Friday, November 23, 2012

Life of Pi (2012) - சினிமா விமர்சனம்

http://7tab.in/wp-content/gallery/life-of-pi-wallpapers/life-of-pi-wallpapers-1.jpgபடத்தை எடுக்க முடிவு பண்ணும்போதே ஆஸ்கார் அவார்டை அள்ளிடனும்னு  ஒரு முடிவோடதான் இயக்குநர் களம் இறங்கி இருக்கார். அவார்டு வாங்குவது உறுதி. ஆனா  அனைத்துத்தரப்பு மக்கள் ரசிக்கும் ஜனரஞ்சகப்படமா  உருவாக்கும் வாய்ப்பு இருந்தும் எப்படி அதை ஹேர் இழையில் தவற விட்டார்னு பார்ப்போம் . 


ஹீரோவோட குடும்பம் பாண்டிச்சேரில இருக்கு.அப்பா கிட்டத்தட்ட  ஜூ மாதிரி விலங்குகள் கொண்ட ஒரு கண்காட்சி ஹால் ( உயிரியல் பூங்கா )  நடத்தறவர்.அந்த இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது, காலி பண்ணச்சொல்றாங்க. கனடா நாட்டில் வேலை கிடைச்சிருப்பதால் அங்கே போய் செட்டில் ஆகிடலாம்னு விலங்குகளுடன் கப்பல் பயணம் பண்றாங்க... 



வழில கடல்ல புயல். ஹீரோவோட பெற்றோர் அவுட். தப்பிப்பிழைச்சது  ஒரு வரிக்குதிரை   , உர்ராங்குட்டான், புலி , எலி , ஹீரோ. இவங்க ஒரு படகுல பயணம் பண்றாங்க. அந்த சாகசப்பயணம் தான்  கதை.. 


சும்மா சொல்லக்கூடாது. துணிச்சலான கதை . ஒரே மாதிரி மசாலாப்படங்களை பார்த்து சலித்த கண்களுக்கு வித்தியாசம்.கேமராமேனுக்கு பூப்போட்டு கும்பிடனும். அவ்வளவு செய் நேர்த்தி , உழைப்பு


ஹீரோ சுராஜ் ஷர்மா  அந்த கதாப்பாத்திரமாவே மாறிட்டார். தமிழில் கமல் போல் அந்த கேரக்டருக்காக இரு விதமான தோற்றம், நிறத்தில் , உடல் மொழியில் அருமை 


ஹீரோயின் ஸ்ரவந்தி பரத நாடியக்கலைஞராக வருகிறார். மாநிறம் என்றாலும் கொள்ளை அழகு நந்திதா தாஸ் தங்கை மாதிரி , மனதை சுண்டும் தோற்றம் .. 


 தபு ஹீரோவுக்கு அம்மாவா வர்றார்.. அதிக காட்சிகள் இல்லை. வந்தவரை ஓக்கே . 


 யன்  மார்டெல் என்கிற நாவலாசியரின் புகழ்பெற்ற நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்.இயக்குனர் ஆங் லீ..இவர்   HULK  படத்தின் இயக்குநர் .

http://www.moviedeskback.com/wp-content/uploads/2012/07/Life_of_Pi_movie_wallpapers-1920x1080.png-004.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1.  புயல் வந்து கப்பலை புரட்டிப்போடும் இடத்தில் ஒளிப்பதிவு , பின்னணி இசை செம 




2. புலி மற்றும் ஹீரோ இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட பின் தன்னந்தனிக்கடலில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் காட்சிகள் நேஷனல் ஜியாக்ரஃபி பார்த்தது போல் அத்தனை தத்ரூபம்.


3. இரண்டாவது புயல் தாக்கும்போது முதல் புயலுக்கும் இதற்கும் நல்ல வித்தியாசம் காட்டியது . அந்த காட்சியில் கிராஃபிக்ஸ் எது?  ரியல் புயல் எது? என்றே கண்டறிய முடியவில்லை 



4. கடலில்  இரவில் , நிலா வெளிச்சத்தில் திமிங்கலம் வரும் காட்சி. அந்த பிரம்மாண்டம் இன்னும் கண் முன்.. 


5. மீன்கள் பறந்து பறந்து வந்து காற்றில் படகில் விழுவதும் புலி சாப்பிடுவதும் முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் காட்சி 



6. மிதக்கும் தீவில் ஹீரோ போனதும் சுற்றிலும்  ஒரே விதமான 1000க்கணக்கான விநோத பிராணிகள் சூழ ஹீரோ அந்த ஓடையில் ஆனந்தக்குளியல் போடும் காட்சி  


7, நான் சாதா தியேட்டரில் தான் படம் பார்த்தேன், 3 டி எஃப்ஃபக்ட்ல இன்னும் கலக்கலா இருந்திருக்கும் சாத்தியம் இருக்கு 

http://www.apnatimepass.com/life-of-pi-movie-wallpaper-17.jpg

 இயக்குநர் திரைக்கதையில் சறுக்கிய இடங்கள்



1. கடல் பயணம் பண்ணும் ஆள் கடலின் உப்புக்காற்றில் கருத்துடுவாங்க. அதை படிப்படியாய் காட்டி இருக்கனும். ஹீரோ செக்கச்செவேல் என இருக்கார். க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முன்னே அட்டக்கறுப்பா ஆகிடறார். அப்படி காட்டக்கூடாது . ஸ்டெப் பை ஸ்டெப் கறுப்பாக்கி காட்டி இருக்கனும் 



2. ஆனந்த விகடனில் கடல் கதைகள் பல எழுதிய நரசய்யா வின் கடற்பயணக்குறிபுகள்  பல இடங்களில் விரவி இருந்தும் டைட்டிலில் அவருக்கு க்ரெடிட் தரவே இல்லை 


3. நாம வீட்டில் படுத்துத்தூங்கிட்டு இருக்கும்போது லேசா மழைச்சாரல் நம்ம மேல பட்டா ஆழ்ந்த தூக்கமா இருந்தாலும் டக்னு விழிச்சுடுவோம், உள்ளுணர்வு எழுப்பி விட்டுடும். ஆனா ஹீரோவோட குடும்பம் கப்பல்ல அறையில் படுத்து தூங்கும்போது புயலில் கடல் நீர் உட்புகுந்து நீரில் மூழ்கி சாவது அவ்வளவு சாதாரணமா காட்டியது தப்பு. போராடி பின் மூழ்கி செத்திருக்கனும், ஐ மீன் அப்படி எடுத்திருக்கனும். 


4. பரத நாட்டியக்கலைஞர்கள் பயிற்சியின் போது மல்லிகைப்பூ போன்ற வாசனைப்பூக்கள் சூட அனுமதி இல்லை. தலை வலி தரும், மனதை திசை திருப்பும்  என்பதால். ஆனா பரத நாட்டிய பள்ளியில் ஹீரோயின் உட்பட ஆளாளுக்கு வித விதமா  பூச்சரம் சூடி இருக்காங்க 


5. புயல் வரும்போது பெரும்பாலான காட்சிகள் க்ளோசப் காட்சிகளே. லாங்க் ஷாட்ஸ் தான் நம்பகத்தன்மை கொடுக்கும் . த அபிஸ் படத்துலயும் சரி, டைட்டானிக்லயும் சரி லாங்க் ஷாட்ஸ் நிறைய இருந்தது


6. படகுல வரிக்குதிரை  செத்துக்கிடக்கு. பசித்த புலி அதை சாப்பிடாம  எலியை கவ்வுமா? அதாவது மசாலா ரோஸ்ட் கண் முன் இருக்கும்போது யாராவது இட்லிக்கு ஆசைப்படுவாங்களா? அனுஷ்கா , ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் ஃபிகர் பக்கத்துல இருக்கும்போது யாராவது வர லட்சுமியை தேடிப்போவாங்களா? 


7. க்ளைமாக்ஸ்ல ஹீரோ இன்னொருவர் கிட்டே  தன் கதையை சொல்லி முடிச்சுட்டு இன்சூரன்ஸ் ஆஃபீசர்ங்க நம்பாததால நான் வேற ஒரு கதை சொன்னேன்னு ஆரம்பிச்சு சொல்றது எதுக்கு? தேவை இல்லை.. அட்லீஸ்ட் 2 விதமான விருமாண்டி டைப் கண்ணோட்டக்கதைகளை சொல்லிட்டு இதில் எது உண்மை? என சஸ்பென்சாக முடிச்சிருக்கலாம். 


8. . புலி , ஹீரோ இருவர் மட்டுமே வரும் காட்சிகள் ரொம்ப நீளம். சுவராஸ்யம் போயிடுது. இதே ஹீரோயின் ஹீரோ கூட இருந்திருந்தா இன்னும் ஜாலியா திரைக்கதை இருந்திருக்கும் 


9. படம் மொத்தம் 2 மணி நேரம் ஓடுது. அந்த மிதக்கும் தீவில் ஹீரோ இருப்பது ஜஸ்ட் 8 நிமிஷம் தான் வருது. குழந்தைகளை கவரும் அந்தக்காட்சியை 20 நிமிடம் பண்ணி ஹீரோ - புலி வரும் அந்த நீண்ட காட்சியை நீளத்தை ட்ரிம் பண்ணி இருக்கலாம் 



10  ஓப்பனிங்க்ல ஹீரோ இந்து, முஸ்லீம் , கிறிஸ்டியன் 3 மதங்களையும் விரும்பினார் , பின் பற்றினார் என்பதெல்லாம் கதைக்கு தேவை இல்லாதது . அனைத்து தரப்பினைரையும் கவரும் மலின யுத்தின்னும், செயற்கைன்னு சர்வ சாதாரணமா சொல்லிடுவாங்க


11. கிராமங்களில் ஒரு சொல வடை உண்டு  சுண்டைக்கா கால் பணம் , சுமைக்கூலி முக்காப்பணம்னு . ஹீரோவின் அப்பாவுக்கு விலங்குகள் மீது பாசம் ஏதும் இல்லை, சேல்ஸ் தான் பண்ணப்போறார், அதை பாண்டிச்சேரிலயே பண்ணி இருக்கலாமே? எதுக்கு லக்கேஜ் சார்ஜ் எல்லாம் கட்டி கடல்ல  ஃபாரீன் கூட்டிட்டுப்போய் சேல்ஸ் பண்ணனும்? கட்டுபடி ஆகுமா? அதனால் அந்த இடத்தில் கண்டாவில் போய் இதே ஜூவை நடத்தறேன், அந்த விலங்குகளை என்னால் பிரிய முடியலைன்னு சீன் வெச்சிருக்கலாம்


12. ஹீரோவோட குடும்பம் என்ன ஆகறாங்கன்னு விஷுவலா காட்டவே இல்லை. படத்துக்கு ரொம்ப முக்கியமான  காட்சி ஆச்சே?


13. திமிங்கலம் ஹீரோவை கிராஸ் பண்ணி அது பாட்டுக்கு போகுது, எதுவுமே பண்ணலையே?  கிராஃபிக்ஸ் திமிங்கலமா?


14. படத்துல காதலுக்கு இடம் இல்லைன்னு முடிவு பண்ணிட்டா ஹீரோயினை காட்டி இருக்கவே தேவை இல்லை. சும்மா 8 நிமிடங்களே வரும் காட்சிக்கு எதுக்கு இவ்லவ் பில்டப்? ஆசை காட்டி மோசம் செஞ்ச மாதிரி ஆகிடுச்சே?


15. நாவலா படிக்கும்போது அப்பப்ப போர் அடிச்சா வெச்சுட்டு அப்புறம் படிக்கலாம், ஆனா படமா எடுக்கும்போது அந்த சலிப்பை மறக்கடிக்க திரைக்கதைல ஜிம்மிக்ஸ் சேத்தனும், சுவராஸ்யமான சம்பவங்கள் வேணும், சும்மா ஒரு போட் , ஒரு புலி , ஹீரொன்னு  படத்தை ஓட்டிட முடியாது


16. குடிக்க தண்ணி கொஞ்சமா தான் இருக்கு, கடல் பயணி ஃபாலோ பண்ண வேண்டிய முக்கிய விதி தொண்டை காயாம பார்த்துக்கறது , ஹீரோ அடிக்கடி  வானத்தை பார்த்து அய்யோ கடவுளே  காப்பாத்துனு காட்டுக்கத்தலா கத்தறாரே? ஏன்?


17 .  புயல் தாக்கியதும்  கப்பலில் அபாயச்சங்கு ஒலிக்குது, அபாய விளக்கு எரியுது ஆனா பதட்டமான சூழலை , மனிதர்கள் இங்கும் அங்கும் அலை பாய்வதை விஷுவலா காட்டவே இல்லை..
http://media.glamsham.com/download/wallpaper/movies/images/l/life-of-pi-wallpaper-10-s.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்




1. பொதுவா எல்லாரும் பயணம் செய்யும்போது அந்தந்த ஏரியா ஸ்டாம்ப் கலெக்‌ஷன்ல  ஈடுபடுவாங்க , ஆனா  என் மாமா நீச்சல் குளம் எங்கே பார்த்தாலும் அதில் நீந்திடுவார்


2. பாண்டிச்சேரி தெற்கு ஃபிரான்ஸ் போல இருக்கு 



3. இந்துக்களிடம் உள்ள பிரச்சனையே அவன் 1000க்கணக்கான கடவுள்களை வழி பட்டான் , வணங்குவான் என்பதே 


4. சின்னப்பசங்க வளரும்போது அவங்க கண்ணுக்கு எல்லா கடவுள்களூம் சூப்பர் ஹீரோவா  தெரிவாங்க லைக் அனுமார், விஷ்ணு 



5. கடவுள் அவரை காப்பாத்தலை , மருந்து மாத்திரை தான் காப்பாத்துச்சு 



6. கடந்த காலத்தோட இருக்கும் ஒரே இணைப்பு எங்கம்மாவுக்கு கடவுள் & கடவுள் நம்பிக்கை 


7. குற்றவாளிகள் செய்யும் குற்றத்துக்கு , பாவத்துக்கு அப்பாவியை ஏன் பலியிடனும்? அவன் கிட்டே ஏன் அன்பு செலுத்தனும்? அப்படிப்பட்ட பாவியை கடவுள் ஏன் படைக்கனும்? 



8. இந்து மதம் எனக்கு நம்பிக்கையை கொடுத்துது, கிறிஸ்துவ மதம்  கடவுளோட அன்பை அறிமுகம் செஞ்சுது 


9. மூன்று மதத்தையும் ஒருத்தன்  கத்துக்கிட்டான்னா அவன் ஒண்ணையும் உருப்படியா ஃபாலோ பண்னலைன்னு அர்த்தம் 


10. நம்பிக்கை என்ற வீட்டில் ஏகப்பட்ட அறைகள் உண்டு 


11. மிருகங்களுக்கும் ஆன்மா உண்டு, அதை நான் அதனோட கண்களில் பார்த்திருக்கேன் 


12. வெஜிட்டபிள்  ஃபுட் ஏதாவது குடு 

 பசுவோட ஈரல் தரவா? பசு வெஜ் தானே? 


13.  மனித வாழ்வில் பிரிவை விட பெரிய வலி எது தெரியுமா? ஒரு நிமிஷம் நின்னு நாம பிரியப்போறோம், போய்ட்டு வர்றேன் அப்டினு சொல்லிக்க முடியாதது தான்



14,. கொலம்பஸ் மாதிரி நாம அமெரிக்கா போகப்போறோம்

 அப்பா, ஆனா கொலம்பஸ்  இந்தியாவுக்குத்தானே வந்தார்? நாம ஏன் இந்தியாவை விட்டு போறோம் ? 

http://img.india-forums.com/wallpapers/1280x1024/236001-press-meet-of-film-life-of-pi.jpg

 சி.பி கமெண்ட் -  அழகிய ரசனை உடையவர்கள் , ஒளிப்பதிவுக்காகவே படம் பார்க்கலாம் என நினைப்பவர்கள் , ,மாறுபட்ட படம் பார்க்க நினைப்பவர்கள், சாண்டில்யனின் கடல் புறா டைப் நாவல் ரசித்தவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஆர்ட் ஃபிலிம் . ஆஸ்கார் அவார்ட் கன்ஃபர்ம் ஈரோடு வி எஸ் பி யில் படம் பார்த்தேன். ஒளிப்பதிவு  , 3டி எஃபக்ட் , கிராஃபிக்ஸ் காட்சிகள் இந்த 3 பிரிவில் ஏதாவது 2 ஆஸ்கார் அவார்டு நிச்சயம்

4 comments:

Senthil said...

U mean to say flop?

Thanks Senthil, Doha

Pulavar Tharumi said...

அருமையான விமர்சனம்! ரசித்த வரி: 'கேமராமேனிற்கு பூ போட்டு கும்முடனும்' :)

aavee said...

ஆஸ்கார்ல ஒரு பிரிவு.. ஒரிஜினல் ஸ்டோரி ன்னு ஒரு பிரிவு இருக்கு.. அதனால தான் அந்த கதைய ஜிம்மிக்ஸ் சேத்தாம அப்படியே எடுத்திருப்பாங்க..

Thillakan said...

Read this
http://www.padalay.com/2013/01/life-of-pi.html