Friday, December 21, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 21.12.2012 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

http://cutmirchi.com/upimages/1354632755_A9RzsaOCAAEdRna.jpg_large.jpg 

 

1. சட்டம் ஒரு இருட்டறை-எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய, "சட்டம் ஒரு  இருட்டறை படத்தை, தற்போது, இளம் இயக்குனர் சினேகா பிரிட்டோ, "ரீ-மேக் செய்கிறார். படத்துக்கு, "தோழன் என, பெயர் வைக்க முடிவு செய்து, அதை சேம்பரிலும் பதிவு செய்து வைத்திருந்தனர். ஆனால்,"சட்டம் ஒரு இருட்டறை தலைப்பே, கதைக்கு பொருத்தமாக இருக்கும் என, மீண்டும் பழைய தலைப்பையே வைத்து, படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

 

ரீமாசென், பியா பாஜ்பாய், பிந்து மாதவி, தமன் ஆகியோர் நடித்துள்ள ‘சட்டம் ஒரு இருட்டறை’ படமும் 21-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை இளம் இயக்குனரான சினேகா பிரிட்டோ இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் பேத்தி ஆவார்.

30 வருடங்களுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 5 மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சட்டம் ஒரு இருட்டறை’ மீண்டும் புது வடிவில் தயாராகி இருக்கிறது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் வெளிவந்த பாடல்கள் சில தினங்களுக்கு முன் தமிழகத்தின் சில முக்கிய நகரங்களில் வெளியிடப்பட்டு ஹிட்டாகி உள்ளன. 

எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. சீமான், சத்யராஜ், விக்ராந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சட்டப்படி குற்றம்’ என்ற படமும் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக் தான் என பேசப்பட்டாலும் அதை பற்றிய உறுதியான தகவல் வெளிவரவில்லை. 

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் முதலில் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படத்தை மறுபடியும் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, கார்த்திகா, ரீமாசென், பியா ஆகியோர் நடிப்பதாக இருந்தது. சில நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. 

ஆனால் திடீரென்று படத்தின் இயக்குனர் ஹீரோவை மாற்றப் போவதாக தெரிவித்திருக்கிறாராம். கையெழுத்து போடுவதற்கு முன் நூறு முறை யோசித்துவிட்டு கையெழுத்து போடும் நடிகை கார்த்திகா, ஹீரோ ரோலில் நடிப்பவரை பொருத்து தான் நான் நடிப்பதும் நடிக்காததும் என முன்னரே கூறியிருந்தார். 

இப்போது திடீரென ஹீரோ மாற்றப்பட்டுவிட்டதால், கார்த்திகாவும் படத்தில் இருந்து விலகப்போகிறாராம். மறுபடியும் ஹீரோ, ஹீரோயின் என அனைத்து தேர்வுகளும் செய்து படக்குழுவிடமிருந்து அறிவிப்பு வரவேண்டும். 

சட்டம் வெளிச்சத்திற்கு வருகிறதோ இல்லையோ! இந்த படம் வெளிச்சத்திற்கு வர அதிக நாட்கள் ஆகலாம்.
ஈரோடு தேவி அபிராமியில் ,அன்னபூரணியில்  ரிலீஸ் 


சட்டம் ஒரு இருட்டறை - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/12/blog-post_9775.html

 

 http://www.tamil.cinebuzzz.com/img_articles/1103b.jpg
2.கள்ளத்துப்பாக்கி  -கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் கே.சி.ரவிதேவன். இவர் இயக்கி உள்ள படம் கள்ளத்துப்பாக்கி. தமிழ் செல்வன், குட்டி ஆனந்த், ஷாவந்திகா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், எஸ்.கே.பாலச்சந்திரன் இசை அமைத்துள்ளார். வேலை வெட்டி இல்லாமல் திரியும்.  5 சிறுவர்களிடம் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் கதை.

விஜய் நடித்துள்ள துப்பாக்கி படத்தின் பெயரை பயன்படுத்த கூடாது. அதில் எங்கள் படத்தின் தலைப்பான துப்பாக்கி உள்ளது. என்று இயக்குனர் பிரச்னையை கிளப்பினார். இது தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நீதிமன்றம் வரை சென்று ஒரு வழியாக சமாதானத்தில் முடிந்தது. இருந்தாலும் கோபம் தீராத இயக்குனர். துப்பாக்கி வெளியாகும் தீபாவளி அன்றே தன் படத்தையும் வெளியிடுவது என்று விளம்பரங்கள் செய்து வந்தார். இந்த நிலையில் படத்துக்கு அடுத்த பிரச்னை வந்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர். படம் வன்முறை நிறைந்ததாக இருக்கிறது என்று சொல்லி சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதனால் கள்ளத்துப்பாக்கி தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரவிதேன் கூறியதாவது, கூலிக்காக கொலை செய்வதுதான் படத்தின் கதை களம். ஆட்டோ டிரைவர், தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர், செருப்பு தைப்பவர்களில் சிலர் கூலிக்காக கொலை செய்வர்கள் கொலை செய்யப்படுபவர் யார், யாருக்காக கொலை செய்கிறோம் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அதை ஒரு கடமை போல செய்து விட்டு வருவார்கள். இதைத்தான் படத்தில் காட்டியிருக்கிறோம். 
இதுபோன்ற படங்கள் இந்தியில் நிறைய வந்திருக்கிறது. ஆனால் இதை அனுமதிக்க மறுத்து விட்டார்கள். இதற்கு பின்னால் யாருடைய சதியும் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. ரிவைசிங் கமிட்டிக்கு விண்ணப்பத்திருக்கிறோம். அங்கும் நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றம் வரை சென்றாவது படத்தை வெளியிட்டே தீருவோம் என்றார்.

கள்ளத்துப்பாக்கி என்றாலும் சிக்கல் அப்படி பெயர் வைத்தாலுமா சிக்கல்....?!
கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ரவிதேவன் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தை தயா‌ரித்து வருகிறார். இவர்கள் கள்ளத்துப்பாக்கி டைட்டிலை 2009 சேம்ப‌ரில் பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வருடம் துப்பாக்கி என்ற பெய‌ரில் விஜய் படம் தொடங்கப்பட்டது. அப்போதே கள்ளத்துப்பாக்கி குழு சேம்ப‌ரில் இது குறித்து புகார் செய்ததாக‌த் தெ‌ரிகிறது.


துப்பாக்கியின் போஸ்டர்கள் வெளிவந்த போது கள்ளத்துப்பாக்கி குழுவினர் கடுப்பாயினர். காரணம் அவர்களின் எழுத்துப் போலவே துப்பாக்கியின் எழுத்தையும் வடிவமைத்திருந்தனர். புகார் தயா‌ரிப்பாளர்கள் சங்கத்துக்குப் போனது. அங்கு தலைவராக இதற்கு தீர்ப்பு கூறும் இடத்தில் இருந்தவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன். தீர்ப்பு கூறப்படாமல் புகார் நேரடியாக குப்பை கூடைக்குப் போனது.


மனம் தளராத கள்ளத்துப்பாக்கி குழு நீதிமன்றத்தை அணுகியது. அவர்களின் மனுவை விசா‌ரித்த நீதிபதி துப்பாக்கி டைட்டிலை பயன்படுத்த தடை விதித்துள்ளார். ஆக துப்பாக்கியை கள்ளத்துப்பாக்கி வென்றுள்ளது.


கள்ளத்துப்பாக்கி டீமுக்கு ஒரு கேள்வி. எழுத்து ஒரே மாதி‌ரி இருக்கிறது என்று ராயல்டி உ‌ரிமைக்கு நீதிமன்றம் போன நீங்கள் உங்கள் போஸ்டர் டிசைனில் சிட்டி ஆஃப் காட் படத்தின் போஸ்டர் டிசைனை அப்பட்டமாக காப்பி அடித்திருப்பது நியாயமா?

ஈரோடு  ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ் 

 

 

 http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/93/DABANGG_2_Poster.jpg/220px-DABANGG_2_Poster.jpg

 

3. Dabangg 2 - சல்மான் கான் - சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளியான தபாங் சூப்பர் டூப்பர் ஹிட். படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானதுமே சல்மான், தபாங் பார்ட் 2 எடுக்கப்படும் என கூறியிருந்தார்.


ஆனால் அதன் பிறகு அறுவை சிகிச்சை, ஓய்வு, ஏக் தா டைகர் படப்பிடிப்பு என அடுத்தடுத்து பிசியாக இருந்தததால் தபாங்2 கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கட்ரீனாவுடன் அவர் நடித்த ஏக் தா டைகர் திரைப்படத்தின் சூட்டிங் முடிவடைந்து படம் ரிலீஸ் ஆன பின்இப்போது தபாங் 2 ரெடி ஆனது

 

இந்த மாதம் 21 ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகும் சல்மான்கானின் ‘தபாங் 2′ படத்தின் டிரைலரே இந்தியாவை உலுக்கி விட, அடுத்து சல்மானுக்காக கரீனா கபூர் ஆடிக்கொடுத்த ‘ஃபெவிகால் சே’ ஐட்டம் நம்பர் பாடல் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

உடை விட்டுக் கொடுக்க, இடை முட்டுக் கொடுக்க கரீனாவின் அட்டகாச நடனத்தை வீடியோவில் பலர் கண்டு களித்தனர். iiஈரோடு அண்ணாவில் ரிலீஸ்

Dabang 2 - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2012/12/dabang-2.html

 

 


http://wallpapers.oneindia.in/d/367110-2/sarcoharu-wallpaper-01.jpg

4. Sarocharu - Mass Maharaja Ravi Teja Sarocharu has hit the big-screens on today on December 21. Kajal Agarwal and Richa Gangopadhyay have paired up with Ravi Teja in the movie directed by Parasuram.


Priyanka Dutt has produced the movie under Three Angels Studio banner with musical scores by Devi Sri Prasad. Ravi Teja haven’t had a hit from long time with several flops Devudu Chesina Manushulu, Nippu and ‘Daruvu failing to score a hit. However, Sarocharu is releasing with minimal publicity.


Along with Sarocharu, Vikram Prabhu’s Telugu dubbed Tamil movie Gajaraju has also hit the big-screens. The film is doing quite well at Kollywood Box-Office which was released a week ago and let’s wait to see how the movie fares.

ஈரோட்டில் ரிலீஸ் இல்லை, கோவை ப்ரூக் ஃபீல்டு ரிலீஸ் 

 

 

 

நன்றி - தினமல்ர், தினமணி,. மாலைமலர் மற்றும் அனைத்து சினிமா தளங்கள்

 

 

1 comments:

Madawala News said...

அவர் நடித்த ஏக் தா டைகர் திரைப்படத்தின் சூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில்.. பாஸ்.. படம் வெளியாகி 5 மாசம் ஆகுது..