Tuesday, September 18, 2012

துள்ளி எழுந்தது காதல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoKnllIOkBjyWAkuPEwAfJCQahmUWSkvb-965L8GM0mAV5gsCyw-XMl5JXP0UKD_jh4YLb6D9KiiJY00DmOW1XFGGIKqF73VXhaZs_IFkE063tpoTsCM90xpERUUQdhipON9-yId0ZVkje/s1600/Thulli+Ezhunthathu+Kadhal+Movie+Posters.jpg

ஸ்கூலுக்குப்போய் படிக்கட்டும்னு பேரன்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டி ஸ்கூலுக்கு அனுப்பினா தத்திங்க படிக்கறதைத்தவிர எல்லா வேலையையும் செய்ய்துங்க..ஹீரோ , ஹீரோயின் 2 பேரும்  ஸ்கூல்ல ஸ்கூல் மேட்ஸ், க்ளாஸ் மேட்ஸ். 2 பேருக்கும் பாய் மேட்ஸா, பெட் மேட்ஸா ஆக ஆசை. அதாவது காதலிக்கலாம்னு  உள்ளூர ஆசை.. ஆனா 2 பேரும் வெளில சொல்லலை.. 

 ஒரு நாள் இவங்க ஃபிரன்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து டூர் போறாங்க. அங்கே ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கறாங்க.. யாரும் பதற வேணாம். ஒண்ணும் நடக்கலை. அந்த டைம்ல ஹீரோ , ஹீரோயின் 2 பேர் மட்டும் ராத்திரி பூரா  ஹோட்டல் அட்ரஸை மறந்துட்டு ரோடு ரோடா சுத்தறாங்க. அப்போ போலீஸ் ஜீப் வருது. இந்தக்காலத்துல  ரவுடிங்களை விட போலீஸ்ங்கதான் பெண்களுக்கு பெரிய எதிரி.. 


போலீஸ் ஆஃபீசர் ஹீரோயினை ரேப் பண்ணப்பார்க்கறான், ஹீரோயின் கன்னால GUN - போலீஸ் கால்ல சுட்டுட்டு எஸ் ஆகிடறாங்க.. மத்த மாணவர்கள் கேட்டப்போ நடந்த உண்மையை சொல்லாம ஹீரோ ஹீரோயின் கூட தனியா தங்குனதா அளந்து விடறான் ( ஹீரோயினை காப்பாத்தவாம்)


 இது ஹீரோயினுக்கு பிடிக்கலை.. 2 பேரும் லவ்வை வெளிப்படுத்தலை. இந்த மதில் மேல் பூனை சமயத்துல ஸ்கூல் கேண்ட்டீன்ல இருக்கும் ஒரு லவ் ஜோடிங்க மேரேஜ் லைஃபை நடத்த முடியாம தற்கொலை பண்ணீக்குறாங்க.. அதனால ஹீரோயின் மனசு மாறிடறா.. 

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-thulli-ezhunthathu-kadhal-movie-stills/images/tamil-cinema-thulli-ezhunthathu-kadhal-movie-stills07.jpg


 ஹீரோயின் வீட்ல பார்த்த மாப்ளைக்கு  அல்வா குடுத்தாளா? அல்லது தன் ஸ்கூல் மேட் கம் லவ்வர்க்கு அல்வா குடுத்தாளா? என்பது பயங்கர சஸ்பென்ஸ் .. ஏன்னா நானே தூங்கிட்டேன்.. 


2010  ல தெலுங்குல ரிலீஸ் ஆன தகிட தகிட என்ற படத்தின் டப்பிங்க் தான் இது. போஸ்டர்ல பூமிகா, அனுஷ்கா வை போட்டு ஏமாத்திட்டாங்க.. அவங்க கெஸ்ட் அப்பியரன்ஸ் தான்.. 


ஹர்சவர்தன் ரானே தான் ஹீரோ.. தேறிடுவார். ஆள் நல்லா இருக்கார். நடிப்பும் தோடா தோடா மாலும் ஹை.. 


 ஹரிப்ரியா தான் ஹீரோயின். படத்தோட முதல் 4 ரீல்களில் இவர் குட்டைப்பாவாடை , வெள்ளை சட்டையில் வருவது செம கிளு கிளு.


ஸ்லீவ்லெஸ் லெக்சரரா பூமிகா வந்து லீ ஹிப்ல காட்டு காட்டுனு காட்டிட்டு போறார். ஆறடி உயர நெகு நெகு அல்வாவா அனுஷ்கா சும்மானாச்சுக்கும் 2 சீன் வர்றார்.. 


 படம் பூரா ஏகப்பட்ட கூட்டம். யார் யார் என்ன ஒண்ணும் புரியல. 


http://www.cineindya.com/wp-content/uploads/2011/12/Tamil-Movie-Thulli-ezhunthathu-kadhal-Online-Pictures-Moment-3337.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1. இதுவரைக்கும் உன் லைஃப்ல எத்தனை பேர் உன்னை கோபப்படுத்தி இருக்காங்க? அவங்களை எல்லாம் விட்டுட்டு ஏன் உன் மனசுக்கு பிடிச்சமானவங்க  மேல மட்டும் ஆக்‌ஷன் எடுக்கனும்னு நெனைக்கறே?



2. கடவுளே! நான் மட்டும் 100 க்கு 100 மார்க் வாங்குனா  உனக்கு 120 தேங்காய் உடைக்கிறேன்.


 இவன் எக்ஸாம் எழுத வந்தானா? சாமி கும்பிட வந்தானா? அடேய்



3. எல்லாமே தெரிஞ்ச கொஸ்டீனாத்தான் இருக்கு.. ஆனா என்ன ஒரு பிராப்ளம் ஆன்சர் மட்டும் தெரியல.



4. அன்புள்ள பேப்பர் திருத்துவோரே.. என்னை பாஸ் பண்ண வெச்சா இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் செக்கும் பாஸ் ஆகும்



5. பரிட்சைக்கு வந்து பாடம் எழுதுவான்னு பார்த்தா உலகத்துல இருக்கற எல்லா நாட்டு கடவுள் ஃபோட்டோவையும் வரைஞ்சு வெச்சிருக்கானே? 


http://chennai365.com/wp-content/uploads/movies/Thulli-Ezhunthathu-Kadhal/Thulli-Ezhunthathu-Kadhal-11-11-Stills-011.jpg


6. உஷ் அப்பாடா.. பிங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப்பார்த்தே எல்லா கேள்விகளுக்கும் ஆன்சர் பண்ணியாச்சு



7. ஹீரோயின் - என்ன கிஸ் இது? கோயில்ல தீர்த்தம் கொடுத்த மாதிரி 


8. டேய்.. பின்னால பார்றா.. தியேட்டர்ல பிட் ஓடிட்டு இருக்கு.. 



9. என் பேரை இனிமே நீ சொன்னா நான் செத்துடுவேன்.. என்னையும் மீறி எப்போவாவது உன் பேரை நான் சொல்ல வேண்டி வந்தா நான் செத்துடுவேன்.. 


10 . கடவுள் ஏன் நமக்கு 2 காது கொடுத்திருக்காரு  தெரியுமா? 


பெரியவங்க ஏதாவது திட்டுனா இந்தக்காதுல வாங்கி அந்தக்காதுல விட்டுடத்தான்


http://galleries.celebs.movies.pluzmedia.com/albums/pictures/kollywood/movies/2011/Thulli%20Ezhunthathu/Thulli%20Ezhunthathu%20Kadhal%20Movie%20Pictures/Thulli%20Ezhunthathu%20Kadhal%20Movie%20Pictures-d3f6562b527db5463f193bced9e3c8a2.jpg


சொதப்பலான லாஜிக் மிஸ்டேக்ஸ்,இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் ஹை குவாலிட்டி செல் ஃபோன் வெச்சிருக்காங்க. டூர் போன இடத்துல ஹோட்டல் எதுன்னு மறந்துடறாங்க. விடிய விடிய அதைத்தேடிட்டு இருக்காங்க.. படத்தின் முக்கியமான டர்னிங்க் பாயிண்ட் சீன் இது ஆனா படு லாஜிக் சொதப்பல். கூட வந்த ஃபிரண்ட்ஸ்ங்க 6 பேர்ல யாருக்காவது ஃபோன் பண்ணி கேட்டிருக்கலாம்.. அல்லது எஸ் எம் எஸ் அனுப்பி கேட்டிருக்கலாம்.. 


2. தன்னை ரேப் பண்ண வந்த போலீசை ஹீரோயின் கால்ல சுட்டுடறா. இது பெரிய குத்தமா? என்னமோ பெரிய தப்பை அவ பண்ணிட்டதா ஹீரோ பில்டப் குடுத்து அந்த மேட்டரை மறைக்கறாரே? தன் கற்பை காப்பாற்றிக்க அவ கொலையே செஞ்சாலும் சட்டம் சலுகை அளிக்கும் கறதை இயக்குநர் மறந்துட்டாரா? 



3. அப்படியே அதை மறைப்பதாக இருந்தாலும் ஹீரோ என்ன சொல்லி இருக்கனும்.. 2 பேரும் ரோடு ரோடா அட்ரஸ் தெரியாம சுத்திட்டு இருந்தோம்னு உண்மையை சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு  2 பேரும் ஒண்ணாத் தங்குனோம்னு சொல்லனும்?



4. டூர் போற எல்லாரும் கைல ஆளுக்கு ஒரு பேக் தான் எடுத்துட்டு வர்றாங்க. ஆனா ஹோட்டல் ரூம் எடுக்க வரும்போது ஹீரோயின் மட்டும் தன் பேக்கை மறந்து பஸ் ஸ்டேண்ட்லயே வெச்சுட்டு வந்துடறதா சொல்றா.. அது எப்படி? ஆளுக்கு 3 பேக்னா 4 பேக்னா மறக்கலாம்.  எல்லார் கைலயும் ஒரு பேக் தான் இருக்கு.. இவ கை வீசிட்டு பேக்கு மாதிரி வரும்போது பேக் ஞாபகம் வர்லையா? 


5. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை கால்ல சுட்டுட்டு ஹீரோயின் எஸ் ஆகறா. ஆனா அந்த டீம் அவளை தேடவோ பழி வாங்கவோ , துரத்தவோ எந்த ஸ்டெப்பும் எடுக்கலை.. 


6. இந்தப்படத்துல பிளாஸ்பேக் உத்தியே தேவை இல்லாதது.. கதையை குழப்புது.. 


http://haihoi.com/Channels/cine_gallery/Thulli-Ezhunthathu-Kadhal-Movie-Stills-81_S_105.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. படம் போட்ட 52 வது நிமிஷத்துல ஹீரோயின் ஓடி வர்ற சீன்ல டாப் ஆங்கிள்ல  கேமராமேன் ஷூட் பண்ண  ஒரு செம சீன் இருக்கு டோண்ட் மிஸ் இட்.. 




2.  முதல் முறை உன்னை நினைத்து என் கண்கள் அழுகின்றதே பாடல் காட்சி, படமாக்கப்பட்ட விதம், பாடல் வரிகள் அனைத்தும் ஓக்கே.. 




3. படம் போட்ட முதல் 30 நிமிஷம் திரை முழுக்க அலங்கரிப்பது ரம்பா ஸ்டைலில் தொடை வரை மட்டும் ஸ்கர்ட் போட்டு வரும் ஸ்கூல் கேர்ள்ஸ் தர்ம தரிசனம் செம கிளு கிளு.. 



4. படத்துக்கு சம்பந்தமே இல்லாம வந்தாலும்  பூமிகா தன் திறமையை காட்டிச்செல்லும் இடங்கள். வர்ற சீன்ஸ் எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் , லோ ஹிப் சேலை. ட்ரான்ஸ்பேரண்ட்  டிரஸ் தான்.. இப்படி ஒரு காலேஜ் லெக்சரர் இருந்தா எவன் படிப்பான்? 



5. அனுஷ்கா வரும் காட்சிகள் இளமைப்பட்டாசு.. படத்தின் மார்க்கெட்டிங்க்குக்கு  அனுஷ்கா, பூமிகா 2 பேரும் நல்லா யூஸ் ஆகி இருக்காங்க.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdG-orlCR49mC5xaSEzcP_UWWyDZStWV1hxhTzX92kV3MjfLzatR19H-5vYqgjTMj8WEimtJnXyakCnvb8qgufl77E_t_780R7bbUIhbuNa_e9nIn6IivMAxQrHqL_uJVHeQd1uRyEOlM/s1600/Bhoomika+Latest+Spicy+Pictures+in+Saree+on+Thulli+Ezhunthathu+Kadhal+Movie+Gallery+%25286%2529.jpg





ஆனந்த விகடன் மார்க் - 39 ( இது டப்பிங்க் படம் என்பதால் விமர்சனம் வராது )



 குமுதம் ரேங்க் - சுமார் 


 சி பி கமெண்ட் - காங்கிரஸ்க்கு எதிரானவர்கள் அதாவது பி ஜே பி பார்ட்டீஸ் மட்டும் தியேட்டர்ல போய் பார்க்கலாம்.. மற்றபடி டீசெண்ட் ஆசாமிகள் எல்லாம் டி வி ல போடறப்ப பார்த்தா  போதும்


இந்த படத்தை ஈரோடு ஸ்ரீநிவாசாவில் பார்த்தேன்

 http://www.indiancinemagallery.com/Gallery2/d/895677-1/Anushka+in+Thulli+Ezhunthathu+Kadhal++movie+stills+06_09_12+_24_.jpg

2 comments:

Unknown said...

: படத் தலைப்பே கில்மா பப்ளிசிட்டி'க்குத் தான் !

நம்பள்கி said...

//பூமிகாவியும் அனுச்கவையும் போஸ்டரில் போட்டு ஏமாதிட்டான்கள்..//.

போஸ்டரை பார்த்து படம் போகிற ஆளா சார் நீங்க!