அது தெரில , ஆனா உனக்கு தொப்பை வரும், எனக்கு காசு பற்றாக்குறை வரும்
---------------------------
2. உங்க வீட்ல எப்பவும் சண்டையும் , சச்சரவுமா இருக்கே, ஏன்?
எங்கம்மா அஜித் ரசிகை , என் மனைவி விஜய் ரசிகை
---------------------
3. பல் துலக்கும்போது எல்லாரும் வீதில நின்னு துலக்கறாங்க , ஆனா நீ மட்டும் பாத்ரூம்லயே துலக்கி முடிச்சுடறியே?
யார் கிட்டேயும் பல்லை காட்டி நின்னா என் கணவருக்கு பிடிக்காது
-------------------
4. மேடம், ஜப்பான் அழகி பட்டம் குடுத்தது சந்தோஷமா?
ம் ம் , ஆனா அதுக்கு செலவு தான் 20 லட்சம் ஆகிடுச்சு
----------
5. 125 கோடிக்கு சரக்கு வித்தே ஆகனும், இதான் டாஸ்மாக் டார்கெட்
விக்க முடியலைன்னா டாஸ்மாக் ஊழியர்களே குடிச்சு அக்கவுண்ட்ல எழுதிக்குங்கன்னு சொல்ல ப்போறீங்களா?
-------------------
6 . ஒரு கோடிக்கு எத்தனை சைபர்னு கூட எனக்குத்தெரியாது
இந்த காரணத்துக்காக எல்லாம் ஊழல் வழக்குல இருந்து உங்களை ரிலீஸ் பண்ணிட முடியாது
-------------------------
7. என்னது? கடைசில இவதான் உன்னோட சம்சாரமா?
நோ நோ ஆரம்பத்துல இருந்தே அவ தான் என் சம்சாரம்
---------------
8. டாக்டர், என் மனைவி என்னை மதிப்பதே இல்லை
விடுங்க, எந்த வீட்ல எந்த பொண்டாட்டி தன் புருஷனை மதிச்சிருக்கா?
-----------------
9. காதலின் மையப்புள்ளி நட்புன்னு எப்படி சொல்றே?
புள்ளி வெச்சுக்கோலம் போடும் பொண்ணு எனக்கு நட்பாச்சு , இப்போ காதல் ஆகிடுச்சு
----------------
10. டியர் ! நீங்க என்னை மட்டும் தானே லவ் பண்றீங்க
உன்னையும்
-----------------
11 ரேஸ் பைக்ல வேகமாப்போன நீங்க ஏன் வேகத்தை திடீர்னு குறைச்சுட்டீங்க?
மித வேகம் மிக நன்றுன்னு போர்டு பார்த்தேன்
------------------
12. எதுக்காக இப்போ ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் பண்றே?
என் மாமியார்க்கு ஐம்புலன்சும் அடங்கிடுச்சு
-----------------
13. -சார் ! உங்க நடிப்பை ஈசியா டாமினேட் பண்ணிடுச்சு
எது?
கூட நடிச்ச நாய் டாமி தான்
--------------------------
14. உன் கூந்தல் வளர கொள்ளு டெய்லி சாப்பிடறியா? ஏன்?
நான் போடறது குதிரை வால் கொண்டை ஆச்சே?
---------------------------
15. ஆஸ்கார் அவார்டு ஏன் வேணாம்னு சொல்லீட்டீங்க?
எனக்கு சுகர் இருக்கு , டாக்டர் அஸ்கா அவாய்ட் பண்ணனும்னு சொல்லீட்டார்
--------------------
16. தலைவரே! ஆண்டவனுடன் மட்டும் தான் கூட்டணின்னு எப்படி சொன்னீங்க தில்லா?
அதாவது தமிழ் நாடை ஆ;ல்ரெடி ஆண்டவருடன் ஆளூங்கட்சியுடன் கூட்டணின்னு அர்த்தம்
---------------------------
17. சலூன்ல பாப் சாங்க் கேட்குதே?
பாப் கட்டிங்க் பண்றப்ப பாப் சாங்க் போட்டு விடுவாராம்
--------------------------
18. டாக்டர் ! ஒரே மாசத்துல 10 கிலோ வெயிட் குறைக்க ஏதாவது வழி இருக்கா?
ஒரு கையை மட்டும் கட் பண்ணி ஆபரேஷன் பண்ணிடலாமா?
-----------------------------
19. புதுசா இப்போத்தான் பைக் வாங்கறீங்களா?
ஆமா எப்டித்தெரியும்?
ஃபர்ஸ்ட் கீர், செகண்ட் கீர் எப்டி போடனும்னு சொல்லிக்குடுத்துட்டு இருக்கேன், இதுல பாதாம் கீர் எதுன்னு கேட்டா எப்படி?
---------------------------------------------
20. ரவையை ஏன் விழுங்குனே?
வெ:ளீல வற்றப்போ அது வைரமா வரும்னு ஒரு நம்பிக்கை தான்
3 comments:
இப்ப, 2012-ல், 20 லட்சம் காசு ஒரு ஜூ ஜூ பி; நான் அப்பவே, 15 வருட்ங்ளுக்கு முன்பு, ஒரு கோடி கொடுத்தேனே...!
மேலே குடுத்த கமென்ட் ஜப்பான் அழகியை ஒட்டி...அதாவது, No. 4. சிபி ஜோக்குக்கு...
சபாஷ்.. சரியான காமெடி..!
Post a Comment