சகோதரி சின்மயி @chinmayi
அவர்களுக்கு வணக்கங்கள். உங்களுக்கு என்னை தெரியுமா என தெரியவில்லை.
இதுவரை உங்களுடன் பேசியதில்லை, அதனால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்கள்
குரலின் இனிமையை ரசிக்கும் ஒரு கடைக்கோடி ரசிகனால் வைக்கப்படும் ஒரு
வேண்டுகோளாய் நினைத்து வாசியுங்கள்.
இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று
வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும்
பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடைய நீங்கள், வெறும் ஒரு தனி
மனிதனின் குடும்பத்திற்காகவும் அந்த பச்சிளம் குழந்தையின்
புன்சிரிப்புக்காகவும் தயவு கூர்ந்து பெரிய மனதுடனும், பெருந்தன்மையுடனும்
அவர்களை மன்னித்தருள வேண்டுகிறேன். ஒரு அன்பான தாயாரால் வளர்க்கப்பட்டு,
வார்த்தைக்கு வார்த்தை அவரின் அன்பையும் அரவணைப்பையும் பற்றி புகழ்ந்து
சந்தோஷப்படும் ஒரு மகளான உங்களுக்கு நிச்சயம் இந்த பச்சிளம் பெண்
குழந்தையின் பரிதவிப்பு புரியும் என நம்புகிறேன்.
ஒரு விளையாட்டில் ஜெயித்த
நான்கு லட்ச ரூபாயை குழந்தைகள் நல அமைப்பிற்கு நன்கொடையாக கொடுக்குமளவு
நல்ல நெஞ்சம் இருக்கும் உங்களால் நிச்சயம் இன்னமும் ஒரு பிறந்தநாள் கூட
கொண்டாடாத இந்த குழந்தைக்காக மிக மிக பெருந்தன்மையும் நீங்கள் வளர்ந்த உயர்ந்த முறையையும் காட்டி
மன்னிதருளலாம். இது போல ஒவ்வொருவர் வீட்டிலும் இன்னமும் உலகத்தை அறியா
குழந்தைகள் இருக்கலாம், வயதானவர்களும் இருக்கலாம். ஒருவரின் செயலுக்காக
எல்லோரும் பாதிக்கப்பட வேண்டுமா என கொஞ்சமே கொஞ்சம் யோசியுங்கள்.
உங்களின் வார்த்தைகளின் மூலம், உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மன உளைச்சலும், பெரும் மன வருத்தமும், இறுக்கமும், கால விரயமும் புரிந்துக்கொள்ள கூடியது. உண்மையில் ஒரு சக மனிதனாக அதற்கு வெட்கமும் வேதனையும் படுகிறேன். நிச்சயமாய் அது மறக்க கூடியது இல்லை, ஆனால் உங்களை போன்ற பெருந்தன்மையான ஆளுமைகளுக்கு அது மன்னிக்க கூடியது தான். புகாரின் பேரில் இருக்கும் அந்த ஐந்து / ஆறு நபர்கள் செய்ததை நியாயப்படுத்த நான் இதனை எழுதவில்லை. அதில் எந்நாளும் எனக்கு உடன்பாடும் கிடையாது. அதில் சிலருடன் (இருவர்) பழகி இருப்பதாலும் இதனை எழுதவில்லை. ஏன், உங்களின் மனதை புண்படுத்தியதற்கு பொதுவிடத்தில் மன்னிப்பு கேட்கவும் வைக்க கூட எனக்கு தோன்றுகிறது.ஏன், ஒரு ஆணாக நானே கூட கேட்கலாம்.
நான் இந்த வேண்டுகோளை வைப்பதற்கும் எழுதுவதற்கும் காரணம், நானும் ஒரு ஒன்னரை வயது பெண் குழந்தையின் தகப்பன் என்பதால், ஒரு குழந்தையின் தேடலும் ஆசையும் விளையாட்டும் புன்சிரிப்பும் தவிப்பும் எப்படி இருக்கும் எதை நோக்கி இருக்கும் என்று அறிந்த ஒரு சக சகோதரனாய் தான் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு.
ஆனால் உங்களின்
பெருந்தன்மையால் அவர்களை மன்னித்தால், அது அவர்களை மட்டும் மன்னித்தது
இன்றி, அவர்களின் குடும்பத்தையும் காப்பாற்றிய அழியா புகழ் உங்களை வந்து
சேரும். இரண்டு நிமிடம் மட்டும் என் வேண்டுகோளுக்கு ஒதுக்கி, நல்ல முடிவை
எடுங்கள். உங்களை போன்ற படித்தவர்களுக்கு நிச்சயமாய் தெரிந்திருக்கும் '
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண / நன்னயஞ் செய்து விடல்'
( இந்த வேண்டுகோளை பற்றி விவாதிக்கவோ, பெரிது படுத்தவோ நான் விரும்பவில்லை. ஏனினில் இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பத்தையும் உரிமையையும் சார்ந்தது.மீண்டும் சொல்கிறேன், இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு. இதனை உங்கள் இருவரை ( @chinmayi / @mayavarathaan ) தவிர யாருடனும் பேசவும் விவாதிக்கவும் நானும் விரும்பவில்லை )
PS : Please dont think that am negotiating with sentiment(s), am just writing this by considering and believing you as a real peace lover. And importantly, am requesting you and not forcing you ;) Blesses and wishes ;)
சின்மயி-யின் அம்மா வின் ரிப்ளை -1
@itisprashanth @Chinmayi
பிரஷாந்த் , we never wanted this to happen. அதுனால தான் ரெண்டு வருஷம்
பொறுத்தோம். இன்னிக்கி மிருகம்னு அழைக்கிரவங்கள நான் approach செஞ்சு
as a friend ராஜன் கிட்ட அந்த குழந்தைக்காகவும் அவர் இளம்
மனைவிக்காகவும் அவரை சற்று கௌரவமாக இருக்கசொல்லுங்கன்னு கெஞ்சினேனே..
He said no body can talk to Rajan. முயற்சி கூட பண்ண ரெடியா இல்லியே.
தொட்டிலையும் ஆட்டி தொடையையும் கிள்ளுவாங்கன்னு சொல்லுவாங்க.
அந்தமாதிரி எனக்கு நேற்றைய விஷயங்கள 'அம்மா அம்மா' ன்னு கூப்பிட்டு
சொல்லிவிட்டு இன்னிக்கி நல்லவன் போல நடிக்கறதுல என்ன அர்த்தம்னு
நான் கேட்டேன்னு கேளுங்க. நல்ல ஒரு ப்ரொஜெக்டை விவரிச்சு அதுல அவர
(Rajan) ஈடுபடுத்தி மனசை மாத்தலாம்னு சொன்னேனே. அந்த விஷயத்த ராஜனுக்கு
கொண்டு போயானும் சேர்த்தாரா?
ஒங்க எல்லாரையும் விட நான் தான்
தொல்வியடைஞ்சதா நெனைக்கிறேன்.. செந்தில்cp மற்றும் சிலரை நான் அன்பால
வென்றது மாதிரி ராஜனையும் வென்றிருந்தா அது என்னோட நிஜமான
சந்தோஷமா இருந்திருக்கும் . கூடவே இருந்து இந்தநிலமைக்கி தள்ளி
விட்டது வேற யாரும் இல்ல மிருகம்னு அழைக்கிற இவரே தான் . எனக்கும்
நிறைய விஷயங்களை அம்மா அம்மான்னு கூப்பிட்டு , தன்மனிதன் போல
சொல்லிவிட்டு மனுஷாபிமான இல்லாம இந்த நெலமைக்கி ஆளாக்கினது வேற யாருமே
இல்லே இவருக்குத்தான் பெரிய்ய பங்கு .
இனப்பிச்சனை , ஸ்ரீலங்கன் பிரச்சனைன்னு பிறர் வீட்டு இளம் பெண்ணை அவதூறில் மாட்டிவைக்கிறமாதிரி திசை திருப்ப முயற்சி பண்ணற நேரத்தில ஒருமுறை அவரை நல்லதை உணர வைத்திருக்கலாமில்லையா ? யாராவது முயன்றீர்கள ? நான்குநாட்களில் ஒருவருக்கும் தோன்றவில்லையா?
Answering you Prashanth because we feel obligated to you for your stance for Chinmayi in the recent past which made you take a lot of muck. You proved a real anger of a brother when provoked on an issue of his sister. Now that the issue has gone to the police, and judiciery we all have to wait and let us not mince words or be emotional. Let the future bring change in all our minds to be a good and better humanbeings.
பரிசல்காரன் -ன் ( திருப்பூர் கே பி கிருஷ்ணகுமார்) ட்வீட்
ராஜன் கஸ்டடிக்கு போனது குறித்து மகிழ்ச்சி அடையும் மிருகங்களுக்கு ஆதிரையின் இந்தப் புன்னகையைப் பரிசளிக்கிறேன். pic.twitter.com/B2nqz7YM
ராஜனின் குழந்தை படம் பகிர்ந்தார். அந்த படம் கே டி வி கிருஷ் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டது
ராஜனின் குழந்தை படம் பகிர்ந்தார். அந்த படம் கே டி வி கிருஷ் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டது
சின்மயி-யின் அம்மா வின் ரிப்ளை -2
@selventhiran @thoatta @chinmayi
உங்களை முழுக்க முழுக்க நம்புகிறேன். நீங்கள் திருமதி ரேவதியை பற்றி
கவலைப்படாத நேரமில்லை என்பது எனக்கு தெரியும். நானும் அந்த குழதையையும்
ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு
தெரியும். உங்களிடம் நான் முதலில் பேசிய போது உங்களின் தொடர்பு ராஜனுடன்
அட்வைஸ் செய்யும் அளவில் இல்லை என்பதால் உங்கள் நண்பர் பரிசலிடம் எத்தனை
முறை வாதாடினேன். அவர் நிஜமான நண்பராக இருந்திருந்தால் எங்களுக்காக
வேண்டாம் அவர் நண்பருக்காக எடுத்துரைத்து இருக்கலாமில்லையா.
இங்கு தோட்டா
அவர்களின் முயற்சியை மதிக்கிறேன். பரிசலுக்கு எப்படி இப்படி ஒரு ....? அவர்
எனக்கும் சரி ராஜனுக்கும் சரி நம்பிக்கை துரோகம் தான் செய்திருக்கிறார்.
திருமண வயதில் பெண்ணை வைத்திருக்கும் ஒரு தாயின் மன வேதனையை நீங்களும் மற்ற
சிலரும் புரிந்து கொண்டீர்கள். இன்று தோட்டா அவர்களை retweet செய்த யாரவது
பேசி இருப்பார்களா? நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும்
எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். ?
ராஜனை உங்கள் மொழியில் உசிப்பெத்தி உசுப்பேத்தி விட்டு சற்று நேர கேளிக்கை அனுபாவித்தர்களே. அன்று சின்மயி மற்றும் அவளைப்பெற்ற நானும், நிஜமான அண்ணன் போல நீரும் மேலும் சிலரும் துடித்தோம். அதையும் கேளிக்கைப் பொருளாக்கியவர்களுக்கு இன்று ராஜனுக்காக வருத்தப்பட உரிமையில்லை. இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற இந்த குறளை மேற்கோள் காட்டி எத்தனை முறை நான் சின்மயியை சமாதானப்படுத்தினேன் என்று உங்களுக்கு தெரியும்.
நானும் சின்மயியும் இந்த கைதுகளால் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. இன்று நீங்கள் கதறும் இதே possible நிலைமையை சுட்டிக்காட்டி ராஜனை புரியவையுங்கள் என்று பரிசலிடம் கதறினேனே அன்று வீணாக இருந்துவிட்டு இன்று குழந்தையை போட்டோ பிடித்து போடலாமா? குழந்தையை வெளியில் காண்பிக்கலாமா. மீண்டும் மக்களை தூண்டிவிட்டு பிரச்னையை பெரிதாக்கும் பரிசலை வன்மையாக கண்டிக்கிறேன். திரு தோட்டாவின் செண்டிமெண்ட்சை மதிக்கிறேன்.
தினமணி செய்தி
டிஸ்கி 3 - சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்ட பிரபல ட்வீட்டர்கள் விபரம்
http://www.adrasaka.com/2012/ 10/blog-post_7456.html
http://www.adrasaka.com/2012/
7 comments:
என்ன தான் நடக்குது..?
ஒரு நல்ல படைப்பை இப்படித்தான் உபயோகிப்பார்களா?
ஒரு சுயகட்டுப்பாடு வேண்டாமா?
இனி எழுதும் போது கவனமா இருக்கனும் போல ....
இன்று
இயந்திரன் பார்ட் 2
ராஜன் லீக்ஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வலை உலக Bloggers union சார்பாக அண்ணன் கேபிள் சங்கர் மற்றும் அண்ணன் ஜாக்கி சேகர் மற்றும் சின்ன அண்ணன் சிபி செந்தில் குமார் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை விரைவில் அறிவிக்க வேண்டும். மேலும் கோட்டையை நோக்கி போராட்டம் நடத்த வேண்டும்.
I don't know the entire exchange of inappropriate tweets by a few against Chinmayi & her mother. But, having read the recent explanatory note by Chinmayi's mother, it is very clear that she has been very patient and tried through some people to stop the tweets against her daughter and herself. After this some one calls her 'animal' and tries to get public support by posting an infant's photo. It is a shame to support the mean people. Karur Jagan's letter is in the right spirit. It is essential that 'Rajanleaks' and the like shall realise the damage they have caused to themselves is entirely due to their callous attitude towards an individual and misuse of freedom of expression and their lack of knowledge that they can be caught even in the vast cyber space. Let them apologise openly in the court and assure that they have a change of heart towards a fellow human being and take an oath not to hurt others even by words. I am sure Chinmayee's mother will not press charges in such an event. - R. J.
சின்மயி கருத்து "செந்தில் CP மற்றும் சிலரை நான் அன்பால் வென்றது மாதிரி".
சிபி நீங்களும் தான் சின்மையியை சீண்டி சில ப்ளாக் போஸ்ட்கள் போட்டீர்கள்.
இப்போது தான் புரிகிறது நீங்கள் அந்த ப்ளாக் போஸ்ட்களை ஏன் எடுத்தீர்கள்
என்று. சின்மயி உங்களிடம் பேசி (அல்லது உங்களையும் போலீசில்
கம்ப்ளைன்ட் பண்ணுவேன் என்று மிரட்டி ) தன் நிலையை உணர்த்தி
இருப்பார் போல .
பிரபலங்களுக்கு பக்கபலம் போலிசோ ....என்னமோ நடக்குது ஒண்ணுமே புரியல...
Post a Comment