Wednesday, October 17, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 17

பதிவர் சி.பியின் காமெடியும், பீலிங்க்ஸும்



இன்னைக்கு நம்ம "கேளுங்க" தளம் சார்பாக சூடான மெயில் காணல் ஒன்று உங்களுக்காக..   


1. பதிவுலகை பொறுத்த வரையில் கண்டிப்பாக உங்களுக்கொரு ஸ்டைல் உருவாகி விட்டது. ஆனாலும் இந்த பதிவர் போல நாமும் எழுதலாம் என்று முயற்சித்து தோற்று இருக்கலாம். அந்த பதிவர் யார்? (அதிகம் பேர் இருக்காங்க என்றெல்லாம் டகால்டி வேலை பண்ண கூடாது. குறிப்பாக ஒருவர், அல்லது டாப் டென்னில் முதல்வர்)
  •  பதிவுலகில் பலர் என்னைக்கவர்ந்தார்கள். அவர்கள் எழுத்து நடையை ரசித்ததுண்டு , குசும்பன், சேட்டைக்காரன், ராம்சாமி, பட்டா பட்டி  என நீளும் பட்டியல்கள், ஆனா யார் மாதிரியும் சாயல்ல எழுத நினைச்சதில்லை.  
  •  
  •  
  •  
  • அமரர் சுஜாதா எழுதிய காயத்ரி நாவல் ஸ்டைலில் நன் ஒரு சிறுகதை எழுத முயற்சித்தேன். ஒரு உண்மை சம்பவம், கோவை ப்ரீதி கொலை வழக்கு என்ற கதை நடுவரால் புஷ்பா தங்கதுரை சாயல் என சொல்லப்பட்டது  அவ்வ்வ்வ்வ்  


கோவை ப்ரீத்தியின் கொலை வழக்கு - KOVAI PREETHI MURDER CASE (சவால் சிறுகதைப்போட்டி )http://www.adrasaka.com/2011/10/kovai-preethi-murder-case.html


2. மகா மெகா மொக்கை படங்களை வான்டாடாக போய் பார்கின்றீர்கள். அதன் மீது ஏன்னா தலிவா ஈர்ப்பு உனக்கு?
  • ஒரு மொக்கை இன்னொரு மொக்கையை ரசிப்பதில் ஆச்சரியம் என்ன?  நல்ல தரமான படத்தை விமர்சனம் பண்றது ஈசி, ஆனா மொக்கை படத்தை தான் ஜாலியா கலாய்க்க முடியும்.. அதான் மொக்கையா தேடி தேடிப்போறேன்
3. நடுநிலை விமர்சனம் தவிர்த்து இப்போது பலர்  தங்கள் தங்கள் பார்வையில் விமர்சனம் எழுதி கொண்டு இருக்கிறார்கள்.. நீங்க இப்போ சொல்லுங்க பதிவுலகில் அதிக நடுநிலையாக விமர்சனம் செய்யும் விமர்சகர் யாரு என்று நினைக்கிறீங்க? (அதிகம் பேர் இருக்காங்க என்றெல்லாம் டகால்டி வேலை பண்ண கூடாது. குறிப்பாக ஒருவர், அல்லது டாப் டென்னில் முதல்வர்)
  • அதீஷா
  • உண்மைத்தமிழன் 
  • உண்மைத்தமிழன் சிறுபட்ஜெட் படங்களுக்கு அதிக சபோர்ட் பண்ணுவார், அதீஷா ஜனரஞ்சக படங்களூக்கு அதிக முக்கியத்துவம் தருவார்)
4. உங்களோடு நண்பர்களாக பழகியவர்கள் உங்களைதாக்கிய (வார்த்தைகள் அல்லது ஏதோ) சம்பவங்கள் பதிவுலகில் உண்டா? (நோட் - நண்பர்கள்)
  • ராஜன் லீக்ஸ் 
  • கழுகு சவுந்தர்
  • விக்கி உலகம் வெங்கட்
  • சிரிப்புப்போலீஸ் ரமேஷ்
5. கடைசியாக உங்களை பற்றிய முக்கிய 3 தகவல்கள் அல்லது சந்தர்ப்பங்கள்? (நீங்க பதிவுலகில் பகிர்ந்து கொள்ளாததாக இருத்தல் வேண்டும்)
  • நான் ஞாயிறுகளில் எப்போதும் டி வி யே கதின்னு வீட்டுக்குள்ளேயே இருப்பேன் ( வெளீல போனா செலவு வைக்க சம்சாரம் ரெடியா இருப்பதால் )
  • வெள்ளிக்கிழமை ஆஃபீஸ்க்கு ரெகுலரா கட் அடிக்க என்ன என்னமோ தகிடு தித்தம் எல்லாம் பண்ண வேண்டி இருக்கு.. ஒரு கதை எழுதக்கூட அத்தனை க்ரியேட்டிவிட்டி தேவைப்படறதில்லை

3 comments:

முத்தரசு said...

வணக்கம்

Manimaran said...

கேள்வி NO.4 மட்டும் ....கேள்வியும் நானே பதிலும் நானே டைப் போல இருக்கிறதே...

Manimaran said...

உங்களை எவ்வளவு கலாய்த்தாலும் டேக் இட் ஈசி யாக எடுத்துக்கொள்கிறீர்களே....உங்களை பதிவுலகின் "ரொம்ம்ம்ப...நல்லவர்" என அழைக்கலாமா?

உங்கள் கேள்வி பதில்களையெல்லாம் புத்தகமாக வெளியிடும் யோசனை ஏதாவது இருக்கிறதா..?(சீரியஸா..)