Wednesday, October 31, 2012

நீலம் புயல் - சென்னை - அப்டேட்ஸ்

 Nilam Moves Closer Chennai Coast

சென்னை: நிலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாகவும், மேலும் கரையை புயல் முழுவதுமாக கடந்து முடியும் இன்னும் 2 மணிநேரமாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.



வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது.



நேற்று இரவு முதல் இது வேகமாக நகர்ந்து இன்று காலை சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கில் வந்து புயல், தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தற்போது வீசி வரும் பலத்த காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி உள்ளது.



சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் உடனடி மருத்துவ உதவிக்காக ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.



நிலம் புயல் கரையை முழுவதுமாக கடந்து முடிக்க 2 மணிநேரத்திற்கு மேல் எடுத்து கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 மணிநேரத்திற்கு பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



8-ம் எண் புயல் கூண்டு



சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதையும் சீறிவரும் கடலலைகள் ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை துறைமுகத்தில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதால் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6-ன் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



பலத்த காற்று


இன்று மாலைக்குள் புதுச்சேரி- நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்க இருக்கிறது, புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நிலம் புயல் கரையை நெருங்க நெருங்க கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி மிரட்டி வருகின்றன. இதனால் இன்றும் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருக்கிறது.



அலுவலகங்கள் விடுமுறை:


புயல் கரையை கடக்கும் போது சென்னையில் பலத்த சேதங்கள் ஏற்படலாம் என்பதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பணியாளர்களை மாலை விரைவில் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மாலை 3 மணிக்கு மேல் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.



மின்சாரம் துண்டிப்பு


நிலம் புயலால் சென்னை நகரின் பல பகுதிகளில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் உஷாரான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இதனிடையே தமிழகம் முழுவதும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அனுப்பி வைத்திருக்கிறது.



 People Tired Take Photos Cyclone

சென்னை: நிலம் புயல் கரையை கடக்கும் போது போட்டோ எடுத்து, அந்த நீரில் தங்களின் காலை நனைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சிலர் விரும்பி சென்னையில் கடற்கரை பகுதிகளில் காத்திருந்தனர். ஆனால் அவர்களை கடலை நோக்கி செல்ல போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.



நிலம் புயல் கரையை கடக்கும் போது சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் மாலை 4.45 மணி அளவில் நிலம் புயல் கரையை கடக்க துவங்கியது. புயல் முழுவதுமாக கரையை கடக்க சுமார் 2 மணி நேரமாகும் என்பதால், பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.



புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர பகுதியில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை எட்டும் முன் சிறிதுநேரம் மழை பெய்தது. ஆனால் புயல் கரையை எட்டிய பிறகு, மழை நின்று பலத்த காற்று வீசியது.



இந்த நிலையில் புயலை நேரடியாக பார்க்க விரும்பிய சிலர், கடற்கரை பகுதியில் கேமராக்களுடன் சுற்றி திரிந்தனர். மேலும் சிலர் கடலை நோக்கி சென்று போட்டோக்களை எடுத்தனர். அப்போது கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.



அப்போது அவர்கள், நிலம் புயலில் வரும் தண்ணீரில் காலை நினைக்க வேண்டும். புயலின் போது போட்டோ, வீடியோ எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அவர்களின் விபரீத ஆசைக்கு போலீசார் மறுப்பு தெரிவித்து, திருப்பி அனுப்பி வைத்தனர்.



நிலம் புயல் காரணமாக கடற்கரை பகுதிகளில் வசித்த பலரும், அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்ற நிலையில், சிலர் ஆர்வ கோளாறாக புயலுக்கு இடையே போட்டோ எடுக்க முயன்றது போலீசாருக்கு வியப்பை அளித்தது.

 Nilam Cyclone Safety Tips Precaution

சென்னை: சென்னைக்கு அருகே மகாபலிபுரம் அல்லது கல்பாக்கத்தில் நிலம் புயல் நாளை கரையைக் கடக்கப் போகிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளளது.


அண்மையில் தானே புயலை தமிழகம் எதிர்கொண்டது.மணிக்கு நூறுகிலோ மீட்டருக்கும் மேலாக வீசிய கொடுங்காற்றினால் கடலூர் மாவட்டமே நிர்மூலமானது.



இந்தப் புயலைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் புயலாக நிலம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தமான் அருகே காற்றழுத்தத் தாழ்வுநிலை மையம் கொண்டபோது அதாவது கடந்த வாரமே தமிழகத்துக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டது.



மேலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. புயல் சென்னை நோக்கி வருவதும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



கடலோர மக்களே கவனம்
குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மீனவர்களே கடலுக்குள் போகாதீர்கள்
கடல் சீற்றமாக இருந்து வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக் கூடாது என்று கடந்த 3 நாட்களாகக் கூறப்பட்டு வருகிறது.
தற்போது புயல் கரையைக் கடக்க இருப்பதால் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.



பீச் பக்கம் எட்டிப்பார்க்காதீங்க...
சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை தவிர மகாபலிபுரத்துக்கு அருகே உள்ள கோவளம், விஜிபி, நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட அனைத்து கடற்கரைக்கும் செல்வதைத் தவிர்க்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.



அத்துடன் மக்கள் கூடும் கடற்கரைப் பகுதிகளில் போலீசாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மின்கம்பங்கள் சாயலாம்


பொதுவாக மழைகாலத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. புயல் காலங்களில் முறிந்து விழும் மரங்கள், மின்கம்பங்கள் அருகே செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.



மரங்கள் விழலாம் - கீழே ஒதுங்காதீர்கள்


புயலடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மரங்களின் கீழே மழைக்கு பாதுகாப்பு என ஒதுங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் மழை நீரில் நடந்து போவதைத் தவிர்க்கவும்



சுவிட்சுகளை முடிந்தவரை ஆப் செய்யுங்கள்


புயல் காற்று வீசும் நிலையில் வீடுகளில் மின்சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான சுவிட்சுகளை கூடுமானவரை அணைத்தே வைக்கவும்.



மெழுகுவர்த்திகள் ஸ்டாக் இருக்கட்டும்


மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வீட்டில் மெழுகுர்த்திகளை போதிய அளவில் வைத்துக் கொள்வது நல்லது.


தற்போதைய நிலம் புயலுக்கான முன்னெச்சரிக்கையின் போது வானிலை மையமும் கூட தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.


அவசர உதவிக்கு...


சென்னையில் புயல், மழை பற்றிய அறிய 044-28447734 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Cyclone Nilam: Emergency numbers in Chennai 26412646, 28170738, 24838968, 24867725,22342355, 24425961, 22420600, 24500923 


 Heavy Rain Lashes Chennai Its Suburbs

சென்னை: புயல் சின்னம் காரணமாக தலைநகர் சென்னை முழுவதும் கன மழை கொட்டி வருகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.


வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், புயலாக மாறும் அபாயம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக சென்னையில் மழை இல்லாமல் இருந்தது.இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது.



சென்னை நகரின் பல பகுதிகளிலும் கன மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. கடலோரப் பகுதிகளான மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.



இதேபோல நகரின் உட்பகுதியிலும் மழை பெய்கிறது. புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தபடி உள்ளது.



இதனால் காலையில் அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ மணிகள் காலையிலேயே டிவி முன் உட்கார்ந்து ஜாலியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அலுவலகம் செல்வோர்தான் வெளியில் எப்படிப் போவது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கின்றனர்.



 http://www.vikatan.com/news/images/koyambedu-rain2.jpg






http://www.vikatan.com/news/images/koyambedu-rain.jpg
 அ





http://dinamani.com/incoming/article1307137.ece/ALTERNATES/w460/RAIN4.JPG





http://mmimages.maalaimalar.com/Articles/2012/Oct/e5c2df68-3e35-4459-8e08-052ee18c2bdf_S_secvpf.gif






http://www.dinakaran.com/data1/Nilam-Chennai-Gallery/day-1/image_1.jpg


நன்றி - தட்ஸ் தமிழ்



NILAM Current Status

Current Wind Speed 63 MPH / 55 knots
Max Predicted Wind Speed 63 MPH / 55 knots at

TROPICAL CYCLONE NILAM Land Hazards

No land hazards or hazard data not available for this storm.

TROPICAL CYCLONE NILAM Tracker

NILAM Satellite Loop

TROPICAL CYCLONE NILAM Alternate Tracking Map

Alternate tracking maps are only available on NHC tracked storms.

0 comments: