Wednesday, October 03, 2012

Resident Evil: Retribution - சினிமா விமர்சனம்

http://niaje.com/wp-content/uploads/2012/09/resident-evil-retribution-poster.jpgஅம்பர்லா கார்பரேஷன்னு ஒரு நிறுவனம். பூமில ஒரு வகை வைரசை பரப்பி மனித இனத்தை அழிக்க முயற்சிக்கறாங்க. அந்த வைரஸ் தாக்குனா மனிதன் ராஜபக்சேவை விட கேவலமான  நர மாமிச பட்சிணி ஆகிடுவான். மனிதனை தேடித்தேடி அழிப்பான், கொல்வான், சாப்பிடுவான். இவனுக்கு சாவே கிடையாது.இவங்க கிட்டே இருந்து எப்படி ஹீரோயின் தன்னையும் தன் குழந்தையையும் காப்பாத்திக்கறா? என்பதுதான் கதை


படத்தோட ஓப்பனிங்க்ல ஒரு கணவன், மனைவி, குழந்தை என காட்டும் ஃபேமிலி பேக் டிராப் கொள்ளை அழகு. அதுவும் அந்த சிறுமி வாய் பேச முடியாத வர்கள் சைகையில் எப்படி பேசுவாங்களோ அதே போல் சைகையும் செய்து , டயலாக்ஸ் பேசுவது கண்ணுக்குள்ளேயே நிக்குது.

 இந்தக்கவிதையான சீன்  6 நிமிடங்கள் தான். அதுக்குப்பின் ஒரே ஓட்ட மயம் தான். படத்துல வர்ற ஹீரோயின் , வில்லன்கள் எல்லாரும் ஓடிட்டே இருக்காங்க../ படம் பரபரப்பா ஓடனும்னா படத்துல எல்லாரும் ஓடிட்டே இருக்கனும்னு நினைச்சுட்டாங்க போல .. 


முதல் சில பாகங்களிலே என்ன சொன்னாங்களோ, அல்லது என்ன காட்டுனாங்களோ அதே தான். புதுசா ஏதும் இல்லை..


http://images2.wikia.nocookie.net/__cb20120914165254/residentevil/images/9/96/Resident-Evil-Retribution.jpeg


 இந்த மகா மொக்கைப்படத்தை ஏன் யாரும் பார்க்கக்கூடாதுன்னு சொல்றேன்னா




1. படத்தின் நீளப்படி இது 112 நிமிடங்கள் ஓடுது. அதாவது கிட்டத்தட்ட 2 மணி நேரம். அதுல  ஒண்ணே முக்கால் மணி நேரம் யாராவது சுட்டுட்டே இருக்காங்க.. டமால் டுமீல்னு   கேப்பே  ( GAP ) இல்ல,  கேட்பாரும் இல்லை .. ஒரே தலை வலி.//



2. வீடியோ கேம்ஸ் பார்க்கற மாதிரி இருக்கு. ஒரு சினிமா பார்க்கற ஃபீலே வர்லை..


3.  எப்பேர்ப்பட்ட சூழலிலும் ஹீரொயினுக்கு எதுவுமே ஆகலை, ஜேம்ஸ் பாண்ட் , ஜாக்கி சான், புரூஸ்லி , அர்னால்டு கூட அப்பப்ப அடி வாங்கறாங்க.. இது ஏதோ பெரிய அம்மா டேக்கர் மாதிரி ( அப்பாடக்கர்க்கு பெண் பால் ) எல்லாரையும் கொலை பண்ணுது.  ( ராஜபக்சேவை போட்டுத்தள்ள இந்த லேடியை ரெடி பண்ணலாம் போல



4. நர மாமிசம் அல்லது சதைகளை சாப்பிடும் கோர உருவங்கள் உவ்வே.. நாக்கு என்ற பெயரில் டபு:ள் ரெட்டை நாக்கு மாதிரி ஒரு கேவலமான  நாக்கை அடிக்கடி அதுங்க வெளியே காட்டும்போது லைட்டா வயிற்றை புரட்டுது



5. படம் பூரா ஒரே செட்டிங்க்ஸ் தான். மெகா டிராமா பார்க்கற மாதிரி இருக்கு.. இந்த கேவலமான படத்தை நம்ம ஊரு ராமநாராயணன் கணக்கா   ஒரு மாசத்துல எடுத்திருக்காங்க.. அப்போ எவ்வளவு அசால்ட்டா எடுத்திருப்பாங்க?



http://static.moviefanatic.com/images/gallery/michelle-rodriguez-resident-evil-retribution.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்



 படத்துல டோட்டல் வசனமே ஏ 4 சீட்ல அரைப்பக்கம்தான். அதனால தியேட்டர்ல கேட்ட சில வசனங்கள்



1. டேய்.. படத்தை போடறா..


2. ஏய்... என்னடி .. அதான் தியேட்டர்ல கூட்டமே இல்லையே.. ஏன் பம்முறே? ( பேக் சீட்டில் நல்ல காதலர்கள் )



3. டமால் டுமீல் சத்தத்துல நம்ம சத்தம் கேட்காது. எப்படி நம்ம ஐடியா ? ( முன்  வரிசையில் கள்ளக்காதல் ஜோடி )


4. ஏண்டா, 70 ரூபா வாங்கி இருக்கீங்க.. ஒருத்தி 500 பேரை சுட்டுட்டே இருக்கா. இதை பார்க்கவாடா நாங்க வந்தோம்?


http://collider.com/wp-content/uploads/milla-jovovich-resident-evil-5-retribution.jpeg



இயக்குநரிடம் ஜாலியாய் சில கேள்விகள்


1. ஓப்பனிங்க் ஷாட்ல  ஹீரோயின் முறைப்படி நீங்க ஏவாள் கெட்டப்ல தான் காட்டி இருக்கனும், எதுக்கு ஷகீலா மாதிரி டவல் எல்லாம் கட்டிக்க குடுத்தீங்க?  அட்லீஸ்ட் ஒரு சீனாவது மிச்சம் ஆகி இருக்கும்..



2.வில்லி ஒரு சீன்ல ஹீரோயின் அண்ட் கோவால்  சூழப்பட்ட போது தன்னை துப்பாக்கி குண்டுகள் சுட்டா பாதிக்காத ஏதோ ஒரு ஊசியை தானே போட்டுக்கறா, அதை சொல்லிட்டே தான் போடறா.. தத்திங்க அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்குதுங்க..


3. தீபாவளிக்கு கேப் வெடி அல்லது பொட்டு வெடி வெடிக்கும் குயந்தைங்க கூட அந்த பட்டாசு வெடிக்கும்போது ஒரு சின்ன ரிஃப்ளக்‌ஷனையாவது காட்டும். ஆனா 2 கைலயும் 2 மெஷின் கன்னை வெச்சிருக்கும் ஹீரோயின்  மனசுக்குள்ளே கேப்டன் விஜய்காந்த்னு நினைச்சுக்கிட்டு அசால்ட்டா சுட்டுட்டே இருக்கே? எப்படி?



4. படத்துல வர்ற ஒரு கேரக்டர் டார்ச் லைட் அடிக்கற மாதிரி ஒரு சீன் எடுக்கனும்னா லைட்டிங்க்ல டைரக்டா ஆடியன்ஸ் முகத்துக்கு நேர் டார்ச் அடிக்கனும்னு எவன் லைட்டிங்க் சொல்லிக்குடுத்தான்? கண் வலி.. தாங்கலை.. ஆல்ரெடி படம் தலை வலி. இந்த லட்சணத்துல இது வேற //


5.வில்லியா வர்ற ஃபிகர் கொழுக் மொழுக்னு நல்லா தான் இருக்கு, அதை சாருலதா மாதிரி ட்வின்ஸா காட்டினது கூட ஓக்கே ( ஒட்டிப்பிறக்காத ஒரே சாயல் கொண்ட சகோதரிகள்)  ஆனா அவங்களை ”திறமை” காட்டவே விடலையே? ஆனானப்பட்ட ஹீரோயினே ஓப்பனிங்க் ஷாட்ல ஓப்பன் யுனிவர்சிட்டியா நடிச்சப்ப வில்லி  க் மூடி மறைச்சு வருவது ஏனோ?



http://v030o.popscreen.com/bS1xZ0c5QUltQWMx_o_resident-evil-retribution-alice-trailer.jpg




சி.பி  கமெண்ட் - ஃபாரீன் படம் பார்க்கத்தெரியலை, உலக ரசனையே இல்லை. படம் புரியலை, விமர்சனம் சரி இல்லைன்னு யாராவது சொன்னா செம காண்ட் ஆகிடுவேன். நான் பார்த்த  குப்பைகளில் பாங்குப்பை இது அவ்வ்வ்வ் .ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன்