
ஹீரோவை ஹாஸ்பிடல்ல சேர்த்து ஆளை குடிபோதைப்பழக்கத்தில் இருந்து மீட்டுடறாங்க.அவங்க ஏரியா மீனவர்கள் ஹீரோவை மீன் பிடிக்க விடலை. காரணம் ஹீரோ மீனவப்பரம்பரை இல்லை. தத்துப்பிள்ளை.ஆனா ஹீரோயின் நீ கடல் போய் மீன் பிடிச்சு மீனவன் ஆகுங்கறா. காதலி வாக்குக்காக ஹீரோ என்ன செஞ்சார், என்ன ஆச்சு? என்பதே மிச்ச மீதிக்கதை .
ஹீரோ விஷ்ணு கேரக்டரை உணர்ந்து பண்ணி இருக்கார். வெண்ணிலா கபாடிக்குழு , குள்ள நரிக்கூட்டம் போல் இதுவும் நிதானமாக ஸ்கோர் செய்ய வாய்ப்பு உள்ள படம். பேரை காப்பாற்றி இருக்கிறார். ஆனாலும் குடிகாரர் கேரக்டர் எப்படி இருக்கனும் என்பதை சிவா மனசுல சக்தி ஜீவா கேரக்ட்ர் பார்த்து இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.
ஹீரோயின் சுனைனா .இளஞ்சிவப்பு உதட்டழகி. கடல் ஓர கிராமக்கதை என்பதால் மேக்கப் போட வாய்ப்பு கம்மி .தூசு படிந்தாலும் வெள்ளிக்குத்துவிளக்குக்கு மதிப்பு போயிடுமா? ஜொலிக்கிறார். வழக்கொழிந்த பஃப் கை ஜாக்கெட் கம் சர்ட் மாடலில் டைட் டிரஸ் டாப் , பாவடை போட்டுக்கொண்டு படம் நெடுக உலா வருகிறார். குடிவெறியரான ஹீரோ காதலை சொல்ல கிட்டே வரும்போது “ சாத்தானே! அப்பால் போ! என பயந்து மருகும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனால் சினேகாவுக்கு கிட்டத்தட்ட தங்கை மாதிரி புன்னகை இளவரசியான இவரை ஏன் சோனியா அகர்வாலுக்கு அக்கா போல் மெல்லிய சோக இழையை முகத்தில் ஒட்ட வைத்து இருக்கிறார்? இயக்குநர். புரியாத புதிர்.
சரண்யா அம்மா கேரக்டர். தென் மேற்குப்பருவக்காற்றில் கலக்கியது போல் இதிலும். சரக்கு அடிக்க பையனுக்கு காசு தரும் சீனில் செம நடிப்பு. அவர் வசனம் பேசும் உச்சரிப்புஸ்டைல் பலர் பின் பற்ற வேண்டிய பாடம். அப்பாவாக வருபவர் நடிப்பும் நிறைவு .
இயக்குநர் சமுத்திரக்கனி முஸ்லீம் மீனவராக வருகிறார். கொஞ்ச நேரம் தான். ஆனால் மனதில் நிற்கிறார். இவரும் சீமான் போல் கை தட்டல் வாங்கும் குணச்சித்திர நடிகர் லிஸ்ட்டில் .
ஹீரோயின் சுனைனாவின் வயதான கேரக்ட்ர்க்கு நந்திதா தாஸ். வாய்ப்பு ரொம்ப குறைவு . வந்தவரை நிறை குடம்

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. கதைக்களம் ராமேஸ்வரம் தங்கச்சி மடம் என்பதால் கடலின் பல்வேறு கோணங்களை காமெராவில் அழகுபடுத்திக்காட்டியது. ஒளிப்பதிவு பக்கா.. குறிப்பா கடல் ஓர நண்டுகளை பாடல் காட்சியில் காட்டுவது, கடல் நீரை செங்கடல் , நீலம், பச்சை , கரும்நீலம் என வகைப்படுத்தி வண்ணக்கோலம் கண்ணுக்கு குளுமை
2. ஹீரோவைப்பார்த்தாலே பயந்து போய் விலகும் சுனைனா முதல் முறையாக காதல் பார்வையை அள்ளி வழங்கும் காதல் மலரும் காட்சி
3. மீனுக்கு கடல் மீனுக்கு ,பர பர ,தேவன் மகளே என 3 கலக்கலான மெலோடி சாங்க், இசை , காட்சிப்படுத்தியமை அனைத்தும் அழகு ( பர பர பாட்டு 2 டைம் ஸ்ரேயா கோசால் , சின்மயி இருவரும் தனித்தனியா )
4. படத்துக்கு நேர்த்தியாக திரைக்கதை எழுதியது , இலக்கியவாதி எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்கள் பக்க பலமாய்

இயக்குநரிடம் சில கேள்விகள்
1. மீனவர்கள் பிரச்சனை பற்றிய படம் என நீங்கள் சொன்னவிதம், அளீத்த பேட்டிகள் எல்லாம் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களுக்கு இழைத்த கொடுமைகள் பற்றி , அதற்கான தீர்வு பற்றி படம் இருக்கும் என்ற இமாலய எதிர்பார்ப்பைப்பொய்த்து விட்டீர்கள். அந்த மேட்டர் ஜஸ்ட் வந்து போகுது. மக்கள் மனதில் குடிப்பழக்கம் தவறு என்பதை உணர்த்திய அள்வில் கால் பங்கு கூட மீனவர்களை அநியாயமாக கொல்லும் விஷயம் பதிவாகவில்லை, இது மிகப்பெரிய பின்னடைவு
2. மீனவர் பற்றி , அவர்கள் சந்திக்கும் கடல் பிரதேச பிரச்சனை பற்றி சொல்ல 1000 விஷயங்கள் இருந்தும் அதைச்சொல்லாமல் படத்தின் முதல் பாதியை குடிப்பிரச்சனைக்கு தாரை வார்த்தது ஏன்?
3. ஓப்பனிங்க்ல கொலையாளி என கைது செய்யப்படும் நந்திதா தாஸ் விசாரணையில் மயக்கம் போடும்போது விசாரணை செய்யும் போலீஸ் ஆஃபீசர் காட்டும் பதட்டம் ஓவர். நந்திதாவின் அம்மாவோ , மகனோ காட்ட வேண்டிய பதட்டத்தை போலீஸ் ஆஃபீசர் காட்றார்.
4. கிறிஸ்டியனான சுனைனா ஹீரோவுக்கு 50 ரூபா தரும்போது இடது கைல தர்றார். லட்சுமி வலது கை தானே பரிமாற்றங்கள்?
5. சுனைனா அந்தப்பணத்தை திரும்ப வாங்க வரும்போது சரன்யா வீட்டுக்குள் இருந்து பணம் தர்றார். சுனைனா வாசப்படில நின்னு வாங்கறார். கிராமங்களில் அப்படி பழக்கம் இல்லை. அப்டி செஞ்சா செல்வம் போயிடும். சரண்யா வாசலுக்கு வெளீல வந்தோ , சுனைனாவை வீட்டுக்குள்ளே வரச்சொல்லியோ பண்ம் கொடுத்திருக்கலாம்
6. ஒரு காட்சியில் ஹீரோயின் மழையில் குடை பிடித்து நிற்கிறார். ஹீரோ அவர் எதிரில் 4 அடி தள்ளி மண்டி போட்டு இருக்கார். ஆனா அவர் சட்டை நனையவே இல்லை . வாட்டர் ப்ரூஃபா?
7. மொத்தக்கதையும் ஃபிளாஸ்பேக் உத்தியில் நாயகியின் பார்வையில் சொல்லப்படுது. அப்போ ஹீரோ தனியா இருக்கும் காட்சி , ஹீரோயின் இல்லாமல் இருக்கும் காட்சிகள் 30 நிமிடம் வருதே? அது எப்படி? இதை தவிர்க்க ஃபிளாஸ்பேக்கை ஹீரோ பார்வையில் அல்லது பொதுவா காட்டி இருக்கலாம்

8. வயசுக்கு வந்த பொண்ணு சர்ச் வாசல்ல பப்ளிக்கா படுக்குமா? அரன்மனை மாதிரி இடம் இருக்கே? ஹீரோயின் வாசல்ல படுத்திருக்கும் காட்சியும் , ஹீரோ மப்பில் அருகே வந்து படுக்கும் காட்சியும் செயற்கை
9. பொது வெளியில் கிணற்ற்டியில் குளிக்கும் கிராமத்துப்பெண்கள் மஞ்சள் , ஆரஞ்சு போன்ற லைட் கலர் பாவாடை கட்டிக்குளிக்க மாட்டாங்க. கறுப்பு, பிரவுன், மெரூன் டார்க் கலர் தான் கட்டுவாங்க. சீன் படங்களில் கில்மாவுக்காக அப்படி காட்சி வெச்சா கேட்கமாட்டோம். ரசிச்சுட்டு போயிடலாம், ஆனா இது கண்ணியமான படம் ஆச்சே?
10. கொலைக்குற்றவாளியான நந்திதாவை ஜாமீனில் எடுக்கனும்னா ஏதாவது வக்கீல் ஆஃபீஸ் போகனும். அதை விட்டுட்டு அவரை விசாரணை செய்யும் போலீஸ் ஆஃபீசரிடமே என்ன பண்ண? ஜாமீன் எடுக்கனும் என ஐடியா கேட்கும் காட்சி எதுக்கு?
11. ஆரம்ப்ம் முதலே காதலுக்கு கெத்து காட்டி வரும் சுனைனா ஹீரோவை மீனவனாக மாற்ற எடுக்கும் முயற்சியில் ஏன் கெஞ்சனும்? ஹீரோ ஏதாவது ஒரு வேலைக்குப்போனா போதும். ஆனா மீனவனாத்தான் ஆகனும்னு ஏன் கண்டிஷன் போடறாங்க? அதுக்கு காரணம் காட்டி இருக்க வேணாமா?
12. யாராலும் பிடிக்க முடியாத உளுவை சுறாவை ஹீரோ பிடிச்சுட்டு வந்து அம்மா , அப்பா கிட்டே கொடுத்துட்டு அடுத்த நிமிஷமே ஹீரோயினைப்பார்க்க அதே டிரஸ்ல வர்றார். அப்போ ஹீரோயின் “ ஊரே உன்னைப்பற்றித்தான் பேசுது. அரிய வகை மீனைப்பிடிச்சுட்டியாமே?” சன் டி வி ல சொன்னாங்களா?
13. சுனைனாவுக்கு கதைப்படி 21 வயசு. அவர் 36 வயசுல அவ்ளவ் மாற்றம் ஆகி நந்திதா தாஸ் ஆகிடுவாரா? டைட்டானிக் படத்துல 2 வெவ்வேறு ஹீரோயினை காட்டியதுக்குக்காரணம் வயசு வித்தியாசம் 21 - 90 . ஸ்டார் வேல்யூவுக்ககவா?அவருக்கு காட்சிகளும் அதிகம் இல்லையே? ஒரு வேளை சுனைனாவின் கால்ஷீட் பிரச்சனையா?
14. ஹீரோ பஞ்சம் பிழைக்க வேற ஊர் போனப்ப ஓனர் தங்கச்சி ஹீரோ மேல ஆசைப்படறது இந்தக்கதைக்கு தேவை இல்லாதது

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - கண்ணியமான காதல் கதை , நேர்த்தியான் திரைக்கதைதான். ஆனால் மீனவர் பிரச்சனை சரியாக சொல்லப்படவில்லை . இயக்குநரின் நோக்கம் நல்ல நோக்கம் தான். ஆனால் அதை மக்களுக்கு சொன்ன விதம் இன்னும் நல்லா அழுத்தமா சொல்லி இருக்கலாம்னு தோணுது . ஈரோட்டில் அபிராமியில் படம் பார்த்தேன்.
டிஸ்கி - படத்தில் ஜெயமோகனின் அபாரமான வசனங்கள் 64 இடங்கள் இருக்கு. நினைவில் நின்றவை 46.அது தனிப்பதிவாய் பின் ஒரு சந்தர்ப்பத்தில் . மின் தடை கையை கட்டிப்போட்டு விட்டது .
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2012/12/blog-post_8939.html

13 comments:
me the first.
ரொம்ப எதிர்பார்த்த படம். மீனவர் பிரச்சனையை புதுவிதமா அணுகும்னு நெனச்சிட்டு இருந்தேன்.. நீங்க சொல்றத பாத்தா பாக்குறது கூட வேஸ்ட் போல இருக்கே.
Hit?
thanks
Senthil, Doha
Waste
Waste
நீர் பறவைன்னா இதான் அர்த்தமா அது சரி
சின்ன நெருடல் என்னவென்றால் வட்டார மொழி நன்றாக பயன்படுத்தப்படவில்லை. அது தேவையில்லைதான் இருந்தாலும் கடற்புரத்து மக்கள் எப்பொழுது வந்தாய்ங்க, போனாய்ங்க என்று மதுரை தமிழ் பேசமாட்டார்கள். இப்படத்தில் ஒரு சில பேர் பேசுகிறார்கள். அதுதான் உறுத்துகிறது. மேலும் படம் முழுவதும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு என்ற கடற்கரை கிராமத்தில் எடுத்திருக்கிறார்கள். மணப்பாடு, குலசேகரப்பட்டணம், கூடுதாழை போன்ற கிராமங்களில்தான் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மிக பிரமாண்டமான மாதா கோவில், கலங்கரை விளக்கம், சவேரியார் குகை, செங்கடல் என அழகிய கடலோர கிராமங்கள். படம் பார்த்தால் புரியும். ஆனால் படத்தில் ராமேஸ்வரம் என்று காட்டிவிடுவார்கள். ராமேஸ்வரம் அருகே இவ்வளவு கிறிஸ்துவ மீனவ கிராமங்கள் கிடையாது. ஆனாலும் ஒரு காட்சியில் குலசேகரபட்டணம் ஒரு கடையின் பெயர்பலகையில் தெரியும். இதுவெல்லாம் படத்திலுள்ள குறை இல்லை. ஒரு வட்டாரத்தின் பெருமைகளெல்லாம் இன்னொரு வட்டாரத்திற்கு மாற்றப்படும் பொழுது வரலாற்றுப்பிழை ஏற்படுகிறது.
NALLA PADAM...
காண்டவம் படம பாக்கும் பொது பனுஷ்காவை பாத்தவுடன் எலலாரும் நட்டுகிட்டு நின்னாங்கன்னு சொன்னியே இதில் எலலாரும் படுத்துகினாங்களா?
Though our expectations that the film will duly highlight the problems of fishermen were belied, the film is better than any other movie.
nan inum paakala
நான் பாக்கல
Post a Comment