நடிகை சோனா மீது ராணிப்பேட்டை கோர்ட்டில் வழக்கு
வேலூர்
மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையை சேர்ந்தவர் வக்கீல் ஜானகிராமன். இவர்
பா.ம.க.வின் சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளராக உள்ளார்.
இந்த
நிலையில் வக்கீல் ஜானகிராமன், ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல்
மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆண்களை இழிவாக பேசியதாக திரைப்பட
நடிகை சோனா மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக
நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள குற்ற முறையீட்டில்
கூறியிருப்பதாவது:-
ஆம்பளைங்க
எனக்கு டிஷ்யூ பேப்பர்தான் எனும் தலைப்பில் வந்துள்ள நடிகை சோனா
பேட்டியானது ஆண் இனத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், கேவலப்படுத்தும்
விதமாகவும், ஆபாசமாக, அருவருக்கதக்கதாகவும் அமைந்துள்ளது.
ஆண்களுடன்
சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் முட்டாள்தனம் என புனிதமான
திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி பேட்டியளித்துள்ளார்.
தமிழ்
பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும், நாகரீகத்திற்கும் முன் உதாரணமாக
திகழும் தமிழ்நாட்டில் இதுபோன்ற கருத்துகளால் பண்பாடு, கலாசாரம்
பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆண்கள் மீது பெண்களுக்கு மதிப்பும்,
மரியாதையும் குறைய வாய்ப்புள்ளது. ஒட்டு மொத்த ஆண் இனத்திற்கும் உள்நோக்கம்
கொண்டு அவதூறாக பேசியுள்ளார்.
இவ்வாறு அந்த குற்ற முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்!
சண்டைக்கு தயார்!
ஆண்கள் சங்கத்தினர் மீது நடிகை சோனா புகார்!
|
நடிகை
சோனா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 21.11.2012 புதன்கிழமை புகார் மனு ஒன்றை
கொடுத்தார். ஆண்கள் சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம்
இல்லை என்றும், ஆண்கள் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க புகார்
கொடுத்துள்ளேன் என்றும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
நடிகை
சோனா, வாரப்பத்திரிகை ஒன்றில், ஆண்களை இழிவுபடுத்தும் வகையில் பேட்டி
கொடுத்ததாக செய்தி ஒன்று வெளியானது. ஆண்கள் செக்சுக்கு மட்டுமே
பயன்படுவார்கள் என்றும், கையை துடைத்துவிட்டு, தூக்கி எறியப்படும் டிஷ்யூ
பேப்பரை போன்றவர்கள் என்றும் சோனா தனது பேட்டியில் கூறியதாக, பத்திரிகை
செய்தியில் கூறப்பட்டிருந்தது. மேலும் நான் திருமணம் செய்துகொள்ளவே
மாட்டேன் என்றும் தனது பேட்டியில் சோனா மேலும் கூறி இருந்தார்.
நடிகை
சோனாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆண்கள் பாதுகாப்பு
சங்கத்தினர், சோனாவின் பத்திரிகை பேட்டியை கண்டித்து போர்க்கொடி
தூக்கினார்கள். சோனாவை கண்டித்து, சென்னை தேனாம்பேட்டை, கே.பி.தாசன்
சாலையில் உள்ள அவரது அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சோனா தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கும் வரை,
போராட்டம் தொடரும் என்றும் ஆண்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த
நிலையில் நடிகை சோனா 21.11.2012 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென்று
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாசை
சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான்
ஆண்களைப்பற்றி இழிவான கருத்து எதையும் சொல்லி பேட்டி கொடுக்கவில்லை என்று
மறுத்திருந்தேன். குறிப்பிட்ட பத்திரிகை நிருபர் செய்தியை தவறாக
கொடுத்துவிட்டார் என்றும் கூறி இருந்தேன்.
செய்தி வெளியிட்ட பத்திரிகை மீதும், செய்தியை கொடுத்த நிருபர் மீதும் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கும் போட்டுள்ளேன்.
ஆண்களை
இழிவுபடுத்தி பேட்டி அளித்ததாக நடிகை சோனாவுக்கு எதிர்ப்பு
கிளம்பியுள்ளது. ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சோனா வீட்டில் முற்றுகை
போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மீது கோர்ட்டில் வழக்க தொடரவும் தயாராகி
வருகிறார்கள்.
தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக சோனா கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,
நான்
ஆண்களை கேவலமாக பேசவில்லை. சொல்லாததை பத்திரிக்கையில் பேட்டியாக
வந்துள்ளன. எனக்கு எதிராக ஆண்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி
வருகிறார்கள். அச்சங்கத்தை சேர்ந்த 120 பேர் என் வீட்டில் முற்றுகையிட்டு
கோஷம் போட்டார்கள். நான் அப்படி பேட்டி அளிக்கவில்லை என்று மறுப்பு
தெரிவித்துவிட்டேன்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு
வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளேன். அதன் பிறகும் கண்டிக்கிறார்கள்.
போராட்டம் நடத்துகிறார்கள். தொடர்ந்து மிரட்டல்களும் வருகிறது.
இவ்வாறு சோனா கூறினார்.
=
|
இவ்வளவு
நடவடிக்கை எடுத்தபிறகும், ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எனது அலுவலகம்
மற்றும் எனது நகை ஷோரூம் கடை முன்பு போராட்டம் நடத்தினார்கள். ராணிப்பேட்டை
கோர்ட்டில் என்மீது வழக்கும் போட்டுள்ளனர்.
மேலும்
செல்போனில் பேசி என்னை மறைமுகமாக மிரட்டுகிறார்கள். வெளியில்
நடமாடவிடமாட்டோம் என்கிறார்கள். வெளியில் வந்தால், என்மீது கற்களை வீசுவோம்
என்று பயமுறுத்துகிறார்கள். இதனால் கடந்த 8 நாட்களாக நான் வெளியில்
போகமுடியவில்லை. எனது அலுவலகமும், கடையும் மூடியே கிடக்கிறது.
எனவே
எனக்கு பாதுகாப்பு கேட்டும், எனது அலுவலகம் மற்றும் கடைக்கும் போலீஸ்
பாதுகாப்பு போடும் படியும், என்னை செல்போனில் மிரட்டுபவர்கள் மீது
நடவடிக்கை கோரியும், கூடுதல் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன்.
என்னை
மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். செய்யாத தவறுக்காக நான் ஏன் மன்னிப்பு
கேட்க வேண்டும். மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சட்டரீதியான
சண்டைக்கு நான் தயார். இவ்வாறு சோனா தெரிவித்தார்.
நன்றி - நக்கீரன்
1 comments:
athu sari!
Post a Comment