ஏசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், ஏசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார். ஏசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்டு அவர் கூறியதாவது:-
மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப் புல்லால் ஆன கையெழுத்துப்படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் ஏசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. முழுமையான வாசகங்கள் அதில் இல்லை.
பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன. அதை ஆராய்ந்து பார்த்ததில், ஏசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது. இருவரும் கணவன், மனைவியாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் ஏசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது.
ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று ஏசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது. நான் அவருடன் வசித்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கையெழுத்துப்படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம் என்றும், அப்படி இருந்தால் இது மிகப்பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் எனவும் கூறியுள்ளார்
ஏற்கனவே மேரி மெகதலீனும், ஏசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது 'தி டாவின்சி கோட்' நூலில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும், புயலையும் கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் மேரி மெகதலீன், ஏசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேரி மெகதலீன் குறித்து பைபிளில் பல்வேறு தகவல்கள் உள்ளன. அவர் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்துக்களும் நிறைய உள்ளன.
மேரி மெகதலீன் ஏசுநாதரின் முதன்மையான பெண் சீடராக இருந்தவர். அவருக்கு சீடர்கள் குழுவில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது. மேரி மெகதலீன் ஒரு விபச்சாரப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்தார் என்று 591ம் ஆண்டு ஒரு குறிப்பு உள்ளது. பின்னர் ஏசுநாதர் அவரை சீர்திருத்தி தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
மேரி மெகதலீன் குறித்து ஏசுநாதரின் சீடர்களான லூக், மார்க், ஜான் ஆகியோரும் நிறையவே குறிப்பிட்டுள்ளனர். ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவரது ஆண் சீடர்கள் பலரும் போய்விட்டனர். ஜான் மட்டுமே இருந்தார். மேரி மெகதலீனும் அவருடன் இருந்தார்.
இதேபோல ஏசுநாதர் உயிர்த்தெழுந்தபோது அதை முதலில் கண்டவர் மேரி மெகதலீன்தான். இதை ஜானும், இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர். இந்நிலையில்தான் ஏசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் ஏசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர். இந்நிலையில்தான் ஏசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன்.
இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர். இந்நிலையில்தான் ஏசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் ஏசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நன்றி -மாலை மலர்
10 comments:
புதிய தகவலாக இருக்கிறது...
புரளியாக இருக்குமோ?
எப்படித்தான் புதுசு புதுசா கிளப்புறான்களோ... ஆவ்வ்
The DA VINCI CODE படத்துலயும் இதே மேட்டரத்தான் சொல்லிருந்தாங்க தல
unnmai
vera athavathu nalla velai iruntha parunga Jesus Christ is a Holy God. He came to earth and died for our sin. He has fulfill the will of his "God Father". He never married anyone and also he is the father of all people in this world.
Erukkalam Namma Rishigalukku Rishi Pathini Erunthagale.....
neengalam kadavule nerla vandhalum nambadha naainga poiya unma madhriye ezhudhuringa da dei
Una nerla parka vaipukaga nan kathirupen Ana athuthan un last day serupu pingidum da naiye
Una nerla parka vaipukaga nan kathirupen Ana athuthan un last day serupu pingidum da naiye
திருந்தாத ஜென்மம் .இரட்சகரையே குற்றம் சொல்றாங்களே ..அவர் வருகையில் உண்மை விளங்கும்
Post a Comment