Friday, October 05, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 5. 10. 2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.aceshowbiz.com/images/still/english-vinglish-poster03.jpg 

1.English Vinglish  - பதினான்கு வருட இடைவெளிக்கு பின் வெள்ளி திரைக்கு ஸ்ரீதேவியின் மறு பிரவேசம் “இங்க்லீஷ் விங்க்லீஷ்” என்ற படத்தின் மூலம் நடக்க உள்ளது. இந்த படத்தில் வெளிநாட்டு மருமகளாக போகும் இந்திய பெண்ணாக நடித்திருக்கிறார் ஸ்ரீ. ஆங்கிலம் தெரியாததனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் கதை.


ஹிந்தி தமிழ் தெலுங்கு என்று மூன்று மொழிகளில் வர போகும் இந்த படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கிறார் அமிதாப். அதே வேடத்தை தமிழிலில் அஜீத் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் பால்கி கூறி இருக்கிறார்.


ஆங்கிலம் தெரியாது என்பதால் மனம் வருத்தப்படும் ஸ்ரீதேவியிடம் “மொழி என்பது நம் உணர்வுகளை தெரிவிக்கும் ஒரு கருவி மட்டுமே. அதற்க்கு மேல் பெரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று மன உறுதி அளிக்கும் மூன்று நிமிட வேடத்தில் அஜீத் நடிக்க இருக்கிறார் என்றும் பால்கி தெரிவித்துள்ளார்.


ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலிஸ்  

விமர்சனம் -http://www.adrasaka.com/2012/10/english-vinglish.html

 http://nowrunning.com/content/movie/2011/Doubles/wall_800x600_1.jpg

2.  புதுவை மாநகரம் - மம்முட்டி, நதியா, டாப்ஸி ஆகியோரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மலையாளப் படமான 'டபுள்ஸ்' படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 'புதுவை மாநகரம்' என்ற பெயரில் வெளியாகிறது.

ஆர்.பி.பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பாலா.ஆர் என்பவர் தயாரித்திருக்கும் இப்படத்தை ஷோகன் இயக்கியிருக்கிறார். இதில் மம்முட்டி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருக்கிறார். நதியா மம்முடியின் சகோதரி வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஒரு பாடலுக்கு நடிகை கிரண் நடனம் ஆடியிருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார், சினேகன், பரிதி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

மம்முட்டியும், நதியாவும் இரட்டையர்களாக பிறந்தவர்கள். அவர்களது பெற்றோர் விபத்தில் பலியாகி விட, வளர்ந்த பிறகு இருவரும் சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றும் உயரிய தொண்டாற்றி வருகிறார்கள். அப்படியொரு விபத்தில் சிக்கும் டாப்ஸியை காப்பற்றுகிறார் மம்முட்டி. அதற்கு பிறகு ஏற்படும் பிரச்சனை என்ன என்பதுதான் படத்தின் கதை.

முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் செம்ப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. (டிஎன்எஸ்)


ஈரோடு அண்ணாவில் ரிலிஸ்  

http://telugu.way2movies.com/wp-content/uploads/2011/02/Mangala-Movie-Wallpaper-8.jpg

3. “சிவாங்கி” -  தெலுங்கில் ரிலீசான சிவாங்கி படம் தமிழில் வருகிறது. இதில் ஷார்மி, பிரதீப்ராவத், உதேஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஓஷோ துளசிராம் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஷார்மி நடிகை கேரக்டரிலேயே வருகிறார். மந்திரவாதி மகன் ஷார்மிக்கு தீவிர ரசிகனாக இருக்கிறான். ஒருநாள் விமானத்தில் வந்து இறங்கும் ஷார்மியை காண விமான நிலையம் வருகிறான். அப்போது  ஒருவன் ஷார்மியை தொட்டு மானபங்கம் செய்ய முயற்சிக்கிறான்.

அவன் கையை பிடித்து இழுத்து மந்திரவாதி மகன் தடுக்கிறான். அப்போது தவறுதலாக மந்திரவாதி மகன் கை ஷார்மி மேல் படுகிறது. இதனால் ஆவேசமாகி அவனை அடிக்கிறார். கூட்டத்தினரும் நையப்புடைக்கின்றனர்.

இதனால் அவமானப்பட்டு மந்திரவாதி மகன் தற்கொலை செய்கிறான். மகன் சாவுக்கு காரணமான ஷார்மியை பழிவாங்க மந்திரவாதி பில்லி சூனியம் வைக்கிறான். அதில் சிக்கி ஷார்மி அவஸ்தைபடுகிறார். அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

இசை: விஸ்வா, பாடல்: ஜெயமுரசு. கவர்ச்சி அழகி ஷார்மி, பிரதீப் ராவத், உதேஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள “சிவாங்கி” படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது.


தெலுங்கில் வெற்றி பெற்ற மங்களா என்ற படத்தை, தமிழில் சிவாங்கி என்ற பெயரில் டப் பண்ணியிருக்கிறார்கள்.


படத்தின் ட்ரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது. ஐஸ் ஐஸ் தின்னுக்கோ என்ற பாடலில் ஷார்மி கவர்ச்சியான அங்க அசைவுகளில் கிளுகிளு ஆட்டம் போட்டிருக்கிறார். 


விழாவில் ஷார்மி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. வேறு படப்பிடிப்பில் ஷார்மி பிஸியாக இருந்ததால் விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனதாக படக்குழுவினர் வருத்தத்தோடு கூறியுள்ளனர். 


ஐஸ் ஐஸ் தின்னுக்கோ பாடலை கவிஞர் ஜெயமுரசு எழுதியுள்ளார். இப்பாடலை ரீட்டா பாடியிருக்கிறார்.


துல்லியமான முறையில் பாடலை பதிவு செய்துள்ளார்கள். புதுமையாக தோல் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசையமைப்பாளர் விஸ்வா இப்பாடலை உருவாக்கியுள்ளார்.


அறிவியல், ஆன்மிகம் கலந்த சைக்லாஜிகல் படமாக இந்த சிவாங்கியை இயக்குனர் ஓஷோ துளசிராம் எடுத்துள்ளார் என்று படக்குழு கூறுகிறது.


ஈரோடு ஸ்டாரில் ரிலிஸ்  

 http://www.thedipaar.com/pictures/resize_20110308164736.jpg
4. புதிய காவியம் -ப்ரண்ட்ஸ் சர்க்கிள் மூவிஸ் சார்பில் ஜி.கமலநாதன், எம். வைஜெயந்திமாலா தயாரிக்கும் படம் ‘புதிய காவியம்’. இதில் நாயகனாக திலீப்குமார், நாயகியாக ஜானவி நடிக்கின்றனர். அல்வா வாசு, ஆதேஷ், ரமணா ராமகிருஷ்ணன் காதல் மீனாட்சி ஆகியோரும் நடிக்கின்றனர். புஞ்சை வடிவேலு முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம, பாடல்கள் எழுதி பெ.ந.ரமேஷ்குமார் இயக்குகிறார்.

அறியாமையில் ஒரு கிராமம் மூழ்கிக் கிடக்கிறது. அதில் இருந்து அவர்களை நல்வழிப்படுத்தி முன்னேற்ற இளைஞன் ஒருவன் துடிக்கிறான். ஆனால் கிராமத்தினர் அவனை உதாசீனம் செய்கின்றனர். ஊர் மக்களால் நல்லவன் என நேசிக்கப்படும் அயோக்கியன் ஒருவன் அமெரிக்க விஞ்ஞானியிடம் கூட்டு வைத்து விவசாய நிலத்தை அழித்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறான். அவனிடம் இருந்து நல்ல மனம் கொண்ட இளைஞன் மக்களை எப்படி காப்பாற்றுகிறான் என்பது கதை. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது.

இசை: தஷி, ஒளிப்பதிவு: கிச்சாஸ், எடிட்டிங் ஜி.பி.வெங்கடேஷ், நடனம்: காதல் கந்தாஸ், ஸ்டண்ட்: வாலிதேஜா. இணை தயாரிப்பு: ஏ.வேலு, ஆர்.அன்பரசு, எம்.எஸ்.சீதாராமன். 

http://www.thedipaar.com/pictures/resize_20120423055415.jpg


5. செம்பட்டை -  அழகிய தீயே, சிந்தனை செய் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த பாலா கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர். விமல், வித்தார்த் ஆகியோருக்கு நடிப்புப்பயிற்சி அளித்தவர் இவர்தான்.


பாசிலின் காதலுக்கு மரியாதை, கண்ணுக்கள் நிலவு ஆகிய படங்களில் பணிபுரிந்த ஐ.கணேஷ் இயக்கும் "செம்பட்டை" படத்தில் பாலா கதாநாயகனாக நடித்துவருகிறார். கடல், நீர்ப்பறவை போல இதுவும் மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை.


ஈரோடு சங்கீதாவில் ரிலீஸ்
http://www.filmofilia.com/wp-content/uploads/2012/07/Taken2_Quad.jpg

6. TAKEN 2  - 2008 ல் ரிலிஸ் ஆன டேக்கன் படம் செம ஓட்டம் ஓடியது . ரஜினி நடிப்பதாக இருந்து பின் சரத் நடித்த ஜக்குபாய் உட்பட 2009 ஆம் வருடம் 9 படங்கள் டேக்கன் படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இது ஒரு சாதனை. அப்பேர்ப்பட்ட ஹிட் படத்தின் 2 ஆம் பாகம் இன்று ரிலீஸ்.. சுடறவங்கள்ல யார் முந்தப்போறாங்களோ. இதிலும் அதே டைப் கதைதான். கடத்தப்பட்ட மனைவி , துரத்தப்படும் மகள் இரு வேறு திசையில் ., எப்படி ஹீரோ 2 பேரையும் காப்பாத்தறார் என்பதே கதை . செம ஸ்பீடு ஆக்‌ஷன் படமாம்.. தமிழ் நாட்டில் ரிலீஸ் இல்லை..


1 comments:

குரங்குபெடல் said...

முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் செம்ப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. (டிஎன்எஸ்)


ஈரோடு அண்ணாவில் ரிலிஸ்