Friday, September 28, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 28.9.2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPkC8mOkR0MqXuZISZ6qI2HCyovHRMpfXi9aQ63W2NLA0f_KyyuDBVFzfGuX9jO335xh69-enFebTOn_L0-wrYxE5HlqhXUL39QlM2afeMEqpN5Gvy-ou00ptOXxD3bbYeY22xIflLbJE/s1600/download-latest-movie-stills-thaandavam-songs-posters-tamil-mp3-songs-free_.jpg 


1. தாண்டவம் -  யு.டி.வி., நிறுவனம் சார்பில், ரோணீஸ் ஸ்குருவாலா தயாரிக்கும் புதியபடம் "தாண்டவம்". விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், சந்தானம் ஆகியோர்களுடன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவும் நடிக்கிறார். மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் புகழ் விஜய் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

ஏமாற்றப்பட்ட ஒருவனின் பாதிப்பு, அவனோட நியாயமான ரவுத்திரம் தான் இந்த படத்தின் கதை.விக்ரமுக்கு சவால் கொடுக்கிற படமாக தாண்டவம் இருக்கும், நம் அனைவரின் நெருக்கடிச் சூழலையும் தாண்டவம் படம் பேசும் என்கிறார் டைரக்டர். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.முதற்கட்ட படப்பிடிப்பு டில்லியிலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு லண்டனிலும் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களிலும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நடைபெற்று உள்ளது. 


தாண்டவம் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி  அந்தப் படம் வெளியாகிறது.


உதவி இயக்குநர் பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் விக்ரம், நடிகை அனுஷ்கா நடித்த தாண்டவம் படத்தின் கதை என்னுடையது. இந்த படத்தின் கதையை யு.டி.வி. நிறுவனத்திடம் நான் கூறினேன். அந்தக் கதையை படமாக்கும் போது படத்தின் இணை இயக்குனராக சேர்க்கிறோம் என்று அந்த நிறுவனத்தின் சார்பில் எனக்கு வாக்குறுதி அளித்தனர்.


ஆனால் என்னை சேர்க்காமலேயே படத்தை தயாரித்துள்ளனர். இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தாண்டவம் படம் வெளியிடப்பட்டால் எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அதை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
தாண்டவம் படத்தில் வரும் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும். எனக்கு தகுந்த நஷ்டஈட்டை வழங்க யு.டி.வி. நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்," என்று கோரியிருந்தார்.


யு.டி.வி. சார்பில் ஆஜரான வக்கீல் சிவானந்தராஜ், "அவர், யு.டி.வி. நிறுவனத்திடம் மனுதாரர் கதை கூறினார் என்பதற்கு ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. தாண்டவம் படத்தில் இருப்பது அவரது கதை அல்ல. இந்தப் படம் வெளியிடப்படாவிட்டால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே தடை விதிக்கக் கூடாது," என்று வாதிட்டார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.சந்துரு, தாண்டவம் படம் வெளியாவதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.


ஈரோடு அபிராமி, சண்டிகா , அன்னபூரணி ஆகிய 3 தியேட்டர்களில் ரிலீஸ்  

விமர்சனம் படிக்க -

review - http://www.adrasaka.com/2012/09/blog-post_7923.html


 2. http://www.travelindia-guide.com/bollywood-movies/wallpaper-m/omg-movie-latest-poster-akshay-kumar-pM4.jpg
 2.OH MY GOD -கோச்சடையான் ஷூட்டிங் முடித்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினி அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கிறார் எனத் தெரியாத நிலையில் தமிழ்த்திரைத்துறையில் பல செய்திகள் உலா வருகின்றன. சமீபத்தில் இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த ’ஓ மை காட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. 



     

பெரிய புயலில் தன் கடையை இழந்துவிடும் ஒருவன் கடவுள் நம்பிக்கையை இழந்து கடவுளை அழிக்க துவங்கும் பயணம் தான் இந்த படத்தின் கதை. இந்தியில் ஓ மைகாட் படத்தை தயாரித்த அக்‌ஷய் குமார், ரஜினி நடித்தால் தமிழிலும் அவரே தயாரிக்க முன்வருவதாக கூறியிருக்கிறாராம்.  ரஜினி நடித்த பாபா படத்தின் கதையும் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட கதை தான். 

ஆனால் பாபா எதிர்பார்த்த அளவு வெற்றியடையாததால் இந்த படத்தில் ரஜினி நடிப்பாரா? என அவர் தான் சொல்ல வேண்டும். இந்தியில் இந்த படம் பார்த்த ரசிகர்களுக்கு ’கோ கோவிந்தா’ என்ற பாடலுக்கு பிரபுதேவாவும், சோனாக்‌ஷி சின்ஹாவும் போட்ட குத்துபாடல் தமிழில் இருக்குமா என்பதே பெரிய கவலையாக இருக்கிறது. இந்தி திரையுலகின் பிரபல நடிகர் பரேஷ் ரவால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் ரீமேக்கிலும் அவர் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் ரிலீஸ்  

 விமர்சனம் படிக்க -

http://www.adrasaka.com/2012/10/oh-my-god.html
 http://niaje.com/wp-content/uploads/2012/09/resident-evil-retribution-poster.jpg
3. resident evil retribution -ரெசிடெண்ட் ஈவில் 5: ஹாலிவுட் ஆக்ஷன் விருந்துக்கு ரெடியாகுங்க!

பல பாகங்கள் வந்து வெற்றி பெற்ற படங்களில் 'ரெசிடெண்ட் ஈவில்' படத்துக்குச் சிறப்பிடம் உண்டு. அறிவியலும் ஆக்ஷனும் கலந்த அதிரடிப்பட வரிசையில் இப்படம் புகழ் பெற்றதாகும்.

இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகி வெற்றியில் ஒன்றை ஒன்று மிஞ்சியுள்ளதை ஹாலிவுட் பட ரசிகர்கள் நன்கு அறிவர்.

இப்போது ஐந்தாம் பாகமாக வெளிவரவுள்ளது 'ரெசிடெண்ட் ஈவில் - ரீட்ரிபூஷன்'. இதை எழுதி இயக்கியிருப்பவர் பால். டபிள்யூ. எஸ்.ஆண்டர்சன். இது வீடியோ கேம்ஸ் சீரிஸ் அடிப்படையில் கதை பின்னப்பட்டதாகும். புதிய படத்தில் இதற்கு முந்தைய படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்களும் உண்டு. புதிதாகச் சில பாத்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மில்லா ஜாவோ விச், சீன்னா கிளாரி.ஜோஹன் அர்ப்.லி பிங்பிங், ஷன் ராபர்ட்ஸ்,கெவின் டுராண்ட்... போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கதை எழுதி இயக்கியுள்ளவர்.பால்.டபிள்யூ.எஸ்.ஆண்டர்சன். இவர் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கூட. இசை - டாமன்மேன்டி இசைக்குழு, ஒளிப்பதிவு -க்ளன் மேக் பெர்சன்.

இப்படத்துக்கு 2011 அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. டிசம்பரில் முடிந்தது. பக்கா திட்டமிடல். தொடங்கப்பட்ட அன்றே வெளியிடும் தேதியும் குறிக்கப்படுவது ஹாலிவுட் மரபு. அதன்படியே அன்று அறிவிக்கப்பட்டபடி 2012 செப்டம்பர் 14ல் வெளியாகிறது இந்தப் படம்.

இந்தப்படம் ஐநாக்ஸ் 3டியில் மட்டுமல்ல, 2டியிலும் வெளியாகிறது.

அம்பரல்லா கார்ப்பரேஷன் பல மர்மங்கள் நிறைந்த அமைப்பு. ஆலிஸூக்கும் அதற்கும் என்ன தொடர்பு ? பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்க ஆலிஸ் முயல்கிறாள். ஒரு கட்டத்தில் தான் யார் என்கிற மர்ம முடிச்சுக்கும் விடை கிடைக்கிறது. அம்பரல்லா கார்ப்பரேஷன் என்ன செய்கிறது என்கிற கேள்விக்கும் விடை கிடைக்கிறது.

மர்மங்கள், அதிரடி அக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக படம் உருவாகியுள்ளது. அலிஸாக மில்லா நடித்திருக்கிறார்.

டோக்கியோ, நியூயார்க், லண்டன் ஆகிய இடங்களில் கதை நிகழ்வதாகக் காட்டப்படுகிறது. அதாவது ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க கண்டங்கள்தான் கதைப் பின்னணி. பொதுவாக ஹாலிவுட் படங்கள் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து,ஆஸ்திரேலியா, சீனா என எதாவது ஒரு நாட்டில் நடப்பதாகவே இருக்கும். இது மூன்று கண்டங்களில் நிகழும் உலகளாவிய படமாக இருக்கும்.

ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட புகழ் பெற்ற ஆக்ஷன் - சயின்ஸ் பிக்ஷங்களின் செல்வாக்கு இப்படத்தில் உண்டு. அவற்றையெல்லாம் தாண்டிய பிரமாண்ட முயற்சிகளும் உண்டு.

படத்தில் இடம் பெரும் சண்டைக் காட்சிகள் ஆசிய சினிமாவின் தாக்கத்தில் இருக்கும் என்கிறார்கள். தாய்லாந்து படங்களில் ஆக்ஷன் பாதிப்பும் இருக்குமாம். ஆக்ஷன் காட்சிகளில் '3டி' தொழில் நுட்பம் மயிர்க்கூச்செரிய வைக்கும் என்கிறார்கள்.

மொத்தம் 44 நாட்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. டோரன்டோவிலுள்ள சினிஸ்பேஸ் கிப்ளிங் ஸ்டுடியோ, நியூயாக்கிலுள்ள டைம்ஸ் கொயர், மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கம் போன்ற புகழ் பெற்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இது, ரெசிடெண்ட் ஈவில் தொடரில் 3டி பயன்படுத்தப்படும் இரண்டாவது படமாகும். ரெட் எபிக் கேமெரா பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்க்ரீன் ஜெம்ஸ் விநியோகிக்கிறது. இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

தமிழ் உள்பட மற்ற இந்திய மொழிகளிலும் 'ரெசிரெண்ட் ஈவில்- ரீட்ரிபூஷன்' வெளியாகிறது. ஒரு புதிய ஆக்ஷன் அனுபவத்துக்கு தயாராகுங்கள்!


 ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்

 http://superwoods.com/photo-galleries/rebel-07/images/rebel-0712.jpg

4.  REBEL -தெலுங்கு ப்டம், பிரபாஸ், தமனா, தீக்‌ஷா சேத், பிரம்மானந்தா நடிக்க இந்தப்படம் 14 நாட்களுக்கு முன் ஆந்திராவில் ரிலீஸ். இங்கே இன்னைக்குத்தான் ரிலீஸ். இந்த படம் பற்றி ஒரு செய்தி மாலை மலரில் வந்தது  கீழே.. 



நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. அடுத்து தெலுங்கில் ரீபெல் என்ற படத்தை இயக்குகிறார். இதில் அனுஷ்காவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அவர் நீக்கப்பட்டார்.

அனுஷ்காவுக்கு பதில் தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். லாரன்சுக்கும் அனுஷ்காவுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் அதனாலேயே படத்தில் அவர் தூக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே காஞ்சனா படத்தில் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டு லட்சுமிராய் நடித்தார்.
இது குறித்து லாரன்சிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ரீபெல் படத்திற்கு அனுஷ்காவை தேர்வு செய்தது உண்மைதான். ஆனால் அவர் நடிக்க முடியாமல்போனது எதிர்பாராமல் நடந்த ஒன்று. இதை வைத்து எங்களுக்குள் சண்டை என்று வதந்திகள் பரவியுள்ளன. அனுஷ்காவுடன் எனக்கு எந்த தகராறும் இல்லை.

ஈரோடு அண்ணாவில் ரிலீஸ் 


விமர்சனம் படிக்க -
http://www.adrasaka.com/2012/09/rebel.html
 http://themovieblog.com/wp-content/uploads/2012/08/looper-poster-quad.jpg
5. looper - ஆதவன் படத்துல ஹீரோ தன் சொந்த அப்பாவையே கொலை பண்ண போகும் வாடகைக்கொலையாளி. அந்த மாதிரி இதுல ஹீரோ தன்னையே கொலை பண்ண அமர்த்தப்படும் கொலையாளி.. அல்ஜீப்ரா மாதிரி இருக்கா? அதாவது இது சயின்ஸ் ஃபிக்சன் கதை . வாடகைக்கொலையாளீயாளியான ஹீரோ எதிர்காலத்தில் உள்ள பெரிய தாதா ஒருத்தரை கொலை பண்ண நியமிக்கப்படறார். 25 வருஷங்கள் தாண்டி போய் பார்த்தா அந்த ஆள் இவரே தான்.//  தன்னையே எந்த கேனக்கிறுக்கனாவது கொல்வானா? எப்படி எஸ் ஆகறார்? என்பதே கதை .. 


 தமிழ் நாட்டில் ரிலீஸ் இல்லை, ஒன்லி @ ஃபாரீன்


 நன்றி - மாலை மலர், தினமலர், தினமணி, சினிமா உலகம்



7 comments:

deva said...

HI Bro,

Rebel Telugu Movie Release today(18/sep/2012) not 14days back..,

Pls change date, if any doudt pls go to superwoods website.,

THanx

Sweet Idiot

Senthil said...

Thandavam review ??????//

Thanks
Senthil,Doha

ராஜி said...

நாட்டுக்கு ரொம்ப பயன்படும் விசயங்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி

முத்துசிவா said...

அண்ணாத்த...மணி 2.30 ஆச்சி... தாண்டவம் விமர்சனத்த இன்னும் காணுமே?

Unknown said...

தாண்டவம் - விமர்சனம்???????

கலி முத்தி போச்சு.... இன்னும் சி.பி. விமர்சனம் வரல...

செக்காரக்குடி♥கண்ணன் said...

யோவ்,சிபிசீக்கிரமா,தாண்டவம்....விமர்சனம்போடு,தியட்டர்ல,பாக்கலாம?டிவிடி,ல...பாக்கலாமாணுஉங்கவிமர்சணத்தபாத்துட்டுதான்முடியுபண்ணணும்

செக்காரக்குடி♥கண்ணன் said...

முத்துசிவா,,,ண்ணா.......உங்கவலைபூசூப்பர்ணா,செமகாமெடி