ஹீரோ ஒரு சூப்பர் மேன் மாதிரி,. அசாத்திய சக்தி உள்ளவர், பறப்பார், தாவுவார், அவரை துப்பாக்கிகுண்டுகள் உட்பட எந்த ஆயுதத்தாலும் எதுவும் பண்ண முடியாது .லாஸ் ஏஞ்சல் நகர்ல இருக்கற குற்றவாளிகளுக்கு இவர் சிம்ம சொப்பனம் மாதிரி. எங்கே குற்றம் நடந்தாலும் ஹீரோ ஆஜர். இப்போ என்ன பிரச்சனைன்னா குற்றம் நடந்தா அரசுக்கு என்ன நஷ்டம் ஆகுமோ அதை விட டபுள் மடங்கு ஹீரோவால அரசாங்கத்துக்கு ஆகிடுது.
படத்தோட முதல் சீன்லயே ஒரு பேங்க்ல கொள்ளை நடக்குது.அதை ஹீரோ தடுக்கறாரு. ஆனா பல கட்டிடங்களை உடைச்சு சேதம் பண்ணிடறாரு. ஒரு போக்குவரத்து நெரிசலில் ரயில்வே டிராக்ல மாட்டின காரை தூக்கி கடாசிடறாரு, ஏகப்பட்ட கார் உடஞ்சு தண்டச்செலவு. அந்தக்கார்ல வந்தவர் ஹீரோ 2 நன்றி சொல்லி தன் வீட்டுக்கு கூட்டிட்டு போறாரு.
அவருக்கு ஒரு சம்சாரம், ஒரு வாரிசு.அவரோட சம்சாரத்துக்கு ஹீரோவை பார்த்தாலே பிடிக்கலை. அவர் ஹீரோ கிட்டே அட்வைஸ் பண்றாரு. உன்னை எல்லாரும் வெறுக்கறாங்க. அரசு , மக்கள் எல்லாரும் உன்னை விரும்பும்படி பண்ண முடியும். நீ பேசாம போலீஸ்ல சரண்டர் ஆகிடு. 15 நாள் உள்ளே இரு. நீ இல்லாம போலீஸ் + மக்கள் திண்டாடனும். குற்றங்கள் பெருகும். அந்த டைம்ல நீ எண்ட்ரி ஆகி அவங்களை காப்பாத்தினா நீ ஃபேமஸ் ஆகிடலாம். இதான் பிளான்.
அவர் திட்டப்படியே எல்லாம் நடக்குது. ஹீரோ எல்லாராலும் பாராட்டப்படறார். இப்போ தான் ஒரு ட்விஸ்ட். ஐடியா குடுத்தவரோட சம்சாரம் தான் ஹீரோவோட முன்னாள் சம்சாரம். இந்த மேட்டர் அந்த சம்சாரத்துக்கு தெரியுது. ஹீரோவுக்கு தெரில.
3000 வருஷத்துக்கு முன்னால கடவுளால் படைக்கப்பட்ட தேவர்கள் இவங்க 2 பேரும். இவங்க இணைஞ்சா அபூர்வ சக்தி 2 பேருக்கும் போயிடும். விலகி இருந்தா 2 பேருக்கும் சக்தி இருக்கும். என்ன ஆச்சு? என்ன முடிவு எடுத்தாங்க? என்பதே மிச்ச மீதிக்கதை
மென் இன் பிளாக் ஹீரோ வில் ஸ்மித் தான் இதுல ஹீரோ. அசால்ட்டா நடிச்சிருக்கார்.ஆரம்பத்துல ஆண்ட்டி ஹீரோவா வரும்போது வில்லத்தனம், சூப்பர் ஹீரோ ஆன பின் ஹீரோயிசம், தன் முன்னாள் மனைவி பற்றி தெரிந்த பின் கலவையான உணர்ச்சிகள் என அவர் நடிப்பு கலக்கல் ரகம்..
ஹீரோயின் Charlize Theron வசீகரிக்கும் பார்வை, அவருக்கு கண், உதடு எல்லாமே ( முகத்துல) சின்னது . ஆனா கொள்ளை அழகு. ஹீரோ தான் இவரது முன்னாள் கணவர்னு தெரிஞ்சதும் கதை கிளுகிளுப்பா போய் இருக்க வேண்டியது, அங்கேயும் சைபர் க்ரைம் கேஸ் பயமோ என்னமோ திரைக்கதை தடம் மாறிடுது.
இன்னொரு ஹீரோவா வரும் Jason Bateman அமைதியான நடிப்பு. நம்ம ஊர் சரத் பாபு மாதிரி ஜெண்டில்மென் கேரக்டர். நல்லா பண்ணி இருக்கார்.
மனம் கவர்ந்த வசனங்கள்
1. விதியா எதையும் முடிவு பண்றதில்லை, நாம தான் நிர்ணயம் பண்ணனும்.
2. அதிகாரியை பார்த்தா “ யூ ஹேடு டன் எ குட் ஜாப்”னு பாராட்டனும்.. எங்கே சொல்லு?
அவன் வேலையை அவன் செய்யறான், நான் ஏன் பாராட்டனும்?
3, ஏண்டா டேய் , கார்ல புட்டி இல்லை, குட்டி இல்லை. நீங்க ஒரு பேங்க்கை கொள்ளை அடிச்சு என்னடா யூஸ்?
4. உஷ் அப்பா, நாற்றம் குடலை பிடுங்குது
சரக்கு அடிச்சா சென்ட் வாசம் அடிக்கும்னு நினைச்சியா மிஸ்?
5. இவன் பண்ற அலப்பரைகளை பார்த்தா பேசாம பேங்க் கொள்ளையே தேவலாம் போல. ஏகபப்ட்ட செலவு வைக்கிறான்.
6. உன் தலையை கழட்டி அவன் கிட்டேயும், அவன் தலையை கழட்டி உன் கிட்டேயும் கொடுத்துடுவேன், அப்புறம் நான் ஃபுட் பால் விளையாடிட்டிருப்பேன். செய்ய முடியாதுனு நினைக்கறியா? என் கூலிங்க் க்ளாஸை பிடுங்குன இல்லை, இதுக்கு இதான் தண்டனை
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. படத்துல சுவராஸ்யமான பகுதியே ஹீரோ ஹீரோயின் இருவரும் முன்னாள் தம்பதிகள் என்பதில்தான். ஆனா திரைக்கதையில் அதை விட ஹீரோவின் ஆக்ஷன் காட்சிகள், சாகசங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கு. மாறாக அவங்க கதையில் இன்னும் ஆழமா போய் இருந்தா இன்னும் கலக்கலா வந்திருக்கும் .
2. ஹீரோ ஸ்மித் எதுக்காக இன்னொரு ஹீரோ பேச்சை கேட்கறார்? அவருக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஹீரோ யார் பேச்சையும் கேட்காதவர், யாரையும் மதிக்காத ஆள். ஆனா அவருக்கு மட்டும் ஒபீடியன்ட்டா நடக்க காரணம் என்ன?ன்னு திரைக்கதைல சொல்லப்படவே இல்லை..
3. ஹீரோயின் ஹீரோவைப்போலவே பவர் உள்ளவர்னு வேற யாருக்கும் தெரியாது. ஒரு கட்டத்துல ஹீரோ, ஹீரோயின் 2 பேருக்கும் சண்டை வந்துடுது. அப்போ டி வி லைவ் கேமரா ஓடுவதை பார்த்து யாரும் தன்னை அடையாளம் காணாமல் இருக்க ஹீரோயின் ஒரு கூலிங்க் கிளாஸ் போட்டு மறைச்சுக்கறா. என்ன கொடுமை சார் இது? அவ புருஷன் அவளை கூலிங்க் கிளாஸ்ல டி வி ல பார்த்தா கண்டு பிடிக்க மாட்டாரா?
4. ஹீரோயின் ஹவுஸ் ஒயிஃப் தான். பெரும்பாலான சம்சாரங்கள் போல தண்டமா தான் வீட்டுல உக்காந்து டி வி பார்த்துட்டு இருக்காங்க. தனக்கு அபூர்வ சக்தி இருக்குன்னு தெரிஞ்சும் கணவர் ஆஃபீஸ் போன பின்னாடி மாறுவேஷம் போட்டு ஹீரோ செஞ்ச அதே சாகசச்செயலை செய்யலை? ஆண்டவன் படைப்பே மக்களை தீய சக்தில இருந்து காப்பாற்றத்தான்னு க்ளைமாக்ஸ்ல ஒணத்தியா வசனம் பேசற ஹீரோயின் தான் ஏன் எதுவுமே மக்களுக்காக செய்யலை?
5. பொதுவா பொண்ணுங்களுக்கு ஆண்களை விட மனோ வலிமை அதிகம் தான், ஆனா உடல் வலிமைல ஹீரோவை விட ஹீரோயின் பல மடங்கு சக்தி படைச்சவரா எதுக்காக படைக்கப்பட்டிருக்கார்? அந்த சக்தியை அவர் ஆக்கபூர்வமா செஞ்சாரா? எதுவுமே கதையில் காணோமே?
6. ஹீரோ நெம்பர் ஒன் ஸ்மித்தை ஹீரோ நெம்பர் 2 மோட்டிவேட் பண்றாரு, மக்களிடம் நல்ல பேர் வாங்க வெச்சுடறாரு, ஆனா அவருக்கு அதனால என்ன யூஸ்? அவர் பிராஜக்ட் யாராலும் சீண்டப்படாம இருக்கு. மீடியாக்கள் அவர் கிட்டே பேட்டிக்கு வர்றப்போ ஹீரோ நெம்பர் ஒன் அபூர்வ சக்திக்கு காரணமா தன்னை சொல்லிட்டு அந்த பிராஜட்டை ஈசியா மார்க்கெட்ட் பண்ணி இருக்கலாமே? அப்படி காட்டிட்டா 2 பேருக்கும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் யூஸ்னு ஆகிடுமே?
7. ஹீரோ ஸ்மித் ஹீரோயின் கிட்டே நம்ம 2 பேருக்கும் என்ன உறவு? அப்டின்னுதான் கேட்கறார், இந்த தத்தி ஒண்ணு உண்மையை சொல்லனும், இல்லை கமுக்கமா இருக்கனும், ரெண்டும் கெட்டானா எதுக்கு “ இந்த ரகசியத்தை என் புருஷன் கிட்டே சொல்லிடாதீங்க? “ அப்டினு சொல்லி மாட்டுது? தவளை தவளை..
8. ஹீரோவை போலீஸ் ஜெயில்ல போடும்போது தனி அறைல போடாம ஆல்ரெடி ஹீரோவால ஜெயிலுக்கு வந்த கைதிகளோட ஏன் அடைக்கனும்? பழியை தீர்க்க அவங்க வம்புக்கு வருவாங்க, ஜெயில் ரன களம் ஆகும்னு அவங்களுக்கு தெரியாதா?
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படத்தின் ஓப்பனிங்க் ஷாட்டில் வரும் செசிங்க் சீன் , வங்கிக்கொள்ளைகள் 2 படமாக்கம் பிரம்மாண்டம், ஆக்ஷன் கலக்கல்/./
2. ஹீரோயின் , 2 ஹீரோக்கள் செலக்ஷன்ஸ் கன கச்சிதம். அந்த ட்விஸ்ட் நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு.. க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, சபாஷ்.
3 சூப்பர் மேன் சாகச காட்சிகளில் கம்ப்யுட்டர் கிராஃபிக்ஸ் நீட். கொள்ளையர்களை பிடிக்கும்போது ஹீரோவுக்கும் , கொள்ளையர்களுக்கும் நடக்கும் உரையாடல்கள் செம சிரிப்பு
சி,பி கமெண்ட் - இந்தப்படம் 2008லயே ரிலீஸ் ஆகிடுச்சு. ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன். ஆனா கே டி வில ஒருக்கா போட்டாங்க. அப்போதான் எழுதனும்னு தோணுச்சு. மீண்டும் வாய்ப்பு கிடைச்சா டோண்ட் மிஸ், ஜாலி எண்ட்டர்டெயின்மெண்ட்
0 comments:
Post a Comment