Saturday, October 20, 2012

ராசிபுரம் - குணா - அபிராமி அபிராமி -திருமண விழாக்கொண்டாட்டங்கள்

 வீட்டுக்கு பக்கத்துல ஒரு பர்லாங்க் தூரத்துல இருக்கற சலூன்க்கோ, டீக்கடைக்கோ பேப்பர் படிக்கனும்னாக்கூட  கார்லயே போகும்  மதுரை டாக்டர் ரியாஸ்  நம்ம குணா மேரேஜ்க்கு கார்ல வராம  பஸ்ல வந்ததே இந்த நிகழ்ச்சியின் முதல் அதிர்ச்சி.( அதுல ஒரு ரகசியம், அது பின்னால ) வந்தவர் எனக்கு எஸ் எம் எஸ் ல சொன்ன தகவல் படி நைட் குணா மேரேஜ் முடிச்சுட்டு அதிகாலை  2 மணிக்கு ஈரோடு ரயில் ஏறி  மதுரை போய் பறவை மேரேஜ்க்கு போயிடலாம்னு பிளான் சொன்னாரு. நானும் ஓக்கேன்னேன். 


 அவரு ராசிபுரம்  6 மணிக்கு போய்ட்டாரு. நான்  6.30 மணிக்குத்தான் கிளம்பினேன். 8.30 மணிக்கு ராசிபுரம் போனேன். நல்ல வேளை ரியாஸ்  பழைய பஸ் ஸ்டேண்ட்ல இறங்கிக்குங்க. அங்கே இருந்து வாக்கபிள் டிஸ்டேன்ஸ் தான் அப்டின்னார்.


மண்டப வாசல்லயே  மாப்ளை குணா நின்று வரவேற்றார். நல்ல வேளை. ஏன்னா எனக்கு அவர் குடும்பத்துல யாரையும் தெரியாது. தம்பி .. நீ மாப்ளை வீட்டு சொந்தமா? பொண்ணு வீட்டு சொந்தமா?ன்னு யாராவது கேட்டா உளறி இருப்பேன்.மண்டபத்துல ரியாஸ்,கவிதை கருப்பு , புத்தக டிராகன் சாரி புத்தகப்புழு வினோத், உட்பட பெரிய கேங்கே நின்னுட்டு இருந்தாங்க. குணா ஏதும் பேச விடாம பந்தில போய் உக்காந்து சாப்பிட சொன்னார்.


 பின்னாலயே 12 பேரும் வந்தாங்க. யாரும் சாப்பிடலை. ஆல்ரெடி சாப்டாச்சாம். என்னமோ கரகாட்டக்காரியை வேடிக்கை பார்க்கற மாதிரி பார்த்தா எப்படி ஃபுல்லா சாப்பிட முடியும்? அதனால 20 நிமிஷத்துல டின்னரை முடிச்சுட்டு ஹோட்டல் போனோம். 


 கல்யாண் ரெசிடென்சி. பாருங்க மேட்சுக்கு மேட்ச் . கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு  கல்யாண் ரெசிடென்சியே.. காது குத்துக்கு வந்தா திருப்பதி தேவஸ்தானத்துல தங்க வெச்சிருப்பார் போல.. அங்கே  போனா  மொத்தம் 16 ரூம் . ஒவ்வொரு ரூம்லயும் தலா 2 பேர். ஆக மொத்தம்  32 பேர். பார்த்தீங்களா? பி எஸ் ஸி மேத்ஸ் என்பதால் சரியா கணக்கு போட்டுட்டேன். 


 எல்லாம் குய்யோ முறையோன்னு கத்திக்கிட்டு இருந்தாங்க.. ஒரே ஜாலி தான் , கலாட்டாதான் , கொண்டாட்டம் தான். வந்தவங்க முக்காவாசிப்பேரு சரக்கு அடிச்சுட்டு இருந்தாங்க . யார் யார் பேரு எல்லாம் போட்டா பிரச்சனை வரும். எதுக்கு வம்பு? 

திருச்சியில் இருந்து வந்த சின்னப்பையன் எனும் கப்பல் கேப்டன் ( நிஜமான மிலிட்ரி) , ஹாரி கவுதம்  இன்னும் சாப்பிடலைன்னு சொன்னதால மறுபடி மண்டபம் போனோம் நம்ம வில்லன் கார்ல . திரும்பி வந்து ரூம்ல படுக்கும்போது மணி 11.30 ஆகிடுச்சு.


மிஸஸ் ரியாஸ் ஃபோன்ல பேசுனாங்க. பக்கத்துலயே ரியாஸ் இருந்தார்.அவங்க கிட்டே மேரேஜ்க்கு வர்றியா? இல்லையான்னே கேட்காம இவர் வந்திருக்கார் போல.. தனியாதான் வந்திருக்காரா?ன்னு ஒரு தடவைக்கு  2 தடவை கேட்டுக்கிட்டார். ரியாஸ் பக்கத்துலயே நின்னுட்டு இருந்ததால “ ஆமாங்க மேடம்”னு சுருக்கமா சொல்லி ஃபோனை வெச்சுட்டேன்.  அவர் கிளம்பிட்டாரு.

 அண்ணே ஒரு விளம்பரம் நைட் 12 மணிக்கு செம  மப்புல வந்து ரூம் கதவை தட்டி ஒரே ராவடி.. 1 மணிக்கு தூங்குனோம். 4 மணிக்கு எந்திரிச்சு  குளிச்சு ரெடி ஆகி 4.30 மணிக்கு மண்டபம போயாச்சு./. நானும் சின்னபையன் அண்ணனும். 


 அங்கே போனதும் செம காமெடி.. மண்டபத்துல டோட்டலாவே 24 பேர் தான் இருந்தாங்க . என்னை விட அண்ணன் தான் ஜெர்க் ஆகி குணா கிட்டே என்னப்பா? முகூர்த்தம் கரெக்ட் டைம் தானா?ன்னு கேட்க அவர் அசால்ட்டா லேட் ஆகிடும்னு நினைக்கறேன்னார்.

 அப்பவே கறுப்புக்கு ஃபோனை போட்டு 6 மணிக்கு வந்தா போதும். எப்படியும் மேரேஜ் 7 மணிக்குத்தான்னு தகவல் சொல்லியாச்சு.இந்த இடத்துல கருப்பு பற்றி சொல்லியே ஆகனும். மனுஷன் நைட் பூரா தூங்கவே இல்லை. வந்தவங்களை கவனிக்கறது, தங்க வைக்கறதுன்னு செம பிசி. மற்ற டைமுலும் தூங்காம கவிதை ட்விட்ஸா போட்டு கொலையா கொல்வார்னாலும் இன்னைக்கு அவர் குணாவுக்காக  விழிச்சிருந்தது ஹாட்ஸ் ஆஃப் ( நோ நோ அந்த ஆஃப் அல்ல) 



மண விழாவில் மனம் கவர்ந்தவை



1. பொண்ணு வீட்டில் சீர் செய்யும்போது  10 ரூபாய் நோட்டு மாலை 6 தனித்தனி மாலை ஒவ்வொன்றிலும் 101 நோட்டுகள். அதை சொந்தக்காரங்க அவர் கழுத்தில் போடும் நிகழ்ச்சி வித்தியாசமாக இருந்தது. பொதுவா வட நாட்டில் சேட்டுகள் குடும்பத்தில் தான் இந்த சாங்கியம் இருக்கும். 



2. மண்டபம் பெரிய  அளவில் இருந்தது. பந்தி மாறும்போது இட நெருக்கடியே வர்லை.. ரொம்ப தளவுசா ( தாரளமா , சுலபமா ) இருந்தது. அனைவரையும் நன்றாக உபசரித்தாங்க



3. பொதுவா  முஹூர்த்தப்பட்டுப்புடவை ரத்தச்சிவப்பு , அல்லது  பச்சை நிறம் தான் எடுபடும். ஃபோட்டோக்கள் , வீடியோவுக்கும்  கலர் ஃபுல்லாக இருக்கும்.


4. இந்த மாதிரி கல்யாண டைம்ல எப்பவும் அசடு வழியும் பசங்க கூட மாப்ளை முறுக்கு எனும் கெத்தை நல்லா காட்டுவாங்க..  மனதளவில் எப்படியோ, வெளியே  குணா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கறது மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டார். நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க என்ற எச்சரிக்கைத்தன்மை அவர் முகத்துல தெரிஞ்சது. 



5. மணப்பெண்ணுக்கு தோழியே இல்லை. இது குணாவின் திட்ட மிட்ட சதியா? என்பது குறித்து விசாரணை நடந்துட்டு இருக்கு 


6. மாப்ளை வீட்டு சார்பா மொய் எழுத மாப்ளையின் தம்பி நோட்டுடன் அமர்ந்தார். அவர் பல சிக்கலான சூழலையும் லாவகமாக கையாண்டு பொறுமையாக அனைவர் மொய்யையும் வசூலிச்சார். 


7. கோயில்ல  ஆல்ரெடி  6 ஜோடி மேரேஜ்க்கு வந்ததால் ஏகப்பட்ட கூட்டம்.. உள்ளே போகவே முடியலை.. ஆக மொத்தம் அன்னைக்கு மட்டும் 7 ஜோடிக்கு மேரேஜ்

8. வீடியோகிராஃபர், ஃபோட்டோகிராஃபர் எல்லாரும் செம கடுப்பாகிட்டாங்க. ஏன்னா நம்மாளுங்க 22 பேர் ஆஜர், எல்லாரும் செல் ஃபோன்ல ஃபோட்டோ பிடிக்க குறுக்க நின்னா? என்ன பண்ணுவாங்க. பாவம்



9. ரிசப்ஷன்க்கு வந்து மாப்ளை, பொண்ணு வந்து நின்னதும் மாப்ளைத்தோழனாக இருந்த அண்ணே ! ஒரு விளம்பரம் மேடையில் தரப்பட்ட மொய்ப்பணத்தை வாங்கும்போதே மாப்ளையின் அப்பா ஓடி வந்து யார் யார் எவ்வளவு பணம் என்பதை குறித்து வைக்கச்சொன்னார். அவ்வளவு ரஷ்லயும் அவர் ஞாபகமா அதை சொன்னது குட். ஏன்னா யூத்ங்க விளையாட்டா குறிக்காம பணத்தை. மட்டும் பத்திரமா வெச்சு யூஸ் இல்லை. யார் யார் மொய் வெச்சாங்கன்னு தெரிஞ்சாத்தான் பதில் மொய் மறுபடியும் வைக்க முடியும்..


10. மத்தளக்காரர்கள், நாதஸ்வரம் ஊதுபவர்கள்  மற்றும் பாண்டு வாத்திய கோஷ்டி நன்றாக பணி ஆற்றினாலும் பல முறை யாராவது கூப்பிட்ட பின் தான் வந்தாங்க.. அவங்களுக்கு ஒரு டீம் லீடர் இல்லை.. பெண் அழைப்பு , பெண் சீர் செய்யும்போதெல்லாம் அவங்க வரவே இல்லை. வாத்தியங்கள் மட்டும் தான் இருக்கு. ஆட்களை காணோம்.. பொதுவா கல்யாண விசேசங்களில் எப்படி பந்தி பரிமாறும் இடங்களில் ஒரு சூப்பர் வைசர் போடறமோ அதே போல் வாத்தியகோஷ்டிக்கும் ஒரு சூப்பர் வைசர் இருப்பது நலம்..


 நானும் , திருச்சி மிலிட்ரியும் காலை 10 மணிக்கு கிளம்பிட்டோம்.வாழ்க மண மக்கள்












வந்தாரை வரவேற்கும் வாசப்படி .குணாவின் நேசப்படி
Embedded image permalinkaa
மண்டப வாசலில் விநாயகர் தான் ரிசப்ஷன் டியூட்டி.யோவ் குணா.கவுத்திட்டியே ;-)))
Embedded image permalinka

கல்யாணமேடை ஆர்ட் டைரக்ஷ்ன் அழகியல்
Embedded image permalink
லட்சுமியை எப்படிவிசிறி ஆக்கி இருக்காங்க பாருங்க.ஒருவேளை குணா லட்சுமி விசிறியோ?
Embedded image permalinka
குணா சல்மான் கான் போல் போஸ் தர முயற்சி.அவர் நெற்றியில் இருப்பது பட்டயம்
Embedded image permalinka
குணா கல்யாண சீர்
Embedded image permalink
பொண்ணு வீடு ஏடிஎம்கே போல.முகூர்த்தப்பட்டுப்புடவை பச்சை கலர்
)முஹூர்த்தப்புடவைக்கு பெஸ்ட் சாய்ஸ் ரத்த சிவப்பு ,பச்சை 2ம் தான்்
மணப்பெண்ணுக்கு மணமாலையுடன் பண மாலை சீர் இப்போ தான் முதல் முறையா பார்க்கறேன்



 துப்பாக்கி டைட்டில் தீர்ப்பு போல் குணா மேரேஜ் முஹூர்த்தம் 4,30 டூ 6 இல் இருந்து 7,30 டூ 9 என தள்ளி வைக்கப்பட்டது.
மாப்ளே குணாஆஆஆ
அன்னலட்சுமி 11 தட்டு சீர்

பெண் அழைப்பு pic.twitter.com/CkDXL5gn -
தாலியை வேடிக்கை பார்க்கும்

சாமி கும்பிடறாங்க்ளாம்
 அ



மப்ளை ஸாரி மாப்ளை

 அ


மணப்பெண்ணுக்கு தோழியாய் ஆல்ரெடி மேரேஜ் ஆன பெண்ணை நிற்க வைத்த குணாவின் நுண்ணரசியல் கண்டு வியக்கேன்

senthil + senthil + senthil
Embedded image permalink
அண்ணே ஒரு விளம்பரம் என்னய்யா பண்றே ?'-))
  , pic.twitter.com/F3y5kVgN ( இடமிருந்து வலமாக)
Embedded image permalink

நவராத்திரி கொலு @ ராசிபுரம் ஈஸ்வரன் கோவில்



3 பேரும் கோயில் வாசலில்

கொலு 2
Embedded image permalink
 அ

அங்காளம்மன்
Embedded image permalink

டாக்டர் ரியாஸ் மதுரை ( நர்ஸ் வர்லை)
கில்லாடி கிட்டு,குணா . ,கில்மா ரியாஸ் ,புத்தகப்புழு,ராம் ,
  அ










3 முடிச்சு போட்டு முந்தானை முடிச்சில் குணா
Embedded image permalink

மாலை மாற்றும் படலம்
Embedded image permalink
ஷங்கரா சிவ சங்கரா
Embedded image permalink
கல்யாண ஜோடி
Embedded image permalink
அன்புத்தம்பிகளுடன் அவங்களை விட யூத் தம்பி
Embedded image permalink
  அ
 aஅ




 a




 கட்டதுரை யின்

குணா கல்யாணம் ஒரு கலாட்டா டேக்!


மணப்பெண்ணின் தோழிகளை ப்ரசன்னாவிடமிருந்து காப்பாற்ற தனிப்படை அமைப்பு! #GunaMarriage

பரிசல் லாப்டாப்புடன் வருவதாக தகவல் - ரேண்குண்டர்கள் குஷி #GunaMarriage

மணப்பெண்ணின் தோழியாக சிண்டெக்ஸ் சோனியா, இளம்பெண்கள் எதிர்ப்பு #GunaMarriage

கருப்புவின் கவிஜ அபாயம் எதிரொலி, ராசிபுரத்தில் பதட்டம் #GunaMarriage

குணா கல்யாண எதிரொலி, 65ரூ குவார்ட்டர் அனைத்தும் விற்று தீர்ந்தது #GunaMarriage

வெள்ளி சொம்பு கேட்டு மாப்பிள்ளை பிடிவாதம், உனக்கு வெங்கல சொம்பே அதிகம் என மாமனார் எச்சரிக்கை #GunaMarriage

மொய் எழுதும் கும்பலில் மோசடி மன்னன் ப்ரசன்னா - கவனமாக இருக்க ராசிபுரம் நகராட்சி அறிவுறுத்தல்!#GunaMarriage #JOK

ராஜனை பார்க்க கட்டுங்கடாத இளம்பெண்கள் கூட்டம், வாகனங்கள் 4கிமீ லேயே தடுப்பு #GunaMarriage #JOK

புதுலாப்டாப் வாங்க பரிசல் நிவாரணம் உதவி கேட்க திட்டம், தெறிச்சு ஓட ரேணிகுண்டர்கள் திட்டம் #GunaMarriage #JOK

மொய் வைத்தவர்களுக்கு மட்டுமே சாப்பாடு டோக்கன், புது மாப்பிள்ளை குணா திட்டவட்ட அறிவிப்பு #GunaMarriage #JOK

பெண் அழைப்பு: மாப்பிள்ளையை க்ளோஸப்பில் பார்த்த மணப்பெண் மயக்கம் போட்டு விழுந்தார்.! #GunaMarriage #JOK

காறி துப்பி கொண்டே இருப்பதால் கில்லிக்கு ராசிபுரம் நகராட்சி கல்யானத்துக்கு அனுமதி மறுப்பு! #GunaMarriage #JOK

ட்யுப்ளிகேட் சரக்கடிக்க ப்ரசன்னா மறுப்பு. ‘வெளிபோடா ரேஸ்க்கல்’ என ரேண்குண்டர்கள் கொந்தளிப்பு #GunaMarriage #JOK

செருப்பு போடும் இடத்தில் 4 கண்காணிப்பு கேமிராக்கள், ரேணிகுண்டர்கள் ஏமாற்றம் #GunaMarriage #JOK

கூட்டம் கட்டுங்கடததால் அளவு சாப்பாடாக குறைப்பு, ரேணிகுண்டர்கள் அதிர்ச்சி #GunaMarriage #JOK

மாப்பிள்ளைக்கு திடீர் கைநடுக்கம், சேலம் சித்த வைத்தியர் அவசரமாக ராசிபுரம் வந்தார்! #GunaMarriage #JOK

மாப்பிள்ளைக்கு அரை மயக்கம், நைட்டு அடிச்ச ஒரிஜினல் சரக்கு ஒத்துகொள்ளவில்லை என புலம்பல் #GunaMarriage #JOK

ரேணிகுண்டர்கள் வரவால், டம்ளர் டபராக்களை எண்ணிவைக்க திருமண மண்டப நிர்வாகம் உத்தரவு! #GunaMarriage #JOK

மாப்பிள்ளையின் மச்சினியை பார்க்க ரேணிகுண்டர்கள் தள்ளூமுள்ளு, மண்டப கதவு தற்காலிகமாக மூட பட்டது!#GunaMarriage #JOK

மண்பத்துக்குள் எதற்க்கு மாப்பிள்ளை ஹெல்மெட்டுடன் இருக்கிறார் என பெண் வீட்டார் கேள்வி, அது ஹெல்மெட் இல்லை என விளக்கம்! #GunaMarriage #JOK
 

குணா கலாட்டாகல்யாண டேக் பார்ட்-2

மணமகனின் கையைகுலுக்கி நைஸாக மோதிரத்தை ஆட்டைய போட்ட சென்னியார் மாயம்!#JOK

பரிசல் லிஃப்ட் கேட்டு வந்த காய்கறி லாரி ப்ரெக்டவுன். லேட்டாகும் என தகவல்! #JOK

75 காலி பியர் பாட்டிகள்களுடன் ரேணிகுண்டர்கள் பழைய இரும்பு கடை தேடி அலைபாய்கின்றனர் #JOK

இரண்டு அப்பளம் கேட்டு ரேணிகுண்டர்கள் கல்வரம், மத்திய பாதுகாப்பு படை வரவழைப்பு.! #JOK

ராசிபுரத்தில் ஒரே நாளில் பல லட்ச ரூபாய்க்கு மது விற்பனை,அனைத்து ட்யுபிளீகேட் சரக்குகளும் விற்று தீர்ந்தது!#JOK

பெண்கள் கூட்டத்தில் நைஸாக சென்று அமர்ந்த ராஜன், பின்னி பெடல் எடுத்தனர்! #JOK

வீட்டுக்கு சாப்பாடு பார்சல் கட்டிய ப்ரசன்னா, கல்யாணத்துக்கு வந்தவர்கள் காறி துப்பினர்.!#JOK

மண்டபத்தில் பல்பு திருடிய ரேணிகுண்டர்கள், தலைவர் பரிசலை காட்டி கொடுக்க மறுப்பு! #JOK

மொய் எழுதுபவரை கடத்த முயற்சி, ரேணிகுண்டர்களுக்கு தர்ம அடி.! #JOK

பக்கத்து இலையிலிருந்து வடை திருடிய பிரசன்னா, கையும் களவுமாக பிடிப்பட்டார்! #JOK

மணப்பெண்ணின் தோழிகளை பார்க்க மணமகன் பேரார்வம், மணமகளின் ஹேர்பின்னால் நறுக்கென்று குத்தபட்டார்! #JOK

ரேணீகுண்டர்கள் மாறு வேடத்தில் மூன்று முறை சாப்பிட்டனர், கண்காணிப்பு கேமிராவில் பதிவு!#JOK

ரேணிகுண்டர்களின் பார்வை சரியில்லை, மாப்பிள்ளையின் மாமியார் குபீர் புகார்.! #JOK

மண்டபத்திலேயே பதிவு எழுத ஆரம்பித்த சென்னியார், கடமையுணர்ச்சி கண்டு மக்கள் வியப்பு! #JOK

சமையலறையில் புகுந்து முந்திரி பருப்பு திருட பரிசல்காரன் முயற்சி, முறத்தாலேயே முதுகில் சாத்தி விரட்டியடிப்பு! JOK

எனக்கு எப்போ கல்யாணம், எனக்கு எப்போ கல்யாணம் என்று கருப்பு தாலியோடு தலைதெறிக்க ஓடினார், பொதுமக்கள் பரிதாபம்!#JOk

மண்டபத்தில் ஒரு குத்துவிளக்கை காணவில்லை, ரேணிகுண்டர்கள் வெளியேறாமல் கதவடைப்பு! #JOK

மணமகள் தோழியிடம் ஃபோன் நம்பர் கேட்ட பிரசன்னா, உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டார்! #JOK

மண்டபத்தில் சைபர் கிரைம் நடமாடுவதாக தகவல், ராஜன் தலைமறைவு! #JOK

- கட்டம் சரியில்லா கட்டதொர!

2 comments:

Pulavar Tharumi said...

சுவாரசியமான எழுத்து நடை. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

chinnapiyan said...

நன்றி. அருமையா கவர் பண்ணியிருக்கீங்க உங்கள் பார்வையில்.சில படங்கள் வரவில்லை.எங்கு சென்றாலும் நீங்க ஒரு ஹீரோ தான்.