ஹீரோ ஒரு பீட்சா ஷாப்ல டெலிவரி மேன்.அவனுக்கு ஒரு லிவ்விங்க் டுகெதர் லைஃப் பார்ட்னர்.மேரேஜ் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துறா. ஆனா லைஃப்ல செட்டில் ஆன பின்னாடி பண்ணிக்கலாம்னு சொல்லி மேட்டர் எல்லாம் முடிச்சு கரு தங்கிடுது.ரொம்ப வற்புறுத்துன பின் மேரேஜ்க்கு ஓக்கே சொல்றான்.
பீட்சா கடை ஓனர் வீட்டுக்கு ஒரு டைம் இவன் போனப்போ அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் , அது பேய் பிடிச்ச மாதிரி இருப்பதும் ( மே பி மன நலம் குன்றி ) தெரிய வருது.இந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேன்னு ஓனர் சொல்றார்.
அடுத்த நாளே அவன் வாழ்க்கைல ஒரு திருப்பம். பீட்சா டெலிவரி பண்ண வந்த இடத்துல ஒரு வீட்ல மாட்டிக்கறான்.வீட்ல இருந்த ஒரே ஒரு லேடி கொலை செய்யப்பட்டு இருக்கா. உடனே ஹீரோ வெளில வர பார்க்கறான். முடில . லாக்டு. கொலை செய்யப்பட்ட லேடியோட கணவர் வீட்டுக்கு வெளில வாசல்ல நின்னு கால் பண்றான். ஹீரோ எடுத்து பேசறார்.கணவர் ஹீரோவை நம்பலை.ஹீரோ தான் அவளை கொலை பண்ணி இருக்கனும்கறார்.
அடுத்த திருப்பம். அந்த ஆளும் செத்து கிடக்கறான்.. அந்த வழியா ரோந்து போன போலீஸ் 2 பேரு வர்றாங்க. இந்த வீட்ல ஒரு வாரமா போலீஸ் சீல் வெச்சிருக்கு. 4 கொலை நடந்த இடம் ஆச்சேங்கறாங்க.. ஹீரோ மேல சந்தேகப்பட்டு விசாரிக்கறாங்க . அவங்க கிட்டே இருந்து தப்பி வந்துடறான் ஹீரோ. அந்த 2 போலீஸும் அந்த பங்களாவுலயே மாட்டிக்கறாங்க..
அடுத்த திருப்பம்.ஹீரோயினை காணோம்.ஹீரோ தான் கொலை பண்ணிட்டாரா? அல்லது குடைக்குள் மழை ஆர் பார்த்திபன் மாதிரி அப்படி ஒரு கேரக்டரே இல்லையோ என சந்தேகப்பட வைக்குது ஹீரோவின் நடவடிக்கைகள்.ஏன்னா ஹீரோவைத்தவிர வேற யாரும் ஹீரோயினை பார்த்ததில்லை . ஹீரோவோட ஃபிரண்ட்சோ, ஓனரோ பார்த்ததில்லை.
என்ன தான் நடந்துச்சு என்பதை அட்டகாசமான திரைக்கதை உத்தி மூலம் சொல்லி இருக்காரு இயக்குநர்.இந்தப்படத்துல யூகிக்க முடியாத பட்டாசான ட்விஸ்ட்ஸ் 2 இருக்கு. அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்.
ஹீரோவா நடிச்சவர் விஜய்சேதுபதி ஆல்ரெடி தென் மேற்குப்பருவக்காற்று படத்துல நடிச்ச ஹீரோதான். பயம், திகில் , கோபம், இயலாமை என நவ ரசங்களையும் காட்ட வாய்ப்பு. நல்ல நடிப்பு. சபாஷ்..
ஹீரோயின் ரம்யா நம்பீசன்.இவரைப்பற்றி வர்ணிக்க டைம் இல்லை.ஏன்னா இது ரொமான்ஸ் படம் இல்லை.. க்ரைம் த்ரில்லர் படம்.இவரை வர்ணிச்சுட்டு இருந்தா இயக்குநரை பாராட்ட டைம் இல்லாம போயிடும்.. ஆனாலும் இவரது டைட் டிரஸ் பார்க்கற ஆடியன்சை லூஸ் ஆக்கும் அளவு கிண்ணுனு இருக்கு..
மாலைப்பொழுதின் மயக்கத்திலே படத்துல வந்த காபி ஷாப் பேரர் இதுலயும் வர்றார். இவர் ஆல்ரெடி பல குறும்படங்கள்ல நடிச்சவர். இவர் நடிப்பும் நல்லாருக்கு. குறிப்பா பீட்சா கடை ஓனர் பொண்ணு ஹீரோவை பேய் மாதிரி ஒரு லுக் விடும்போது பேய் நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட முதுகுத்தண்டு சிலிர்க்கும் அளவுக்கு அவர் பார்வை.. அபாரம்
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. சினி ஃபீல்டில் அதிக அனுபவம் உள்ள பெரிய பெரிய ஜாம்பவான்களே தட்டுத்தடுமாறி கரை சேரும் கோடம்பாக்கத்தில் அசால்ட்டாக டைவ் அடிச்சு கரை தொட்டு இருக்கார். முதல்ல அவருக்கு ஒரு பூச்செண்டு. அபாரமான திரைக்கதை. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சபாஷ் ரகம்.கார்த்திக் சுப்புராஜ்க்கு தயாரிப்பாளர் ஒரு கார் வாங்கித்தருவது உறுதி
2. படத்தில் ஒரு 37 நிமிடங்கள் வெறும் டார்ச் லைட் வெளிச்சம் மட்டுமே உபயோகித்து ஹீரோ இருட்டு வீட்டில் உலவும், பரிதவிக்கும் இடங்கள் பட்டாசு பட்டாசு. சபாஷ் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். அது போக ஹீரோயினை அழகாகக்காட்டுவது, பேய்ப்படங்களுக்கான டெம்போவை ஏற்றுவது ,எல்லா விதத்திலும் சபாஷ்
3. ஒரு திகில் படத்துக்கு பின்னணி இசை எந்த அளவு முக்கியம் என்பதை ஆல்ரெடி இளையராஜா நூறாவது நாள் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.அதை வழி மொழிந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசை மிரட்டுது.
4. எடிட்டிங்க் பக்கா.படம் ரெண்டே கால் மணி நேரம் ஓடுவதில் முதல் 17 நிமிடங்கள் மட்டும் தான் 40 கி மீ வேகம். பின் எல்லாம் 90 கி மீ வேகம்.. எடிட்டிங்க் முக்கிய பங்கு
மனம் கவர்ந்த வசனங்கள்
1. ஒவ்வொருவருக்கும் ஒரு வீக்னெஸ் உண்டு.சிலருக்கு பணம்.சிலருக்கு பொண்ணுங்க.அந்த வீக்னெசை நாம யூஸ் பண்ணிக்கனும்
2. டைமுக்கு கிடைக்காத எதுவுமே வேஸ்ட் தான்
3. எவ்ளவோ ஜாக்கிரதையா இருந்தும் எங்கேயோ தப்பு நடந்துடுச்சு.அதுக்காக
கலைக்கவெல்லாம் முடியாது.
ஓஹோ,அப்போ காண்டம் கம்பெனி மேல கேஸ் போட்றலாமா?
4. அமானுஷ்யமான விஷயங்களை நேர்ல பார்ப்பதை விட அடுத்தவங்க வாயால கதையா கேட்கும்போதுதான் த்ரில் அதிகம்
5. ஒவ்வொருவர் அவநம்பிக்கையும் நம்பிக்கையா மாறும் MOMENT அவங்க வாழ்க்கைல வரும்
6. டைவர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏறுபவர்கள்ல முக்காவாசிப்பேர் பணக்காரங்கதான்
7. நான் எதுலயாச்சும் கேர்லெஸ்ஸா இருந்ததை நீ பார்த்திருக்கியா..?
நான் பிரெக்னெட்டா இருக்கேன்..
7. நான் எதுலயாச்சும் கேர்லெஸ்ஸா இருந்ததை நீ பார்த்திருக்கியா..?
நான் பிரெக்னெட்டா இருக்கேன்..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஹீரோயின் ஹீரோ 2 பேரும் லிவ்விங்க் டுகெதரா ஒரே வீட்ல 4 வருஷங்களா இருக்காங்க. மேட்டர் முடிஞ்சுடுது, குழந்தை கரு உருவானதும் ஹீரோயின் ஹீரோவை மேரேஜ்க்கு கம்ப்பெல் பண்றா. அப்போ ஹீரோ நாம 2 பேர் சம்பாதிக்கறது நமக்கே சரியா இருக்கு. இதுல கல்யாணம் குழந்தை எல்லாம் எதுக்கு? அப்டிங்கறார். அப்போ உடனே ஹீரோயின் என்ன கேட்கனும்? ஏய்யா. மேட்டருக்கு மட்டும் நான் வேணுமா? இனி பெட் ரூம் பக்கம் வந்துடாதேன்னு அடி மடில கை வைக்க வேணாம்? அதை விட்டுட்டு இனிமே உன் பேண்ட் சர்ட்டை துவைக்க மாட்டேன்னு மிரட்டுது. இதுதான் ஒரு பொண்ணோட மிரட்டல் பாணியா?
2. அதுக்குப்பின் ஹீரோ ஒத்துக்கறார். ஆனா ஊரறிய வேணாம் . இப்போதைக்கு இந்த வீட்ல நம்ம 2 பேருக்கு மட்டும் தெரியற மாதிரி பண்ணிக்குவோம்னு ஒரே ஒரு மோதிரத்தை மோதிர விரல்ல மாட்டி விடறான். உடனே அந்த பேக்கு ஹீரோயின் கெக்கேக்கே பிக்கேக்கேக்கேன்னு சிரிக்குது. பதிவுத்திருமணம் பண்ண என்ன செலவு ஆகிடும்? அட்லீஸ்ட் சாட்சிகள் 2 பேராவது இருக்க வேணாமா? இப்படி வீட்டுக்குள்ளேயே மேரேஜ் பண்ணிக்கவா அத்தனை ஆர்ப்பாட்டங்கள் ?
3. பீட்சா கடை ஓனர் ஒரு கவரை குடுத்து தன் வீட்ல அதை குடுத்துட்டு வான்னு சொல்றார். ஹீரோ அங்கே போனதும் பேய் பிடிச்ச குழந்தையை பார்த்துடறார். உடனே ஓனர் தன் வேலையாள்னு பார்க்காம அவன் கிட்டே பம்மறார். இந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேன்னு. நான் ஓனரா இருந்திருந்தா வேலையாளை வீட்டுக்கே அனுப்பி இருக்க மாட்டேன். அல்லது மனைவிக்கு ஃபோன் பண்ணி இப்போ நம்ம வேலையாள் வர்றான். நீ கேட்டுக்கு வெளில நின்னு கவரை வாங்கிக்க. உள்ளே வந்தா நம்ம பொண்ணு மேட்டர் அவனுக்கு தெரிஞ்சுடும்னு சொல்லி எச்சரிச்சிருப்பேன்.
4. ஹீரோவோட ஃபோன்ல செல் அவுட் கோயிங்க் போகலை, அதனால கால் பண்ண முடியலைன்னு ஓனர் கிட்டே சொல்றார். அந்த லேடியோட ஃபோன் இருக்கு. செல் ஃபோன் இருக்கு. அதுல இருந்து ஏன் கூப்பிடலை?ன்னு ஓனர் கேட்கவே இல்லையே?
5. பீட்சா கடை ஓனர் பேய் ஓட்டுபவர் அல்லது மந்திரவாதியை நம்பறார், ஆலோசனை கேட்கறார் , ஓக்கே ஆனா மன நல நிபுணரை ஏன் கலந்து ஆலோசிக்கலை. ? ஏன்னா ஒரு பெண் குழந்தையோட அப்பா தன் குழந்தை குணம் ஆகனும்னா சாத்தியமான எல்லா வழிகளையும் முயற்சி பண்ணி பார்ப்பார், உதாரணமா கடவுள் நம்பிக்கை பேய் நம்பிக்கை இல்லதவங்க கூட தன் பெண் குழந்தைக்கு ஒரு ஆபத்துன்னா தாயத்தா? சரி கட்டித்தான் பார்ப்பமேன்னு நினைப்பான். அதே போல மன நல சிகிச்சை பற்றியும் சிந்திச்சிருக்கனும்..
6. இந்தக்காலத்துல ஆளாளுக்கு டபுள் சிம் ( டூயல் சிம் ) ஃபோன் வெச்சிருக்காங்க. அல்லது 2 செல் ஃபோன் வெச்சிருக்காங்க.. அப்படி இருக்கும்போது 2 கோடி ரூபா அபேஸ் பண்ணும் மேட்டரில் ஒருவர் தன் செல் ஃபோனை கழட்டி சிம்மை மாற்றி பேசிட்டு மீண்டும் பழைய சிம்மை பொருத்துவதும் அந்த இடைப்பட்ட கால அளவில் யாராவது கூப்பிட்டா தன் சதி தெரியும் என பயப்படுவதும் ஏத்துக்கவே முடியலை.. அட்லீஸ்ட் ஒரு பேசிக் மாடல் ஃபோன் கூடவா எக்ஸ்ட்ரா வெச்சுக்க மாட்டான்?
7. பீட்சா கடைல 3 பேர் வேலை செய்யறாங்க. ஒண்ணா சரக்கு அடிக்கறாங்க.ஆனா ஹீரோ மனைவியை யாருமே பார்த்ததில்லை என்பதும், பீட்சா கடை ஓனரும் பார்த்ததில்லை என்பதும் நம்ப முடியலை. இப்போவெல்லாம் கடை ஓனர்ங்க ஃபுல் டீட்டெயில்ஸ் தெரியாம வேலையே தர மாட்டாங்க.. 3 வருசமா ஒர்க் பண்ற ஆளை பற்றிய விபரம் தெரிஞ்சுக்காமயா இருப்பார்?
8. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் தான். ஆனா அது ஹாலிவுட் திகில் படங்களுக்கு சரி.. இந்த க்ரைம் படத்துக்கு அந்த ஆவி ட்விஸ்ட் தேவை இல்லை,. இதை ஒரு பகுத்தறிவுப்படமாவே முடிச்சிருக்கலாம்
9. அந்த பங்களாவுல கரண்ட் போனதும் மெழுகுவர்த்தி பத்த வைக்கறாங்க. இந்தக்காலத்துல ஏழைங்க கூட எமர்ஜென்சி லைட் வெச்சிருக்காங்க. மிடில் கிளாஸ் ஃபேமிலி கூட யூ பி எஸ் யூசிங்க் .. ஹீரோ அந்த கதையை சொல்லும்போது யாரும் இது பற்றி பேசலையே?
9. அந்த பங்களாவுல கரண்ட் போனதும் மெழுகுவர்த்தி பத்த வைக்கறாங்க. இந்தக்காலத்துல ஏழைங்க கூட எமர்ஜென்சி லைட் வெச்சிருக்காங்க. மிடில் கிளாஸ் ஃபேமிலி கூட யூ பி எஸ் யூசிங்க் .. ஹீரோ அந்த கதையை சொல்லும்போது யாரும் இது பற்றி பேசலையே?
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று
சி.பி கமெண்ட் - வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் -அபாரமான திரைக்கதை உத்தி,க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் ,சபாஷ் படம், புதுமையான கதையை விரும்பும் அனைத்துத்தரப்பும் பார்க்கலாம் ஹீரோ பின்னால் ஓடாமல் திரைக்கதை அமைக்கத்தெரிந்தால் ஒரு சாதா படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்பதற்கு இது ஒரு உதாரணம்
டிஸ்கி - மனம் கவர்ந்த வசனங்களில் சஸ்பென்ஸை உடைக்கும் சில வசனங்களை போடலை. படம் பார்த்துட்டு பின் மீண்டும் இந்த வசனங்களில் ஒரு பார்வை ஓட்டுனா இயக்குநர் எப்படி இந்த வசனத்துலேயே ட்விஸ்ட் இருக்குன்னு சொல்லாம சொல்றார் என்பது புரியும்.. ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்
இப்படத்தின் இயக்குநர் பேட்டி படிக்க
http://www.adrasaka.com/2012/ 10/blog-post_2147.html
டிஸ்கி - ராசிபுரம் நண்பர் ஒருவர் ( ட்விட்டர் srinivasan @elsrini ) ஃபோன் பண்ணி சொன்ன லாஜிக் மிஸ்டேக் - ஹீரோ பீட்சாவை எந்த கடைக்கு டெலிவரி பண்ணனும் என்று கொடுக்கப்பட்ட அட்ரஸ்க்கு போகாமல் ஏன் அந்த பேய் வீட்டுக்கு ராங்க் எண்ட்ரி கொடுத்தார்? என பீட்சா கடை ஓனர் கேட்கவே இல்லையே? அது ஏன்? ( நிஜமாலுமே இது சூப்பரான கேள்வி, எனக்கு தோணலை.. சி பி.. நீ இன்னும் வளரனும்)
டிஸ்கி - ராசிபுரம் நண்பர் ஒருவர் ( ட்விட்டர் srinivasan
11 comments:
மேலை நாடுகளின் பீசா தயாரிப்பில் மூலப் பொருளாக உதவுவது "தலைமுடி"
- திருசெந்தூரில் கிடைத்த தகவல் சில வருடங்களுக்கு முன் !
ok.தல.அப்ப தைரியமா போய் படம் பார்க்கலாம்
இனிமே தான் படம் பார்க்க வேண்டும். அப்போது நீங்கள் சொன்ன விடயங்கள் ஆர்வத்துடன் முன்னே வந்து நிற்கும் . மனம் கவர்ந்த வசனங்கள் நன்றாகப் பிடித்திருந்தது . அதை நன்றாக கவனித்துத் தந்தமைக்கு மிக்க நன்றி. ஒருதிரைப்படம் எடுப்பது சிறிய வேலை அல்ல.நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும் இல்லையா
ஒ கே படத்தை பார்த்துடுவோம்...
இந்த மாதிரியெல்லாம் லூசு கூபே மாதிரி பதிவெழுத உங்களால மட்டும்தான் முடியும்... தொடரட்டும் உம் பணி...
Hi Senthil,
Very good comments... Thank u.
Direct is my friend's friend :)
சண்டிகா என்று ஒரு தியேட்டர் பேரா?
சன்பென்ஸ் உடைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அப்புறம் எதுக்கு அந்த 6- வது கேள்வி. அதான் படத்தின் மொத்த சஸ்பென்சையும் உடைத்து விட்டதே..நல்லவேளையாக இப்படி ஏதாவது அதிமேதாவித்தனத்தை காட்டுவீர் என்று தெரிந்துதான் முதலிலேயே உங்கள் விமர்சனத்தை படிக்காமல் படம் பார்த்த பின் படிக்கிறேன்.
சன்பென்ஸ் உடைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அப்புறம் எதுக்கு அந்த 6- வது கேள்வி. அதான் படத்தின் மொத்த சஸ்பென்சையும் உடைத்து விட்டதே..நல்லவேளையாக இப்படி ஏதாவது அதிமேதாவித்தனத்தை காட்டுவீர் என்று தெரிந்துதான் முதலிலேயே உங்கள் விமர்சனத்தை படிக்காமல் படம் பார்த்த பின் படிக்கிறேன்.
Your way of noticing logic mistakes is idiotic...you are a person if sub normal intelligence....
logic mistakes mentioned here are idiotic..always kelvi kekuratha nenachu alpai ya kekureenga
Post a Comment