"வாங்க பீட்சா சாப்பிடலாம்!"
ஆர்.சரண்
பீட்சா’. தலைப்பிலேயே வித்தியாசம். 'சாஃப்ட்வேர்
வேலையா? சினிமாக் கனவா?’ என்று வந்தபோது, அமெரிக்க வாழ்க்கை - கை நிறையச்
சம்பளத்தை உதறிவிட்டு கோடம்பாக்கம் புகுந்தவர் அறிமுக இயக்குநர் கார்த்திக்
சுப்புராஜ். கலைஞர் தொலைக்காட்சியின் 'நாளைய இயக்குநர்’ குறும்படங்கள்
மூலம் கவனம் ஈர்த்தவரைச் சந்தித்தேன்.
''அதென்ன பாஸ், 'பீட்சா’னு ஒரு தலைப்பு?''
''சென்னையை மையமா வெச்சு ஒரு ரொமான்டிக் த்ரில்லர் செய்ய நினைச்சேன்.
என்னோட ஹீரோ பீட்சா டெலிவரி பாய். அவனுக்கு ஒரு அழகான காதல். எல்லாம்
நல்லபடியாப் போயிட்டு இருந்த அவன் வாழ்க்கையில் ஓர் இரவு... ஒரு சம்பவம்
நடக்குது. அது அவனோட மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போடுது. ரெண்டு மணி
நேரம் நகம் கடிக்க வைக்கிற த்ரில்லர் படம்.
'தென்மேற்குப் பருவக்காற்று’,
'நடுவுல கொஞ்சம்
பக்கத்தக் காணோம்’ படங்களோட ஹீரோ விஜய் சேதுபதிதான் என் படத்துக்கும்
ஹீரோ. சினிமாவில் ஹீரோ ஆனதுக்கு முன்னாடியே என் குறும்படங்களில் ஹீரோவா
நடிச்சவர். ஹீரோயின் ரம்யாநம்பீசன். 'அட்டக்கத்தி’ இசை அமைப்பாளர் சந்தோஷ்
நாராயணன்... அழகழகாப் பாடல்கள் பண்ணிக் கொடுத்து இருக்கார்.''
''எப்படி யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காமல் ஒரு படத்தை இயக்க முடியுது?''
''சினிமாவுக்கான ஃபார்முலா இப்போ மாறிடுச்சு. நல்ல சினிமா ரசனை
இருந்தாலே போதும். கொஞ்சம் தொழில்நுட்ப அறிவும் நல்ல ரசனை உள்ள டீமும்
அமைந்தால் யாரும் நல்ல படம் எடுக்க முடியும். ஷங்கர் சார் சொல்வார்...
'சினிமா ஒரு மேத்தமெடிக்ஸ்’னு. அந்தச் சூத்திரம் தெரிஞ்சா போதும். எதையும்,
யாரையும் பார்த்து காப்பி அடிக்காம, நம்ம வாழ்க்கையின் இனிப்பான, கசப்பான
அனுபவங்களைக் கோத் தாலே அழகான திரைக்கதை கிடைக் கும்.
என்னோட
குறும்படங்கள்ல நான் கத்துக்கிட்ட விஷயங்களை சினிமாவுல பண்ணி இருக்கேன். 14
குறும்படங்கள் எடுத்து இருக்கேன். 'யூ டியூப்’ல் நான் அப்லோட் பண்ணின
முதல் குறும்படத்துக்கு 'இதெல்லாம் படமாடா?’னு கமென்ட் வந்தது. ஆனால்,
கடைசியாக எடுத்த குறும்படம் லட்சக்கணக்கில் ஹிட்ஸ் அள்ளுது.''
'' 'நாளைய இயக்குநர்’ முதல் இன்றைய இயக்குநர் வரை - கதை சொல்லுங்களேன்?''
''நான் மதுரைப் பையன். பள்ளியில் படிக்கும் போதே நாடகம், கலை விழான்னு
திரிஞ்சிட்டு இருப்பேன். குறும்படப் பட்டறைகளில் முதல் ஆளாக ஆஜர்
ஆகிடுவேன். அப்புறம் 'மெக்கட் ரானிக்ஸ்’ படிச்சிட்டு அமெரிக்காவில்
செட்டில் ஆகிட்டேன். ஆனாலும், மனசு மட்டும் டிராமா, குறும்படம்னு
குறுகுறுத்துட்டே இருந்துச்சு. அமெரிக்காவில் 'லாஸ்ட் ட்ரெய்ன்’ என்ற
குறும்படம் எடுத்தேன். நல்ல வரவேற்பு கிடைச்சது. தொடர்ந்து நிறையக்
குறும்படங்களை எடுத்து 'யூ டியூப்’ல அப்லோட் செஞ்சேன். அது எனக்கு நல்ல
களமா அமைஞ்சது.
அப்படி அமெரிக்காவில் நான் எடுத்த ஒரு குறும்படத் தைத்தான் 'நாளைய
இயக்குநர்’ நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். தேர்வாகி அழைப்பு வந்தப்ப, வேலை
விஷயமா நான் ஃபிரான்சில் இருந்தேன். வாழ்க்கையின் முக்கியமான கட்டம் அது.
'சினிமாவா, வேலையா?’னு யோசிக்கவே இல்லை. மூட்டை முடிச்சுகளைக் கட்டிட்டு
சென்னைக்கு வந்துட்டேன்.
'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் என்னோட 'துரு’,
'நீர்’ படங்கள் பயங்கர அப்ளாஸ் அள்ளியது. 'நீர்’ இரண்டாம் இடத்தைத்
தட்டியது. ராமேஸ்வரம் மீனவர் பிரச்னையை மையமா வெச்சு எடுத்த அந்தக்
குறும்படத்தைப் பார்த்துட்டு, பல தயாரிப்பாளர்கள் கதை கேட்டாங்க. அந்த
உற்சாகத்தில்தான் 'அட்டகத்தி’ படத்தைத் தயாரிச்ச திருக்குமரனிடம்
ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்தேன். உடனே ஓ.கே. சொல்லி ஷூட்டிங் கிளம்பியாச்சு.
வாங்க பீட்சா சாப்பிடலாம்!''
நன்றி - விகடன்
அழகும், அம்சமும் நிறைந்த நடிகை. இதுவரை நடித்ததும் நல்லப் படங்கள் தான்
என்றாலும், நடிகை ரம்யா நம்பீசனுக்கு கோடம்பாக்கம் கொடுத்திருக்கும்
அடையாளம் ராசியில்லா நடிகை என்பதுதான். இந்த அடையாளத்தை வைத்துகொண்டு
கோடம்பாக்கத்தில் எப்படியாவது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடிக்க
வேண்டும் என்ற ரம்யாவின் பசிக்கு கிடைத்திருக்கிறது 'பீட்சா'.
"மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தும், தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நான் இன்னும் பிடிக்க வில்லை. 'பீட்சா' படம் வெளியானப் பிறகு கோடம்பாக்கத்தில் எனக்கும் ஒரு அந்தஸ்து கிடைக்கும்." என்று ரம்யா நம்பீசன் கூறினார். அவர் கூறியது உண்மைதான் என்று உணர்த்தியது இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டில் திரையிடப்பட்ட பாடல்களும், டிரைலரும். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பாடல் காட்சியில் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியுடன் மிக நெருக்கமாக நடித்திருக்கிறார் ரம்யா நம்பீசன்.
இந்த நெருக்கமான நடிப்பு தான் தன்னை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாரோ என்னவோ!. ஏன் இப்படி நடித்தீர்கள்? என்று கேட்டால், "கதைக்கு தேவைப்பட்டது அதனால் தான் இப்படி நெருக்கமாக நடித்தோம். படத்தைப் பார்த்தால் உங்களுக்கே அது புரியும்." என்கிறார் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி.
இது ஒரு திரில்லரான காதல் கதையாம்.பீட்சா டெலிவரி பண்ணுவதற்காக ஹீரோ ஒரு வீட்டிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதை. இப்படத்தை இயக்கியிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ் என்ற புதுமுகம். இவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாதவர். குறும்படங்கள் இயக்கி தனது திறமையை நிரூபித்து இந்த படத்தின் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
அது என்ன 'பீட்சா' எங்கே போனது தமிழ்? என்று இயக்குநரிடம் கேட்டால், "பீட்சா என்பது இத்தாலி நாட்டு பிரபலமான ஒரு உணவு. அங்கே அந்த உணவை அழைப்பது போலதான் இங்கேயும் அழைக்கிறார்கள். நமது தோசையை ஆங்கிலத்திலும் தோசா என்று தான் சொல்லுவர்கள். அதுபோல தான் இதுவும் பீட்சா என்பது ஒரு உணவின் பெயர் தான். அதனால் இதை தமிழக அரசு ஏற்றுகொள்ளும் என்று நம்புகிறோம். இந்த தலைப்பும் எங்கள் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் வைத்துவிட்டோம். என்று விளக்கம் அளித்தார்.

நன்றி - சென்னை ஆன் லைன்
diSki -பீட்சா - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க
http://www.adrasaka.com/2012/ 10/blog-post_1749.html
diSki -பீட்சா - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க
http://www.adrasaka.com/2012/
0 comments:
Post a Comment