படத்தோட கதைக்குள்ளே போறதுக்கு முன்னே ஆண் பெண் காதல், திருமண வாழ்வு பற்றி ஒரு கிளான்ஸ் பார்த்துடலாம். என்ன தான் சின்சியர் லவ்வா இருந்தாலும் பெரும்பாலான ஆண்க ளின் காதல் மேரேஜ் ஆகி கொஞ்ச நாள்ல காதலின் ஆழம் குறைஞ்சுடும்.பெண்களின் காதல் மேரேஜ்க்குப்பின் தான் அதிகரிக்கும். ஆனா ஆண் அப்போ வெரைட்டி தேட ஆரம்பிச்சுடுவான். பெண்கள் பெரும்பாலும் வெரைட்டிக்கு அலைவதில்லை. பாதுகாப்பான கணவன் அல்லது காதலனின் அரவணைப்பு போதும்னு நினைக்கறவங்க..
படத்தோட மெயின் வில்லி பிபாஷா பார்வைல கதையை சொல்லலாம். சோனியா அகர்வால் மாதிரி இவங்க ஒரு பிரபல நடிகை.. எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் பிபாஷா பாசா தான் அதுல ஹீரோயின். புகழின் உச்சத்தை தொட்டவங்க.. பல அவார்ட்ஸை அள்ளினவங்க.. அவங்களுக்கு சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் மாதிரி ஒரு டைரக்டர் கூட பழக்கம்.. அவர் தான் படத்தோட ஹீரோ
சினி ஃபீல்டுல பழக்கம்னா என்ன அர்த்தம்னு சொல்லத்தேவை இல்லை.. கமல் கவுதமி மாதிரி அவங்க மேரேஜ் பண்ணிக்காமயே லிவிங்க் டுகெதரா வாழந்துட்டு வர்றாங்க..
ஆண்ட்ரியா எப்படி சோனியா அகர்வால் வாழ்க்கைல குறுக்கே வந்தாங்களோ அந்த மாதிரி ஒரு புதுமுக நடிகை திடீர்னு புகழின் உச்சிக்கு வந்துடறாங்க.. அதை பிபாஷா பாசாவால் தாங்கிக்க முடியலை.. தான் மட்டும் தான் நெம்பர் ஒன் ஹீரோயினா வரனும், நிலைச்சு இருக்கனும்னு நினைக்கறாங்க..
அதுக்கு அவங்க கைல எடுக்கும் ஆயுதம் தான் பிளாக் மேஜிக். அதாவது லோக்கம் பாஷைல சொல்லனும்னா பில்லி சூன்யம்.. செய் வினை.. ஒரு மந்திரவாதியின் உதவியோட செய்வினை வைக்கறாங்க.. அப்படி வெச்சா என்ன ஆகும்னா செய்வினை வைக்கப்பட்ட நபருக்கு விபரீதமான கற்பனை வரும்.. அவங்க கண்ணுக்கு மட்டும் பேய் தெரியும்..
மன உளைச்சலுக்கு ஆளாகி காளி பட ஷூட்டிங்க்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரகளை செஞ்ச மாதிரி இந்த புதுமுகம் செய்யறாங்க.. இதுக்கு ஹீரோவான டைரக்டரும் உதவி பண்றாரு,.. அவர் தான் அந்த திரவத்தை புதுமுகத்துக்கு ஊற்றுத்தரும் ஆள்.. அந்த திரவம் உள்ளே போனா கற்பனைல பேய் வரும்..
ஒரு நைட் அந்த புதுமுகம் டைரக்டரை அவ கூடவே தங்கச்சொல்றா.. பயம் தான் காரணம்.. 2 பேருக்கும் கச முசா ஆகிடுது.. இப்போ டைரக்டர் திடீர்னு நல்லவர் ஆகிடறார். பிபஷா பாசா கிட்டே இனிமே அந்த புதுமுக ஹீரோயினை தொந்தரவு பண்ணாதே.. இனி அவ என் ஆள்.. அப்டிங்கறார்..
உடனே பிபாஷா பாசு சன் டிவி நித்யானந்தாவை மிரட்ன மாதிரி ஒரு வீடியோ கேசட்டை காட்டி இதுல நாம 2 பேரும் கில்மா பண்ணின மேட்டர் இருக்கு. ரிலீஸ் பண்ணிடுவேன்னு மிரட்றா.. அப்படி ரிலீஸ் பண்ணினா அவ மானமும் சேர்த்துத்தானே போகும்கற காமன் சென்ஸ் கூட இல்லாம அந்த லூஸ் டைரக்டர் தொடர்ந்து அந்த புதுமுகத்துக்கு செய் வினை வைக்கறாரு,.,.
இப்போ புதுமுகம் ஒரு சீன்ல உடம்பூ பூரா ஒட்டுத்துணி கூட இல்லாம ( ஒட்டுத்துணி இல்லாத பிட்டுப்படம் ) ஒரு ஹோட்டல்ல எல்லா மீடியாக்கள் முன்னால அலறி அடிச்சு பேய்க்கு பயந்து வர்றப்போ எல்லாரும் அதை ஃபோட்டோ எடுத்து பத்திரிக்கைல போடுடறாங்க.. இதனால அவங்க கவுரவம் (!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!) பாதிக்கப்படுது. பேர் கெட்டுடுது. நோ சான்ஸ் இன் சினிமா.. பழைய படி பிபாசா பாஸ் நெம்பர் ஒன் ஆகறாங்க..
இந்த சதி வலைல இருந்து அந்த புதுமுகத்தை டைரக்டர் எப்படி காப்பாத்தறார் என்பதே மிச்ச மீதிக்கதை..
படத்தோட முதுகு எலும்பு, தொடை எலும்பு, எல்லா அலும்பும் பாப்பா பிபாஷா பாஷு தான்.. 42 பல்லும் தெரிய ( 32 + 10 ) சிரிக்க வைக்கும் ஓப்பன் யுனிவர்சிட்டி பாடி.. போனா போகுதுன்னு கொஞ்சூண்டு டிரஸ் மட்டும் போடும் அவரது பூனம் பாண்டித்யம். எல்லாம் அபாரம்.. நடிப்பு? அதுவும் தான்.. அவர் ஏற்று நடிக்கும் முதல் வில்லி கம் பேய்த்தன கேரக்டர் இதான்னு நினைக்கறேன் குட்..
படத்தோட இன்னொரு ஹீரோயின் இசா குப்தா.. நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர். ஆனா பிரமாதமா ஒண்ணும் நடிக்கலை.. அதே சமயம் மோசம்னு சொல்ற மாதிரி சொதப்பலை.. சமாளிச்சிருக்கு.. லிப் டூ லிப் கிஸ் வேணா நல்லா குடுக்குது.. எது வருதோ இல்லையோ ரொமான்ஸ் மட்டும் நல்லா வருது. ( நமக்கு ஐ மீன் ஆடியன்ஸ்க்கு அதானே தேவை )
ஹீரோ Emraan Hashmi கூட பிரமாதமா பண்ணி இருக்க வேண்டிய கேரக்டர் தான்.. ஏனோதானோ என்ற நடிப்புதான்.. இயக்குநர் என்ன நினைச்சுட்டார்னா பிபாஷா பாசா இருக்க பயம் ஏன்? அவர் நடிப்பை மட்டும் கவர் பண்ணுவோம்னு.. யோசிச்சுட்டார் போல..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. எட்டாம் நெம்பர் ஹோட்டல் ரூம் 3 ஆம் நெம்பர் ஆக மாறி உருகி வழிவது செம திகில்.. அந்த காட்சியில் பின்னணி இசை, எடிட்டிங்க் கட் எல்லாம் கலக்கல்..
2. புதுமுகம் சிஸ்டமில் ஏதோ பார்த்துட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு கை வந்து அவரை இழுப்பது திக் திக் திகில் காட்சி.. 3 டி யில் பார்த்தால் இன்னும் கலக்கலாக இருந்திருக்கும் ( படம் 3 டி தான், ஆனால் ஈரோட்டில் சாதா)
3. மந்திரவாதி, வேலைக்காரி இருவரும் கொலை ஆகும் காட்சிகள் த்ரில்லிங்க்.. தியேட்டர்ல ஒரு பய மூச்சு விடலை.. கப் சிப்..
4. படத்தில் பிபாஷா பாசாவை எந்த அளவுக்கு உபயோகிக்க முடியுமோ அந்த அளவு யூஸ் பண்ணியது.. அவர் ஸ்விம்மிங்க் பூலில் ( நீச்சல் குளம்ப்பா ) எழுந்து வரும் சீனில் செம கிளு கிளு.. பக்கத்துல ஒரு ஆள் அவனும் எந்திரிச்சுப்பார்க்கறான் ( உக்காந்து பார்ப்பதை விட எந்திரிச்சுப்பார்த்தா ஏதாவது எக்ஸ்ட்ரா தெரியுமா?ன்னு ஒரு நப்பாசைதான் )
5. ஆக்சுவலி இது ஒரு திகில் படம் கம் த்ரில்லர் ஃபிலிம், ஆனா போஸ்டர் டிசைன், ஸ்டில்ஸ், டி வி விளம்பரம் எல்லாவற்றிலும் ஏதோ கில்மா படம் மாதிரி விளம்பரம் செஞ்சது மார்க்கெட்டிங்க் டெக்னிக் குட்..
இயக்குநரிடம் பல கேள்விகள்
1. ஒரு வாதத்துக்காக பேய் இருக்குன்னே வெச்சுட்டாலும் இருட்டுக்குள்ள்ளே ஒளிஞ்சிருக்கும் ஹீரோயினை பேய்க்குத்தெரியாதா? பேய் ஏன் தேடுது? தத்திப்பேயா? பவர் இல்லாத பேயா?
2. ஹீரோ பேண்ட் பாக்கெட்ல அவ்ளவ் பெரிய பாட்டிலை எப்போ பாரு வெச்சுக்கிட்டே சுத்தறாரு. தத்தி ஹீரோயின் ஒரு டைம் கூட அதை என்ன? என கேட்கவே இல்லை.. பொதுவா பொண்ணுங்க எல்லாத்தையும் நோட் பண்ணுவாங்க.. சைடு பாக்கெட் ஏன் புடைச்ச மாதிரி இருக்குன்னு பார்க்க மாட்டாளா?
3. செய்வினை கம் பில்லி சூனியம் வைக்க அந்த திரவத்துல சும்மா 4 சொட்டு கலந்தா போதும். அதுக்கு சும்மா குட்டி பாட்டில் 20 மில்லி பிடிக்கும் அளவு பாட்டில் எடுத்துக்கலாமே? என்னமோ சயிண்டிஸ்ட் கணக்கா எதுக்கு விண்ட்டேஜ் ஆஃப் பாட்டில் சைஸ்க்கு அவ்ளவ் பெரிய பாட்டில்?
4. ஹீரோயின் பயமா இருக்குன்னு ஹீரோவை துணைக்கு தன் வீட்ல படுக்க சொல்றார்.. ஓக்கே.. நடு ராத்திரில சத்தம் கேட்டதும் என்ன இதுக்கோசரம் அந்த லூஸ் தனியா வெளியே போகுது.. ? ஒண்ணா மூடிக்கிட்டு ஐ மீன் கதவை மூடிக்கிட்டு தூங்கனும். அல்லது ஹீரோவை எழுப்பி விடனும்..
5. வில்லி ஹீரோவை கில்மா டிவிடியை ரிலீஸ் பண்ணிடுவேன்னு மிரட்றது கேனத்தன்மா இருக்கு.. பொதுவா சினி ஃபீல்டுல இருக்கறவங்க எல்லாம் பல களன் கண்டவங்க தான்.. இதனால பெரிய பாதிப்பு ஒண்ணும் வரப்போறதில்லை.. அவர் என்ன ராணுவ அமைச்சரா? அப்படி பயப்பட?அப்படியே ரிலீஸ் செஞ்சாலும் அந்த பத்தினி மேட்டரும் தானே சந்தி சிரிக்கும் ?
6. ஏக்தா ஏக்தா தூர் ஹை பாடல் பல்லவிக்கான இசை பஹலா பஹ்லா ப்யார் ஹை பாட்டின் உருவல்..
7. ஹீரோ ஹீரோயின் கிட்டே ஏன் உண்மையை சொல்ல தயங்கறார்? இந்தா பாரம்மா , அவ தான் வில்லி.. அவ தான் இதை கொடுக்கச்சொன்னா.. நீ ஜாக்கிரதைன்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டா மேட்டர் ஓவர்..
8. கதைப்படி பேய் மனுஷ கண்ணுக்கு நேருக்கு நேர் தெரியாதாம். கண்ணாடில பார்த்தா தெரியுமாம்.. அதனால க்ளைமாக்ஸ்ல ஹீரோ கண்னாடில பார்த்து பார்த்து பேய் கூட ஃபைட் பண்றாரு.. நான் பேயா இருந்தா முதல் வேலையா அந்த கண்னாடியை உடைச்சிருப்பேன்;/./
9. பொதுவா இந்த மாதிரி விஷம் கலக்கற வேலை, மருந்து கலக்கற வேலை எல்லாம் அந்தந்த வீட்டு வேலைக்காரங்களை பிடிச்சுத்தான் செய்வாங்க அதான் பாதுகாப்பு. சீப் அண்ட் பெஸ்ட்.. ஏன்னா சம்பந்தப்படது ஒரு பொண்ணோட மேட்டர்.. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வெச்சா என்ன ஆகும்? ஒரே கேரவுன் வேன்ல சிம்புவையும், நயன் தாராவையும் 10 நிமிஷம் விட்டு வெச்சா என்னாகும்? இந்த ஜி கே கூட இல்லாம வில்லி பிபாஷா பாசு லூஸ் மாதிரி ஹீரோவை ஹீரோயின் வீட்டுக்கு தனியா அனுப்புவாரா?
10. வில்லி அந்த திரவத்தை ஹீரோயின் சாப்பிடும் மதுவில் கலக்கச்சொல்றா. ஹீரோவுக்கு அதுல இஷ்டம் இல்லை. ஆனா மிரட்டலுக்காக அதை செய்யறான். மேட்டர் ரொம்ப சிம்பிள்.. ஹீரோ ஹீரோயின் கிட்டே நீ வெறி பிடிச்ச மாதிரி நடி,.. நான் கலந்துட்டதா அவ கிட்டே சொல்லிக்கறேன்னா மேட்டர் ஓவர்..
11. ஒரு சீன்ல மிட் நைட்ல திடீர்னு எந்திரிச்சு வரும் ஹீரோயின் ஹீரோ ஏதோ மிக்ஸ் பண்றதை பார்க்கறா.. அவளுக்கு டவுட்டே வர்லை.. மப்புல இருந்தாளா?
12. ஓப்பனிங்க் சீன்ல அவார்டு தனக்குத்தான்னு டென்ஷனோட இருக்கும் வில்லி ஏன் தன் ஃபேவரைட் இயக்குநர் ( அவர் தான் ஜட்ஜ்) கிட்டே அவார்டு யாருக்குன்னு கேட்டுக்கலை/)
மனம் கவர்ந்த வசனங்கள்
1. இது உங்களுக்கு நிகழ்ந்த தோல்வி இல்லை.. திறமைக்கு நேர்ந்த அவமரியாதை
2. என் கிட்டே பொறாமைத்தீ பயங்கரமா எரிஞ்சுக்கிட்டு இருக்கு. இந்த உலகத்தை விட்டே அவளை துரத்தனும்னு வெறி இருக்கு..
3. என்னோட வலி, ஏமாற்றம், துக்கம் எல்லாத்தையும் சரி பண்ண உன்னால மட்டும் தான் முடியும்..
4. உங்க கண்ணுக்கு தெரியும் அந்த கெட்ட ஆவி ஏன் எங்க கண்ணுக்கு தெரியல..?
5. நான் உன்னைக்கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் பின்னால நாய் மாதிரி வருவேன்னு எதிர்பார்க்கிறியா?
6.. அவளை சிரிச்ச முகத்தோட இனி பார்த்தேன் உன் முகத்துல ஜென்மத்துக்கும் நீ சிரிப்பையே பார்க்க முடியாது
சி,பி கமெண்ட் - திகில் பட விரும்பிகள், கில்மா சீன் பிரியர்கள் பார்க்கலாம். அதுவும் 30 வயசுக்கு மேற்பட்டவர்கள்.. பெண்கள் பார்க்க தகுதி இல்லாத படம்.
இந்த அரை குறை கில்மா, திகில் படத்தை ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன்
2 comments:
Gud Review!!!
Senthil, Doha
பகிர்வுக்கு நன்றி!
இன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
Post a Comment