ஒரு அம்மா தன் பெண் குழந்தைக்கு எப்படி சமையல் கத்துக்கொடுக்கறாங்களோ, ஒரு அப்பா எப்படி தன் பையனுக்கு நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற அடிப்படை வித்தைகளை கற்றுத்தர்றாரோ அது போல அந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவங்க ஆன பின்னாடி தான் கற்ற கல்வி அல்லது வித்தை , கலைகளை தன் பெற்றோருக்கு கற்றுத்தருதா? 10% கூட இல்லை..
பெற்றவர்கள் மனோ பாவம் தான் கற்றவைகள் எல்லாம் தன் குழந்தைகளுக்கும் கற்றுத்தருவதோடு அல்லாமல் தான் கல்லாதவை, தனக்கு தெரியாதவை எல்லாம் தங்கள் வாரிசுகள் தெரிஞ்சு வெச்சிருக்கனும்னு உயர்வா நினைப்பாங்க. ஆனா வாரிசுகள் அப்படி இல்லை.
ஹீரோயின் ஒரு ஹவுஸ் ஒயிஃப். சமையல்ல ஸ்பெஷலிஸ்ட். குறிப்பா லட்டு செய்வதில் டேலண்ட். டீன் ஏஜ்ல ஒரு பொண்ணு, 6 வயசுல ஒரு பையன். எல்லாரும் நுனி நாக்குல இங்க்லீஷ் பேசறாங்க. ஆனா ஹீரோயினுக்கு இங்க்லீஷ் ரொம்ப வீக்.
தன் குழந்தைகள் , கணவர் எல்லாரும் தன்னை கிண்டல் பண்றது அவளுக்கு பிடிக்கலை.
அவ அக்கா ஃபாரீன்ல இருக்கா.அக்கா பொண்ணுக்கு மேரேஜ். தனியா ஃபாரீன் போக வேண்டிய சூழல்.அவ மட்டும் முதல்ல போறா.அங்கே இங்க்லீஷ்கு தனியா டியூஷன் போறா.
தன்னை மதிக்காத கணவன் இருக்கும்போது இங்க்லீஷ் டியூசன்ல தன்னை மதிக்கும் பலர் இருக்கக்கண்டு சந்தோஷப்படறா. அதுல ஒருத்தன் பிட்டைப்போடறான் , ஐ மீன் லவ் அப்ளிகேஷன்.
எக்சாம் வருது. எக்சாம் டேட்டும் அக்கா பொண்ணு மேரேஜ் டேட்டும் ஒண்ணு.
என்ன ஆகுது? என்பது மிச்ச மீதிக்கதை..
படத்தில் முதல் பாராட்டு இயக்குநர் கவுரி ஷிண்டேவுக்கு. மசாலா ஸ்கிரிப்ட் எல்லாம் கைல எடுக்காம இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததுக்கு. இது அவர் வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவமாம். அவர் அம்மா கதை . ஹேட்ஸ் ஆஃப் மேடம்..
படத்தோட மொத்த பாரமும் ஸ்ரீதேவி இடுப்புல தான் ஸாரி முதுகுலதான். பூவே பூச்சூடவா நதியா எப்படி எம் குமரன் சன் ஆஃப் மகா லட்சுமில செகண்ட் ரவுண்ட் ஆரம்பிச்சாரோ அதே போல் அவருக்கு இது குட் ஓப்பனிங்க்.. 50 வயசு ஆன மாதிரியே தெரியலை.1977 ல 16 வயதினிலே படம் ரிலீஸ் ஆனப்ப மினிமம் அவருக்கு 16 வயசுனு வெச்சாக்கூட இப்போ அவருக்கு 49 வயசு இருக்கும் .ஆனா ஆள் நீட்டா தான் இருக்கார்.
தாழ்வு மனப்பான்மையில் துடிப்பது , தன் மகளே தன்னை திட்டுவது கண்டு பொறுமுவது , ஃபாரீன் க்ளாஸில் தன் சமையலை எல்லாரும் பாராட்டும்போது பெருமிதப்படுவது , திடீர்க்காதல் பிரப்போசலில் மனம் தடுமாறுவது எல்லாமே கிளாசிக் நடிப்பு..
அடுத்த பாராட்டு ப்ரியா ஆனந்த். அக்கா மகளாக அழகுப்பதுமையா வர்றார். கண்ணுக்கு குளிர்ச்சியா ஆங்காங்கே சிரிப்பது அருண் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட மாதிரி.. அவரோட ஆடை வடிவமைப்பு, நகை அலங்காரங்கள் , கூந்தல் அலங்காரங்கள் எல்லாமே கொள்ளை அழகு.. குறிப்பாக மணப்பெண்ணாய் அவரை பார்க்கும்போது பேசாம நாமளே போய் தாலி கட்டிக்கலாமா? என எண்ண வைக்கும் அழகு..
இங்க்லீஷ் மாஸ்டராக வருபவர் , திடீர்க்காதலனாக வருபவர் , அக்கா கேரக்டர் என சொல்லிட்டே போலாம்.ஸ்ரீதேவியின் சுட்டிப்பையனா வர்ற குட்டி சோ க்யூட்.. அவன் செய்யும் சின்ன சின்ன குறும்புகள் ரசிக்க வைக்குது.. அடிக்கடி அம்மாவை பே என பயமுறுத்துவது செம.. அந்த டீன் ஏஜ் பொண்ணு நடிப்பும் கன கச்சிதம்././
அஜித் ஒரே ஒரு சீன்ல 3 நிமிஷம் வர்றார்.. தன்னம்பிக்கை டயலாக் அடிச்சுட்டு போறார்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஹீரோயின் இங்க்லீஷ் கிளாசில் எல்லோராலும் பாராட்டப்பட்டு ஒரு வித பெருமிதத்துடன் வெளியே வந்து தோரணையா ரோட்டில் நடப்பதும் , யாஹூ என கையை பம்ப் பண்ணுவதும் அக்மார் ஸ்ரீதேவி ஸ்பெஷல் நடிப்பு . அந்த காட்சியில் கேமரா ஆங்கிள் லாங்க் ஷாட்டில் கன கச்சிதம்.
2. படத்தின் மார்க்கெட்டிங்க்காக அஜித்தை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தது , ஹிந்தியில் அமிதாப்
3. தெளிவான திரைக்கதை அமைப்பு , கண்ணை உறுத்தாத அழகிய ஒளிப்பதிவு , ஃபாரீன் லொக்கேஷன்ஸ் அழகு..
4. படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களும் மனதில் பதியும்படி நடிக்க வைத்தது, குறிப்பாக அந்த இங்க்லீஷ் டியூசன் செண்டர் ஸ்டூடன்ஸ் எல்லாரையும் சரியா யூஸ் பண்ணியது
5. படத்தின் உயிர் நாடியான அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் வேலைக்காரன் தர்மதுரை ரஜினி மாதிரி ஹீரோயின் மானாவாரி இங்க்லீஷில் பேசி அசத்த விடாமல் மிக நார்மலான , எளிமையான ஆங்கிலத்தில் உரை ஆற்ற விடுவது..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஹீரோயின் தான் இங்க்லீஷ் டியூசன் போற மேட்டரை ஏன் தன் சொந்த அக்கா கிட்டே மறைக்கறா? இது என்ன பெரிய தப்பா? வெட்கப்பட வேண்டிய விஷயமா? தனக்குத்தெரியாத ஒரு விஷயத்தை அவ கத்துக்கறா , அவ்வ் தானே?
2. ஹீரோயின் ஒரு சீன்ல தன் அக்கா கிட்டே “ ஒரு காலத்துல உனக்கு இங்க்லீஷே வராது, இப்போ பின்னிப்பெடல் எடுக்கறே” அப்டிங்கறாங்க. ஏன் அக்கா கிட்டேயே இங்க்லீஷ் கத்துக்கக்கூடாது. வீட்ல சமையல் வேலை எல்லாம் ஹீரொயின் தானே செய்யறாங்க? அக்கா ஆஃபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் அந்த சமையல் டைம் டியூசன் டைமாக்கிக்கலாமே?
3. உனக்கு தனியா ஒரு கம்பெனி கிடைச்சுதா? எங்களோட இருக்கறது.ல உனக்கு சந்தோஷம் இல்லையா?ன்னு கணவன் கேட்கறப்பவாவது ஹீரோயின் “ டேய் வெண்ணெய், நான் எங்கேயும் போகலை, டியூசன் தான் போனேன்னு சொல்றதுக்கு என்ன? பெங்களூர் கோர்ட்ல ஜெ , சசிகலா எல்லாம் பம்முன மாதிரி ஏன் பம்முறாங்க?
4.கன்னிப்பருவத்திலே , மவுன கீதங்கள் படங்கள்ல அந்த ஒரு நிமிட உரசல் சபலம் சீன் இருந்ததுன்னா படத்தோட ஆணி வேரே அந்த சீன் தான். தேவைப்பட்டுது. இந்தப்படத்துல கதையோட நோக்கம் ஒரு அம்மா எப்படி ஆங்கிலம் த்தெரியாம உலகை ஃபேஸ் பண்றாங்க என்பதே.. ஒரு பெண் இயக்குநரா இருந்துட்டு எதுக்கு தேவையில்லாத அந்த கில்மா சீன்?
5. இப்போ ஆடியன்ஸ் மனசுல ஹீரோயின் இங்க்லீஷ் கத்துக்குவாங்களா? மாட்டாங்களா? என்ற துடிப்பு மாயமா போய் அந்த கள்ளக்காதல்க்கு ஹீரோயின் ஓக்கே சொல்வாங்களா? மாட்டாங்களா? என திசை திரும்புதே?
ஸ்ரீதேவியின் குடும்பம் மகள்கள் மற்றும் கணவர் ( ரியல் லைஃப்)
6. சப்போஸ் ஹீரோயின் மனசுல அப்படி ஒரு எண்ணமே இல்லைன்னா எதுக்கு அந்த சிச்சுவேஷன்ல அலைபாயுதே மனம் அப்டினு ஒரு பாட்டு..
7. லட்டு பிடிக்கும் ஆரம்ப காட்சியில் ஹீரோயின் இடது கைல ஏன் பிடிக்கறாங்க? வலது கைதானே பெஸ்ட்? அதே காட்சி க்ளைமாக்ஸில் வரும்போது மற்ற பெண்கள் 2 பேரு கைல கிளவுசோட இருக்காங்க, ஆனா ஹீரோயின் மட்டும் வெறும் கைல இடது கைல லட்டு பிடிக்கறாங்க
8. அவனவன் ஐ ஏ எஸ் எக்சாம்க்கு கூட கவலைபடலை.. ஆனா சாதா இங்க்லீஷ் டியூசன் எக்சாம் மேரேஜ் அன்னைக்கே வர்ற தெல்லாம் ஒரு ட்விஸ்ட்டா? ஆடி போனா ஆவணி , தாவணி போனா ஏதோ. ஒரு சுங்கடி . இதுக்கு ஏன் டென்ஷன்?
9. ஒரு குடும்பப்பெண் மேரேஜ் ஆகி 2 குழந்தை இருக்கறவ அவளுக்கு விழிப்புணர்வு, ஜாக்கிரதை உணர்வு ஜாஸ்தியாவே இருக்கும். இங்க்லீஷ் தெரியலைன்னாலும் இங்கிதம் தெரியும். டியூசன் க்ளாஸ்ல வர்ற அந்த கள்ளக்காதலன் பிட்டை போடப்போறான்னு தியேட்டர்ல இருக்கும் வயசுக்கு வராத வனஜாவுக்கே தெரியுது. ஸ்ரீதேவிக்கு ஐ மீன் அந்த கேரக்டருக்கு தெரியாதா?
10. க்ளைமாக்சில் ஹீரோயின் ஆங்கிலத்தில் உரை ஆற்றும்போது அவர் பெண் திடீர் என உணர்ச்சி வசப்பட்டு அழுவது ஓவர். ஏன் அப்படி திடீர்னு திருந்தனும்?
11. ஒரு சாதாரண விஷயத்துக்கு, வாக்கு வாதத்தில் மகள் “ உன் மூஞ்சியைப்பாரு “ என திட்டி விடுகிறாள். அவ வயசு அப்படி , பக்குவம் பத்தலை. ஆனா ஒரு அம்மாவான ஹீரோயின் உடனே உணர்ச்சி வசப்பட்டு பேசும் அந்த நீண்ட டயலாக் செயற்கை பெற்றோர் என்றால் பொறுமை , சகித்தல் இது கூட தெரியாதா? ..
12. திரைக்கதையில் இங்க்லீஷ் டியூசன் போவது தவிர அழுத்தமான சம்பவங்களே இல்லையே? ஏ செண்டர் ரசிகர்களுக்கு ஓக்கே.. ஆல் கிளாஸ் ஆடியன்சை கவர ஏதும் இல்லையே?
13. ஒரு இடைவெளிக்குப்பின் தம்பதிகள் ஃபாரீனில் தனி அறையில் சந்திக்கும்போது குட்டிப்பையன் மம்மி என வந்து பக்கத்துல படுத்துக்கறான், உடனே கணவர் ரொம்ப சலிச்சுக்கிட்டு அந்தப்பக்கம் திரும்பிப்படுத்து தூங்கறார் , குழந்தை தூங்க மேக்சிமம் 10 நிமிஷம் ஆகுமா? அது கூட வெயிட் பண்ண முடியாதா?
13. ஒரு இடைவெளிக்குப்பின் தம்பதிகள் ஃபாரீனில் தனி அறையில் சந்திக்கும்போது குட்டிப்பையன் மம்மி என வந்து பக்கத்துல படுத்துக்கறான், உடனே கணவர் ரொம்ப சலிச்சுக்கிட்டு அந்தப்பக்கம் திரும்பிப்படுத்து தூங்கறார் , குழந்தை தூங்க மேக்சிமம் 10 நிமிஷம் ஆகுமா? அது கூட வெயிட் பண்ண முடியாதா?
படத்தின் இயக்குநர் ( என்னை கேட்டா இவரே நடிச்சிருக்கலாம்)
மனம் கவர்ந்த வசனங்கள்
1. சுட்டிப்பையன் கம் குட்டி - அம்மா, உனக்கு கோபம் வருமா? வருவாதா?
டேய்,. அது வருவாதா இல்லை. வராதா? டோண்ட் ஒர்ரி, எனக்கு எப்பவும் கோபம் வரவே வராது
2. நான் நல்லா சமைக்கலைன்னா வீட்டுக்கே வர மாட்டீங்களோ?
3. போம்மா , உனக்கு பி டி னா என்னன்னே தெரியாது
ஆனா பேரண்ட்ஸ்னா என்னனு தெரியும்.. அவங்க கடமை என்னன்னும் தெரியும்
4. இந்த வயசுல எல்லா சைல்ட்ஸும் பேரண்ட்சை அவமானப்படுத்திட்டுதான் இருப்பாங்க..
5. ஆஃபீஸ்ல ஒர்க் பண்ற பெண்ணை இவ்ளவ் க்ளோசாவா கட்டிப்பிடிப்பாங்க?
இதுக்குப்பேரு ஹக் . நாம ஹலோ சொல்றோமில்லை.. அது போல.. ஹக் பண்றது நெருக்கத்தை காட்டும்
அப்போ நாம 2 பேரும் கணவன், மனைவி . இந்த நெருக்கத்தை காட்னீங்களா?
6. அஜித் - இங்க்லீஷ்காரங்களைப்பார்த்து நாம பயப்படத்தேவை இல்லை.. அவங்க தான் நம்மை பார்த்து பயப்படனும்.. முத தடவை என்பது நம்ம வாழ்வில் ஒரு முறைதான் வரும்.. ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு முத தடவை உண்டு.. எஞ்சாய்..
நான் முதன் முதல்ல தமிழ் பேசுனப்போ அதை கிண்டல் செஞ்சவங்க உண்டு. இப்போ ஏத்துக்கலையா?
இங்க்லீஷோ , மலையாளமோ எல்லாம் ஒரு மொழிதான்./.
7. ஆம்பளை சமைச்சா அது கலை, பொம்பளை சமைச்சா அது அவங்க கடமையா?
8. இந்தக்கால குழந்தைகளுக்கு பேரண்ட்ஸ் கிட்டே எப்படி நடந்துக்கனும்னு தெரியலை.. நான் என்ன குப்பைத்தொட்டியா? ஆளாளுக்கு தூக்கி எரிய? எப்போ பாரு குறையே சொல்லிட்டு இருந்தா எப்படி?
9. தாம்பூலப்பைன்னா என்னமா?
மேரேஜ்க்கு வர்றவங்களூக்கு நாம தர்ற பரிசு
அவங்க தானே நமக்குத்தரனும்?
ஹா ஹா ம் ம் ஆனா நாம தர்ற சின்ன பதில் கிஃப்ட்னு வெச்சுகலாம்
10. அமெரிக்கா இவ்ளவ் பெரிய நாடுன்னு சொல்றாங்க,, அழகான இடம்கறாங்க. ஆனா இங்கே நான் 2 விஷயங்கள் மிஸ் பண்றேன் . 1. அம்மா 2 இட்லி.
11. எதை ஸ்டார்ட் பண்ணுனீங்களோ அதை ஃபினிஷ் பண்ணவேணாமா?
ம் ம் என் குழந்தைகளுக்கு அம்மாவா இருப்பதுதான் என் முத கடமை இங்க்லீஷ் எனக்கு முக்கியம் இல்லை..
12. என் மனைவி லட்டு ஸ்பெஷலிஸ்ட். அதை உருவாக்கவே அவ பிறந்திருக்கா.. ( இந்த சீனில் அப்போ நான் சமையலுக்கு மட்டுமா? என்பது போல் ஒரு பார்வை பார்க்கிறாரே. செம )
13. எனக்கு என் கணவர்ட்ட இருந்து காதல் இல்லாட்டி கூடப்பரவாயில்லை. அட்லீஸ்ட் ஒரு மரியாதை.. ..
14. இவளுக்கு 17 வயசு இருக்கும்போது ஏதோ கோபத்துல, வாழ்க்கைல ஒரு வெறுப்புல என்னை ஏம்மா பெத்தீங்கன்னு கேட்டா.. இதை எல்லாம் பர்மிஷன் போட்டுட்டா செய்ய முடியும்..
15. குடும்பம்கறது அன்பு மற்றும் மரியாதை.. நம்மை நாமளே நேசிக்கலினா எப்படி> ? நாம நம்மை நேசிக்க ஆரம்பிச்சா நம்ம பழைய வாழ்க்கையையே நேசிக்கத்தோணும்..
சி.பி. கமெண்ட் - ஒரு திறமையான ஓவியன் அல்லது சிற்பி தனது அழகிய படைப்பை நிர்மாணிக்கும்போது சின்ன தவறு நடந்திருக்கலாம். ஆனாலும் அந்தப்படைப்பு நம் மனம் கவர்ந்து விடும். அது போல் மேக்கிங்க் வைஸ் சற்று சறுக்கி இருந்தாலும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நல்ல சினிமா தான் இது.. ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன்
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42 ( இது ஹிந்தி டப்பிங்க் என்பதால் விகடன் விமர்சனம் போட மாட்டாங்க )
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்கிங்க் - ஓக்கே
டெக்கான் கிரானிக்கல் - 3 1/2 / 5
டைம்ஸ் ஆஃப் இண்டியா - 6 1/2 / 10
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42 ( இது ஹிந்தி டப்பிங்க் என்பதால் விகடன் விமர்சனம் போட மாட்டாங்க )
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்கிங்க் - ஓக்கே
டெக்கான் கிரானிக்கல் - 3 1/2 / 5
டைம்ஸ் ஆஃப் இண்டியா - 6 1/2 / 10
4 comments:
ஜங்க்லியும் புங்க்ளியும் கதவத் திற !
Thanks
நான் ஹிந்தில பார்த்தேன்.... ஸ்ரீ தேவி பொங்குற சீன்ல ஆக்ச்சுவலா பொண்ணுகிட்ட உன் ஸ்கிராப்புக்க நான் தான் மறைச்சு வைச்சேன் யாரும் படிக்க கூடாதுன்றதுக்காக.. நான் கூட படிக்கலனு கடைசியா சொல்வா... அப்ப்ப பொண்ணு படிக்க தெரிஞ்சாதானேனு சொல்லிட்டு வைச்சிடுவா.. அதனால தான் பீல் பன்னுவா
சந்து
நான் ஹிந்தில பார்த்தேன்.... ஸ்ரீ தேவி பொங்குற சீன்ல ஆக்ச்சுவலா பொண்ணுகிட்ட உன் ஸ்கிராப்புக்க நான் தான் மறைச்சு வைச்சேன் யாரும் படிக்க கூடாதுன்றதுக்காக.. நான் கூட படிக்கலனு கடைசியா சொல்வா... அப்ப்ப பொண்ணு படிக்க தெரிஞ்சாதானேனு சொல்லிட்டு வைச்சிடுவா.. அதனால தான் பீல் பன்னுவா
சந்து
Post a Comment