இன்று இந்தியா முழுவதும் ஹீரோ ஹோண்டா நிறுவனம் நாளிதழ்களில் ஒரு
விளம்பரத்தை கொடுத்திருந்தது . அதில் ஹீரோ இருசக்கிர வாகனத்தை சாதி பெயர்
வைத்து குறிப்பிட்டு அந்த வாகனமும் குடும்பத்தின் அங்கம் என்று
கூறியுள்ளது அந்த நிறுவனம். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இன்னும்
சாதியை பெயருக்கு பின்னால் போடும் இழி நிலை நிலவி வருவது நாம் அறிந்ததே.
ஆனால் தமிழ்நாட்டில் நாம் பெயருக்கு பின்னால் சாதியை குறிப்பிடுவது
நிறுத்தி பல காலம் ஆகிறது. பெரியாரின் சாதி ஒழிப்பு பரப்புரைக்கு பின்
சாதியை குறிப்பிட வேண்டியது இல்லை எனவும் சாதியை பெயருக்கு பின்னால்
போடுவது இழிநிலை என்ற கருத்தியலையும் தமிழக மக்கள் நன்கு உள்வாங்கி உள்ளனர்
. இந்நிலையில் ஹீரோ ஹோண்டா நிறுவனம் தன்னுடைய விளம்பரத்தில் அய்யர் என்ற
சாதிப் பெயரை குறிப்பிட்டு , அந்த வாகனமும் அய்யர் வாகனம் என்று
குறிப்பிட்டுள்ளது தமிழர்கள் நடுவே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது .
சமூக வலைத் தளங்களில் இந்த விளம்பரப்படம் அதிகமாக பகிரப் பட்டு வருகிறது .
தமிழர்கள் பலரும் அந்நிறுவனத்தை கண்டித்து வருகின்றனர் .
அந்நிறுவனத்தின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர் தமிழர்கள் . சாதித் திணிப்பையும் , இந்தித் திணிப்பையும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என்று அந்நிறுவனத்திற்கு எடுத்துரைத்தனர் சமூக ஆர்வலர்கள் . இருந்தும் இந்த விளம்பரத்தை இந்நிறுவனம் நீக்குமா என்று தெரியவில்லை ?
நீக்கும் வரை தமிழர்கள்
போராட்டம் செய்வார்கள் எனத் தெரிகிறது. அய்யருக்கு ஒரு வாகன விளம்பரம்
என்றால் , நாடார், சானார் , பள்ளர், பறையர், கவுண்டர் முதலிய
சாதிகளுக்கும் தனித்தனியே விளம்பரம் செய்வார்களா இந்த நிறுவனம் என்ற
கேள்வியை எழுப்பி உள்ளனர் தமிழ் உணர்வாளர்கள். வாசகர்கள் நீங்களும்
உங்கள் கண்டனத்தை பதிவு செய்யலாமே !
கீழ்க்கண்ட இந்த தொடர்பில் அலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக நம் கண்டனத்தை பதிவு செய்யலாம்.
REGIONAL OFFICES Hero MotoCorp Ltd. 18/1(Old No. 30/1) PLN Complex, Third Floor, Coronosmith Road, Gopalapuram, Chennai - 600086, India. Tel: +91-44-28350974 , 28350975, 28350976 Fax: +91-44-28350977 Email: [email protected]
கீழ்க்கண்ட இந்த தொடர்பில் அலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக நம் கண்டனத்தை பதிவு செய்யலாம்.
REGIONAL OFFICES Hero MotoCorp Ltd. 18/1(Old No. 30/1) PLN Complex, Third Floor, Coronosmith Road, Gopalapuram, Chennai - 600086, India. Tel: +91-44-28350974 , 28350975, 28350976 Fax: +91-44-28350977 Email: [email protected]
thanx - alai seithikal
நேற்று வெளியான எதிர்ப்பைத்தொடர்ந்து இன்று வந்த காலைக்கதிர் ,தினமல்ர் நாளிதழ்களில் அய்யர் என்ற வார்த்தையை கட் பண்ணி குமார் ஆக்கி விட்டார்கள், கடவுள் இருக்கான் குமாரு ( நன்றி - அதிஷா )
நேற்று வெளியான எதிர்ப்பைத்தொடர்ந்து இன்று வந்த காலைக்கதிர் ,தினமல்ர் நாளிதழ்களில் அய்யர் என்ற வார்த்தையை கட் பண்ணி குமார் ஆக்கி விட்டார்கள், கடவுள் இருக்கான் குமாரு ( நன்றி - அதிஷா )
9 comments:
சத்தியமா புரியல.. இதுக்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம்னு..!!
சாதி வெறி தமிழர்களிடம் அதிகம் எனும் அரசாங்கத்தின் அறிக்கையை உறுதி செய்வதாய் இருக்கிறது.
அந்தந்த மாநில ஜாதிபிரிவுகளை வைத்துதான் அந்த விளம்பரம் வந்திருக்கிறது..
மகாராஷ்டிராவில் பாட்டில்
பெங்காலில் பானர்ஜி ..என..!
அங்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை.. மாறாக..நக்கலான ஒரு சிரிப்புடன் கடந்து போய் விட்டோம்.
ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் இப்படி...?
சத்தியமா புரியல.. இதுக்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம்னு..!!
தமிழர்களைப்போல ஒரு ஜாதி வெறி கூட்டம் வேறு எங்குமே இருக்காது. தர்மபுரியில் நடக்கும் வீடுகள் எரிப்பு, கலவரம் இதெல்லாம் என்னவாம்?
// சாதியை பெயருக்கு பின்னால் போடுவது இழி நிலை என்ற கருத்தையும் தமிழக மக்கள் உள் வாங்கியுள்ளனர்//
இது உண்மையா செந்தில்?
இது ஒரு சாதாரண விளம்பரம். இந்தியாவில் உள்ள ஜாதி அமைப்புக்கள் பற்றிய தெளிவில்லாத "கத்துகுட்டிகளின் " விளம்பர படம் இது. இதற்க்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?
Asusual giving importance to unimportant matters just for cheap publicity
Asusual giving importance to unimportant matters just for cheap publicity
Asusual giving importance to unimportant matters just for cheap publicity
I don't think this is unwanted advertisement. I think this is unwanted blog to highlight nothing as an issue
அண்மைய காலத்தில் தமிழகத்தில் அது போன்ற ‘ஜாதி அடைமொழிகள்’ சிறிதே வெளிப்பார்வைக்கு எழுதி அறிவித்துக் கொள்வது குறைந்திருப்பதாகவே தெரிகிறது. இருப்பினும் லோ கட் ஜீனும் , யூ பெட் என்ற வாசகத்தை கொண்ட டீ சர்ட்டும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டறியாத உடை உடுத்திகளின் மண்டைகளை கொண்ட ட்ரெண்ட் செட்டர்களின் நடவடிக்கைகளைப் போல, நவீன இளைஞர்களில் பலர் ஐயர்களையும்,செட்டி களையும் தங்களின் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தி வருவதும் ’ட்ரெண்ட் செட்டிங்’ அவதானிப்பிலேயே என்னால் கண்ணுற்று கடந்து போக முடியவில்லை.
ஏனெனில் இன்று நாம் தொலைத் தொடர்பு சாதனங்களின் உதவியால் இந்த பரந்து விரிந்து கிடந்த உலகத்தை ஒருங்கே இணைத்துக் கட்டி, ஒரு சொடுக்கு நிகழ்த்தும் நிகழ்விற்கும் குறைவான காலத்தில் ஒரு மண்டைக்குள் இருக்கும் எண்ணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அது உலகம் முழுதுமே கற்றறிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு - ஃபேஸ் புக், டிவிட்டர், ப்ளாக் என்று மாய்ந்து, மாய்ந்து எழுதி, படித்து உலகம் சுற்றி தனது மண்டை வளர்ந்து விட்டதாக அறிவித்துக் கொள்ளும் கால கட்டத்தில் இன்னமும் இந்த அடைமொழியின் மூலமாக எது போன்ற விளைவுகளை இந்த மனிதக் கடலில் கலக்க எண்ணி கலக்கிறோம். இது போன்ற அறிவு முண்டியடிக்கும் ஒரு கால கட்டத்தில், அது போன்ற துருத்தல்கள் எது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிந்து கொள்ளக் கூட வாய்ப்பு கிட்டாமலா போய்விடும்?
அப்படி அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது ?
சரி அரைகுறைகளை விட்டுவிடுவோம். காலம் வரும் பொழுது தானாகவே விளங்கிக் கொள்வார்கள் என்ற நப்பாசையில். கலைச் சேவையோ அல்லது லைம் லைட்டிற்கு கீழே நிற்கும் மனிதர்களை எடுத்துக் கொள்வோம். ஒரு இயக்குனர் தனது படங்களின் மூலமாகவோ, அல்லது தனது புத்தகத்தின் மூலமாகவோ சில சமூக கருத்துக்களை முன் வைக்கும் இடத்தில் இருப்பவர் எப்படி தான் ஒரு முட்டாள், இன்னும் அந்தக் கட்டத்தையே தாண்டவில்லை என்ற குறைந்த பட்ச விழிப்புணர்வே அற்ற நிலையில் இப்படி சமூகத்தில் தன்னை அது போன்ற ஒரு ’நச்சு அடைமொழியுடன்’ முன் நிறுத்திக் கொண்டிருக்க முடியும்.
தான் இந்தத் துருத்தலை தூக்கிக் கொண்டு அலைவதால் முதலில் தான் ஒரு முட்டாள் என்பதனை ஊரறிய ஒத்துக் கொள்பவனாகவும், அடுத்த மனிதர்களை சஞ்சலமடையவும், உணர்வுகளை நசுங்க வைத்துக் கொண்டிருக்கும் ஓர் உணர்வற்ற மூடனாகத்தானே நம்மால் புரிந்து கொள்ள முடியும்?
வானம் எனக்கொரு போதி மரம்
சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.
சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.
தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.
இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் , என்று பெயர்கள் பாவனையில் இருப்பதனைக் காணும் பொழுது உடம்பெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது.
பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இது போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.
இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குழுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?
Post a Comment