அண்ணன் ராமராஜன் , அங்கிள் டாக்டர்
சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடிச்ச குப்பைப்படங்களுக்கு எல்லாம்
போகக்கூடாதுன்னு ஒரு வைராக்யத்தோடதான் இருந்தேன். ஆனா பாருங்க, விதி வலியது
, கூட இருக்கற ஆளுங்க உசுப்பேத்தி விட்டுட்டாங்க.. தானா அழிவது பாதி ,
கூட இருக்கறவங்களால கிழிவது மீதி என்ற லேட்டஸ்ட் ஃபார்முலா படி
இந்தப்படத்தை பார்க்க நேர்ந்தது . இந்தக்காவியத்தின் கதைச்சுருக்கம்
என்னான்னா.
ஹீரோ
ஜிம் மாஸ்டர். அங்கே எக்சசைஸ் பண்ண ஹீரோயின் வருது. அவர் எக்சசைஸ் பண்ற
அழகைப்பார்த்து மயங்கி ஹீரோ லவ்வுக்கு பிட்டைப்போடறார்.அந்த கேன ஹீரோயின்
என்ன சொல்லுதுன்னா “ எனக்கு நல்ல , பெரிய குடும்பம் உள்ள மாப்ளை தான்
வேணும், ஏன்னா நான் ஒரு அநாதை”ன்னு சொல்லுது. உலகத்துலயே மாப்ளை எக்கேடு
கெட்டா என்ன? அவன் என்ன வேலை செஞ்சா என்ன? ஃபேமிலி கூட்டமா இருந்தா சரின்னு
சொன்ன ஒரே பெண் இவர் தான்.
ஹீரோ
உடனே கிரேசி மோகன் படங்கள்ல வர்ற மாதிரி ஹீரோயினை தன் அத்தை பொண்ணா
அதாவது பூர்வ ஜென்ம அத்தையோட அடுத்த பிறப்பா நடிக்க வெச்சு எல்லாரையும்
ஏத்துக்க வைக்கறார். இந்த கேவலமான எபிசோடு 4 ரீல்க்கு போகுது.
ஊர்ல
எங்கே அநியாயம் நடந்தாலும் , வாக்கிங்க், ஜாக்கிங்க் போனாலும் ஹீரோ
கண்டுக்க மாட்டேங்கறார், தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கார். அது
ரிட்டயர்டு மிலிட்ரி மேன் ராஜ் கிரணுக்கு பிடிக்கலை.அநியாயத்தை தட்டி
கேட்கனும்னு அட்வைஸ் பண்றார்.
உடனே
ஹீரோ அரதப்பழசான ஒரு ஃபிளாஸ்பேக்கை எடுத்து விடறார். அதாவது அண்ணன் அழகிரி
மாதிரி வாட்டசாட்டமான ஒரு அரசியல் ரவுடி அநியாயமா ஹீரோவோட அம்மாவை கொலை பண்றான். அப்போ
ஊரே வேடிக்கை பார்க்குது. அவங்க மட்டும் வேடிக்கை பார்த்தப்போ நான் மட்டும்
ஏன் தட்டி கேட்கனும்கறார்.
இப்போ
ஹீரோவுக்கு ஆக்சிடெண்ட் ஆகுது. கோடம்பாக்க வழக்கப்படி டாக்டர் ஹீரோவுக்கு
கெடு விதிக்கறார்.இன்னும் 6 மாசம் தான் டைம். அதுக்குள்ளே நீ என்னென்னெ
சாதிக்கனுமோ அதை எல்லாம் சாதிச்சுக்கோங்கறார். துப்பாக்கி , விஸ்வரூபம்
இந்த 2 படம் மட்டும் தான் பார்க்க முடியும் அந்த 6 மாசத்துல . ஆனா பாருங்க
ஹீரோ டொப்பு டொப்புன்னு எல்லாரையும் ஐ மீன் ஆல் ரவுடிஸ் , வில்லன்ஸ்
சுட்டுத்தள்ளறார்.
இதான்
கதை. சின்ன குழந்தை கூட கணிக்கும் ட்விஸ்ட் என்னான்னா அந்த டாக்டர் 6 மாச
கெடுன்னு சொன்னது பொய். 4 பேரு நல்லாருக்கனும்னா 400 ரவுடிங்க நாசமா
போகனும்னா எதுவுமே தப்பில்லை . அவ்வ்வ்
ஹீரோ
பரத். மனசுக்குள்ளே பெரிய விஜய்னு நினப்பு.. சிவகாசி , திருப்பாச்சி
விஜய்யை அச்சு அசலா காப்பி அடிச்சு சின்னத்தளபதி சின்னத்தனமான தளபதி
ஆகறார்.அவருக்குன்னு நல்ல டான்ஸ் டேலண்ட் இருக்கு, ஏன் விஜயை காப்பி
அடிக்கனும்? அவர் பாட்ஷா ஸ்டைலில் பஞ்ச் டயலாக் பேசும்போதெல்லாம் ஊட்டி
சூசயிடு பாயிண்ட்டே பெட்டர்னு தோணுது. அட்லீஸ்ட் 50 படமாவது முடிச்சவங்க
பஞ்ச் டயலாக் பேசுனா ரசிக்கலாம்.. ஹூம்..
ஹீரோயின் அழகிய உதட்டழகி சுனைனா. சைபர் க்ரைம் போலீஸ் கிட்டே மன்னிப்பு கேட்டுட்டு ஒரு பேரா வர்ணிச்சுடறேன்.
பிளவு பட்ட ஒரு கட்சி பார்க்க சகிக்காது. ஆனா பிளவு பட்டிருக்கும் இவர்
உதடுகள் நந்தியா வட்டப்பூக்களாக அலங்கரிக்கப்பட்ட அழகிய பற்களை
காட்டும்போது இந்தா பாப்பா என்னை கொஞ்சம் கடி என சொல்ல வைக்குது. பன்னீர் திராட்சை கறுப்பா இருக்கும், சீட்லெஸ் திராட்சை பச்சை கலர்ல இருக்கும், இதென்ன லைட் ரோஸ் கலர்ல 2 திராட்சைன்னு பார்த்தா அது சுனைனாவின் உதடாம்.. அடடே..
மாடர்ன் டிரஸ் போட்ட மாடப்புறாவாக வரும்போதும் சரி , பட்டுப்புடவை அணிந்து வரும் பங்கஜமா வரும்போதும் சரி சொக்க வைக்கறார்.மற்றபடி அவர் நடிப்பு எல்லாம் போலீஸ் ரகம் ஐ மீன் மாமூல் ரகம்.. அவர் ஜிம்ல படுத்த வாக்குல செஸ்ட்க்கான பென்ச் பிரஸ் எக்சசைஸ் பண்ணும்போது கேமரா மேன் நம்மளை அவர் பக்கத்துலயே கூட்டிட்டுப்போறார்..
ராஜ் கிரண் இதுல ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு வர்றாரு. செம காமெடியா இருக்கு..
மனம் கவர்ந்த வசனங்கள் ( குப்பையில் பொறுக்கிய மாணிக்கங்கள் )
1. சுனைனா - யோவ், எங்கங்கயோ தொடறே?
இது டச்சிங்க் இல்லைம்மா, டீச்சிங்க்
2. ஆம்பளைங்க ஜிம்க்கு வர்றது சிக்ஸ் பேக்குக்காக , பொம்ப்ளைங்க ஜிம்முக்கு வர்றது செக்ஸ் லுக்குக்காக
3. சுனைனா - யோவ், உன் சர்ட்டை கழட்டு
அய்யய்யோ, எதுக்கு?
உன் பாடி எக்சசைஸ் செஞ்ச ஒரிஜினல் பாடிதானா?ன்னு பார்க்கனும்
( நல்ல வேளை )
4. யோவ், வக்கீலு, இந்த பொண்ணு மேல கேஸை போட்டு பீசை பிடுங்குய்யா.
நான் ஒண்ணும் ஈ பி ஆபீஸ் இல்லை, பீசை பிடுங்க, காசை மட்டும் தான் பிடுங்குவேன்
5. சுனைனா - நான் இங்கே இருக்கும்போது வீடு சுண்ணாம்பு அடிச்சு வெள்ளை வெளேர்னு இருந்துச்சு, இப்போ மஞ்சள் கலர்ல இருக்கே?
ம், மஞ்சள் காமாலை நோய் வந்திருச்சு
6. ஏண்டி.. உங்கப்பன் பரம்பரைத்திருடனா? நைஸா சுட்டுட்டுப்போறானே?
7. யோவ், என்னய்யா? உன் ஃபிளாஸ் பேக் ரொம்ப பழசா இருக்கு../ ஆனா சொம்பு ரொம்ப புதுசா இருக்கு/?
அவ்ளவ் தானே, கொண்டா கிணத்துல போட்டுடறேன்
அடப்பாவி, ஆதாரத்தை சேதாரம் ஆக்கிட்டானே?
8. இது சுயநலம் நிறைஞ்ச உலகம். யாருக்கு என்ன நடந்தாலும் அதை வேடிக்கை பார்க்க மட்டும் ஆள்ங்க ரெடியா இருப்பாங்க
9. சின்ன வயசுல செத்துப்போன எல்லாருமே சரித்திரத்துல இடம் பிடிச்சவங்களாத்தான் இருக்காங்க.. உதா - பாரதியார், வாஞ்சிநாதன், விவேகானந்தர்
10. இப்படி அடுக்கு மொழில பேசிட்டுப்போறியே? நீ டி ஆரா?
பேரரசு - இல்லை. அவர் சிம்புக்கு அப்பன், நான் வம்புக்கு அப்பன் ( இந்த சீன்ல அப்பா-ன்னு வசனம் சொல்லி இருக்கலாம்)
11. நீங்க நினைக்கற மாதிரி திருத்தணி யங்க் இல்லை , சிங்க்..
அவ்வ்வ்வ்
12. இப்பவெல்லாம் இலவசம் தான் அரசியல்ல பெரிய முதலீடா இருக்கு
13. சிகப்பா இருக்கற நீ தீக்குளிச்சு என்னை மாதிரி கறுப்பா ஆக ஏன் ஆசைப்படறே?
14. இந்த உலகத்துல ரெண்டே ஜாதிதான் இருக்கு
1. தான் பட்ட கஷ்டத்தை எல்லாரும் படட்டும்னு நினைக்கற மிருக ஜாதி
2. தான் பட்ட கஷ்டத்தை வேற யாரும் படக்ல்கூடாதுன்னு நினைக்கற மனித ஜாதி
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. தான் இயக்கிய சிவகாசி படங்கள்ல இருந்து ஒரு ரீல் ஓட்டி விஜய் ரசிகர்களை குதிப்படுத்துனது. அதனால அஜித் ரசிகர்கள் ஆதரவு இல்லாம போயிடக்கூடாதுன்னு படத்துக்கு சம்பந்தமே இல்லாம அஜித்தின் மங்காத்தா பட சீன் 2 சீன் காட்னது
2. சுனைனாவை ஹீரோயினா புக் பண்ணி அவரை ஜிம்ல நல்லா திறமையை காட்டு காட்டுன்னு காட்ட வெச்சது.. டைட் டிரஸ் வேற
3. பரத்தை பஞ்ச் டயலாக்ஸ் ஜஸ்ட் ஏ ஃபோர் சீட் 4 பக்கம் மட்டும் பேச வெச்சது
4. உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக ராஜ் கிரணை தொடை காட்டாமல் நடிக்க வெச்சது, அவருக்கு ஒரு ஜீன்ஸ் பேண்ட்டை மாட்டி விட்டது
5. நீ எனக்கு நான் உனக்கு, மெலோடி சாங்க் வானவில்லே , வண்ணாரப்பேட்டை குத்துப்பாட்டு, முமைத்கான் குத்தாட்டம் என சி செண்ட்டர் ரசிகர்களை திருப்திப்படுத்தும் பாடல்கள்
இயக்குநரிடம் ஜாலியாய் சில கேள்விகள்
1. வில்லன்னா ஹீரோ கூட சண்டை போடனும், அல்லது ஹீரோயினை ரேப் பண்ண ட்ரை பண்ணனும், அதை எல்லாம் விட்டுட்டு 4 வயசுக்குழந்தை தீபாவளிக்கு விட்டுட்டு இருக்கும் நில புருஷை ( வாணம் ) காலால மிதிச்சு அது கிட்டே போய் பஞ்ச் டயலாக் பேசுனா அதுக்கு என்ன புரியும்?
2. அருகம்புல் ஜூஸ் என்பது ரத்தத்தை சுத்தீகரிக்கும், சுகர் பேஷண்ட் சாப்பிடுவாங்க, வாக்கிங்க் போறப்ப நாங்க எல்லாம் கிரவுண்ட்ல அதை பார்த்துட்டு ஒரு டம்ளர் வாங்கி குடிப்போம், ஆனா படத்துல ராஜ் கிரண் அருகம்புல் ஜூஸை ஹார்லிக்ஸ், போர்ன் விடா ரேஞ்சுக்கு உயர்த்தி சொல்றதெல்லாம் ஓவர், அதை குடிச்சுட்டு பசங்க ஓட்டப்பந்தயத்துல ஜெயிப்பதும் ஓவரோ ஓவர்
3. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் , 6 கான்ஸ்டபிளும் சேர்ந்து ஒரு கொலை பண்றாங்க. வில்லனுக்காக. அதுக்கு ஜஸ்ட் ஒரு லட்சம் தானா? ரொம்ப கம்மியா இருக்கே? இந்தக்காலத்துல சப் இன்ஸ் பெக்டரே 5 லட்சம் கேட்கறாங்க..
4. ஹீரோ அவர் பாட்டுக்கு கொலை பண்ணிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தானே? அவர் யார்னே யாருக்கும் தெரியாது. இவர் பெரிய இவரு மாதிரி ஒவ்வொரு கொலை பண்ணினதும் போலீஸ்க்கு ஃபோனை போட்டு சொல்லிட்டு இருக்காரு? ? வேற வெலைப்பொழப்பே இல்லையா?
5. யாரோ ஒரு அநாமதேயக்கால் - அதுல ஒருத்தன் ( ஹீரோ) என் பேரு திருத்தணி, நான் தான் இந்தக்கொலைகளை எல்லாம் செய்யறவன்னதும் உடனே ஏரியாவில் இருக்கும் 12 திருத்தணி பேர் உள்ள ஆட்களை அரெஸ்ட் பண்றது செம காமெடி.. டென் த் படிச்சவனுக்கு கூட அது புனை பெயர்னு தெரியும், டிகிரி படிச்ச இன்ஸ்பெக்டருக்கு தெரியாதா?
6. வில்லன்ங்க கிட்டே இருக்கற ரவுடிங்க எல்லாம் லோக்கல் கேஸ்ங்க. ஏன் வில்லனே படு லோக்கல். அவங்க என்னமோ பேங்க் கொள்ளையர்கள் மாதிரி முகமூடி எல்லாம் போட்டுட்டு வர்றதும், அதுல ஹீரோ ஊடால புகுந்து ஜாயின் ஆவதும் செம காமெடி
7. மிலிட்ரி மேன் ராஜ்கிரண் ஒரு ஆளை சுட்டு கொன்னுடறார். ஒரே ஒரு குண்டு தான் செலவு . அவன் செத்த பின்பு செத்த பாம்பை அடிக்கற மாதிரி 43 தடவை மறுபடி சுடறாரே? மிலிட்ரில இதை எல்லாம் கேட்க மாட்டாங்களா? சிக்கனமா இருக்கலையேன்னு?
8. மிலிட்ரி மேன் ராஜ்கிரண் ஒரு ஆளை கழுத்துல மிதிக்கறார். அப்போ வில்லன் அதை தடுக்க அவர் கால்ல 18 குண்டு படற மாதிரி சுடறான், அவருக்கு ஒரு கால் போயிடுது. ஒரே ஒரு குண்டை அவர் தலைலயும், டைரக்டர் பேரரசு கைலயும் சுட்டிருந்தா எத்தனை பேரு தப்பி இருப்பாங்க? ஏன் அதை செய்யலை?
9. ஒரு ஷாட்ல வில்லன் ஃபோன் பண்ணி ஹீரோவை ஒரு இடத்துக்கு வரச்சொல்றான் , உடனே ஹீரோ அங்கே போயிடறார். அதே இடத்துக்கு ராஜ் கிரண் எப்படி வந்தார்? யாரும் அவருக்கு தகவலே சொல்லலையே? அவர் என்ன சுப்ரமணியம் சாமியா?
10. யம்மா யம்மா நீ ஒத்துக்கறியா? பாட்டு அப்படியே சிவகாசி பட பாட்டான என்னாத்தை சொல்றதுங்கோ, வடு மாங்கா ஊறுதுங்கோ பாட்டின் இசை, நடன அமைப்பு எல்லாத்தையும் சுட்டு இருக்கிங்களே? ஏன்?
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்
சி.பி கமெண்ட் - வாழ்க்கையை வெறுத்தவர்கள் , சம்சாரம் கூட கோவிச்சுக்கிட்டு விரக்தி அடைஞ்சவங்க ,சுனைனா டை ஹார்டு ஃபேன்ஸ் மட்டும் பார்க்கலாம். மத்தவங்க போஸ்டரைக்கூட பார்த்துடாதீங்க. ஈரோடு ராஆஆஆயல்ல படம் பார்த்தேன்
எச்சரிக்கை 1 - டைரக்டர் பேரரசு வழக்கம் போல் ஒரு சீனில் பந்தாவாக வந்து பஞ்ச் டய்லாக் பேசிட்டு போறார், சகிக்கலை
எச்சரிக்கை 2 - இந்தப்படத்துக்கு இசையும் அண்ணன் பேரரசுதான், காது வலிக்குது
6 comments:
அண்ணே, போட்டோ மட்டும் சூப்பரா இருக்குது..
படம் பேருக்காவது பார்க்கலாம்ன்னு நினைச்சேன். வேணாமா?!
உங்க நல்ல மனசு வாழ்க!!
முடியல... படம் பார்த்து நொந்தாச்சு...
பேரரசு படம் அல்லா பார்த்து விமர்சனம் போடுறீங்க??!!! ரெம்ப தைரியம் தான் உங்களுக்கு
சென்னை பெரம்பூர் சத்யம் திறப்பு விழாவில் வந்திருந்த நடிகர் பரத்தை ,கமலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை
யாரும் கண்டுகொள்ளவில்லை என்று வெளி நடப்பு செய்தார் பாதியிலேயே ,
அதே போல நானும் பரத் படம் போடாமல் விமர்சனம் செய்ததால் சுனைனா படத்தை மட்டும் பார்த்து விட்டு விமர்சனம் படிக்காமல்
பாதியிலேயே வெளி நடப்பு செய்கிறேன்.இப்படிக்கு பாய்ஸ் பரத் ரசிகர் மன்ற நிர்வாகி .
Post a Comment