திரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்றாலே ஆர்ட் ஃபிலிம் தான் எடுப்பாங்க, கமர்ஷியல் சினிமா அவங்களுக்கு செட் ஆகாது என்றிருந்த காலகட்டத்தில் 1986 இல் ரிலீஸ் ஆகி அந்த எண்ணத்தை , தமிழ் சினிமாவை ஒரு புரட்டு புரட்டிய படம் தான் இந்த ஊமை விழிகள் .பல பிரம்மாண்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் .
வில்லன்ஒரு 60 மார்க் ஃபிகரை லவ் பண்றார்.அது சஹானா மாதிரி வேற ஒருத்தன் கூட ஓடிடுது. உடனே அவருக்குப்பொண்ணுங்கன்னாலே வெறுப்பு. தன் காதலி கண்கள் பேசிப்பேசி தன்னை மயக்குச்சு. அந்த பாதிப்பில் கண்ணில் பட்ட பெண்களை கொலை பண்ணி அவ கண்களை எடுத்து வெச்சுக்கும் சைக்கோ பார்ட்டி. சட்ட சிக்கல்களை தவிர்க்க ஒரு பாதுகாப்புக்கு ஒரு அமைச்சரை பார்ட்னர் ஆக்கிக்கறார். ஃபிகர் மினிஸ்டர்க்கு , மேட்டர் முடிச்சதும் கண் இவருக்கு.
இந்த விஷயம் ஒரு பத்திரிக்கை அம்பலப்படுத்துது. எந்த விதப்பின்புலமும் இல்லாத சாதா பத்திரிக்கை. அதை ஒடுக்க நினைக்கறார் வில்லன். அந்த பிரஸ்க்கு ஒரு டி எஸ் பி உதவி பண்றார். வில்லனுக்கு எதிரா அவர் நிகழ்த்தும்போராட்டம் தான் மிச்ச மீதி திரைக்கதை .
படத்தோட ஓப்பனிங்க்கே ஒரு வித அமானுஷ்யமான இரவில் கொண்டாட்டமான பாட்டோட ஆரம்பிக்குது. ராத்திரி நேரத்துப்பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஆ ஆ அது சுக வேதனை ( இதுல எதுக்கு 2 ஆ? ) . மனோஜ் கியான் + ஆபாவாணன் இணை இசையில் கலக்கலான பாட்டு.
பாட்டு முடிஞ்சதும் கொலை அப்போ டாப் கீர்ல போற படம் க்ளைமாக்ஸ் வரை செம ஸ்பீடு .
நேர்மையான , வறுமை நிலையில் உள்ள பத்த்ரிக்கை ஆசிரியரா ஜெய்சங்கர். ஆல்ரெடி இவர் சொல்வதெல்லாம் உண்மைல இதே ரோல்ல நடிச்சிருப்பாரு , நல்லா சூட் ஆகி இருக்கு.
சந்திர சேகர் ஜெய் ஆஃபீஸ்ல ஒர்க் பண்றவரா வர்றாரு. நல்ல நடிப்பு . கத்திக்குத்து வாங்கி துடிக்கும் இடத்தில் நிஜமாவே குத்திட்டாங்களோன்னு நினைக்க வைக்கும் அநாயசமான உயிரோட்டமான நடிப்பு
வில்லனாக ரவிச்சந்திரன் . செம்பட்டை விக் , தாடில இவர் குதிரை வண்டில ஏறும்போதே செம திகில்.
மலேசியா வாசுதேவன் மினிஸ்டர் வில்லன். மினிஸ்டர்னாலே வில்லன்க தானே? கலகலப்பான நடிப்பு
டி எஸ் பி தீனதயாளன். பேருக்கேத்த கம்பீரமான நடிப்பு கேப்டனோடது. படம் போட்டு 50 நிமிஷம் கழிச்சு ஹீரோ எண்ட்ரி . ஈரோடு பாரதி தியேட்டர்ல ரிலீஸ் டைம்ல என்னா ஒரு கைதட்டல். இந்தப்படத்திற்குப்பின் கேப்டன் அட்டகாசமான அப்ளாஸ் வாங்கியது கேப்டன் பிரபாகரன் ஓப்பனிங்க் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட்டில் தான் .மனைவி சரிதா இறந்ததும் கதறும்போதும் சரி , புலன் விசாரணையில் கம்பீரம் காட்டும்போதும் சரி அனுபவம் மிக்க நடிப்பு .
இது போக அருண் பாண்டியன், கோகிலா, சசிகலா, கார்த்திக் இன்ன பிற நடிக நடிகைகளும் உண்டு .
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. க்ரைம் படங்கள், த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் ஒரு ஸ்பீடு பிரேக்கர்கள் என்ற விதியை உடைத்து 3 மணி நேரப்படத்தில் தைரியமாக 6 பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக்கியது. ராத்திரி நேரத்துப்பூஜையில் செம குத்து சாங்க் , கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் சோக மெலோடி , தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? இன்றளவும் நிலைத்து நிற்கும் தன்னம்பிக்கை ஊட்டும் பாட்டு ,மாமரத்துப்ப்பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடப்வா கிளு கிளு முதல் இரவுப்பாட்டு ,நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனிதர் ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி தத்துவ பாட்டு , குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப்பேச்சு ரகளையான பாட்டு என எதுவுமே குறை சொல்ல முடியாத பாட்டு.
2. ரவிச்சந்திரனின் வில்லன் கெட்டப் , பாடி லேங்குவேஜ் திகில் ஊட்டும் விதமாய் அமைத்தது . அவர் கேரக்டரை கடைசி வரை சஸ்பென்சாக காட்டியது
3.. ஆர்ட் டைரக்ஷன் அட்டகாசம் . அந்த வில்லன் பங்களாவே திகிலைத்தரும். அந்த மணி அடிக்கும் கிழவி , பாதிரியார் என மர்மம் கிளப்பும் முகங்கள் அருமை
4. ஜெய் சங்கரின் பத்திரிக்கை ஆஃபீஸ் ஸை ரொம்ப டீட்டெயிலாக காட்டியது , படத்தோட ஒன்ற வைத்து இருந்த முக்கியக்காரணி
5. க்ளைமாக்சில் 67 ஜீப்கள் லைனாக வருவது , ஆரம்பத்தில் ஒரே ஒரு லைட்டை மட்டும் காட்டி அது அப்படியே பிரிந்து பிரம்மாண்டமான அணி வகுப்பாய் வரும் காட்சி பர பரப்பாக அப்போது பேசப்பட்டது இதுவரை தமிழ் சினிமாவில் அந்த காட்சியை ஓவர் டேக்க இன்னும் எந்தபப்டமும் வரவில்லை
இயக்குநரிடம் சில கேள்விகள்( ஆர் அர்விந்த்ராஜ் பிஎஸ் சி டி எஃப் டெக் )
1. படத்துல லேடீசை துரத்தும் குதிரை க்ளோசப்ல 70 கிமீ வேகத்துல பாயுது , துரத்தப்படும் பெண்கள் 7 கி மீ வேகத்துல ஓடுறாங்க. ஆனா 10 நிமிஷம் அந்த சேசிங்க் சீன் வருது . லாங்க் ஷாட்ல காட்டும்போது வேகம் கம்மியா ஆகிடுது . பார்க்கும்போது திகிலா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சா....
2. பத்திரிக்கைக்காரர் அந்த மர்ம பங்களாவுக்கு வந்து அந்த கிழவையை ஃபோட்டோ எடுக்கறதைக்கூட ஒத்துக்கலாம். பாட்டிக்கு விபரம் தெரியாது, படிப்பறிவு இல்லை, அதனால கண்டுக்கலைன்னு . ஆனா அந்த பாதிரியார் படிச்சவர் ஆச்சே .( பாதிரியாரைக்கொன்று பாதிரியார் ஆன வில்லனின் எடுபுடி ) அவர் எப்படி ஃபோட்டோ எடுத்தப்ப எதுவும் சொல்லலை? பிடிங்கி இருக்க வேணாமா? அல்லது அப்போவே போட்டுத்தள்ளி இருக்க வேணாமா?
3. நேர்மயான , தன் தொழிலை தெய்வமாக மதிக்கும் எடிட்டர் ஜெய்சங்கர் டியூட்டி டைம்ல தம் அடிக்கறார்/ அதுவும் சக பணியாளர்கள் முன். எனக்குத்த்தெரிந்து விகடன் , குமுதம் உட்பட எந்த ஒரு பத்திரிக்கை எடிட்டரும் ஆஃபீஸ் டைமில் ஆஃபீஸ்க்குள் அப்படி தம் அடிக்கறதில்லை.
4. அருண் பாண்டியன் கோகிலா கிட்டே இது இது பத்திரிக்கை நிருபர் வீடுதானே> என கேட்கும் இடம் ரொம்ப அமெச்சூர் நடிப்பு . இயக்குநர் கவனிச்சு அதை ரீ சூட் பண்ணி இருக்கலாம் .
5. ஹவுஸ் ஓனர் பொண்னு வீட்டில் நைட் சாப்பிடுது . அப்போ அருண் பாண்டியன் பட்டினியா இருப்பதா வசனம் பேசுவது கேட்டு சாப்பிடும் தட்டில் கை கழுவறார்.அத்தனை சாப்பாடும் வேஸ்ட். அதை சாப்பிட்டுட்டு அவருக்கும் சாப்படு எடுத்துட்டுப்போய் கொடுத்தா மேட்டர் ஓவர். அதே சீனில் ஒரு சின்னக்குண்டாவில் சாப்பாடு இருக்கும். ஒரு டம்ளர் அளவு அரிசியில் சமைச்ச சாப்பாடுதான் இருக்கும். அவங்க அம்மா , அப்பா சாப்பிட அது போதுமா?ன்னு யோசிக்கும்போதே சந்திர சேகர் , அருண் 2 பேரையும் கூப்பிட்டு சாப்பாடு பரிமாறுவாங்க , அதே குண்டா , ஆனா சாப்பாடு மட்டும் நிறைய இருக்கும்
6. பேங்க் மேனேஜர் ஜெய்சங்கர்க்கு ஃபோன் பண்ணி “ பர்சனல் மேட்டர் 1 பேசனும் , மாலை விட்டுக்கு வா’ன்னு கூப்பிடறார். அங்கே போனதும் “ பேங்க் லோன் டியூ கட்டவே இல்லை , ஒரு வாரம் டைம் , கட்டலைன்னா சீஸ் பண்ணிடுவேன்னு சொல்றார். இதுதான் பர்சனலா? இது பேங்க் மேட்டர். பேங்க்லயே சொல்லி இருக்கலாமே?
7. பத்திரிக்கை ஆஃபீஸ்ல கரண்ட் போயிடுது 12 மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கறாங்க. மீட்டிங்க் நடக்குது. ஆனா அந்த சீனில் லைட்டிங்க் அப்பட்டமா காட்டிக்குடுக்குது. அதே ஷாட்டில் கரண்ட் வந்த பின் வெளிச்சம் அப்படியே தான் இருக்கும் . செம காமெடி
8. இளவரசியை ரேப்போ , மர்டரோ அவர் வீட்டிலேயே பண்ணி இருக்கலாம். ஒரு கார் நிறைய ஆள் அனுப்பி பில்டப் கொடுத்து மலேசியா வாசுதேவன் வீட்டுக்கு வர வெச்சு ரிசைன் லெட்டர் டைப் பண்ணச்சொல்லி அதுக்குப்பின் ரேப் அண்ட் மர்டர் பண்ணுவது ரொம்ப நீலமான சாரி நீளமான காட்சி
9. கொலை நடந்ததுக்கான சாட்சியா வர்ற விசு படத்துக்கு ஃபைனான்ஸ் உதவி செஞ்சாரா? அவர் சாதாரண சாட்சி தான் . அவர் எப்படி ஒரு டி எஸ் பி தோள்ல கை போட்டு பாராட்ட முடியும்? பேச முடியும். அது கூடப்பாரவாயில்லை,. டி எஸ் பி தான் போடும் ரகசிய பிளானை சந்திரசேகர், ஜெய் சங்கர்க்கு விளக்குவது ஓக்கே ,. ஏன்னா அவங்க ஃபீல்டு ஒர்க் பண்றாங்க . ஆனா சமப்ந்தமே இல்லாம விசு எதுக்கு அங்கே? அதே போல் பிரஸ் மீட்டில் விசு என்னமோ போலீஸ் டிபார்ட்மெண்ட் ஐ ஜி மாதிர் பில்டப் கொடுப்பது ஓவர் . அவர் ஒரு சாட்சி . அவ்ளவ் தான்
10. கார்த்திக்கை தலையில் தாக்கும் வில்லன் அப்படியே அவரை விட்டுட்டு சசிகலாவைதூக்கிட்டுப்போறாரே? அவரை கண்ணால் கண்ட சாட்சியை கொலை பண்ணிட்டு , உயிர் அடங்கியாச்சா?ன்னு செக் பண்ணிட்டுத்தானே போகனும்?
11. ஓப்பனிங்க்ல அருண் பாண்டியன் 7 ரவுடிகளை ஒரே ஆளா அடி பின்றார்.சந்தோஷம் . ஆனா க்ளைமாக்ஸ்ல நடக்கும் ஃபைட்ல 4 பேர் அவரை சூழந்த்தும் ஒரு ஆளைக்கூட ஒரு அடி கூட அடிக்கலை .
12. வில்லன் பொண்ணுங்களை ரேப் பண்றார். இன்னொரு வில்லன் கொலை பண்றார். இதுல என்ன ஆதார டாக்குமெண்ட்ஸ் இருக்கும்? ஜெய்சங்கர் க்ளைமாக்ஸ்ல ஆதார டாக்குமெண்ட்ஸ் பேப்பர்ஸ்னு ஒரு கத்தைப்பேப்பர் எடுத்துட்டு வர்றார். ஆராசா வழக்குல கூட அவ்வளவு டாக்குமெண்ட்ஸ் இருக்காது . டெண்டர் விட்டது ,ரகசிய ஒப்பந்தம்னு இருந்தாலாவது அத்தனை பேப்பர்ஸ் காட்ட அர்த்தம் இருக்கு
13. பத்திரிக்கையாளர் மீட்டிங்க்கில் டி எஸ் பி தீனதயாளன் வழக்கமா உங்க பத்திரிக்கை எப்போ வரும்னு கேட்கும்போது எல்லாருமே அதிகாலை 4.30க்கு லாஸ்ட் நியூஸ் , காலை 6 மணிக்கு பேப்பர் வரும்கறார், ஆனா உண்மையில் தினத்த்ந்தி உட்பட எல்லாப்பத்திரிக்கைகளுக்கும் லாஸ்ட் நியூஸ் அப்டேஷன் நடு நிசி 12 மணி , பேப்பர் ரிலீஸ் @ அதிகாலை 3.30 தான்
14. வில்லன் ரவிச்சந்திரன் பொம்பளைப்பித்தன் அல்ல, பெண்ணின் கண்ணை எடுப்பவன். அவனை வலை வீசிப்பிடிக்க சும்மா ஒரு பெண் அந்த ஏரியாவில் போனால் போதும் . எதுக்கு கோகிலாவை ஸ்விம்மிங்க் டிரஸ்ல அனுப்பனும்>
15. எந்தக்காதலனும் தன் காதலியை பகடைக்காயா அதுவும் ஸ்விம் டிரஸ்ல அனுப்ப ஒத்துக்க மாட்டான், அதுவும் படம் பூட்ரா பாவாடை தாவணி அல்லது சேலையில் வரும் மிடில் கிளாஸ் ஃபேமிலி கேர்ள் சிட்டி பொண்ணு மாதிரி எந்த தயக்கமும் இல்லாம ஸ்விம் டிரஸ்ல போக ஓக்கே சொன்னது எப்படி?
16. கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சசிகலாவை டி எஸ் பி தன் வீட்டில் வெச்சு பாதுகாக்கிறார். கேசில் சமப்ந்தப்பட்ட சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட பின்பு கூட அவர் உஷார் ஆகி தன் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டாமா? அட்லீஸ்ட் 2 போலீஸ் கான்ஸ்டபிள் கூட பாதுகாப்பு இல்லை அவர் பங்களாவில் . சர்வ சாதாரணமாக வில்லன் குரூப் அவர் மனைவியை கார்னர் பண்ணறாங்க
17. தவறான நடத்தை உள்ள காதலியால் மன நலன் பாதிக்கப்படும் வில்லன் பழி வாங்க அதே போல நடத்தை தவறும் பெண்களை மட்டும் தானே கொல்லனும்? கண்ணுக்கு சிக்குன ஃபிக்ரை எல்லாம் கொலை செய்வது என்ன லாஜிக்?
18 சந்திரசேகர் வயிற்றில் ஆழமான கத்திக்குத்து வாங்குனதும் ஒரே ஒரு பெட்ஷீட்டை செந்தூரப்பூவே கேப்டன் மாதிரி போர்த்திக்கறார். அப்படிப்பண்ணுனா ரத்தம் நிக்குமா? டைட்டா ஒரு துணி போட்டு கட்டவே இல்லை
19. ஆனானப்பட்ட ஆ ராசாவை அரெஸ்ட் பண்ணவே 10 போலீஸ் தான் போனாங்க. ஆனா வில்லன் சிங்கிளா இருக்கார். அவர் கிட்டே அடியாளுங்க யாருமே இல்லை, அவரை அரெஸ்ட் பண்ண எதுக்கு அத்தனை அமளி துமளி? எதுக்கு 67 ஜீப் ?
20. லாங்க் ஷாட்ல காட்டும்போது 67 ஜீப்பிலும் ஒரே ஒரு டிரைவர் தான் இருக்கார் . ஆனா வில்லன் மாளீகையை எண்ட்டர் ஆனதும் ஒவ்வொரு ஜீப்பில் இருந்தும் 4 போலீஸ் ஆஃபீசர்ஸ் இறங்கறாங்க, எப்படி?
21. ஒரு பேச்சுக்கு 80 போலீஸ் தேவை என்றே வைத்துக்கொண்டாலும் 20 ஜீப் போதாதா? 20 * 4 = 80 .
22. கோகிலா கிட்டே கேப்டன் “ இந்த கேசோட திருப்பு முனையே நீங்க அந்த குதிரைக்காரரை பேச வைப்பதில்தான் இருக்கு” அப்டினு ஒரு பில்டப் டயலாக் விடறார். ஆனா கோகிலா அந்த குதிரைக்காரரை பார்த்து எந்த ரிஸ்க்கும் எடுக்காமயே அவர் பாட்டுக்கு பேச ஆரம்பிச்சுடறார்
23. குதிரைக்காரரை வில்லன் ஏன் ஓப்பனிங்க்லயே கொலை பண்ணலை? அவர் பேத்தியை கொலை பண்ணினது அவருக்குத்தெரிஞ்சிடுச்சுன்னு வில்லனுக்குஹ்ட்தெரிஞ்சுடுச்சு . சாட்சியாவோ , பழி வாங்கும் ஆபத்தாகவோ அவர் மாறுவார்னு வில்லனால் யூகிக்க முடியாதா?
24. வீட்ல வயசுப்பொண்ணை வெச்சிருகறவர் பிரம்மச்சாரி சந்திரசேகர்க்கு எப்படி வீடு கொடுத்தார்? சென்னைல பிரம்மச்சாரிக்கு வீடே கிடைக்காது. ஹவுஸ் ஓனருக்கு அழகான சம்சாரமும், வயசுப்பொண்ணும் இருந்தா கேட்கவே வேணாம். ஆனா இவர் சந்திரசேகரையும் அலோ பண்ணி அவரோட ஃபிரண்ட் அருண் பாண்டியனையும் அலோ பண்ணி தன் பொண்ணு கையால சோறெல்லாம் போடறாரு ஹி ஹி
25. படத்துக்கு முக்கியத்திருப்புமுனையே வில்லனோட காதலி சஹானாவா மாறுவதுதான் , வில்லன் சஹானா வா பார்ப்பதை காட்சியா காட்டி இருகனும் , முதல் 2 கொலையா வில்லனின் காத்லி , அவ கள்லக்காதலன் இருவரையும் கொலை பண்ரதை காட்டி இருக்கனும்
சி.பி கமெண்ட் - பார்த்தே ஆக வேண்டிய க்ரைம் த்ரில்லர் படம், பெரும்பாலானோர் பார்த்திருப்பீங்க, பார்க்காதவர்கள் பார்த்துடுங்க .
அ
சில சுவாராஸ்யமான செவி வழித்தகவல்கள்
1. இந்தபடத்தில் ஹீரோவாக நடிக்க உச்ச நட்சத்திரங்கள் இருவரைக்கேட்க ஃபிலிம் ஸ்டூடன்ட்ஸ் என அவர்கள் தயங்க 3 வது ஆளாக கேப்டன் ஒத்துக்கொண்டார்.
2. ரவிச்சந்திரன் நடித்த வில்லன் கேரக்டரில் முதலில் புக் ஆனவர் நாகேஷ். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது . அப்படி நடிச்சிருந்தா அபூர்வ சகோதரர்கள் க்கு முன்பே அவர் வில்லன் ஆகி இருப்பார் .
3. இந்தபப்ட ரிலீசின் போது போஸ்டரில் விஜய் காந்த் படமே ஸ்டில்ஸாக பேப்பர் விளம்பரங்களில் இருந்தது. படம் மெகா ஹிட் என்றதும் வகை வகையாக அருண் பாண்டியன் - கோகிலா ஸ்டில்ஸ் அதிகம் வந்தது . அது கேப்டனுக்கு பிடிக்கவில்லை
4. கண்மணி நில்லு காரணம் சொல்லு பாடல் காட்சி பட ரிலீசின் போது இல்லை, எடிட்டிங்கில் கட். படத்தின் நீளம் கருதி ( 165 நிமிடங்கள் ) பாட்டை கட் பணிட்டாங்க , பின் 25 வது நாளில் பாடல் இனைக்கப்பட்டு போஸ்டர்களில் இன்று முதல் இப்பாடல் இணைக்கப்பட்டு என விளம்பரம் வந்தது
5. இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க கார்த்திக் குக்கு நோ சம்பளம் , அதுக்குப்பதிலாக சசிகலாவுடன் ஸ்டோரி டிஸ்கஷன் ஹி ஹி
6 படத்தின் டைரக்டர் ஆர் அர்விந்த்ராஜ் தான் நடிகை விஜியை லவ் பண்ணி மேட்ட்ரை முடிச்சுட்டு அல்வா குடுத்தவரு , காதல் தோல்வியில் விஜி தற்கொலை பண்ணிக்குச்சு , நல்ல வேளை லெட்டர் எதும் எழுதி வைக்கலை அண்ணன் எஸ் ஆகிட்டாரு
7 . இதன் 2ஆம் பாகமாக மூங்கில் கோட்டை வருவதாக இருந்தது , சில காரணங்களால் வரவில்லை

Directed by | R. Aravindraj | |||
---|---|---|---|---|
Produced by | Abhavanan | |||
Written by | Abhavanan | |||
Starring | Vijayakanth Arun Pandian Chandrasekhar Jaishankar Karthik |
|||
Music by | Manoj Gyan | |||
Cinematography | A. Ramesh Kumar | |||
Editing by | G. Jayachandran | |||
Release date(s) | 15 August 1986 | |||
Running time | 176 minutes | |||
Country | India | |||
Language | Tamil |
3 comments:
இந்த படத்தை அழகா விமரிசனம் பண்ணிட்டிங்க...என்ன கொஞ்சம் பெருசா இருக்கு...படிக்க கொஞ்ச நேரம் ஆகிட்டு...
இந்த படம் வந்த புதிதில் வீட்டுல இந்த படத்துக்கு அனுப்பவேமாட்டேனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. ஒரு பெரிய A போட்டுருக்காங்களே அதுக்காகதானாம்...காலேஜ் கட் அடிச்சிட்டு matinee போன படம்....
அந்த மத்தியான நேரத்திலேயே கொஞ்சம் பயந்தது நிஜம்...
http://m.youtube.com/#/watch?v=vHfb2RGL2lk&desktop_uri=%2Fwatch%3Fv%3DvHfb2RGL2lk&gl=GB u left out best tomboy dance of disco shanti.ok.watch this.
ILAVARASI JOB RESIGNATION LETTER DICTATED BY MALASIYA VASUDEVAN ENDED WITH UMA BCOM BE CALM.DIALOGUE MODULATION SUPERB. SANKAR.M TIRUNELVELI
Post a Comment