உன்னால் முடியும் தம்பி படத்தை சமூக சீர்திருத்தக்கருத்துக்களோடு கே பாலச்சந்தர் கொடுத்த மாதிரி அரசுப்பள்ளிகள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் எப்படி நடந்துக்கனும், என்ன செய்யனும் என்பதை பிரச்சார நெடி இல்லாமல் கமர்ஷியலாகச்சொல்ல முயன்று இருக்கும் நல்ல ஆரோக்யமான தமிழ் சினிமா இது.
ஒரு அரசுப்பள்ளில புதுசா வாத்தியாரா சேர வந்திருக்காரு ஹீரோ. அந்த ஸ்கூல்ல எல்லாமே உதவித்தலைமை ஆசிரியர்தான், ஹெச் எம் டம்மி. காரணம் என்னன்னா ஸ்கூல்ல எல்லாருமே அவர் (உதவித்தலைமை ஆசிரியர்) கிட்டே வட்டிக்கு கடன் வாங்குனவங்க.
ஸ்கூலை ஸ்கூல் மாதிரி நடத்தாம தன் சொந்த சத்திரம் போல் நடத்திட்டு இருக்கும் அவர் கிட்டே இருந்து எப்படி திறமையா அந்த பள்ளியை மீட்டு முன் உதாரண ஸ்கூலா மாத்தறார் ஹீரோ என்பதே கதை.
படம் பிரச்சார நெடியுடன் இருக்கக்கூடாது, ரொம்ப போர் அடிச்சுடக்கூடாதுன்னு ஒரு காதல் கதையை ஊடால விட்டதும் , பசங்க அடிக்கற லூட்டிகளை இயல்பான காமெடி டிராக்காக அமைத்ததும் இயக்குநரின் திறமைக்கு சான்று.
படத்தில் முதல் ஹீரோ வசனகர்த்தாதான். சும்மா ச்சாட்டையால அடிச்சா மாதிரி சுளீர் பளீர் வசனங்கள். ஹீரோ வசனம் பேசும்போதெல்லாம் தியேட்டரில் கைதட்டல் ஒலி ,விசில் சத்தம் பறக்குது
ஹீரோவாக எம் சசிகுமாரின் ஆருயிர் நண்பர் சமுத்திரக்கனி. ஆள் செம கம்பீரம்.அவரது கணீர்க்குரல் படத்தின் உயிரோட்டமான திரைக்கதைக்கு பெரிய பிளஸ். நிர்மலா பெரிய சாமிக்கு செம போட்டி.
ஏ ஹெச் எம்மாக வரும் தம்பி ராமையா நண்பன் பட சத்யராஜ் மாதிரி வில்லனிக் கேரக்டர்.. செம நடிப்பு.. குணச்சித்திரக்கேரக்டர் கொடுத்தால் பிச்சு உதறிடுவேன்னு சொல்லாம சொல்றார்..
இன்னொரு ஹீரோவாக வரும் யுவன் முதல் படம் என்ற அளவில் ஓக்கே..
ஹீரோயினாக அறிவழகி கேரக்டரில் வரும் மஹிமா குண்டு முகம், ஒல்லி உடல் , சமச்சீரான நடிப்பு, கண்ணியமான உடை அலங்காரம் , உறுத்தாத அழகிய ஒப்பனை , சட் சட் என மாறும் முக பாவனைகள் என கவனிக்க வைக்கிறார்.
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஹீரோவுக்கு ஒரு மனைவி இருந்தும் படத்தின் திரைக்கதையில் அவருக்கு டூயட்டோ முக்கியத்துவமோ தராமல் ஒப்புக்குச்சப்பாணி போல் அதிமுக ஆல் மினிஸ்டர்ஸ் போல் அடக்கி வாசிக்க வைத்திருப்பது..
2. ஸ்கூலில், வகுப்பறையில் படத்தின் 70% சம்பவங்கள் நடப்பதால் படம் பார்ப்பவரை அவர்கள் பதின்ம பருவ நினைவுகளை கிளறி விட்டு படத்தோடு ஒன்ற வைத்தது
3. ஹீரோ அந்த ஸ்கூலை எப்படி ஸ்டெப் பை ஸ்டெப் பாக மாற்றுகிறார் என்பதை விலா வாரியாக காட்டுவது
4. லேடீஸ் டாய்லெட் எப்படி இருக்கும் என்று ஒரு ஆர்வத்தில் அந்த
பாத்ரூமில் எட்டிப் பார்த்ததற்காக ( வெறும் காலி பாத்ரூம் தான் ) முட்டிப் போட வைக்கப்பட்ட சிறுவனுக்காக
டீச்சரிடம் ஹீரோ பேசும் பாசிட்டிவான காட்சி, தோப்புகரணம் போட்டால் ஞாபகசக்தி எப்படி அதிகரிக்கும்? என்பதை விளக்கும் காட்சி ,ஹீரோ வித்தியாசமான முறையில் பாடம் நடத்தும் முறைகள், மாணவர்களை பக்குவமாக அவர் அணுகுவது, தேவைப்படும் இடங்களில் கண்டிப்பு காட்டுவது என பல பால பாடங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்து சொல்வது
5. டி இமானின் இசை பிரமாதப்படுத்தாவிட்டாலும் 2 செம மெலோடியை கொடுத்திருப்பது, பின்னணி இசை உறுத்தாமல் தேவைப்படும்போது தலை காட்டுவது.அடி ராங்கி என் ராங்கி, நீ போறே என் உசுரை வாங்கி ,
6. க்ளைமாக்ஸில் தான் வந்த வேலை முடிந்தது என வேற ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிச்செல்லும் ஹீரோவை தடுக்கும் மாணவர்களிடம் அதுக்கு விளக்கம் சொல்லு ஹீரோ பேசும் அட்டகாசமான வசனங்கள்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஹீரோ ஒரு சாதாரண அரசு ஆசிரியர்தான். ஆனா அவர் என்னமோ போலீஸ் ஆஃபீசர் மாதிரி கெத்தா சீன் பை சீன் வர்றார். அவர் நடை, பாடி லேங்குவேஜ் எல்லாம் ஜிம்முக்கு போய் செஸ்ட்க்கு வெயிட் லிஃப்ட் 4 செட் அடிச்சுட்டு அப்படியே கிளம்பி வந்தவர் போல் தேவையற்ற செயற்கைத்தனம் எதுக்கு? கேப்டன் பிரபாகரன் விஜய்காந்த் போல் , சி பி ஐ டைரி குறிப்பு மம்முட்டி போல் ஒரு கம்பீரம் தேவை இல்லாதது.. ( ஈசன் பாதிப்பு?)
2. ஹீரோவா நடிப்பவர் தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவருக்கு ஏகப்பட்ட ஸ்கோப் குடுத்த மாதிரி இருக்கு. நாயகன் படத்துக்குப்பின் கமலுக்கு இப்படி ஒரு நினைப்பு,எண்ணம் உண்டு. அதாவது ஸ்க்ரீன்ல சீன் பை சீன் தான் மட்டும் தான் டாமினேட் பண்ணனும்னு ஒரு எண்ணம் அவருக்கு உண்டு.. அது போல் சமுத்திரக்கனியும் ஆகி விட்டாரோ? டவுட்.
3. படத்தின் முக்கியமான டர்னிங்க் பாயிண்ட்டே ஹீரோ மேல் அபாண்டமான பழி விழுவதும், ஊர் மக்கள் அவரை தப்பா நினைப்பதும்தான். எஜமான், சின்னக்கவுண்டர் படங்களில் வருவது போல், ஆனால் அந்த சீனில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ். மாணவி மீது தப்பான எண்ணம் வரக்கூடாது என்பதற்காக, சக மாணவனை காப்பாற்ற என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லப்பட்டாலும் நம்பற மாதிரியோ ஏத்துக்கற மாதிரியோ இல்லை..
4. ஹீரோயின் மாணவி பாட்டனி ஆசிரியரால் பாலியல் அத்துமீறலுக்கான முன்னோட்ட அணுகுமுறை வலை வீசலுக்கு ஆளாக நேரிடும்போது அந்த மேட்டரை , தகவலை ஏன் ஸ்கூலே கொண்டாடும் ஹீரோ ஆசிரியரிடம் சொல்லவில்லை? பின் வரும் காட்சியில் பெற்றோரிடம் ஏன் சொல்லலை? என சப்பைக்கட்டு கட்டுவது நம்பும்படி இருந்தாலும் ஹீரோவிடம் ஏன் சொல்லலை? என்பதற்கு பதில் இல்லை.
5. தம்பி ராமையா கேரக்டர் வில்லன் மாதிரி தான். அவரைப்பார்த்ததும் வெறுப்பு வர வேணும் என்பதற்காக ரொம்ப ஓவரா அவரை வில்லன் ஆக்கி இருக்க வேண்டாம்.. ரசிக்க வைத்தாலும் இயல்பாய் இல்லை..
6. ஹீரோ உயிருக்குப்போராடும் நிலைல ஹாஸ்பிடலில் இருக்கார்.கூட ஒர்க் பண்ணுன ஆசிரியர்கள், படிச்ச மாணவர்கள் எல்லாம் பதட்டத்தோட ஹாஸ்பிடல் வாசல்ல கூடி நிற்கறாங்க. ஆனா அப்போதான் பிறந்த குழந்தையுடன் வரும் ஹீரோவின் மனைவி கொஞ்சம் கூட பதட்டமே படாம என்னமோ ஜான்சி ராணி கணக்கா வீர வசனம் பேசுவதும், அவருக்கு ஒண்ணும் ஆகாது என்று கம்பீரமாய் சொல்வதும் நம்பற மாதிரியே இல்லை.. தேவையே இல்லை. ஓவரா சீன் போட்டு அழ வேண்டாம். அட்லீஸ்ட் அந்த பதட்டத்தையாவது ,பயத்தையாவது பதிவு பண்ணி இருக்கலாம் .
7. ரெக்கார்டு நோட் சப்மிட் என்பது எல்லா மாணவிகளும் ஒரே டைமில் செய்வது, ஏன் அந்த 4 மாணவிகள் மட்டும் தனியா போறாங்க? பின்னால வரும் ஒரு வசனத்தில் அந்த ஆசிரியர் அப்படித்தான் எங்களுக்கு முதல்லியே தெரியும், பலர்ட்ட கை வைக்க ட்ரை பண்ணி இருக்கார் என்று மாணவிகளே பேசறாங்க. அப்புறம் ஏன் தனியா போகனும்? அட்லீஸ்ட் 4 பசங்களை கூட கூட்டிட்டுப்போய் இருக்கலாமே?
8. விளையாட்டுப்போட்டி நடக்குது. படத்துல முக்கியமான சீன் அது. வில்லன் குரூப் தூக்க மருந்தை கலந்து கொடுக்கறாங்க. ஓட்டப்பந்தயத்தில் ஓடும் மாணவன் தூக்கத்தை முறியடிக்க பச்சை மிளகாயை கடிச்சு வெறி ஏத்துவது , எலும்மிச்சை பழச்சாற்றை முகத்தில் ஊற்றி கண்களை எரிய வெச்சுத்தூக்கத்தை விரட்டுவது இந்த வேலை எல்லாம் பண்றார். இது எல்லாம் போட்டில அனுமதி உண்டா? ஊக்கமருந்து மாதிரிதானே இதுவும்? ( ஜாக்கி சானின் மிராக்கிள்ஸ் படத்தில் வெறி ஏத்திக்க ஹீரோ அப்டி செய்வார்)
9. நடப்பது 200 மீ ஓட்டப்போட்டி . அதிக பட்சம் 20 விநாடிகள் தான். அதுல ஹீரோ மாணவன் பின் தங்கி நிற்பது பின் லெமன் ஜூசை முகத்தில் ஏற்றி வெற்றி இலக்கை எட்டுவது இதுக்கே 1 நிமிஷம் ஆகுமே? அட்லீஸ்ட் அந்த ஓட்டப்பந்தயம் 800 மீ ஓட்டப்பந்தயமாகவாவது அறிவிச்சிருக்கலாம்.
10. ஆரம்பத்துல லவ்வுக்கு நாட் ஒக்கேன்னு சொன்ன ஹீரோயின் க்ளைமாக்ஸ்ல ஓக்கே சொல்றா. ஹீரோ மாணவன் அப்போ பெரிய இவரு மாதிரி நான் லவ்க்கு ஓக்கே இல்லைங்கறார். அதுக்கு அவர் சொல்ற ரீசன் ஏத்துக்கற மாதிரியே இல்லை.. அந்த பொண்ணு கிட்டே “ இப்போ காலதல் வேணாம், படிப்பை முடிப்போம், அப்புறம் லவ்வலாம், என்னைக்கு இருந்தாலும் நீ எனக்குத்தான் “ அப்டினு வசனம் வெச்சிருந்தா காதலுக்கு காதலும் ஜெயிச்சா மாதிரி, படத்தின் பேஸ் மேட்டரான ஆசிரியர் கண்டிப்பு மாணவர் நன்னடத்தை கான்செப்ட்டும் சரி பண்ண மாதிரி ..

11. க்ளைமாக்ஸில் ஏ.ஹெச்.எம்மாக வரும் தம்பி ராமையா கலெக்டர் கலந்து கொள்ளும் விழாவில் தயாளனைக் கொல்ல இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டு போவதெல்லாம் சாரி ரொம்ப ஓவர். அப்படி பப்ளிக்கா குத்துனா அவர் ஜெயிலுக்குத்தான் போவார், கமுக்கமா கலைஞர் மாதிரி ஊழல் பண்ணாம இப்படியா ஜெயா - வளர்ப்பு மகன் மேரேஜ் மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க?
12. அதே போல் ஹீரோ தன்னை கொலை செய்ய ஆள் வெச்சு அடிச்ச வில்லனை தனக்குப்பின் இந்த ஸ்கூலை வழி நடத்த சொல்லி பொறுப்பை ஒப்படைப்பது, இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயன் செய்து விடல் குறளுக்கு எடுத்துக்காட்டாய் இருந்தாலும் அதை காட்சிப்படுத்திய விதம் படு செயற்கை..
13. தனியார் பள்ளி ஆகட்டும், அரசினர் பள்ளி ஆகட்டும், எந்த பள்ளி காலை 9,30 மணிக்கு திறக்கிறது? எல்லா பள்ளிகளும் காலை 8.30 டூ 9 மணி தான்.அதே போல் மாலை 4.30 க்கு ஸ்கூல் முடிஞ்ச பின் ஸ்பெஷல் கிளாஸ் வைப்பது ஓக்கே , நைட் 9 மணி வரையா? ஓவர் ஓவர்/. அவ்ளவ் லேட்டா ஸ்கூல் விட்டும் ரிசீவ் பண்ண பேரண்ட்ஸ் தரப்பில் யாரும் வராமல் பெண்கள் அதாவது மாணவிகள் தனியே போவதும் லாஜிக் மிஸ்டேக்கே ( இதை குறிப்பிட்டு சொல்லக்காரணம் படத்தின் முக்கிய ட்விஸ்ட்டே இந்த இடத்தில் வருவதால் தான் )
14. க்ளைமாக்ஸில் வில்லன் திருந்துவது எல்லாம் விக்ரமன் டைப் பழைய ஸ்டைல். ரொம்ப செயற்கையா இருக்கு..அவரை விட்டா வேற ஆளே கிடையாதா என்ன? அந்த ஸ்கூலை காப்பாற்ற , முன்னின்று நடத்த?
இயக்குநருக்கு திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1. ஹீரோவை பி டி மாஸ்டராக காட்டி இருக்கலாம்.அவர் பாடி லேங்குவேஜ், உயரம் எல்லாத்துக்கும் மேட்சா இருந்திருக்கும்
2. அரசுப்பள்ளியின் அவலம் குறித்து சொன்னதெல்லாம் சரிதான். அதுக்கு என்ன தீர்வு என்பதை படத்தில் சொல்லவே இல்லை.. அரசுப்பள்ளியில் படிப்பவருக்கே அரசாங்க வேலை என்று அறிவிக்க வேண்டும் என்றோ அரசுப்பள்ளி மாணவர்களுக்கே அரசுப்பணியில் முன்னுரிமை என்றோ வாதிடுவது மாதிரி காட்சி வைத்திருக்கலாம்.
3. க்ளைமாக்ஸ் திரைக்கதையின் போக்கில் தேவை இல்லாமல் ஹீரோவை தூக்கி நிறுத்தும் ஒளி விளக்கு எம் ஜி ஆர் மாதிரி இறைவா உன் மாளிகையில் பாடல் போடாதது ஒன்று தான் குறை.. கே பாலச்சந்தரின் வானமே எல்லை க்ளைமாக்ஸ் முகத்தில் அறைவது போல் இருந்தது அது போல் அரசுப்பள்ளி சார்பாக சீன் யோசிச்சு இருக்கலாம்..
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 50
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று
சி.பி கமெண்ட் - மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சமூக நல ஆர்வலர்கள் அனைவரும் பார்த்து கற்றுக்கொள்ள , பின் பற்ற ஏகப்பட்ட மேட்டர்கள் இருப்பதால் எல்லாரும் பார்த்துடுங்க. டோண்ட் மிஸ் இட்..
டிஸ்கி - படத்தின் மனம் கவர்ந்த வசனங்கள் 72.. அவற்றில் எடிட்டிங்கில் தேர்வான 52 பளீர் வசனங்களை தனி பதிவாக பின்னர் போடுகிறேன்.. இவ்வளவு குறை சொல்லி எதுக்கு 50 மார்க்னா இது எல்லோரும் பார்க்க வேண்டிய சமூக சீர்திருத்தப்படம் என்பதால் குறைகளை பின் தள்ளி நிறைகளை பின் பற்ற..
சாருலதா -http://www.adrasaka.com/2012/ 09/blog-post_7975.html

சாருலதா -http://www.adrasaka.com/2012/
6 comments:
ஃகுவார்ட்டேலி லீவ் டைம், கண்டிப்பா பார்க்கணும் !
நல்ல விமர்சனம் .......உங்கள் பகிர்வுக்கு நன்றி.......
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
படம் ஒகேவா??
இந்த வீக் எண்ட்ல பார்க்க நல்ல படத்தை சஜஸ்ட் பண்ணாதுக்கு தேங்க்ஸ்
இயக்குனரிடம் கேட்ட ரெண்டாவது கேள்வி தப்பு சி. பி. தயாரிப்பாளர் பிரபு சாலமன். சமுத்திரகனி இல்லை.
அது மட்டும் இல்லாம பல கேள்விகள் கேட்கணுமேனு கேட்டு இருக்கீங்க.
இதெல்லாம் விட திரைக்கதையில் ஆலோசனை சொன்ன ரெண்டாவது கேள்வி இருக்கே... படத்துக்கும் அரசுக்கும் சம்பந்தமே இல்லை... படம் தெளிவான நோக்கத்தில் எடுக்க பட்டு இருக்கு. மாணவர்களும் ஆசிரியர்களும் எப்படி இருக்க வேண்டும், ஆசிரியர்களும் மாணவர்களை போல கால மாற்றதிற்கு ஏற்ப படித்து கொண்டே இருக்கணும்னு சொல்லுவதற்கு தான் இந்த படம் (பாடம்)...! பின் குறிப்பு (டிஸ்கி) சி. பி. அவர்களே - எனக்கும் இந்த திரைப்பட கம்பெனி கும் எந்த தொடர்பும் இல்லை. நான் இரு முறை இந்த படத்தை பார்த்தேன். பல பேரிடம் பார்க்கும் படி வலியுரிததினேன். நீங்களும் இரண்டாம் முறை பார்த்துதான் சிறந்த வசனங்களை தனி குறிப்பாக தர போகிறீர்கள் என நம்புகிறேன்.
hi ungalukku tamil padamnaa oru maadhuriyum telugu padamnaa oru maadhiriyum nadandhukkuveengalaa.......??? idiots selfish for you........!!!!!!!!! suyanalavaadhihal correctdhaane.......!!!
Post a Comment