Thursday, October 11, 2012

மாற்றான்

http://www.tamil.cinebuzzz.com/img_previews/6b.jpg

இது மாற்றான் படம் பற்றிய முன்னோட்ட பார்வை + தொழில் நுட்ப கலைஞர்களின் பேட்டி தான்.


 மாற்றான் விமர்சனம் -http://www.adrasaka.com/2012/10/blog-post_12.html

ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அதுல 'ஹாலி' இருக்கு, இதுல 'கோலி' இருக்கு என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் அதையும் மீறி 'ஜாலி'யான சொந்தமும் இருக்கிறது - அதுதான் 'இன்ஸ்பிரேஷன்'. அதாவது ஹாலிவுட்டில் வெளியான படங்களின் கதையைத் தழுவி இங்கு புது 'ரொட்டி' போல சுட்டுக் காட்டுவார்கள். அதை 'அப்பாவிகள்' சுட்டுட்டாங்கப்பா என்று கூறுவார்கள், கோலிவுட்டிலோ அதை 'இன்ஸ்பிரேஷன்' என்று சொல்லிக் கொள்வார்கள்.



அப்படி ஒரு 'இன்ஸ்பைர்' கதைதான் மாற்றான் படக் கதை என்று புதிய டாக் கிளம்பியுள்ளது. சூர்யா நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் இது. இந்தப் படத்தின் கதை குறித்து கே.வி.ஆனந்த் கூறுகையில், ஷங்கருடன் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தபோது அவர் மூலம் கிடைத்த புத்தகம் ஒன்றில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் குறித்துப் படித்தேன். அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கினேன் என்று கூறியிருந்தார்.









அப்படீன்னா, பிரியாமணி இரண்டு வேடங்களில் நடித்துள்ள சாருலதா படத்தின் கதைக்கும், உங்க கதைக்கும் ஒரு ஒற்றுமையும் இல்லையா என்ற கேள்விக்கு நிச்சயம் ஒற்றுமை இல்லை, அது வேறு இது வேறு என்று கூறியிருந்தார்.



ஆனால் ஏற்கனவே 2003ம் ஆண்டு ஹாலிவுட்டில் வந்து விட்டஒரு படத்தின் கதையைத்தான் 'உட்டாலக்கடி' செய்து தனது மாற்றான் படக் கதையை ஆனந்த் உருவாக்கியுள்ளார் என்று ஒரு புதுப் பேச்சு கிளம்பியுள்ளது.


அது என்ன உட்டாலக்கடி??.... ஒரு பிளாஷ்பேக்குக்குப் போவோம்...!



மேட் டேமன், கிரேக் கின்னேர் ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் ஸ்டக் ஆன் யூ (Stuck on You). 2003ல் வெளியான காமெடிப் படம். இருவரும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக நடித்திருந்தனர். இருவருக்கும் வேறு வேறு சிந்தனைகள், ரசனைகள். இதை எப்படி இருவரும் சமாளிக்கின்றனர், எப்படி தங்களது ரசனைகளை அடைய போராடுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சித்தரித்திருந்தனர் இப்படத்தில்.



இதில் ஒரு சகோதரருக்கு ஹாலிவுட்டுக்குப் போய் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் இன்னொருவருக்கோ சினிமாவே பிடிக்காது. இதனால் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை செம காமடியாக காட்டியிருப்பார்கள் படத்தில். இப்படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் கூட பேசப்பட்ட படமாக இருந்தது.



.....இப்ப கோலிவுட்டுக்கு வருவோம். இந்தப் படத்தைத்தான் சற்று மாற்றி சூர்யாவைப் போட்டு மாற்றான் என மாற்றி விட்டார் கே.வி.ஆனந்த் என்று திரையுலகிலேயே பேசிக் கொள்கிறார்கள்.



ஏற்கனவே ஆனந்த் எடுத்த அயன், கோ ஆகிய படங்களும் கூட ஆங்கில் படங்களின் தழுவல்களே என்று பேசப்பட்டது. இருந்தாலும் அவை இரண்டும் ஹிட் ஆகி விட்டன. ஆனந்த்தும் எங்கேயோ போய் விட்டார். இப்போது மாற்றான் மூலம் ஹாட்ரிக் அடிக்க வருகிறார்.



மாற்றான்- 'மாற்றான் தோட்டத்து மல்லிகையா' அல்லது ஒரிஜினல் 'மதுரை மல்லியா' என்பதை விரைவிலேயே படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வோம்.



ஒருவேளை 'ரெபரன்ஸ்' தேவைப்படுவோர் பர்மா பஜார் பக்கம் போய் ஸ்டக் ஆன் யூ படத்தின் சிடி கிடைத்தால் வாங்கிப் பார்த்து விட்டு மாற்றானைப் பார்க்கக் காத்திருக்கலாம்...!


http://www.tamilcloud.com/wp-content/uploads/2012/07/Maatran-movie-stills-_2_-2.jpg



மாற்றான் திரைப்படம் எந்த ஆங்கிலப் படத்தின் தழுவலும் அல்ல... ஒரிஜினல் கதை... சமூக நலன் சார்ந்தது, என்று நடிகர் சூர்யா கூறினார்.



ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக, இரு வேடங்களில் சூர்யா நடித்திருக்கும் படம், `மாற்றான்.' காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.



இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது படத்தின் ஹீரோ சூர்யா பேசுகையில், "இது எனக்கு முக்கியமான காலகட்டம். நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவையும் மிகக் கவனமாக எடுக்க வேண்டிய கட்டம் இது. அப்படி மிக கவனமாக எடுத்த முடிவுதான், `மாற்றான்.'



இந்த படத்துக்காக, ஒன்றரை வருடம் உழைத்து இருக்கிறேன். ஒன்றரை வருடமும் `மாற்றான்' படத்துக்காக என்னை நான் அர்ப்பணித்துக்கொண்டேன்.


இது, ஒட்டிப்பிறந்த சகோதரர்களை பற்றிய கதை மட்டுமல்ல. அப்பா-மகன் பாசம் இருக்கிறது. சமூக நலன் சார்ந்த கரு இருக்கிறது. ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. ஆங்கில படமோ அல்லது வேறு எந்த படத்தின் தழுவலோ அல்ல. 4 வருடங்களாக உட்கார்ந்து எழுதப்பட்ட கதை,'' என்றார்.



அவரிடம், 'படத்தில் இரட்டையர்களாக நடித்ததால், இரண்டு சம்பளம் வாங்கினீர்களா?' என்று கேட்டனர் நிருபர்கள்.


அதற்கு சூர்யா, 'ஒரே சம்பளம்தான் வாங்கினேன்,' என்றார் சிரித்தபடி.


இயக்குநர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சவுந்தர், ஆர்ட் டைரக்டர் ராஜீவன், எழுத்தாளர்கள் சுபா, பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், விவேகா, தாமரை, ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரங்கராஜன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


சூர்யாவின் மாற்றான் படத்தின் வெளியீட்டு உரிமையை பெரிய விலைக்கு வாங்கியுள்ளது, ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்.


கேவி ஆனந்த் இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள மாற்றான் படம், ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்ப்பார்ப்புக்குரியதாக இருந்தது.


இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யாவும், அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.


மாற்றானின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வெளியீட்டு உரிமை மற்றும் தமிழ் ஆடியோ வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது ஈராஸ் நிறுவனம். இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஈராஸ்.


அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் லுல்லா கூறுகையில், "பிராந்திய மொழி சினிமாவில் எங்களுக்கு உள்ள ஆர்வத்தைக் காட்டும் வகையில் மாற்றானை வாங்கியுள்ளோம். எதிர்காலத்தில் இன்னும் பல படங்களை வாங்கி வெளியிட உள்ளோம்," என்றார்.






 1.
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்:ஜாவிட் அலி,மஹாலக்ஷ்மி ஐயர்
பாடல்: மதன் கார்க்கி

கால் முளைத்த பூவே
என்னோடு பலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!

கேமமில் பூவின் வாசம் அதை - உன்
இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.

நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!

தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!

ஹே பெண்ணே...உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா… வினவுகிறேன்.

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.

இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே!
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே!

நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ?
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ?

எனை ஏனோ... உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!

அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய்.







2. படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக்,ப்ரியாஹிமேஷ்
பாடல்: தாமரை

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?

இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்

இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்

ஹோ ..யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

முதல் முறை இங்கு நீ இன்றி
நடக்கிறேன் தனியாக
இறந்தும் உன் மூச்சு காற்றை
உணர்கிறேன் இதமாக

சரிபாதியில் இரவும் பகலும்
என்கூறியே உலகம் சுழலும்
ஒரு பாதியே பிரிந்தே போனால் என்னாகும் ?

நினைவால் இனி நான் வாழ
நதி போல் இனி நாள் போக
எதனால் இனி ஆறும் ஆறும் என் காயம்

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

கனாக்களில் வரும் பெண் பின்பம்
திகைக்கிறேன் யார் என்று
முகத்திரை அதை தள்ளி பார்த்தால்
முறைக்கிறாய் நீ நின்று

கனகாம்பர இதழை விரித்து
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும்

நிறமாலையை போல் நெஞ்சம்
நெளிந்தாடிடும் பல வண்ணம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்
உன்னை பார்த்ததும் பாராதது போல்
சிறு வஞ்சம்

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?

இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்

இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்






3. படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பிராங்கோ,சத்யன்,ஆலாப்ராஜு,சாருலதாமணி,சுசிச்ரா  
பாடல்: பா.விஜய்

இது மாலை மயங்கும் வேலையா
நீ வா வா கைகூட
இரு விழிகள் ஆடும் வேட்டையா
நீ வா வா மெய் சேர

கண்ணோடு உதடு பேசுமா ?
கையோடு இளமை சேருமா ?
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா ?
கன நேரம் உள்ளம் தூங்குமா ?

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரம்மில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அழகான வார்த்தை நீ என்றால்
முற்று புள்ளி வெட்கம்
மெதுவாக உன்னை வர்ணித்தால்
மொழியே சொர்கி நிற்கும்

அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்

அட மேல் உதட்டை கீழ் உதட்டை
ஈரம் செய்யும் நேரம்
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி
என்னென்னவோ ஆகும்
இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்
இடையில் உள்ள மோகம்
முத்த தேனில் மூழ்க முன்நேரம்

தீயே தீயே ..
தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே

this is how we like to do it
this is how we like to do it

உறையாமல் செய்த அங்கங்கள்
நெஞ்சை முட்டி கொள்ளும்
குறையாமல் செய்த பாகங்கள்
கொஞ்சி குலவ சொல்லும்

அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்

ஒரு கால் முளைத்த வானவில்லை
சாலையோரம் கண்டேன்
நடமாடும் அந்த பூவனத்தில்
சாரல் வீச கண்டேன்
பனி தூவலாக புன்னைகைக்கும்
பறவை ஒன்றை கண்டேன்
தீயும் தேனும் சேருமே கண்டேன்

தீயே தீயே ராதியே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர செர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரமில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீர தீர சேர்ந்தியே ..







4. படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய்பிரகாஷ்,கார்த்திக்,ஷ்ரேயா கோஷல்
பாடல்: விவேகா

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தா நே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய்
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை
கோயம் கண்கள் மேயும் பேசுமா

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தா நே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய்
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை
கோயம் கண்கள் மேயும் பேசுமா

ஒரு காலை நேரம் நீ வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம் சூடேறும்

கண் பேசும் மௌனமே ஒன்றாக
நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும் நீளும்

நதியிலே இல்லை போல பயணம்
இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்

எதிரே நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக உணதாகிறேன்
உயிரே உயிரே உயிர் போக போக தோடு

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தா நே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்






5.படம்: மாற்றான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்:க்ரிஷ்,பாலாஜி,மிலி,ஷர்மிளா
பாடல்: நா.முத்துக்குமார்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

திரே திரே திரே திரே
திரே திரே திரே

வண்ணம் வேறு வானம் வேறு
இருவரின் காதல் வேறு
புயல் அடித்தும் வாழுதே
இருபறவை ஒரு கூட்டில்
மெது மெதுவாய் பூக்கட்டும்
இந்த பூக்கள் எதிர்காற்றில்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

கருவாச்சு உடல் உருவாச்சு
அது தவறாச்சு இரு உயிராச்சு
இரண்டும் வளர்ந்தாச்சு
எனக்காச்சு எது உனக்காச்சு
இனி புவி எல்லாம் அட புதுகாட்சி
வருடம் உருண்டசு
இவன் ஒரு பக்கம் அவள் மறு பக்கம்
இது எதுவோ ? அட பூவும் தலையும்
சேர்ந்த பக்கம் பொதுவோ

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

இவள் வார்த்தை மழை துளியாக
அவள் மறு வார்த்தை சர வெடியாக
இணைந்தும் தனியாக
நதிபோலே இவன் மனம்போக
பெரும் புயல் போலே அவன் செயல் போக
யார் இங்கே இணையாக ..
இவள் கண்ணாடி அவன் முன்னாடி
தரும் உருவம்
இது பிரிந்தால் கூட
ஒன்றாய் நின்ற்கும் உருவம்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

திரே திரே திரே திரே
திரே திரே திரே


நன்றி - மாலை மலர், தட்ஸ் தமிழ்,தமிழ் பாடல் வரிகள்,தினமலர், தினகரன், நக்கீரன்,கல்கி

விஜய், அஜித்தை ரொம்பப் பிடிக்கும்!"

சுள்ளென்று இருக்கிறார் சூர்யா. 'மாற்றான்’ திருப்தியாக வந்த சந்தோஷத்தில், முறுக்கிய போலீஸ் மீசையில் 'சிங்கம் 2’-க்குத் தயாராகும் ஆர்வம் கண்களில் தெரிகிறது.



 ''இரட்டையர் படம்னு ஈஸியா சொல்றீங்க. ஆனா, அது அத்தனை ஈஸி இல்லைங்க. ஒட்டிப் பிறந்தவங்களைப் போய் பார்த்தேன். ஒண்ணு மலர்ந்து சிரிச்சா, இன்னொண்ணு முகம் சிவக்குது. ஒண்ணு தூங்கும்போது, அடுத்தது சத்தம் போட்டு அழுது அடம்பிடிக்குது. முதல்ல... இது பரீட்சைனு தோணுச்சு. அப்புறம் பார்த்தா, ஜாலி, கேலி, சந்தோஷம், வேதனை, ஆட்டம் பாட்டம்னு ஒரு எம்.ஜி.ஆர். பட பேக்கேஜ் வந்துடுச்சு.



 ஒரு வசனம் பேசுறதைக்கூட கே.வி.ஆனந்த் சார் சாதாரணமா எடுத்துக்க மாட்டார். நக்கலா, அலட்சியமா, கோபமா... தேவைப்படுற டோன்ல சொல்லவெச்சு, சுவாரஸ்யத்தோட உச்சத்துக்கே கொண்டுபோய்டுவார். 'மாற்றான்’ படத்தின் முதல் ரசிகன் நான்தான்.''




''சம்பளம், படங்களின் வியாபாரம், நல்ல அபிமானம்... ரஜினி, கமலுக்கு அடுத்த பட்டியலில் வந்துட்டோம்னு தோணுதா?''




''நாம மரியாதை வெச்சிருக்கிறவங்களே, நம்மிடம் நீங்க நல்ல இடத்தில் இருக்கீங்கன்னு சொல்றப்போ, 'ஒழுங்கா வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம்’கிற திருப்தி வருது.



ஆனா, அதுக்கு மேல தலையில எதையாவது ஏத்திக்கிட்டா, அது கஷ்டம். ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா, வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் எல்லாப் படங்களும் ஹிட் ஆகணும்.



அதில் என் படங்களும் இருக்கணும். ஒரு ரசிகனா இதுதான் என் எதிர்பார்ப்பு. எனக்கு விஜய், அஜித் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். எல்லாருக்கும் இங்கே இடம் இருக்கு. அவங்கவங்க பாதையில் அவங்கவங்க ஓடிக்கிட்டு இருக்காங்க. என்கிட்ட சோம்பேறித்தனம் கிடையாது. தந்திரம் இல்லை. கொஞ்சம் கோபப்படுவேன். அதை மட்டும் குறைச்சுக்கணும். இப்போ எல்லாத்தையும் காது கொடுத்துக் கேட்கிறேன். என்னைப் புதுப்பிச்சுக்கிட்டே இருக்கேன். என் வெற்றி முழுக்க முழுக்க எனக்கு மட்டுமே சொந்தம் இல்லை. அந்த ஒரு விஷயத்தில் நான் தெளிவா இருக்கேன்.''



''சிம்பு, தனுஷ், 'ஜெயம்’ ரவி, ஆர்யானு உங்களுக்கு அடுத்த வரிசையும் ஆரோக்கியமா இருக்கு. அவங்க படங்களைப் பார்க்கும்போது என்ன தோணும்?''



''அதெல்லாம் மதிப்பிட்டுச் சொல்ற அளவுக்கு எனக்குத் தகுதி வந்துட்டதா நான் நினைக்கலைங்க. '3’ படத்தில் தனுஷின் நடிப்பு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவ்வளவு எனர்ஜியோட இருந் தார் ஒவ்வொரு சீன்லயும். ஜாலியா நடிக்கி றதுன்னா அசால்ட்டா பின்றார் ஆர்யா. அவ ரால சீரியஸாவும் நடிக்க முடியும். அதை அவர் ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.



 'சுந்தரபாண்டியன்’ல சசிகுமார் ரொம்ப யதார்த்தமா, லவ்லியா நடிச்சிருக்கார். இதெல்லாம் போக... சமீபத்தில் பார்த்ததில் 'பர்ஃபி’ படம் ரொம்பப் பிடிச்சது. இவ்வளவு சின்ன வயசில் ரன்பீர் கபூர் அப்படி அசத்தியிருக்கிறதைப் பார்த்தா, நான் ஒண்ணும் பெரிசா சாதிக்கலையேனு தோணுது. இன்னும் நிறைய தூரம் போகணும்.''




''ஹீரோன்னா ஹீரோக்கள்பத்தி மட்டும்தான் பேசுவீங்களா... ஹீரோயின்கள்பத்தியும் பேசலாமே?''



''காஜல் ரொம்ப இன்டெலிஜென்ட். ரஷ்ய மொழியில் பேச வேண்டிய சூழலில் ரொம்ப சுலபமாக் கத்துக்கிட்டுப் பேசினாங்க.  'மாற்றான்’ல இரண்டு ஆண்கள். அவங்கள்ல ஒருத்தனோட பழகுற பொண்ணுனு கொஞ்சம் சிக்கலான கேரக்டர். அதை அவங்க சமாளிச்சு நடிச்ச விதம்... செம ஸ்மார்ட்!



அனுஷ்கா ரொம்ப ஃப்ரெண்ட்லி. யாரும் அவங்ககிட்ட பழகலாம். எல்லார்கிட்டேயும் சமமாப் பழகுவாங்க. யோகா டீச்சர்ங்கிறதால ஹெல்த் டிப்ஸ் நிறையக் கொடுப்பாங்க. ஸ்ருதிகிட்ட இன்னும் நிறையத் திறமைகள் இருக்கு. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திலும் துணிச்சலா தனக்கான அடை யாளம் தேடிக்கிறது ஸ்ருதி ஸ்டைல். ஒரு சமயம் பாடினாங்க. அதில் நல்லா ட்யூன் பண்ணிட்டு மியூஸிக் ஆல்பம் வரைக்கும் வந்தாங்க. இப்போ பாருங்க... சினிமாவில் க்ளீன் க்ரீன் ஹீரோயினா வந்து நிக்கிறாங்க. சூப்பர்ல?!''


 நன்றி - விகடன்



கே வி ஆனந்த் பேட்டி







சூர்யா - கா” ஜில் ”அகர் வால் பேட்டி



3 comments:

Menaga Sathia said...

நாளை காலைல 10மணிக்கெல்லாம் விமர்சனம் வந்துடும்மா?? இன்னொரு சூர்யாவுக்கு ஜோடி இல்லையா...

ராஜி said...

S.Menaga said...

நாளை காலைல 10மணிக்கெல்லாம் விமர்சனம் வந்துடும்மா?? இன்னொரு சூர்யாவுக்கு ஜோடி இல்லையா...
>>
ரொம்ப லேட்டா சொல்றிங்களே

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி