சமீபத்தில் சென்னையில் பட்டப்பகலில் தெலுங்குப்படத்தில் வருவது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.அது பற்றி சம்பந்தப்பட்ட நபர் எனக்கு அலைபேசி மூலம் தெரிவித்தார்.என்ன நடந்தது என்பதை அவர் மெயிலின் மூலம் ஆங்கிலத்தில் தகவலை அனுப்பினார். அது கடைசியில். இப்போ அதன் தமிழாக்கம்
16.8.2012 அன்னைக்கு மாலை 4.30 மணி அளவில் ஒரு கும்பல் 20 பேருடன் வந்தது. என்னை, என் மனைவி, குழந்தைகளை தாக்கி சென்றது.உடனே நான் உதவி கேட்டு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் தமிழ் சினிமாவில் வருவது போல் எல்லாம் முடிஞ்சபின் அதாவது எங்களை அடித்து முடித்த பின்னரே வந்து சேர்ந்தனர்.
நான் அவர்களிடம் புகார் தெரிவித்தேன்.நுங்கம்பாக்கம் எஃப் ஒன் போலீஸ் ஸ்டேஷனில் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய புகார் தந்தோம், ஆனா அவங்க அதை செய்யலை
1. டி வி சீரியல் நடிகர் வெங்கட் சுப்ரமணியன்,மைதிலி ஹெர்பல் 4 வது ஃப்ளோர்,ஃபாத்திமா பிளாசா, பாண்டி பஜார்,
2. அஜித்மேனன் அண்ட் எஸ் கே விஸ்வநாத் ( பார்ட்னர்ஸ் ஆஃப் குட் க்ளோபல் எஜுகேஷன்),
3. வக்கீல் தாமோதர கிருஷ்ணன்
மேலே சொன்ன மூவரில் முதல் இருவர் நாங்கள் வாடகைக்கு விட்ட வீட்டில் 3 வருடங்களாக சலூன் எனப்படும் பியூட்டி பார்லர் நடத்தி வர்றாங்க.. பேரு
டுவல் லெவன் ( 12 11 ) பியூட்டி ஸ்டூடியோ
சில நாட்களா இந்த சலூன்க்கு சில பொண்ணுங்களும் வந்துட்டுப்போய்ட்டு இருந்தாங்க.. ஆல்ஹஹால் யூஸ் பண்ணாங்க.. இதை கண்டு பிடிச்சு அவங்க கிட்டே ஆட்சேபம் தெரிவிச்சேன். போலீஸ்ல புகார் கொடுப்பேன்னு மிரட்டினேன். அதுக்குப்பின் அவங்க வாய் மொழியா இப்படி இனி நடக்காதுன்னு வாக்கு குடுத்தாங்க.
அவங்களை காலி பண்ண சொல்லிட்டேன். 31.7.2012 அன்னைக்கு அவங்க சாவி ஏதும் கொடுக்காம வீட்டை காலி பண்ணிட்டாங்க.. என் சொந்த வீட்டை அவங்க பூட்டிட்டாங்க.. சாவி அவங்க கிட்டே.. என் பையன் அவங்களுக்கு ஃபோன் பண்ணப்போ ரூ 17 லட்சம் கொடுத்தாதான் வீட்டு சாவியை கொடுப்போம்னு மிரட்னாங்க..
வெங்கட்டின் அம்மா மைதிலியை நாங்க நேர்ல பார்த்து முறையிட்டப்ப அந்தம்மாவும் அவங்க மாதிரியே தான் பேசுனாங்க.. எங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு. தேவை இல்லாம எங்க கிட்டே மோத வேணாம்.. பணத்தை கொடுத்துட்டு வேலையை பார் என எச்சரிச்சாங்க..
10.8. 2012 அன்னைக்கு எங்களுக்கு ஒரு லீகல் நோட்டீஸ் வந்தது.அதுல அர்த்தமே இல்லாம பணம் கேட்டு இருந்தது. நோட்டீஸ் வந்த அடுத்த வாரம் தான் மேற் சொன்ன சம்பவம் நடந்தது.
தாக்குதல் நடந்தப்ப எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள், வீடொயோ க்ளிப்பிங்க்ஸ் எல்லாமே போலீஸ் ஸ்டேஷன்ல தாக்கல் பண்ணியாச்சு. ஆனாலும் அவங்க எஃப் ஐ ஆர் இன்னும் பதிவு பண்ணலை, விசாரிக்கறோம்னு சொல்லி நாளை கடத்தறாங்க..
நானும், என் மகனும் கீழ்ப்பாக்கம் மெண்டல் ஹாஸ்பிடலில் போய் சிகிச்சை பெற்றோம். அதற்கும் ஆதாரம் உள்ளது. சம்பவம் நடந்தப்போ எங்களை தாக்கியதும் இல்லாம அந்த 20 பேர் கொண்ட ரவுடி கும்பல் தங்கள் பேண்ட் , சட்டை எல்லாம் கழட்டி வெறும் ஜட்டியோடு எங்கள் வீட்டின் வாசல் முன் டான்ஸ் ஆடி தரக்குறைவாக நடந்தனர்.
வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் என்ற குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாமல் அவர்கள் மிக மோசமாக நடந்து கொண்டனர் . இதுக்கு நியாயம் வேண்டி கோர்ட்டில் சென்று புகார் கொடுக்கப்பட்டு உள்ளது
M.S. Dhanasingh
16, Mahalingapuram
Main Road
Nungambakkam, Chennai- 600034
Ph-9003015473
My Father Mr.M.S.Dhana Singh aged 75Years and my mother aged 68 Years
are living there and they have rented the 1st floor to Mr. Venkat for
Beauty studio
Nungambakkam F3 Police Inspector Is Mr.Thayagaragan no:9600029616
SI - Radhakrishnan no:9789822026 / 9840295145
Nungambakkam F3 Police Inspector Is Mr.Thayagaragan no:9600029616
SI - Radhakrishnan no:9789822026 / 9840295145
3 comments:
எல்லாம் சினிமாவை பார்த்து நடக்குதுங்க முடிவு என்ன தான் ஆச்சி?
காலம் ரொம்ப கெட்டுப்போச்சுங்க! யாரையும் நம்ப முடியலை!
கீழ்பாக்கம் மெண்டல் ஹாஸ்பிடலில் போய் என்ன/எதற்கு ட்றீட்மெண்ட் எடுத்தாங்க?
Post a Comment