மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்ததே தவறு: கோவைத் தம்பி
Posted Date : 11:45 (20/11/2012)Last updated : 11:47 (20/11/2012)
சென்னை:
'இதயக்கோவில்’படத்தில் மணிரத்னத்துக்கு டைரக்டர் வாய்ப்பு கொடுத்ததே தவறு
என்று மைக் மோகனின் வெள்ளி விழா படங்களை தயாரித்த மதர்லேண்ட் பிக்சர்ஸ்
நிறுவனத்தின் அதிபர் கோவைத்தம்பி காட்டமாக கூறியுள்ளார்.
பென்குவின் பதிப்பகம்,மணிரத்னத்திடம் எடுத்திருக்கும் நீண்ட பேட்டியை தொகுத்து 'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளது.
இந்த புத்தகத்தின் சில அம்சங்களை ஆனந்த விகடன் வார இதழ்,மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.
அதில்,'முதல் தோல்வி?’ என்ற கேள்விக்கு," தயாரிப்பாளர் கோவைத் தம்பி அப்போது உச்சத்தில் இருந்த ராதா, அம்பிகா இருவர் கால்ஷீட்டையும் வைத்திருந்தார். என்னுடன் படம் செய்ய ஆசைப்பட்டு, படத்துக்கான கதையை ஒரு கேசட்டில் பதிவுசெய்து எனக்கு அனுப்பி இருந்தார். 'இது என் டைப் படம் இல்லை. இப்போது என்னால் உங்களுக்குப் படம் செய்ய முடியாது’ என்று அவரிடம் நேரில் சொல்லச் சென்றேன்.
நான் சொன்னதைக் கேட்ட அடுத்த கணமே போனில் ராதா, அம்பிகா இருவரின் கால்ஷீட்டுகளையும் கேன்சல் செய்துவிட்டு, எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். வேண்டாம் என்று சொல்லச் சென்ற நான், என்னை அறியாமல் 'இதய கோயில்’ படத்தில் சிக்கிக்கொண்ட கதை இது. இளையராஜாவின் இசை படத்தை ஓரளவு காப்பாற்றியது.
குறிப்பாக, 'நான் பாடும் மௌன ராகம்...’ பாடலைக் காட்சிப்படுத்தியபோது 'பியாஷா’ குருதத்துக்கு அஞ்சலி செலுத்துவதாக உணர்ந்தேன். அந்தப் பாடல்தான் 'மௌன ராகம்’ என்ற என் அடுத்த மெகா ஹிட் படத்துக்கான டைட்டிலைத் தந்தது. மற்றபடி என்னுடைய மிக மோசமான படம் 'இதய கோயில்’!” என்று மணி ரத்னம் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மணி ரத்னத்தின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கோவைத் தம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள் அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம் ‘இதயக்கோவில்’ என்றும் 28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.
கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா
படங்களை தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். எத்தனையோ இளைஞர்கள் இருக்க,
தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்’ டைரக்டர் ஆக்கியது என்
தவறுதான். அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியது
உண்மைதான்.
எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும்.அந்த படத்தில் எனக்கு மூன்று பட செலவு ஏற்பட்டது. விவரம் தெரியாமல்,காட்சிகளை சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தை சுட்டு பொசுக்கியது.என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்’ வெற்றி படம்தான்.
திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்’ படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது” என்று கூறியுள்ளார்.

மக்கள் கருத்து
1. Avathaany6 Days ago
மணி ரத்தினம் யார் என்பதை காட்டிவிட்டார்.
நன்றி கெட்டத்தனம் என்பது இதுதான்.தமிழ்ச்சினிமா இன்று இன்னொரு பரிமாணத்தை
அடைந்துவிட்டது.இவற்றை எட்டுவதற்கு கோவைதம்பியும் ஒரு காரணம் என்பதை
மணிரத்தினம் மறந்துவிட்டார்.
மணிரத்தினதின் விமர்சனம் ஏறிய ஏணியை எட்டி உதைப்பதற்கு சமமானது.மணிரத்தினத்தின் இப்போதைய தகுதி வேறாக இருக்கலாம்.ஆனால் அப்பொழுது அவரின் இயக்கும் தகுதி அந்தளவுதான்.
இதயக்கோவில் படம் அந்தக் காலகட்டத்தில் மிக நல்ல படமே.அந்தப் படத்தை அவரே குறை சொல்வது தனக்குத் தானே எச்சில் உமிழ்வது போன்றதே.
பெரிய சிந்தனைவாதி தன்னை நினைத்துக் கொள்ளும் மணி ரத்தினம் அணுக்களின் கூட்டுத்தான் பொருள்களின் தோற்றம் என்பதை அவர் உணர்வார்தானே.
அதைப் போன்றதுதான் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு கொண்டது.மணி ரத்தினதின் படங்களைப் பார்த்து ரசிப்பவந்தான் நானும் .ஆனால் மணி ரத்தினத்தின் தலைக்கர்வம் பிடித்த் இந்த அசிங்கமான முட்டாள்தனமான சிறுபிள்ளைத்தனமான் நன்றி கெட்டத்தனமான பேட்டி அவர் யர் என்பதைக் காட்டிவிட்டது.
இவர் 70களில் சினிமாவை புதிய பாதை நோக்கி நகர்த்திய பாலு மகேந்திராவைப் பற்றியோ பாரதிராஜ பற்றியோ குறிப்பிடாமல் விட்டதற்கு மறாதி காரணமல்ல,அழுக்காறுதான் காரணம்.
சினிமாவின் நிலை கண்டு அதைக் காப்பற்ற களம் இறங்கியதாக கூறியிருக்கின்றார்.இதைவிட தலைக்கனம் பிடித்த பதில் வேறில்லை.
மணிரத்தினம் அவர்களே!.தமிழ்ச் சினிமா உங்கள் கையில் மட்டுமே இருப்பதாக நினைக்காதீர்கள்.இதயக்கோவில் இயக்கிய போது தட்டுத்தடுமாறி எழுந்து நடக்க முயற்சித்த சிறுபிள்ளை நீங்கள்.
கைபிடித்து நடை பயிற்றுவித்தவரை கேவலப்படுத்தாதீர்கள்.

2.
நிச்சயமாக வெற்றிப்படம்தான். நல்ல பாடல்கள்,
கவுண்டமணி காமெடி, அம்பிகா,ராதாவின் அழகு என்று நிறைய சொல்லலாம்.
வாயைக்கொடுத்து .....புண்ணாக்கிகொள்வது என்பது இதுதான். கோவைத்தம்பி அழகிய
பதில் கொடுத்திருக்கிறார்.
3.Thamilarasu K6 Days ago
மணிரத்னம் மிகப்பெரும் இயக்குநர் என்ற
நிலையில் இப்போது இருப்பதால் எதைவேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறார்
போலும். இதயகோயில் ஒரு நல்ல திரைப்படந்தான். அற்புதமான இசை, பாடல்கள்!
4. Zahir Husain6 Days ago
இதுதான் அவர்களின் வழக்கம்.... நன்றிகெட்ட தனம். ஏற்றிவிட்ட ஏணியை எட்டிஉதைப்பது.... நன்றிகெட்ட ஜென்மம்....
5.
"மணி" இல்லாத ரத்தினத்தை மணிரத்னமாக மாற்றினால் இப்படித்தான் நடக்கும்.
6. venkatesh6 Days ago
Maniratnam does not have right to say this ?
he is not talking about other's movie, he says about what he feels,
nowadays the tolerance level is going down ....
7.
எனக்கென்னவோ மணிரத்தினம் தன்னைத்தானே
திட்டிக்கொள்வதாகத்தான் தெரிகிறதே தவிர கோவைத்தம்பியைப் பற்றித் தவறாக
எதுவும் சொன்னதாக் இல்லையே!
8. THAMIZH UK6 Days ago
இன்று தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் நிலை இதுதான்...
படம் ஆரம்பிக்கும் வரையில் தான் அவர் "முதலாளி"..... பூஜை முடிந்துவிட்டால்.... முதலில் "அவர்" காலி....
ஹ்ஹ்ஹ ஹ்ஹ்ஹ ஹ்ஹ்ஹா...ஹா ஹா
படம் ஆரம்பிக்கும் வரையில் தான் அவர் "முதலாளி"..... பூஜை முடிந்துவிட்டால்.... முதலில் "அவர்" காலி....
ஹ்ஹ்ஹ ஹ்ஹ்ஹ ஹ்ஹ்ஹா...ஹா ஹா
1 comments:
ஆங்கில படங்களை காப்பி அடித்து எல்லாம் பண்ணுவார்கள், இதில் அலட்டல் வேறு.
Post a Comment