Tuesday, November 06, 2012

மின்வெட்டு - பொட்டில் அடித்தாற்போன்ற 10 கேள்விகள்- டாக்டர் ராம்தாஸ் டூ ஜெ

சென்னை: நீலம் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:



தமிழ்நாட்டில் 16 முதல் 18 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. தி.மு.க. ஆட்சியில் 8,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆனது. 5 முதல் 7 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. 969 மெகாவாட் மின்சாரம் தான் பற்றாக்குறை இருந்தது. ஆனால் இப்போது 7,500 மெகாவாட் உற்பத்தியாகிறது. 4,000 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு காரணம் பல மின் நிலையங்களை சரியாக பராமரிக்காததும், எண்ணூர், குத்தாலம் மின் நிலையங்களை மூடியதுதான்.



ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையம் தொடங்க 15 ஆண்டுகளுக்கு முன்னால் திட்டமிடப்பட்டது. இதுவரை அந்த திட்டம் கிடப்பில் உள்ளது



டெல்லியில் உபரியாக ஒப்படைக்கப்படும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அது கிடைத்தால் கூட 230 மெகாவாட்தான் பயன்பாட்டுக்கு வரும். பெரும்பான்மையான மின்சாரம் இரவில்தான் ஒப்படைக்கப்படுகிறது. அது நமக்கு பயன்படாது. எனவே இந்த வாதங்கள் எல்லாம் தங்களை திசை திருப்பும் முயற்சியில்தான்.



நிலம் புயலால் டெல்டா மாவட்டங்களில் 5லட்சம் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இதே போல் வேலூர் மாவட்டத்தில் வாழை மரங்கள் சேதம் அடைந்த விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.



சென்னையில் புயலின் போது தரை தட்டிய கப்பலில் இருந்து குதித்து உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு கப்பல் நிறுவனம் சார்பில் தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றார் ராமதாஸ்.





மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?

1. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேசிய முதல்வர், 2011ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் அறிவிக்கபடாத மின்வெட்டே இருக்காது என்றும், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் 2 மணியாக குறைக்கப்படும் என்றார். ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டாகி விட்ட நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?




ஒரு மெகாவாட் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?

2. 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டபேரவையில் பேசிய முதல்வர், 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5 மின்திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 2,550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு மின்தடை நீக்கப்படும் என்று கூறினார். ஆனால் இன்று வரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?



முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?

3. மின் திட்டங்கள் செயல்படுவது குறித்து முதல்வர் முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?


4. மேட்டூர் அனல் மின்திட்டத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதால் கடந்த மார்ச் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று ஏற்கனவே உறுதி அளித்திருந்த முதல்வர், இப்போது அடுத்த மாதம் தான் அங்கு உற்பத்தி தொடங்கும் என்று கூறுவது ஏன்?


ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா?

5. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது. இருக்கும் மின்சாரத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அதை செயல்படுத்த மறுப்பது ஏன்?



6. தமிழ்நாட்டில் சிறுதொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தொடர்ச்சியாக குறைந்தது 4 மணி நேரம் மின்சாரமும், காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படுவதாக கூறியிருக்கும் முதல்வரால் அதனை நிரூபிக்க முடியுமா?


58 கடிதம் எழுதிய ஜெ. மின் பிரச்சனைக்கு ஒரு கடிதமும் எழுதாதது ஏன்?

7. சிறு தொழிற்சாலைகளுக்கு 4 மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை சாதனையாக கூறும் முதலமைச்சர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எத்தனை மணி நேரம் மின்சாரம் வழக்கபடுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?



8. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டும் முதல்வர், இதை சரிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன? பிரதமருக்கு இதுவரை 58 முறை கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் இந்த பிரச்சனைக்காக இதுவரை ஒரு கடிதம் கூட எழுதாதது ஏன்?


ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகத் தயாரா?

9. மின்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறும் ஜெயலலிதா, தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளையும், மக்களையும் திரட்டி தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தாதது ஏன்?



10. தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் போக்குவதாக ஒரு போதும் கூறவில்லை என்று மறுக்கும் முதலமைச்சர், அவ்வாறு கூறியதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசியலில் இந்து விலகத் தயாரா?



 thanx - thats tamil

2 comments:

Deva. Palaniappan @ Balaji said...

இதுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டா என்ன ஆகும் !! பாத்தா குறைக்கு இப்போ பன்னிரண்டு புதிய நிறுவங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர் !! இனி நமது வீடுகளுக்கு ஆறு மனி நேரம் மின்சாரம் கிடைப்பதே கடினம் தான் !!

GANESH said...

good post
Jay can't answer even single question!!!
Jay DOWN DOWN!!!!