவதும் 250 திரையரங்குகளில் வெளியாகிறது.

ஈரோடு வி எஸ் பி , தேவி அபிராமி யில் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoccP5bZGAzw66n9nNEhqljxOkW_1t9ApUhzfqw_a3HRBlaL1qI6yyQYq8r9g9Ywv4xyOqzv7rki4dBo828EisUwViFHcaBkXGnu5MuSDL3TKXsAxTUZpfHMQbJBZFMnEqvLa8yCxFzCU/s1600/Kozhi-Koovuthu-2012-Tamil-Movie-Mp3-Songs-Free-Download.jpg



2. கோழிகூவுது - அசோக் ஹீரோவாக நடிக்க புதுமுகம் சிஜா ரோஸ் அவருக்கு ஜோடியாக நடிக்கும் படம் கோழிகூவுது. கே.ஐ.ரஞ்சித் என்பவர் இயக்குகிறார். இந்தப் படம் பிரபு, சில்க் ஸ்மிதா நடித்து கங்கை அமரன் இயக்கிய கோழிகூவுது படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதை மறுக்கிறார் ரஞ்சித்.



அவர் கூறியதாவது: கோழி வியாபாரிகளின் வாழ்க்கைதான் கதை களம். ஹீரோ அசோக், ஊர் ஊராக சென்று கோழி வியாபாரம் செய்வவர். ஹீரோயினுக்கும் கோழி விற்பார். ஆசையாக வளர்க்கும் அந்த கோழி இறந்து விடும். இதற்காக அசோக்கிடம் ஹீரோயின் சண்டைபோடுவார். இதுவே அவர்களுக்குள் காதலாக மாறும். ஊர் ஊராக கோழிவிற்பருக்கும் ஒரே ஊரில் வசித்து கல்லூரிக்கு செல்லும் பெண்ணுக்கும் காதல்.


http://www.tamilnow.com/movies/gallery/kozhi-koovuthu/kozhi-koovuthu-photos-8759.jpg



 இதனால் வரும் பிரச்சினைகளுடன் கோழி வியாபாரிகளின் வாழ்க்கையை சொல்கிறோம். இந்தக் கதைக்கு கோழிகூவுது என்ற தலைப்பு பொருத்தமாக  இருக்கும் என்று முடிவு செய்து வைத்தோம். கங்கை அமரனை நேரில் சந்தித்து அவரிடம் அனுமதி பெற்று வைத்திருக்கிறோம். மற்றபடி பழைய கோழிகூவுது படத்தின் ரீமேக் இல்லை. என்றார்.


ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ் 

http://kollytalk.com/posters/wp-content/uploads/2012/12/J-Suresh-Paraseega-Mannan-december-28-Release-Poster-219x300.jpg


3. பாரசீக மன்னன்.  - ரிச் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.ஜே.பாலகிருஷ்ணன், கே.ஜே.திலீப் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் பாரசீக மன்னன். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜே.சுரேஷ் இயக்குகிறார். இவரே இப்படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார்.

ஜே. சுரேஷ் ஏற்கனவே மாதவன், சினேகா நடித்த என்னவளே, மம்முட்டி நடித்த ஜூனியர் சீனியர் படங்களை இயக்கியவர்.

இதில் நாயகியாக ஸ்ருதி லட்சுமி மற்றும் ரமேஷ் கண்ணா, கே.கே. பாலாஜி, ஆர்த்தி, சி.எம்.பாலா, டி.வி. லட்சுமி, பாண்டு, ரவி பிரகாஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

படம் பற்றி ஜே.சுரேஷ் சொல்கிறார்,

இன்று உலகம் முழுவதும் அச்சப்பட வைக்கிற விஷயம் குழந்தை கடத்தல்கள். கடத்தப்படுகிற குழந்தைகள் பலவகைகளில் துன்புறுத்தப்படுகின்றனர். கடத்தல் கும்பலின் பின்னணி அவர்களின் ஆதாயம் என்ன என்பதை கருவாக வைத்து இப்படம் தயாராகிறது.

சென்னை, கோவை, கேரளா, மும்பை, பூனே, பாங்காங், துபாயில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஒளிப்பதிவு: நூதலபட்டி பிரகாஷ், இசை ஆலோசனை: யுவன் சங்கர் ராஜா, எடிட்டிங்: வி.ஜெய் சங்கர், இசை: ஜே. சுரேஷ், பாடல்: பா. விஜய், பேரரசு, உதய்.


ஈரோடு அண்ணா வில் ரிலீஸ் 


 http://kollytalk.com/posters/wp-content/uploads/2012/12/Akilan-Releasing-Tomorrow-Poster.jpg

4.அகிலன்  மிழ் சினிமா ஊறவைத்து அடியென அடித்துத் துவைத்துவிட்ட, இன்னும் துவைத்துக் காய போடவிருக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் சொன்ன விதத்தில் ரொம்பவே வித்தியாசம் காட்டி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் அகிலன் படத்தின் இயக்குநர் ஹென்றி ஜோசப்.

  மதுரை ஏரியாவில் அடிக்கடி பெண்கள் காணாமல் போய்விடுகின்றனர். அவர்களைக் கடத்திக் கொண்டு போய் மிரட்டி பணம் சம்பாதிக்கிறது ஒரு கும்பல். அவர்களை பிடிக்க பெரும் முயற்சி எடுக்கிறது காவல்துறை. காவல்துறைக்கு அல்வா கொடுக்கும் அந்த கும்பலை எப்படி களையெடுக்கிறார்கள் என்பது க்ளைமேக்ஸ்.



பெண்கள் அடிக்கடி காணாமல் போகும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ற கதைதான். படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் நகருகிறது. இடைவேளைக்கு பிறகு கல்யாண மண்டபத்திலேயே நகரும் காட்சிகள் தொடர்வதால் கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டாலும் அந்த வேளையில் காமெடியையும் புகுத்தி சலிப்பில்லாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.


டாக்டர் சரவணன் என்பவர்தான் ஹீரோவாக நடித்து படத்தையும் தயாரித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர்களே ஹீரோக்களாக நடிக்கும் போது, படம் முழுக்க அவர்களை காட்டியும் அவர்களின் அருமை பெருமையைக் காட்டி, அதோடு விட்டாலும் பரவாயில்லை சண்டை காட்சிகளில் ஒரே அடியில் நூறு பேரு பறக்கிற மாதிரி எல்லாம் காட்சிகளை வைத்து படத்தைப் பார்க்கிற ரசிகர்களுக்கு ரெண்டு நாளைக்கு வேறு வேலை பார்க்க முடியாதபடி தலைவலியை வரவழைத்துவிடுவார்கள்.


ஆனால் அகிலன் படத்தில் அப்படி எந்த காட்சியுமே இல்லை. சாதாரண போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வருகிறார் அகிலன். பஞ்ச் வசனங்கள் ஏதும் இவர் பேசவேயில்லை. நண்பர் மதுரை முத்துவிடம் ‘எல்லாருக்குமே ஒரு வாய்ப்பு வரும் அதுவரைக்கும் காத்திருக்கணும்…’ என்று வசனம் பேசுகிற இடத்திலும் சரி, மேலதிகாரி தனது மனைவியை காரில் அழைத்துக் கொண்டு வீட்டில் கொண்டு விடுமாறு சொல்லுகிற காட்சியில் சலிப்பில்லாமல் அந்த வேலையை செய்வது, அவர் வீட்டிற்கு வந்த போது அவரது குழந்தையிடம் ‘நாங்கல்லாம் ஏழைங்கம்மா…’ என்று பேசுகிற இடங்கள், ‘போலீசுக்கு தகவல் கொடுத்தா யாரு என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டியா…?’ என்று போலீஸ் அதிகாரி எகிறும் போது அந்த இடத்தில் தன் சக போலீஸ்காரரிடம் பதில் சொல்கிற போதும் ஹீரோ சரவணன் நம்மை ரொம்பவே ஈஸியாக இம்ப்ரஸ் செய்துவிடுகிறார்.


இந்த மூன்று காட்சிகளுமே போதும் ஹீரோவை அல்லது அந்த கேரக்டரை நமக்கு ரொம்பவே பிடித்துப் போவதற்கு. பெரும்பாலான காட்சிகளில் வசனம் மட்டுமே பேசி சமாளித்துவிடும் சரவணன் இன்னும் கொஞ்சம் நடிப்பை மேம்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


வெறுமனே வந்தோமா நாலு பாட்டுக்கு ஆடினோமா என்று இருக்கிற அறிமுக நாயகிகளுக்கு மத்தியில் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஹீரோயினுக்கு கதையுடன் இணைந்து பயணிக்கிற வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.


போலீஸ் அதிகாரியாக வருகிறார் ராஜ் கபூர். கொஞ்சம் அமைதியான அதிகாரியாக கேரக்டராக தெரியவேண்டும் என்பதால் மீசையை எடுத்துவிட்டார் போலிருக்கிறது.


கஞ்சாகருப்பு, போண்டா மணி, கிங்காங், மனோபாலா, சிங்கம்புலி கூட்டணி காமெடிக் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். அதுவும் கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளை, பொண்ணு, அந்த காது கேளாதவர், சிங்கம்புலி காம்பினேசன் செம காமெடி ரகளை.


சின்னத் திரைகளில் மட்டுமே காமெடி கலாட்டா செய்து கொண்டிருக்கும் மதுரை முத்து இந்தப் படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக வருகிறார். இவரது காமெடியும் காமெடி டயலாக்கும் ரொம்பவே ரசிக்க வைக்கிறது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் மதுரை முத்து பெரிய திரையில் பிரகாசிக்கலாம்.


கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் பரவாயில்லை சொல்ல வைத்தாலும் பின்னணி இசையில் பல இடங்களில் பளிச்சிட வைத்திருக்கிறார்.


படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஹென்றி ஜோசப். முதல் பாதியின் படத்தை விறுவிறுப்பாக பயணிக்க வைத்தவர் இரண்டாவது பாதியில் கொஞ்சம் தடுமாறி சமாளித்திருக்கிறார். 


ஹீரோதானே படத்தை தயாரிக்கிறார் அதனால் அவரது புகழ் பாடுகிற மாதிரியான காட்சிகளை வைத்து கொடுமைப்படுத்தாமல் கதைக்கு என்ன தேவையோ அந்த காட்சிகளை மட்டும் வைத்திருக்கிறார். போலீஸ் கதையை வித்தியாசமாக சொன்னதற்காக ஹென்றி ஜோசப்புக்கு ஒரு சபாஷ் போடலாம்.


ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 

http://www.vanninet.com/mp3photo2012/Puthumugangal%20Thevai.jpg


5. புதுமுகங்கள் தேவை - வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் புதுமுகங்கள் தேவை. இந்தப்படத்தில் சிவாஜிதேவ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே சிங்கக்குட்டி என்ற படத்தில் நடித்தார். இன்னொரு நாயகனாக ராஜேஷ் யாதவ் அறிமுகமாகிறார். இவர் மழை, லீ, பொக்கிஷம் ராமன்தேடிய சீதை உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் இவர். கதாநாயகியாக பானு மற்றும் விஷ்ணுப்ரியா இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராஜ்கபூர், காதல் தண்டபாணி, எம்.எஸ்.பாஸ்கர், கிரேன் மனோகர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மஜா மற்றும் மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த மனீஷ்பாபு இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரிக்கிறார்.

கதை, திரைக்கதை : எஸ்.ஏ.அபிமான், வசனம் : கவிதாபாரதி, ஒளிப்பதிவு : ராஜேஷ்யாதவ், ஆர்.சரவணன், இசை : ட்வின்ஸ் டியூன்ஸ், எடிட்டிங் : சுரேஷ் அர்ஸ். நாகர்கோவில், குற்றாலம், தென்காசி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது

ஈரோட்டில் ரிலீஸ் இல்லை  
http://onlinemoviesportsandtv.com/wp-content/uploads/2012/09/Orange1.jpg


6. ராம்சரண் -தெலுங்கில் வெளியான `ஆரஞ்ச்` படம் ராம்சரண் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இதில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நாயகனாகவும் ஜெனிலியா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

பிரபு, பிரகாஷ்ராஜ், பூஜா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி பொம்ம ரில்லு பாஸ்கர் இயக்கியுள்ளார். சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரவல்லி தயாரித்துள்ளார்.

முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாகியுள்ளது. காதல் என்பது ரொம்ப நாள் நிலைக்கிற விஷயமில்லை. சீக்கிரமே துவங்கி சீக்கிரமே கருகிப் போகும் என்கிற நினைப்பில் நாயகன் இருக்கிறான். காதல் ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிற அருமை யான விஷயம் என்று நாயகி நினைக்கிறாள். இருவேறு எண்ணம் கொண்ட இவர்களின் காதல் கதையே இப்படம்.

வசனம்: ஏ.ஆர்.கே.ராஜராஜன், எடிட்டிங்: எல்.ராமாராவ், ஒளிப்பதிவு: பி.ராஜசேகர், இசை: ஹாரிஸ்ஜெயராஜ், பாடல்: அறிவுமதி, விவேகா, யுகபாரதி, அருண் பாரதி, ஜெயமுரசு.


ஈரோடு ஸ்டார், சங்கீதா இரு தியேட்டர்களில் ரிலீஸ் 

Kandupuduchittaen Movie Stills 26
7.  கண்டு பிடிச்சுட்டேன் -படத்தைப்பற்றி எந்த நியூசும் கூகுள்ல கிடைக்கலை. என்ன அப்டேட்டிங்க்கோ. விளங்கிடும் படம் . Kandupuduchittaen Movie Cast Sanni, Sana, VijayYogan, Divyashree, Rajarajan, Thirumurugan, Junitha, The film was directed by R. GopalRaj, and Music by Jeevaraaja.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை


நன்றி - மை சினி நியூஸ் ,தமிழ் டிஜிட்டல் சினிமா டாட்காம்




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1XgH2SU_BMEvvi0uFQBmDlRipNvTNHJr_pQLz3y_0my6k52TuuIMOywJYyvyE5PfJO74aoQG307aH8B7uy4epVuCDsFm3QqqGbaKhtVE-C_1nsmFvrcY_OmnnLhQOxoxKCY4ZjKN4BkC6/s1600/Kandupuduchittaen-actress-Hot-Stills-06.jpg




0 comments: