சின்ன வயசுலயே கலைஞர் மாதிரி கிரிமினல் மைண்ட் உள்ள ஒருத்தர் ஜெ பண்ற மாதிரி ஆர்ப்பாட்டம்,ஆணவம், படோடபம் எல்லாம் இல்லாம மு க ஸ்டாலின் மாதிரி அடக்கி வாசிச்சு கமுக்கமா , அமுக்கமா, டாக்டர் ராம்தாஸ் மாதிரி சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை பச்சோந்தியா மாத்திக்கிட்டுப் பண்ற ஆள் மாறாட்ட தில்லு முல்லுகள் தான் கதை..
சின்ன வயசுலயே ஹீரோ தன் அம்மா தப்பு பண்றதை பார்த்து அப்பா கிட்டே சொல்லிடறான், அப்பா தற்கொலை, ஆனாலும் மாறாத அம்மாவை வீட்டுக்குள்ள வெச்சு கொளுத்திடறான் வித் தட் கள்ளக்காதலன்..
ஜெயில்ல சில வருஷம் இருந்துட்டு வெளீல வந்து பஸ்ல ஊருக்குப்போறப்ப எங்கேயும் எப்போதும் மாதிரி ஒரு விபத்து, அருகில் அமர்ந்திருக்கும் ஒரு முஸ்லீம் ஆள் அவுட்.. அந்தாளோட சூட்கேஸை அபேஸ் பண்ணி அவர் கிட்டே இருக்கும் சர்ட்டிஃபிகேட் வெச்சு காலேஜ் சேர்ந்துடறான்..
காலேஜ்ல ஒரு பணக்காரப்பையன் நட்பு கிடைக்குது.. அவன் பங்களாவுலயே சர்வண்ட் கம் பேயிங்க் கெஸ்ட்டா தங்கிடறான்.. அந்த பணக்காரப்பையன் ”மாமே” மாதிரி லேடீஸ் மேட்டர்ல வீக்.. பல பொண்ணுங்களோட சுத்தறவர்..ஆனா அவரை நல்லவர்னு நம்பி ஒரு பொண்ணு லவ் பண்ணுது..
ஒரு கட்டத்துல ஹீரோவால தனக்கு பிரச்சனை வரும்னு பணக்காரப்பையன் நினைக்கறான்.. ஹீரோ முஸ்லீமா ஆள் மாறாட்டம் பண்ணிட்டு இருக்கும் இந்துன்னு தெரிஞ்சுடுது.. 2 பேருக்குமான வாக்குவாதத்துல சண்டைல ஹீரோ அவனை கொலை பண்ணிடறார்..
பாடியை புதைச்சுடறார்.. ஹீரோவுக்கு கோவை குணா மாதிரி மிமிக்ரி தெரியும்.. அதனால செத்துப்போன ஆள் குரல்ல ஃபோன்ல மட்டும் அப்பப்ப பேசி அவங்க பெற்றோரை,காதலியை அவன் உயிரோட எங்கேயோ தலை மறைவா இருக்கற மாதிரி நம்ப வைக்கிறான்.
இந்த மேட்டர் அந்த பணக்காரப்பையனோட நண்பன் ஒருத்தனுக்கும் தெரிஞ்சுடுது.. அவனையும் க்ளோஸ் பண்ணிடறான் ஹீரோ..
இப்போ அந்த பணக்காரப்பையனோட காதலிக்கு டவுட் வந்துடுது.. அவளை எப்படி நம்ப வைக்கிறான், போலீஸ்க்கு எப்படி அல்வா தர்றான்? என்பதுதான் மிச்ச மீதிக்கதை..
சும்மா சொல்லக்கூடாது திரைக்கதை பக்கா.. ஹாலிவுட் பட சுடல்தான்.. ஆனாலும் திறமையா பண்ணி இருக்காங்க ( நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்- வடிவேலு)
சம்சாரம் ஃபாத்திமா தான் தயாரிப்பு. கணவர் விஜய் ஆண்ட்டனி தான் ஹீரோ.. சம்சாரம் ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும் போல அண்ணன் ரொம்பவே அடக்கி வாசிக்கறார்.. அவர்க்கு நடிப்பு வர்லைங்கறது திரைக்கதை அமைப்பால தெரியவே இல்லை.. ஆள் நல்லா ஜை ஜாண்டிக்கா இருக்கார்.. கூலிங்க் கிளாஸ் போட்டுட்டா அம்சமா இருப்பார், ஆனா ஒரு சீன்ல கூட அப்படி வராதது ஏமாற்றமே..
ஹீரோயின் ரூபா மஞ்சரி. ஹேர் ஸ்டைல் சூப்பர் .. இந்த மாதிரி ரவுண்ட் ஃபேஸ் ஃபிகர்ங்களுக்கு கர்லிங்க் ஹேர்ஸ்டைல் பக்காவா செட் ஆகும்.. அவரோட டிரஸ்சிங்க் சென்ஸ் அழகு.. கண்ணுக்கு ஐ டெக்ஸ் மையை நம்பாம என்னென்னமோ தடவி இருக்கார்.. எதிர் காலத்தில் தவிர்த்தா அவருக்கும், கண்ணுக்கும் நல்லது..
பணக்காரப்பையனா ஆனந்த தாண்டவம் ஹீரோ சித்தார்த் வர்றார்.. அமெரிக்கன் ஸ்டைல் ஹேர் ஸ்டைல் அக்மார்க் பணக்காரப்பையன் லுக்,.. ஆள் சோ க்யூட்.. அசால்ட்டா நடிச்சிருக்கார்..
அனுயா 6 காட்சிகளில் வந்தாலும் அள்ளிக்கறார். ஆல்ரெடி சிவப்பா இருக்கும் அவர் கன்னத்தில் அதீத சிவப்பு ஒப்பனை பண்ணி இருப்பது எதுக்கு? ஸ்லீவ்லெஸ் டிரஸ் தான் அணிவேன் என்ற இவரது பிடிவாதத்துக்கு ஒரு சபாஷ்.. இவரை இன்னும் யூஸ் பண்ணி இருக்கலாம் ( படத்துல)
போலீஸ் ஆஃபீசரா வர்றவர் நல்லா பண்ணி இருக்கார் என்றாலும் ஒரு வி ஐ பி ஹீரோவை போட்டிருந்தா படத்தோட மார்க்கெட்டிங்க் நல்லா இருந்திருக்கும்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஹீரோவுக்கு அப்பாவா காலேஜ்ல வந்து ஒரு சீன்ல நடிச்சுட்டு போறவர் ஹீரோ கிட்டே மிரட்டி பணம் பறிக்க ஹோட்டல்ல ஹீரோவை சந்திக்கறார்.. அப்போ காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஏதோ கலாட்டா பண்ண ஹீரோ அவங்களை பீர் பாட்டிலை உடைச்சு ரகளை பண்ற சீன் பார்த்து அரண்டு மிரண்டு தலை தெறிக்க ஓடும் சீன்.. அட்டகாசம்.. தியேட்டரே அப்ளாஸ் மழையில்
2. ஹீரோ ஃபோர்ஜெரி சிக்னேச்சர்ல கேடி என்பதை படத்தின் முதல் சீன்லயே காட்டி விடுவது பின் வரும் பல காட்சிகளுக்கு உதவியா இருக்கு..
3. தயாரிப்பாளர் தன் மனைவி என்பதால் ஹீரோ அடக்கியே வாசித்து இருப்பது. வாய்ப்பு இருந்தும் எந்த பெண்ணையும் அவர் படத்துல தொடலை.. டி ஆர்க்குப்பின் தமிழ் சினிமாவில் பெண்ணை தொடாத ஹீரோ என்ற பட்டம் கிடைக்கலாம்.. ( படத்துல வர்ற எல்லாப்பெண்னையும் தொடும் ஹீரோ பட்டம் சாட்சாத் சிம்புவுக்கே என்பது கோலிவுட் டைரிக்குறிப்பு)
4. திரைக்கதை அமைப்பு மிகத்தெளிவாக, அமைதியாக எந்த அவசரமும் இல்லாம அதி புத்திசாலித்தனம் எல்லாம் இல்லாம நார்மலா போவது பிளஸ்..
5. படத்தின் கதை, திரைக்கதை வாய்ப்பளித்தும் எந்த இடத்திலும் கவர்ச்சியை புகுத்தாமல் மிக கண்ணியமாக காட்சிகளை வடிவமைத்த விதம் செம

இயக்குநரிடம் சில கேள்விகள், ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1. சக மாணவனுக்கு ஹீரோ போலி கையெழுத்து போட்டு உதவறார்.. தப்பு தான்.. ஆனா ஹெச் எம் நாளை ஸ்கூ;லுக்கு வரும்போது அம்மா அப்பாவை கூட்டிட்டு வான்னு சொன்னா போதாதா? ஏன் அப்பவே அனுப்பனும்? ஏன்னா அந்த ஸ்கூல் எல்லா மாணவர்களையும் ஸ்கூல் பஸ்ல பிக்கப் பண்ணிட்டு டிராப் பண்ற பஸ்.. பாதிலயே அனுப்புனா எப்படி?
2. பாதில வீட்டுக்கு வரும் ஹீரோ வீடு உள் பக்கம் பூட்டி இருப்பதை பார்த்து கதவை தட்டறான்.. உடனே கள்ளக்காதலனை பாத்ரூமிலோ கட்டிலுக்கு அடியிலோ ஒளிச்சு வைக்காம அம்மாக்காரி கதவை திறக்கறா.. மாமா இங்கே வந்துட்டுப்போனதை அப்பா கிட்டே சொல்லிடாதேங்கறா.. அவ்ளவ் ஏன் ரிஸ்க்? கதவைத்திறந்ததும் “ என்னப்பா? என்ன பிரச்சனை? ஏன் நேரத்துலயேவந்துட்டே? வா ஸ்கூலுக்கு போலாம், விசாரிக்கலாம்னு கேட்டிருக்கலாம்..கதவை திறந்து போட்டபடி அவன் கூட கிளம்பினா கள்ளக்காதலன் எஸ் ஆகிடுவான்
3. தன் அம்மாவையும், கள்ளக்காதலனையும் ரூம்ல வெச்சு சாத்தி எரிக்கறார் ஹீரோ.. அப்ப தப்பிக்கற ஐடியாவுல தான் அவர் டிரஸ் எல்லாம் பேக் பண்ணி வெச்சிருக்கார்.. அது ஒரு விபத்து மாதிரி தான் எல்லாருக்கும் தெரியுது.. அப்புறம் எப்படி அவர் போலீஸ்ல மாட்டி ஜெயில்க்கு போறார்? என்பதற்கு படத்தில் விளக்கம் ஏதும் இல்லை ( எடிட்டிங்க்ல கட் ஆகி இருக்கலாம் ஃபுட்டேஜ் பிராப்ளமா?)
4. ஹீரோ இந்து, அவர் முஸ்லீமா ஆள் மாறாட்டம் பண்றார்.. கையெழுத்து, தொழுகை எல்லாம் கத்துக்கறார்.. ஆனா முஸ்லீம்களின் முக்கிய அடையாளமான சுன்னத் ஆபரேஷன் ஏன் செஞ்சுக்கலை..? அவர் மாட்றதே அதை வெச்சுத்தானே? ஒரு கிரிமினல் அது கூட யோசிக்க மாட்டானா?
5. ஹீரோ முஸ்லீம் கிடையாது என்பதை இன்னொரு ஆண் கண்டுபிடிப்பது ஹாலிவுட்டுக்கு ஓக்கே. எப்பவும் சுடும்போது நேட்டிவிட்டி கலக்கனும்.. ஹீரோ ஒரு பொண்ணு கூட கில்மா பண்றப்ப அந்த லேடி கண்டு பிடிச்சா கில்மாவுக்கு கில்மா.. லாஜிக்குக்கு லாஜிக் .. உறுத்தல் ஏதும் இருக்காது..
6. இழவு விழுந்த வீட்டில் ஒரு வாரம் வரை உறவினர் கூட்டம் இருக்கும். ஆனா ஹீரோவின் அப்பா இறந்த அடுத்த நாளே வீடு வெறிச்சோடி இருக்கு.. ஹீரோவின் அம்மா தன் கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே கில்மா.. ஹால்ல பையன்.. என்னதான் மிட் நைட்னாலும் யாரும் அவ்ளவ் தைரியமா அப்படி செய்ய மாட்டாங்க
7. சித்தார்த் 2 ஃபிகர்களை தள்ளிட்டு அவுட்டோர் போய்ட்டு 2 நாள் கழிச்சு வர்றார்.. அப்போ அவர் கிட்டே உங்க லவ்வர் வந்துட்டுப்போனாங்க என்பதை ஹீரோ ஏன் சொல்லலை? அதானே பிரச்சனை ஏற்பட முதல் காரணம்? அவ சொல்லிடுவான்னு தெரியாதா?
8. அதே மாதிரி 2 நாள் டூர் போகும் சித்தார்த் அந்த 2 நாள்ல தன் காதலி தன்னைத்தேடி வீட்டுக்கு வருவா-ன்னு தெரியாதா?ஃபோனை ஆஃப் பண்ணி வெச்சிருக்கும்போது காதலி என்ன ஆச்சுன்னு பார்க்க வராமலா இருப்பா?
9. ஹோட்டல்ல கலக்கலா ரவுடிகளிடம் பாயும் ஹீரோ சித்தார்த்திடம் மட்டும் பம்முவது ஏன்? அவர் காரணம் இல்லாமல் ஹீரோவை அறையும்போது குறைந்த பட்ச எதிர்ப்பைக்கூட காட்டலையே? ( அவர் ரூமை காலி பண்ணச்சொல்லிடறார், அப்புறம் என்ன பயம்?ரூம்லயே தங்கனும்னாக்கூட அதுக்காக பொறுத்துப்போலாம்)
10. ஹீரோ டெட் பாடியை டிஸ்போஸ் பண்றப்போ, கார்ல போறப்ப பின்னணி இசையா திகிலா மியூசிக் போட்டு பயத்தை ஆடியன்ஸ்க்கு தோற்றுவிக்காம என்னமோ கல்யாணக்கொண்டாட்டத்துக்கு போடற மாதிரி துள்ளல் இசை ஏன்?
11. ஹீரோ ஒரு சீன்ல ரூம்ல ஒளிஞ்சிருக்கார் ஹீரோயின் வந்து பார்த்துட்டு கிளம்பறா. அப்போ மாடில இருந்து அவ போய்ட்டாளா? என எட்டிப்பார்க்கும்போது அந்த ரூம் லைட்டை ஏன் ஆஃப் பண்ணலை? அதானே சேஃப்? அங்கே இருந்து அவ பார்த்தாக்கூட இருட்டுதான் தெரியும்.. கிரிமினல்க்கு அது கூடத்தெரியாதா?
12. ஹீரோ கார் ஓட்ட எப்போ கத்துக்கறார்? ஏன்னா சித்தார்த் வீட்டுக்கு வர்ற வரை அவர்க்கும் கார்க்கும் சம்பந்தமே இல்லை.. ஆனா திடீர்னு கார் அநாசயமா ஓட்ற மாதிரி காட்றாங்க
13. ஹீரோ சித்தார்த்தின் அப்பாவின் ஃபேமிலி ஃபிரண்ட்சை சந்திக்க ஹோட்டல்க்கு வர்றார். அப்போ சித்தார்த்தின் ஃபோன் அவர் வெச்சிருக்கார்.. சித்தார்த்தைத்தான் கொன்னுட்டாரே? அப்போ அந்த ஃபோனை சைலண்ட் மோடுல போட்டு வைப்ரேஷன்ல வெச்சுட்டா மேட்டர் ஓவர்.. கால் வந்தா அவருக்கு மட்டும் தெரியும்.. அவங்க 3 பேருக்கும் தெரியாது.. அதை விட்டுட்டு ஏன் தடுமாறுகிறார்?
14.இன்ஸ்பெக்டர் ஹீரோவை விசாரிச்சுட்டு அவரை வெளியே உக்கார வெச்சு பின் சித்தார்த்தின் காதலியை விசாரிக்கறார். அப்போ ஹீரோவை கூப்பிட்டு காதலி கிட்டே “ இவரை தெரியுமா?”ன்னு ஏன் கேட்கலை?
15. இவ்வளவு கிரிமினல் வேலை பண்ணும் ஹீரோ லேடீஸ் மேட்டர் பக்கம் ஏன் போகவே இல்லை.. வாய்ப்பு இருந்தும் தவிர்க்க என்ன காரணம்? அதை வெச்சு இன்னும் இண்ட்ரஸ்ட்டா கதையை நகர்த்தி இருக்கலாமே?
16. ஹீரோ அடிபட்டு ஹாஸ்பிடல்ல படுத்து இருக்கார்.. கைல தலைல எல்லாம் கட்டு.. போலீஸ் ஹீரோவை பற்றி விசாரிக்க ஃபேக்ஸ் அனுப்புது.. அதாவது ஒரிஜினல் முஸ்லீம் வீட்டுக்கு.. ஹீரோ டக்னு அந்த அட்ரஸ் போய் சமாளிக்கறார்.. அதெப்பிடி ஒரே நாள்ல காயம் சரியாகிடுமா?
17. அட்ரஸ் வெரிவிஃபிகேஷன் பண்ண கான்ஸ்டபிள் இங்கே இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்கும்போது ஆள் இருக்கார்னு சொல்லி இருப்பார்.. அப்போ இன்ஸ்பெக்டருக்கு டவுட் வராதா? இங்கே ஹாஸ்பிடல்ல இருந்த ஆள் அங்கே எப்படி போனார்? ஏன் போனார்?னு.. ஏன் அவரே நேரடியா ராமநாத புரம் போய் அதை க்ளியர் பண்ணலை?அதே போல் ஃபேக்ஸ் போற அதே டைம் இவரும் எப்படி அங்கே போறார்? ஃபிளைட்ல போனாக்கூட முடியாது
18. ஹீரோ 2 கொலை பண்றப்ப க்ளவுஸ் போடவே இல்லை.. கைரேகை காட்டி கொடுத்திருக்கும். எப்படி சித்தார்த்தை கொன்னது அவர் நண்பர் தான்னு நம்பவைக்க முடியும்? ரேகையை வெச்சு கண்டு பிடிக்க மாட்டாங்களா?
19. ஏடி எம் மிஷின்ல ஹீரோ சித்தார்த் அக்கவுண்ட்ல இருந்து பணம் எடுக்கறார்.. கொலை செய்யப்பட்ட நாள்க்குப்பிறகு சித்தார்த்த் அக்கவுண்ட்ல இருந்து பல்க் அமவுண்ட் எடுக்கப்பட்டிருக்குன்னா போலீஸ் உடனே ஏ டி எம் வீடியோ காமராவுல ஹீரோவை பார்த்திருக்காதா?
20. அனுயா ஹீரோ மேல கிரேஸ் ஆனது எப்படி? ஹீரோ அவரை கண்டுக்கவே இல்லை. அதிகம் பேசுனதும் இல்லை.. அன் டைம்ல அவர் வீட்டுக்கு எந்த நம்பிக்கைல போறார்?
21. ஹீரோயின் மது மஞ்சரி ஒரு சீன்ல என் ஆளை நீ இன்னும் பார்த்ததில்லைன்னு அனுயா கிட்டே சொல்றா.. இந்தக்காலத்துல செல்ஃபோன்ல கவர்னர் கில்மாப்படமே ரிலீஸ் ஆகுது.. அப்படி இருக்கும்போது தன் செல் ஃபோன்ல சேவ் பண்ணி வெச்சிருக்கற லவ்வர் ஃபோட்டோவை ஹீரோயின் அனுயா கிட்டே காட்டி இருந்தா ஆள் மாறாடம் அப்பவே தெரிஞ்சிருக்குமே?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. சார், எனக்கே என் சைன் இவ்ளவ் அழகா போட வராது.. ஆனா இவன் போட்டிருக்கான் பாருங்க
2. உன் பேரென்ன?
ஏன்?
அழகான பொண்ணு எங்காவது தட்டுப்பட்டா அவங்க பேர் கேட்டு வெச்சிக்குவேன் அது என் பழக்கம் ..புரியலை? இதான் ராகிங்க்
3. சீனியர் பொண்ணை பார்த்து அழகா இருக்கேனு தைரியமா சொல்றியே, அது எப்படி?
எஸ்.. நீ அழகு .. அதான்
4. XQS மீ மிஸ்.. நாங்க கொஞ்சம் பர்சனலா பேசனும்.. நீங்க.... ப்ளீஸ்..
ம்க்கும், அப்போ நீயே அவளை டிராப் பண்ணிடு,,
வித் பிளஷர் ( ஐடியாவே அதுக்குத்தானே?)
5. பிடிச்சிருக்குன்னு சொல்றே, ஆனா லவ்வலைன்னு சொல்றே.. புரியலையே?
ஹி ஹி எனக்கு எல்லா பொண்ணுங்களையும் பிடிக்கும், ஆனா இந்த காதல், கல்யாணம் எல்லாம் ஒத்து வராது
6. டேய்./. காலேஜ் எல்லாம் எப்படி இருக்கு?
அது நல்லா தான் இருக்கும், அவன் எப்படி படிக்கறான்னு கேளுங்க
7. அங்கே கார்ல இடம் இல்லைன்னா டோண்ட் ஒர்ரி.. என் மடில இடம் இருக்கு ஹி ஹி
8. லவ்வுக்கு பொசசிவ் நெஸ் தேவை தான்.. ஆனா ஓவரா போய்ட்டா டேஞ்சர்
9. இங்கே யாருமே 100% பர்ஃபெக்ட் இல்லை
10. அசோக் கேரக்டர் எப்படி?
தானும் படிக்க மாட்டான், யாரையும் படிக்கவும் விட மாட்டான் ( கிராமங்கள்ல இதையே “ தானும் படுக்க மட்டான் , தள்ளியும் படுக்க மாட்டான்னு” பழமொழியா சொல்வாங்க )
11. ஏதோ சின்னப்பிரச்சனை.. அதைப்போய் பெருசு பண்ணிட்டு..
இப்போ எல்லாம் சின்ன சின்ன பிரச்சனைகள் தான் பெரிய தப்பு உருவாக காரணமா இருக்கு
விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42
குமுதம் ரேங்க் - ஓக்கே
டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 /5
டெக்கான் கிரானிக்கல் - 6/10
மேலே உள்ள படம் தான் ஒரிஜினல்... நன்றி - அதிஷா
சி.பி கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். லேடீஸும் பார்க்கற மாதிரி கண்ணியமான நெறியாள்கை.. படத்துக்கு டி வில சரியா விளம்பரம் தர்லை, அது பெரிய மைன்ஸ், சன் டி வி சன் பிக்சார்ஸ் இதை வாங்கி இருந்தா இதை 100 நாள் படம் ஆக்கி இருப்பாங்க.. ஜஸ்ட் மிஸ்.. ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்
நான் படத்தை நான் இயக்கி இருந்தால் வைக்கும் டைட்டில் த ஹிந்து - 420 ( THE HINDU - 420)
கமர்ஷியல் ரன்னிங்க் ரேஸில் அட்டகத்தியை “ நான்” முந்தினாலும் விகடன் மார்க்கில் பிந்தும். காரணம் லாஜிக் மிஸ்டேக்ஸ் எக்கச்சக்கம்
டிஸ்கி -

7 comments:
என்ன அண்ணே படம் பக்கும் போது கருப்பு கண்ணாடி போட்டு இருதிங்க போல இவரு பாய்ஸ் சித்தார்த் இல்ல ஆனந்த தாண்டவம் பட ஹீரோ..
பார்த்திடலாம் சிபி சார்... நல்ல விமர்சனம்... 15 வது கேள்வி.. அக்மார்க் சிபி ரகம்...
So ?
Pass?
Thanks
இப்பத்தான் உண்மைத் தமிழன் கிட்ட இருந்து தப்பிச்சி வர்ரேன்! பரவாயில்லை! எளிமையா என்னோட லெவலுக்கு விமர்சனம்! சூப்பர்! நன்றி!
இன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html
12வது கேள்விக்கான விடை : போலீஸ் காரர் வண்டியை ஓட்டிகிட்டு வருவாரே படத்தின் ஆரம்பத்தில்!!
Nice review.
But, u r always comparing / using "Jayalaitha" "Karunanidhi" in reviews too...
Once a while, it is ok.. otherwise.. irritating..
you can avoid.. rest all are okay. good
படத்த மறுபடியும் பாருங்க, கதைப்படி செகண்ட் ஹீரோ கொள்ளப்பட்டது யாருக்கும் தெரியாது - தலை மறைவா இருக்கான், கிளைமாக்ச்லதான் சூசைட் பண்ணிகறான். - கார் வோட்ட கத்துகராங்கரத எல்லாம் சொல்லிட்டு இருந்தா - படம் ரோம்ப லென்க்தா போகுமே !
Post a Comment