Monday, November 12, 2012

துப்பாக்கி





விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருக்கிறார்.

மும்பையில் வாழும் ஒரு தமிழ் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார் விஜய். 'துப்பாக்கி' படத்தினைப் பற்றி வேறு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு.

இந்தியில் 'கஜினி' ரீமேக் செய்து முடித்தவுடன் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்கலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டு தயார் செய்த கதைதான் 'துப்பாக்கி'. ஆனால் 'ஏழாம் அறிவு' படத்தினை முடித்த பின் அப்படத்தை இயக்கலாம் என தள்ளிப் போட்டார். 'ஏழாம் அறிவு' இயக்கி முடித்தவுடன், விஜய் தேதிகள் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

அக்ஷய்குமார் நடிக்க இருந்த கதையினை தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டு முதலில் தமிழில் விஜய்யை வைத்து இயக்கிவிட்டு பின்பு அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் இயக்குகிறேன் என்று கூறிவிட்டு, விஜய்யை வைத்து 'துப்பாக்கி' தயார் செய்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய் மாஸ், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் துள்ளலான இசை என ஒரே படத்தில் அத்தனை பிரம்மாண்டங்களும் இணைந்து இருப்பது 'துப்பாக்கி' படத்திற்கு மிகப்பெரிய பலம்.

படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியான போது ஏகப்பட்ட சர்ச்சைகள், பின்பு தலைப்பு பிரச்னை என ஏகப்பட்ட பிரச்னைகள் சந்தித்து அதில் வெற்றி பெற்று இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா அன்று வெளியான TEASERல் விஜய்யின் ' I AM WAITING ' என்று பேசிய வசனம் பிரபலமாகியுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் அனைவருமே இணையத்தில் ' துப்பாக்கி  - WE ARE WAITING' என்று எழுதி வருகிறார்கள்.

" விஜய்யை பிடிக்காதவர்களும் இப்படத்தினை பார்த்தார்கள் என்றால் விஜய்யை பிடிக்கும் " என்று ஏ.ஆர். முருகதாஸ் சொல்ல,  விஜய் "ஏ. ஆர்.முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்" என்று பரஸ்பரம் பாராட்டியிருக்கிறார்கள்.

பாடல்களில் அனைத்துமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படத்தில் மதன் கார்க்கி எழுதிய ' GOOGLE GOOGLE ' பாடல் தான் ஹைலைட். இதை விஜய், ஆண்ட்ரியா இணைந்து பாடி இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து விஜய் இப்படத்தில் பாடி இருக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்தினை ஜெமினி நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது.

'நண்பன்' படம் திரையிட்ட அன்று விஜய் டிவி தான் TRPல் நம்பர் ஒன். இதனால் கடும் போட்டிக்கு இடையே 'துப்பாக்கி' படத்தின் டிவி உரிமையையும் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது விஜய் டிவி.

சென்சார் முடித்து U சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். படம் ரசிகர்கள் கவர தீபாவளியன்று நவம்பர் 13ம் தேதி படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.


 விஜய் பேட்டி @ விகடன்
கதைதாங்கணா ஹீரோ!"



எம்.குணா

''பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஹிட் கொடுக் கிறது பெரிய விஷயம் இல்லை. இப்போ நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் முதல் படத்துக்கான உழைப்பைக் கொட்ட ணும். கடைசி நிமிஷம் வரை உயிரைக் கொடுக்க ணும்... த்ரில்லிங்கா இருக்குங்ணா... கொஞ்சம் பயமா வும் இருக்குங்ணா!'' - முதல் பட ரிலீஸுக்குக் காத்திருக் கும் ஹீரோ போல ஆர்வமும் பதற்றமுமாக இருக்கிறார் விஜய். தீபாவளிக்கு வெடிக்கிறது விஜயின் 'துப்பாக்கி’!



 ''பொதுவா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கமர்ஷியல் படங்களை கமிட் பண்ணிக்க மாட்டார். 'துப்பாக்கி’யில் வேலை செய்ய எப்படி ஒப்புக்கொண் டார்?''



''படத்துக்கு அவர்தான் கேமராமேன்னு சொன்னப்போ, நான் நம்பலை. 'என் படத்துக்கு எப்படி சார் ஒப்புக்கிட்டீங்க’னு நேர்லயே கேட்டுட்டேன். 'பெரிய ஆர்வம் இல்லாமத்தான் 'துப்பாக்கி’ கதை கேட்டேன். ஆனா, க்ளை மாக்ஸ்ல முருகதாஸ் வெச்சிருக்கிற மெசேஜ் கேட்டு ஆடிப்போயிட்டேன்’னு சொன்னார். காலை 9 மணிக்கு மும்பை தாதர் ரயில்வே ஸ்டேஷன்ல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நடுவுல என்னையும் நடக்க, ஓடவிட்டாங்க. கேமரா எங்கே இருக்குன்னே தெரியாம நடிச்சது புது அனுபவம்!''



''சினிமாவில் இப்போ ஹீரோக்கள் ரொம்ப ஃப்ரெண்ட் லியா இருக்காங்க. ஆனா, நீங்க மட்டும் யாருடனும் க்ளோஸ் ஆக மாட்டேங்குறீங்களே?''


''இது அபாண்ட வதந்திங்ணா. எல்லாரோடவும் பெர்சனல் டச்லதான் இருக்கேன். வெளியே ஷேர் பண்ணிக்கிறதில்லை... அவ்வளவுதான். மூணு வருஷமா விடாம கமல் சாரோட பிறந்த நாளுக்கு மறக்காம என்னை அழைப்பார். போயிட்டு சந்தோஷமா ஆடிப் பாடிட்டு வருவேன். சீனியர் ஆர்ட்டிஸ்ட்னு நினைக்காம, என் லெவலுக்குப் பழகுவார். இதோ தீபாவளிக்கு முன்னாடியே 7-ம் தேதி வர்ற அவரோட பிறந்த நாள் எனக்கு மினி தீபாவளி!''


''டான்ஸ்ல உங்களுக்கு அடுத்த தலைமுறை ஹீரோக்கள்ல யார் பெஸ்ட்?''


''ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு ஸ்டைல்ல பின்றாங்களே. சிம்பு, தனுஷ், பரத், சாந்தனு வரைக்கும் எல்லார் டான்ஸும் எனக்குப் பிடிக்கும்!''


''ஸ்டார் ஹீரோக்கள் நடிக்கிற மெகா பட்ஜெட் படங்கள் ஃப்ளாப் ஆகுது... புது முகங்கள் நடிக்கிற 'அட்டகத்தி’, 'பீட்சா’ படங்கள் ஜெயிக்குது... ஏன்?''


''அப்பவும் இப்பவும் எப்பவும் தமிழ் சினிமாவில் கதைதான் ஹீரோ... நடிகர்கள் இல்லை. அதைப் புரிஞ்சுக்கிட்டா எல்லா படங்களும் ஜெயிக்கும்!''


''பையன் சஞ்சய் என்ன பண்றார்?''


''ஏழாவது படிக்கிறார். கிரிக்கெட்ல பயங்கர ஆர்வமா இருக்கார். எந்த மேட்ச் நடந்தாலும் சாப்பாடுகூட இல்லாம டி.வி. முன்னாடி உட்கார்ந்துடுறார். புரொஃபஷனல் கிரிக்கெட் பயிற்சியும் எடுத்துக்கிட்டு இருக்கார். பார்ப்போம்... சேப்பாக்கமா... கோடம்பாக்கமானு!''- அழகாகச் சிரிக்கிறார் அப்பா விஜய்!




ஏ ஆர் முருகதாஸ் பேட்டி


எப்படி இருக்கு விஜய் கூட்டணி?"

'' இது, விஜய் ஸ்பெஷல் ஸ்டைல் ப்ளஸ் கமர்ஷியல் படம். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே மும்பைத் தமிழ்க் குடும்பங்கள். கலர்... டெரர்னு கலந்துகிடக்கும் மும்பையின் சுவாரஸ்யமான முகம்தான் கதை.


 ஹீரோ ஜெகதீஷின் வாழ்க்கையில நடக்கும் விஷயங்கள், அதற்கு அவர் எடுக்கும் முடிவுகள்னு படம் பரபரக்கும். இடைவேளைக்கு அப்புறம் தடதடக்கும். நாலஞ்சு வருஷமாவே 'நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னு ஒவ்வொரு சந்திப்பிலும் நானும் விஜயும் பேசிப்போம்.


 ஏதேதோ காரணங்களால், ரெண்டு பேருமே பிஸியா இருந்தோம். இப்ப திடீர்னு எந்த முன்னேற்பாடுகளும் இல்லாம 'துப்பாக்கி’ யதேச்சையா முடிவாச்சு. சும்மா அவுட் லைன் மட்டும்தான் சொன்னேன். ஷூட்டிங் போறதுக்கு நாலு நாள் முன்னாடிதான் ஃபுல் ஸ்க்ரிப்ட் சொன்னேன். ரசிகர்களுக்கு தீபாவளி SPECIAL  FULL MEALS ஆக துப்பாக்கி வெடிக்கும்!''




''இந்தி 'கஜினி, 'துப்பாக்கி’னு கிட்டத்தட்ட மும்பைவாசியாவே ஆகிட்டீங்களே?''

''இந்தி 'கஜினி’ சமயமே மும்பையோட சந்துபொந்து எல்லாம் அத்துப்படி. வழக்கமா, 'மும்பையில் எடுத்தோம்’னு சொல்ற நிறையத் தமிழ்ப் படங்கள் அங்கே நாலஞ்சு நாள் ஷூட் பண்ணிட்டு, மீதி எல்லாத்தையும் தமிழ்நாட்ல ஷூட் பண்ணித்தான் மேட்ச் பண்ணுவாங்க.



வட இந்தியக் குடும்பம் வேணும்னு சொன்னா, சௌகார்பேட்டையில இருந்து 20 பேரை அழைச்சிட்டு வந்து நிப்பாங்க. 'துப்பாக்கி’யில் அந்தத் தப்பைப் பண்ணிடக் கூடாதுனு கவனமா இருந்தேன். காஸ்ட்யூம், வேலைக்காரர், டிரைவர், செட் பிராப்பர்ட்டினு எல்லாமே மும்பைதான். தாஜ் ஹோட்டல் பின்னணியில் நடுக் கடல்ல நிக்கிற கப்பல்லவெச்சு 15 நாள் ஷூட் பண்ணோம். கடல்ல இருந்து பார்க்க, மும்பை ரொம்பப் புதுசா இருந்தது. மும்பைக்காரங்களே பார்க்காத மும்பையை இந்தப் படத்தில் பார்க்கலாம்.''




''அஜீத், விஜய்னு ரெண்டு பேரையும் வெச்சுப் படம் பண்ணி இருக்கீங்க. ஒரு டைரக்டரா ரெண்டு பேரையும் எப்படிப் பார்க்குறீங்க?''

''இப்பக்கூட என்னை பாலிவுட்ல பார்த்தா, 'என்னது... நீங்க டைரக்டரா?’னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க. இப்பவே இப்படின்னா,  10 வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன். ஆனா, அப்பவே என்னை நம்பி 'தீனா’ வாய்ப்பு கொடுத்தவர் அஜீத். அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர். அவர் மேல் எனக்கு ரொம்பப் பெரிய மரியாதை இருக்கு.



ஆனா, நான் வளர்ந்து இந்திப் படம் வரைக்கும் இயக்கிய பிறகு, இப்போ ஏழாவதாப் பண்ற படம்தான் 'துப்பாக்கி’. விஜய் இப்போ என் நண்பர். அவர் யார்கிட்டயும் சினிமாவைத் தாண்டி எதுவும் பேச மாட்டார்னு சொல்வாங்க. ஆனா, அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச்டு ஆகிட்டோம். இப்பவும் அஜீத், விஜய்... ரெண்டு பேரையும் சந்திச்சுட்டுத்தான் இருக்கேன். எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டலடிச்சுக்கிறாங்க.





 ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் இன்னொருத்தரைப்பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை. ஒருத்தரைப் பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையாப் பேசிப்பாங்க. ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல நட்பு இருக்கு. அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்!''


 நன்றி - விகடன்


ட்ரெய்லர்



மேக்கிங்க் ஆஃப் துப்பாக்கி - துப்பாக்கி எப்படி எடுக்கப்பட்டது?



1. துப்பாக்கி பஞ்ச் -1000 பேரை அழிக்கும் தீவிரவாதிகளே உயிர்தியாகம் செய்யத்தயாரா இருக்கும்போது நாம ஏண்டா உயிர்தியாகம் செய்யக்கூடாது



2. துப்பாக்கி எதுவா வேணா இருக்கலாம் ,எந்த பிராண்டா வேணா இருக்கலாம், ஆனா அதுல தோட்டா நான்டா #துப்பாக்கி பஞ்ச்


3. நெட்டில் புரளி - டேக்கன் ஹாலிவுட்டின் தழுவல் தான் துப்பாக்கி என.# அது தவறான தகவல்


4. துப்பாக்கி விஜய் முதல் பாதி செம ஸ்பீடு ,பின் பாதி கொஞ்சம் ஸ்லோ என தகவல்

http://twitchfilm.com/assets_c/2012/10/Thuppaki_22-thumb-300xauto-34227.jpg



டிஸ்கி 1 போடா போடி -

 http://www.adrasaka.com/2012/11/blog-post_13.html

 டிஸ்கி 2 -துப்பாக்கி - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க-http://www.adrasaka.com/2012/11/blog-post_1598.html

 

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/b/b0/First_look_Thuppakki.jpg/220px-First_look_Thuppakki.jpg

2 comments:

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

NOOR MOHAMED WELCOME U said...

துப்பாக்கி படத்திற்க்கு எதிர்ப்பு

இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதம்மாக விஜய்யின் துப்பாக்கியின் திரைப்படம் இருப்பதால் துப்பாக்கி படத்தை தடை செய்யக்கோரி இந்திய தேசீய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் சகோதரர் தடா ரஹீம் அவர்களின் தலைமையில் நாளை மாலை 3- மணி அளவில் சென்னையில் விஜய் கூத்தாடியின் வீட்டை முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. இன்ஷா அல்லாஹ் .