Sunday, December 30, 2012

இந்தியாவின் நம்பர் 1 unisex salon and spa வீணா பேட்டி

நேச்சுரல்ஸின் புத்தாண்டு பரிசு!

தொகுப்பு: நளினி சம்பத்குமார்

Naturals Unisex Salon and Spa வின் அடுத்த பிரம்மாண்ட முயற்சி Naturals Women! மங்கையர் மலர் வாசகிகளுக்கு நன்கு அறிமுகமான நேச்சுரல்ஸ் வீணாவைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தோம். அதைத் தொடர்ந்து இந்தப் பேட்டி...
அழகு என்றால் என்ன?
ஒருவரின் உடல் அமைப்பு, ஆடை, ஆபரணங்கள், தலை அலங்காரம் போன்றவற்றில் மட்டுமே இல்லை அழகு. அழகை விலை கொடுத்து வாங்க முடியாது! நல்ல குணம், கற்பனைத் திறன், நகைச்சுவை உணர்வு, தன்னம்பிக்கை இவற்றின் வெளிப்பாடே அழகு. அந்த வெளிப்பாடு அவரவர் மனம் பொறுத்து அமையும்.
இந்தியாவின் நம்பர் 1 1 unisex salon and spa என்ற இடத்தை எப்படிப் பிடித்தீர்கள்?

எங்களிடம் வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் உள்ளன்போடு உபசரிக்கிறோம். அவர்களது மனதிற்குப் பிடிக்கும் வண்ணம் அவர்களை அழகூட்டுவதை முழு மனதோடு செய்கிறோம். நாங்கள் கையாளும் franchise model-ம் இந்தச் சாதனைக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.
அழகுப் பராமரிப்பு - ஆண்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?
6, 7 வருடங்களுக்கு முன் ஆண்கள் சலூனிற்குப் போவது என்பதே ஹேர்கட்டுக்கு மட்டும்தான் என்று இருந்தது. ஆண்களுக்குத் தனி ப்யூட்டி பார்லர் தேவையா? என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் தங்களது அழகைப் பராமரித்துக் கொள்ள ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்கள். வாக்சிங்கைத் தவிர அவர்களும் பெடிக்யூர், மேனிக்யூர், ஃபேஷியல், ஹெட் மசாஜ், கலரிங் போன்றவற்றை விரும்பிச் செய்து கொள்கிறார்கள்.
பெண்களின் கண்ணோட்டத்தில் ஏதாவது மாற்றம்?

பணக்கார வீட்டுப் பெண்கள்தான் பார்லருக்குப் போவார்கள் என்ற எண்ணமும் தற்காலத்தில் மாறிவிட்டது. வீட்டு வேலைகள் செய்யும் பெண்கள் (maids) கூட இன்று பார்லருக்கு வரும் ஓர் ஆரோக்கியமான போக்கை நாங்கள் பார்க்கிறோம். வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால்தான் பார்லருக்குப் போக வேண்டும் என்ற நிலைமாறி இன்று மாதத்தில் ஒருமுறை பார்லருக்குச் சென்று தன் தோற்றத்தைச் சீர்ப்படுத்திக் கொள்ளவே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
Naturals Unisex Salon and Spa வழியாக கொடிகட்டிப் பறக்கிறீர்கள். அப்படியிருக்க, Naturals Women துவக்கக் காரணம்?
நிறையப் பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்ள வரும்போது privacy வேண்டும் என்று விரும்புகிறார்கள். கரூர் போன்ற சிறு நகரங்களில் மட்டும் அல்லாது மாநகரங்களில் கூட ஆண்களின் கண்களுக்கு முன்னால் பார்லரில் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள பெண்கள் தயங்குகிறார்கள். அவர்களது இந்தத் தயக்கத்தைப் போக்கவே naturals women இன்னும் ஆறே மாதங்களில் பிறந்து வளர்ந்தும் விடுவாள்.
Naturals Women இதில் என்னென்ன ஸ்பெஷல்கள் இருக்கின்றன?

முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே இயக்கப்படும் பார்லராக அது இருக்கும். ரிசப்ஷன் தொடங்கி பார்லரில் பணி செய்பவர்கள் வரை அனைவருமே பெண்கள்தான். பெண்கள்தான் இதில் உரிமை பெற்றவர்களாகவும் இயங்கப் போகிறார்கள். Naturals Women பார்லர்களில், வாடிக்கையாளர்களுக்கு, அழகு சேவை தவிர இங்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு pre natal மற்றும் post natal சேவைகளும் வழங்கப்படும்.
உரிமம் (Franchisee) பெற்றவராக இருக்க கல்வித் தகுதி?
கல்வித் தகுதி என்பதை விட அழகு கலையில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். நிறைய படித்தவர்களும் சரி, அவ்வளவாக படிக்காதவர்களும் சரி தங்களுக்குள் இருக்கும் ஆர்வத்தாலேயே நேச்சுரல்ஸின் உரிமம் பெற்றவர்களாக மாறி இன்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு முதலீடு தேவை?

Naturals Womenக்கு உரிமம் பெற விரும்புபவர்கள் 20 முதல் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
உங்களிடம் உரிமம் எடுத்துக் கொள்பவர்களுக்கு நீங்கள் எந்த மாதிரியான உதவிகளைச் செய்கிறீர்கள்?
முதலில் இடத் தேர்வு செய்து தருகிறோம். இது முக்கியமான ஒன்று. மக்கள் நடமாட்டம் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்து அவர்களுக்குத் தெரிவிப்போம். அடுத்து man power. பார்லரில் வேலை செய்வதற்குத் தகுதியான நபர்களை நாங்களே தேர்வு செய்து அனுப்புவோம், அதன்பின் marketing support தருகிறோம். அவர்கள் உரிமம் எடுத்த மூன்றே மூன்று மாத காலத்தில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அவர்கள் எட்ட நாங்கள் அனைத்து விதங்களிலும் உதவுகிறோம்.
உரிமம் பெற்ற கிளைகள் அனைத்திலும் எதிலும், எங்கும், எப்போதும் சீரான தரம். எப்படிச் சாத்தியம்?

போர்ட் வைப்பதிலிருந்து, சலூனுக்குள் வரும் வாடிக்கையாளரை உபசரிப்பது வரை எங்களது அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான சிறப்பான சேவையைத்தான் நாங்கள் கடைபிடிக்கிறோம். எங்களது ஏரியா மேனஜர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வாரா வாரம் சென்று அனைத்து சலூன்களையும் மேற்பார்வை செய்து வருகிறார்கள்.
உங்கள் உரிமம் பெற்றவர்களின் வெற்றிக்குக் காரணம்?
தங்களது பொன்னான நேரத்தையும் மனதையும் ஆர்வத்தையும் கவனத்தையும் முக்கிய முதலீடாக போட்டதுதான் அவர்களது வெற்றிக்குக் காரணம். பணம் போட்டோமா இதோ வெற்றி வந்து விடும் என்பது இதில் கிடையாது.
Franchise India வழங்கும் மிகச் சிறந்த franchisor என்ற விருதை சமீபத்தில் Naturals வாங்கி இருக்கிறதே?

franchising எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்துகொண்டு, எங்களிடம் உரிமம் பெற்றவர்களோடு சுமுகமான நட்புறவை வளர்த்துக் கொண்டோம். அவர்கள் வளர்ச்சியில் தனியொரு அக்கறையும் நாங்கள் காட்டியதற்குக் கிடைத்த விருது இது என்றே சொல்ல வேண்டும்.
உங்களது ட்ரெயினிங் அகாடமி பற்றி...
இரண்டு வார காலம் தொடங்கி எட்டு வார காலம் வரை பயில நிறைய வகுப்புகள் எங்கள் அகாடமியில் இருக்கின்றன. மேக்-அப், ஹேர் ஸ்டைலிங் என இப்படி நிறைய பாடங்கள் இருக்கின்றன. யார் யாருக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் அதைத் தேர்ந்தெடுத்துப் பயிலலாம்.
வேலை வாய்ப்பு?
எங்கள் ட்ரெயினிங் அகாடமியில் பயில்பவர்களுக்கு நாங்களே வேலை வாய்ப்பும் வழங்குகிறோம்

0 comments: