ஒரே ஒரு ஊர்ல 2 கேவலமான தாதாங்க.. கஜினி வில்லன் ஒரு தாதா, கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சிப்போராட்டம் பிரபு.இன்னொரு தாதா .. வில்லனோட பையனை இவரு க்ளோஸ் பண்ணிடறாரு.. பழிக்குப்பழியா அப்பவே வில்லன் பிரபுவை போட்டிருந்தா மேட்டர் ஓவர்.. ஆனா படம் 2 ரீல் தானே வரும்? 14 ரீல் கொண்டார்றது எப்படி?
அதனால அந்த வில்லன் சொல்றாரு.. பிரபு சீக்கிரமா சாகக்கூடாது.. அனுராதா அனுராதாவா சாரி அணு அணுவா துடிச்சு சாகனும்.. பிரபு தங்கையை கொலை பண்ணனும்னு சொல்றாரு..
பிரபுவோட தங்கச்சி சிவனேன்னு லண்டன்ல படிச்சுட்டு இருக்கு,.. மண்டைல மசாலா இல்லாத கேனயன் கூட சொல்வான்.. பாப்பா அங்கே இருந்தாத்தான் பாதுகாப்புன்னு.. ஆனா அண்ணன் பிரபு லண்டன்ல இருந்தா பாதுகாப்புஇல்லை, நம்ம கூடவே இருக்கட்டும்னு இங்கே கூட்டிட்டு வந்துடறாரு..
பிரபு கிட்டே அடியாளா நம்ம ஹீரோ வினய் சேர்றாரு.. சின்னத்தம்பில குஷ்பூவை பிரபு கூட்டிட்டு போய் ஊரெல்லாம் சுத்திக்காட்டுன மாதிரி இவரும் அங்கே இங்கே கூட்டிட்டு போறாரு.. 2 பேருக்கும் லவ் ஆகிடுது.. அலை பாயுதே ஸ்டைல்ல மேரேஜும் பண்ணிக்கறாங்க.. ஆனா பிரபுக்கு அது தெரியாது..
ஒரே பங்களாவுக்குள்ளேயே மீதி கதை எப்படி நகருது? அந்த வில்லன் என்ன தான் செஞ்சான்? சந்தானம் மொக்கை எப்படி எல்லாம் போடறாரு.. இதான் மிச்ச மீதிக்கதை..
படத்தோட முதல் ஹீரொ அஸ் யூசுவல் சந்தானம் தான்.. இவர் பேரே ஸாரி.. அதனால சாரி.. சொல்றதுக்கு ஏதும் இல்லை.. படத்துல மொத்தம் மொக்கை ஜோக்ஸ் 64 வருது.. 48 இவர் சொல்றாரு.. 13 இடத்துல தான் ஆடியன்ஸ் சிரிக்கறாங்க.. மீதி ஜோக்குக்கு எல்லாம் இதெல்லாம் ஒரு ஜோக்கா அப்டினு நினைச்சு சிரிக்கறாங்க.. படம் பூரா பம்மிக்கிட்டே இருக்கும் சந்தானம் ஒரு சீனில் சரக்கு அடிச்சுட்டு சலம்பல் பண்ணும் சீன் கலக்கல் ரகம் ..
ஒரிஜினல் ஹீரோ வினய்.. அண்ணன் முதல்ல நல்ல பல் டாக்டர்ட்ட போய் பல்லை க்ளீன் பண்ணனும்.. எல்லா பல்லும் காரை.. பான் பராக் பாலுன்னு நினைப்பு.. அதுல க்ளோசப் ஷாட் வேற உவ்வே,, இவர் வசனம் பேசும் ஸ்டைலை மாத்திக்கிட்டா நல்லாருக்கும்.. உன்னாலே உன்னாலே படத்துல இருந்த துள்ளல் இதுல மைனஸ்..
ஹீரோயின் யாரோ ஷ்ர்மிளாவாம்.. மொக்கை ஃபிகர்.. இந்தபடத்தை முதல் ஷோ பார்த்த தமிழ்நாடு பூரா இருக்கும் மூணு லட்சத்து இருபத்து மூவாயிரத்து நானூற்றி முப்பத்தி ஆறு (3,23,436 ) ஆடியன்ஸ் கிட்டே கருத்து கேட்டாலும் சிங்கிள் மேனுக்கு கூட இது பிடிக்காத பார்ட்டி.. படு மொக்கை பர்சனாலிட்டி.. இந்த லட்சணத்துல இவர் லோ ஹிப் ல வேற வந்து கடுப்பை ஏத்துறார்.. அதுல தொப்புள்ல தொங்கட்டான் வேற..
கேப்டன் பிரபாகரன்ல பட்டாசை கிளப்புன மன்சூர் அலிகான் இதுல டம்மி பீசா காமெடியனா கேவலப்படுத்தி இருக்காங்க.. தங்க பாலு, ஓ பி எஸ், பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு இருக்கு இவர் நடிப்பு..
ஆர் பாண்டிய ராஜன் 3 ஜோக் சொல்றார்.. ஒரே ஒரு காமெடி பண்றார்.. அவ்ளவ் தான்.. ஹீரோவுக்கு அப்பா..
ஜெயா டி வி பாஸ்கி ( ஆனந்த விகடன் ஜோக் ரைட்டர்) 7 சீன்ல வர்றார்.. சொல்லிக்கொள்ளும்படி ஏதும் இல்லை..
கஞ்சா கறுப்பு காமெடிங்கற பேர்ல எப்பவும் போல் மொக்கை போடறார்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. போஸ்டர்ல, டி வி விளம்பரத்துல எல்லாம் ஓக்கே ஓக்கே லெவல்க்கு இந்த படத்தோட ,மார்க்கெட்டிங்கை ஏத்தி விட்டது..
2. சந்தானம் காமெடியை நம்பி படத்தோட திரைக்கதையை அவரை சுத்தி நகர்ற மாதிரி அமைச்சது..
3. லண்டன் லொக்கேஷன் செலக்ஷன், ஒளிப்பதிவு..
இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்
1. கோடிக்கணக்குல சம்பாதிக்கும் தாதா வின் தங்கை ஒரு சினிமா தியேட்டர்ல தனியா போய் டிக்கெட் எடுக்க தெரியாதா? ஹீரோ கிட்டே போய் இந்த தியேட்டர்ல டிக்கெட் எடுத்துக்கொடு.. ரொம்ப ரேர்.. டிக்கெட் கிடைக்கறதுன்னு கெஞ்சுது.. ஓனருக்கு கிடைக்காத டிக்கெட் அவங்க கிட்டே வேலை செய்யறவனுக்கு கிடைக்குமா? 100 ரூப்பா டிக்கட்டுக்கு 200 ரூபாவை அள்ளி விட்டா டிக்கெட் தேடி வருது.. அது கூட அந்த டிக்கெட்டுக்கு தெரியாதா?
2. சாதாரண ஒரு தாதாவோட தங்கயை கொலை பண்ண என்னமோ கவர்னர், ஜனாதிபதியை கொலை பண்ணப்போறது மாதிரி அந்த வில்லனின் கூலிப்படை ஆள் டெல்ஸ்கோப் கன், ரைபிளோட சுத்துவதும் ஆதவன் படத்துல சூர்யா பண்ற மாதிரி சேஷ்டைகள் எல்லாம் செஞ்சு ஒண்ணும் பலிக்காம போவதும் நம்பவே முடியலை..
3. லண்டன்ல இருக்கும் தங்கயை இங்கே வர வெச்சு , பின் அமெரிக்கால இருக்கற மாப்ளையையும் இங்கே வர வெச்சு 2 பேரையும் லண்டன் அனுப்ப திட்டம் போடும் லூஸ் பிரபு ஸ்ட்ரைட்டா லண்டன்ல இருந்து அமெரிக்கா அனுப்பி இருந்தா வேலை முடிஞ்சுதே?
4. கூலி ஆள் ரூம்ல யார் கிட்டேயோ ஃபோன்ல பேசறதை பார்த்த ரூம் மேட் “ யார் கிட்டே ஃபோன்ல பேசறெ?ன்ன்னு ஒரே ஒரு கேள்வி தான் கேட்டான்.. அதுக்குப்போய் அவனை கொலை பண்றதெல்லாம் ஓவர்/./ அவனுக்கு குடுத்த வேலை பிரபு தங்கையை கொலை பண்ண சொல்லி.. அதை விட்டுட்டு எவனை எவனையோ கொன்னுட்டு இருக்கான்..?
5. ஒரு சீன்ல ஹீரோ ஹீரோயின் பைக்ல வந்து அநாமத்தா பைக்கை நடு ரோட்ல விட்டுட்டு லாரி பிடிச்சு போறாரு.. அவங்களை துரத்திட்டு வரும் கூலி ஆள் அவர் பைக் ரிப்பேர் ஆகி அதை விட்டுட்டு லாரியை துரத்தி ஓடறார்.. ஹீரோ விட்டுட்டுப்போன பைக் சாவியோட அநாமத்தா அப்படியே நிக்குது.. அந்த கபோதிக்கு அது கூடவா தெரியாது? பைக்ல துரத்தாம ஓடியே துரத்த ட்ரை பண்றாரே, மனசுக்குள்ளே விஜய்னு நினப்பா?
6. வில்லன் குரூப் ஹீரோயினை அடைச்சு வெச்சுடுது.. செல் ஃபோன் இருக்கா?ன்னு செக் பண்ண மாட்டாங்களா? அதான் போகட்டும்.. ஒவ்வொரு ஏரியாவா மெயின் சுவிட்சை ஆஃப் பண்ணி ஏரியா வை கண்டு பிடிக்கற ஐடியா இப்போ தான் தடையறத்தாக்க படத்துலயே வந்துச்சே
சி.பி கமெண்ட் - ஃபேமிலியோட பார்க்கற மாதிரி டீசண்ட்டா தான் படம் இருக்கு, ஆனா ஓவர் மொக்கை.. சிரிக்கலாம், ஆனா சிந்திக்கக்கூடாது.. சந்தானத்தின் மொக்கை காமெடி மெலோ டிராமாவுக்காக பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்..
எதிர்பார்க்கப்படும் ஆனந்த .விகடன் மார்க் - 40
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்
டைம்ஸ் ஆஃப் இண்டியா - 2 / 5
டெக்கான் கிரானிக்கல் - 5 / 10
ஈரோடு அபிராமியில் ப்டம் பார்த்தேன்.
டிஸ்கி - 1 டிஸ்கி - மதுபானக்கடை - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/blog-post_5452.html
JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +-http://www.adrasaka.com/2012/
TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/
சந்தனத்தின் மொக்கை காமெடி வசனங்கள் தனிப்பதிவாய் விரைவில்
JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +-http://www.adrasaka.com/2012/08/jism-2-34.html
TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/total-recall.html
சந்தனத்தின் மொக்கை காமெடி வசனங்கள் தனிப்பதிவாய் விரைவில்
8 comments:
விமர்சனம் நல்லா இருக்கு...
சூப்பர்
கலக்குங்க
ஒரு சீனியர் நடிகரை , லூசு பிரபு என்று குறிபிடுவது கண்டனத்துக்கு உரியது
Valthukkal
கலக்கல் விமர்சனம்! இவ்ளோ குறை சொல்லிட்டு 40 மார்க் கொடுக்கறீங்களே எப்படி?
இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
http: thalirssb.blogspot.in
இது தெலுங்கு ஹீரோ ரவி தேஜா வின் 'கிக்' படத்தின் ரீமேக் போல இருக்கு..
padam ok thala .. i seen . nice .. rompa mokka ila
இந்த படம் தெலுங்கு படம் " D" ரீமேக்....
araicha maavaiye araichu irukkanga..
Usual Tamil masala film..
Mokkaiya irukku.
Post a Comment