Thursday, September 20, 2012

கள்ளப்பருந்து - சினிமா விமர்சனம்

http://www.thiruttuvcd.com/wp-content/uploads/2012/09/7638Kalla-Parunthu.jpg 

ஒரு ஊர்ல ஒரு கோடீஸ்வரர். அவருக்கு ஒரே ஒரு சம்சாரம். 2 பொண்ணுங்க.அவ்ளவ் பெரிய பங்களாவுல வேற யாருமே இல்லை. உடனே அட்ரஸ் எங்கேன்னு கேட்கக்கூடாது,.,. இது சினிமா . கதை.. அவ்ளவ் தான்.


கோடீஸ்வரர்க்கு இப்போ ஒரு டிரைவர் கம் கார்டியன் டூ ஹிஸ் மகள் வேணும்.தெரிஞ்சவன் கிட்டே சொல்றாரு. 


இப்போதான் ஹீரோ எண்ட்ரி. இவன் ஒரு மொள்ள மாரி. பொண்ணுங்க  சுடி , பாவாடை முடிச்சவுக்கி.. சிட்டி பாய் தான். ஆனா அடக்க ஒடுக்கமா கிராமத்தான் மாதிரி வேஷம் போட்டுட்டு வர்றான். 


முத பொண்ணுக்கு ஆல்ரெடி ஒரு பாய் ஃபிரண்ட் இருக்கான். அவன் கூட இவ அடிக்கற கூத்துகளை ஹீரோ செல் ஃபோன்ல படம் எடுத்து வெச்சுக்கறான். அதைக்காட்டி ஹீரோயினை மிரட்டி சாரி எதுக்கு மிரட்டனும்? அவ என்ன உத்தம பத்தினியா? சஹானாவுக்கு தங்கச்சி. நயன் தாராவுக்கு அக்கா தானே..


2 பேரும் பெட் மேட் ஆகிடறாங்க. இப்போ ஃபாரீன்ல இருக்கற இன்னொரு பொண்ணு இங்கே வர்றா. அவ இவளுக்கும் மேல லோலாயி.. அவளும் ஹீரோ வலைல சிக்கறா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoF6BsTxbAz58935Rc2NY7bDXoSnn6uormVkevtkm8BaarnmrN4ZSytfgQsOy4UiZ5kUR89GQioYovviRJOQtZqmEu4Wx64QtrY_J4OT0lwD_ATE_kle8cOpTHaKpvO2I7UWPn3MX8tQ/s1600/Kalla+Parunthu+Movie+Stills+%25283%2529.jpg


இப்போ 2 பேருக்கும் சக்களத்தி சண்டை. யார் பர்மனண்ட்டா வெச்சுக்கறதுன்னு.இப்போ ஹீரோவோட பார்வை கண்ணுக்குட்டிகள் டூ  பசுவுக்கு தாவுது.


 கோடீஸ்வரருக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரிய வருது. அந்தாள் உடனே இந்த நாயை அடிச்சு விரட்டாம  கண் தெரியாதவர் மாதிரி நோய் வந்தவர் மாதிரி வீட்டுக்குள்ளேயே. படுத்துக்கறார். மனசுக்குள்ளே பெரிய சிவாஜி கணேசன்னு நினைப்பு.


 எல்லா கண்றாவியையும் தன் கண்ணால பார்க்கறார். அப்புறம் அவர் யார் யாரை கொலை பண்றார்? பலி ஆவது ஆடியன்ஸ் போக வேற யார் யார் என்பதை திரையில் காண்க. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8h_GEqwmoV3fHxJZXGcOCX6J_r8I_PdMU_yHPXfBYfNsE-Tg8zUTptcVo22-NbEjlJDq0IGtPQUA3vcOB9_SJ10Q9AYn6pyelazKVoXX5mY4-p4hebdS4WRtF5_YnJKsPmsEINekZTiYB/s1600/Kalla+Parunthu+Movie+Stills+%25286%2529.jpg



 மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஆம்பளை மாதிரி ஏன் விசில்  அடிக்கறே?
ஏன் பொம்பளை  விசில் அடிக்கக்கூடாதா? 


2. இது வயசுப்பொண்ணுங்க இருக்கற இடம், இங்கே வேலை செய்ய வர்றவன் சாமியார் மாதிரி இருக்கனும்.


அவ்வ்வ்வ்வ், சாமியாரா? அவங்க பொழப்புதான் சந்தி சிரிச்சுக்கிடக்கே?



3. லேடீஸ் எல்லாம் சாமி சாமின்னு கூப்பிடறாங்க.. அவன் என்னடான்னா காமி காமின்னு சொல்லிட்டு இருக்கான் 


4.  நீ புகை பிடிப்பியா? 

 புகையை எப்படிங்க பிடிக்க முடியும்?சிக்காதே? 


 நீ அவ்ளவ் அப்பாவியா? 





 கேனத்தனமான திரைக்கதையில் பல கிறுக்குத்தனமான சறுக்கல்கள்



1. அவ்ளவ் பெரிய கோடீஸ்வரர் வீட்ல  தோட்டக்காரன் , வாட்ச்மேன் யாரும் இல்லை. வீடு கூட்டறது, கண்னாடி ஜன்னல் க்ளீன் பண்றது
 எல்லாமே கோடீஸ்வரிதான் பார்த்துக்கறா.. அவ்லவ் லோ பட்ஜெட்டா? 


2. அப்பா மகள் மேல் டவுட் வந்து கார் டிரைவரை  கண்காணீப்பாளரா போட்டிருக்கா.. மக ஒரு கேப்மாரி . என்ன பண்ணனும்? காலேஜ் வரை கார்ல வந்த பின் அவனை அனுப்பிட்டு இவ டாக்சியை பிடிச்சு காதலன் வீட்டுக்கோ பார்க்குக்கோ போய் கில்மா பண்ணுனா மேட்டர் ஓவர். அதை விட்டுட்டு அந்த லூசு அந்த டிரைவரை நீ இங்கேயே இரு , நானும் அவனும் கில்மா பண்ணிட்டு வந்துடறோம், இதை அப்பா கிட்டே சொல்லாம இருக்க மாசா மாசம் ரூ 10000 சம்பளம் நான் தனியே தந்துடறேன்கறா. உஷ் அப்பா முடியல 



3. இந்தக்காலத்துல மீடியம் பட்ஜெட் அல்லது மிடில் க்ளாஸ் ஃபேமிலி காரங்களே ரூம் எடுத்து தங்கறாங்க. அவ்ளவ் பெரிய கோடீஸ்வரி ஏன் காட்டுக்குள்ளே கில்மா பண்றா? 



4. கோடீஸ்வரர் வீட்டுல எப்பப்பப்போ என்ன நடக்குது? எவ்ளவ்  பணம் சுருட்ட முடியுதுன்னு ஹீரோவே தான்   ஜி சேகரன் கிட்டே சொல்றாரு.அப்புறம் அவர் பங்கு கேட்கும்போதாவது மறைச்சிருக்கலாம். அதை விட்டுட்டு  அவரை ஏன் பகைச்சுக்கனும்?



5. ஜி சேகரன் , கிங்க்காங்க் காமெடி டிராக் படத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத மரண மொக்கை. படு கேவலமா, ரம்பமா, இருக்கு. இந்த லட்சணத்துல கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம போஸ்டர்ல  ஜி சேகரன் கிங்க்காங்க் காமெடியில் கலக்கும்னு சப் அட்வர்ட்டைஸ்மெண்ட் வேற... 



6. ஃபாரீன்ல இருந்து வர்ற அக்கா என்னமோ அமெரிக்காவுல ஆம்பளைங்களே இல்லாத மாதிரி ஹீரோவை அங்கே கூட்டிட்டு போறதா சொல்றது செம காமெடின்னா அவளோட மிக்சர் பார்ட்டி புருஷன் அதுக்கும் ஓக்கே சொல்வது அதை விட கூத்து



7. கோடீஸ்வரரா இருக்கும் ஆள் தன் கிட்டே வேலைக்கு சேர்ந்த டிரைவர் வீட்டுக்கு வருவதும் , அவனை செக் பண்ண வந்தேன் என சொல்வதும்  இன்னொரு கூத்து. 



8. ஹீரோ கில்மா மேட்டர் கோடீஸ்வரருக்கு தெரிஞ்சதுமே கதை முடிஞ்ச மாதிரி. அதுக்குப்பின் தேவையே இல்லாம இழு இழுன்னு இழுத்தது மன்னிக்க முடியாத குற்றம் 



9. கோடீஸ்வரர் மனைவியா வர்ற ஆண்ட்டி கூட தேறிடும், ஆனா மகள்களா வர்ற பேரும் உவ்வே.  இயக்குநர்க்கு அழகியல் ரசனையே கிடயாதா? 





இயக்குநர் பாராட்ட வேண்டிய இடங்கள்



 கொலை தான் பண்ணனும்



 சி பி கமென்ட் - படத்துல மருந்துக்குக்கூட சீன் இல்லை. போஸ்டரைக்கூட பார்க்க லாயக்கு இல்லை.


8 comments:

Angry Bird said...

யோவ் ஆபீஸ்ல உன் பதிவ படிக்குற மாதிரி படத்த வையா.

ராசுக்குட்டி said...

போஸ்டர பாத்து ஏமாந்த கூட்டத்துல நீங்களும் ஒருத்தரு போல..

Arun said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

கள்ளப்பருந்துக்கு சிறகை மட்டும் முறிக்காம காலையும் வெட்டிட்டாங்களா...

Kathiravan Rathinavel said...

என்ன படத்துல சீன் இல்லையா?
நீங்க போட்டுருக்க படத்தை பார்த்தா அப்படி தோணலியே?

Unknown said...

கன்றாவி படம் என்பது மட்டும் உண்மை
www.worldcriclub.com

Menaga Sathia said...

2 1/2 மணிநேரம் எப்படி இந்த படத்தை பார்த்தீங்க??

செக்காரக்குடி♥கண்ணன் said...

யோவ்,சிபி.படத்துலயேகில்மா,இல்லங்ற,அப்புறம்இந்தபகக்கதுக்குமட்டும,எதுக்குய்யாகில்மா,போட்டோ♥இருந்தாலும்♥அந்த,ஆன்டிநல்லாதான்இருக்கிறா,♥♥♥♥♥♥♥ஹிஹிஹிஹி