5 வட்டிக்கு ஆசைப்பட்டு..!
தென் மாவட்டத்தில் பிளாட் மோசடி
ஈமுக் குளறுபடிகள் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்த மோசடி அம்பலமாகி சந்தி சிரிக்கிறது. 'ஐந்து லட்சம் ரூபாயை பிளாட்டில் முதலீடு செய்தால், மாதம்தோறும் ஐந்து சதவிகிதம் வட்டி’ என்று கோடிக்கணக்கான பணத்தை ஏப்பம் விட்டு இருக்கிறார்கள்!
சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த ராஜா, தீப்பெட்டித் தொழிற்சாலையில் மேஸ்திரியாக இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன், மருது என்பவருடன் சேர்ந்து, 'ஆர்.எம்.வெல்த் கிரியேஷன்ஸ் இந்தியா’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். சில பெரிய நிறு வனங்களுக்கு ஏஜென்ட் போல தன்னைக் காட்டிக்கொண்டவர், ஒவ்வொரு பிரிமியம் தொகைக்கும் 5 சதவிகிதம் கமிஷன் தருவதாகச் சொன்னார்கள்.
'பிரிமியம் தொகைக்கே கமிஷனா?’ என்று வாய் பிளந்த பலரும் வரிசை கட்டி நின்று அவர்களிடம் இன்சூரன்ஸ் பாலிசி போட்டனர். இந்த நேரத்தில், சாத்தூர் அருகே எட்டூர்வட்டத்தில் 102 ஏக்கர் பரப்பளவில் கோல்டன் சிட்டி என்ற பெயரில் பிளாட் போட்டனர்.
ஒரு பிளாட்டுக்கு 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை என்று விலை வைத்தனர். எந்த பிளாட்டில்... எவ்வளவு முதலீடு செய்கிறோமோ, அந்தத் தொகைக்கு ஐந்து சதவிகிதம் மாதம் தோறும் வட்டி என்றும், வட்டி வேண்டாம் என்றால் கிரையம் செய்து தரப்படும் என்றும் கவர்ச்சிகரமாக விளம் பரப்படுத்தினர்.
உடனே, 'எனக்கு ஒண்ணு... எங்க அப்பாவுக்கு ஒண்ணு’ என்று கூட்டம் மொய்த்தது.
அதோடு ஐந்து பேரை இந்தத் திட்டத்தில் சேர்த் து விட்டால், ஓர் ஆளுக்கு 500 ரூபாய் கமிஷன் என்று, செயின் லிங்க் சிஸ்டத்தையும் அறிமுகம் செய்து இருக்கின்றனர். டீம் லீடர்களுக்கு கார், டூர் என்று ஏகப்பட்ட வசதிகளை அள்ளித்தரவே, மளமளவென்று ஆட்களைச் சேர்ந்தனர். இப்போது சாயம் வெளுத்துப்போகவே, கிட் டத்தட்ட 4,000 முதலீட்டாளர்கள் ஏமாந்து நிற்கிறார்கள்.
முதலீட்டாளர்கள் சார்பில் நம்மிடம் பேசிய வக்கீல் அழகர்சாமி, ''விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி போன்ற இடங்களில் வட்டித் தொகைக்கு ஆசைப்பட்டு பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். புதிதாகச் சேரும் வாடிக்கையாளர்களை டூர் அழைத்துச் சென்று நன்றாகக் கவனித்துள்ளனர்.
குற்றாலத்தில் நடந்த மீட்டிங்கில், 'நாளைய தமிழகமே...’ என்று வரவேற்பு ஃப்ளெக்ஸ் அடித்து ராஜாவை பூப்பல்லக்கில் அழைத்துவந்து, பொதுமக்களை மயக்கியுள்ளனர். பிப்ரவரி மாதம் வட்டி தருவதில் சுணக்கம் ஏற்பட்டது. அதனால் சில மாதங்களுக்கு முன், எட்டூர் அருகே உள்ள ஆர்.எம்.டபிள்யு.சி. நிறுவனத்துக்குச் சென்ற முதலீட்டாளர்கள் ரகளை செய்தனர். அப்போது, போலீஸ் முன்னிலையில் பேசிய நிறுவனத்தின் சேர்மன் ராஜாவும் எம்.டி. மருதுவும், கொஞ்ச நாட்களில் பணத்தைத் திருப்பித் தருகிறோம், என்று உறுதி அளித்தனர்.
ஆனால் அதன் பிறகு, தலைமறைவாகி விட்டனர். இப்போது அவர்கள் திருப்பூர், ஈரோடு, போன்ற இடங்களில், 'எஸ்.எம்.’ என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கும் முயற்சியில் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். என் மூலமாகவே இதுவரை 300 பேர் போலீஸில் புகார் செய்துள்ளனர். இவர்கள் ஏமாந்து இருப்பது மட்டுமே 20 கோடி ரூபாய். ஆனால், மொத்தமாகப் பார்த்தால் எவ்வளவு கோடியோ? உடனே, அவர்களைக் கண்டுபிடித்து பணத்தை மீட்கவேண்டும்'' என்றார்.
முத்துலிங்காபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பெருமாள்சாமி, ''இந்தத் திட்டம் பற்றிக் கேள்விப்பட்டதும், 'எப்படி சாத்தியம்?’ என்று ராஜாவிடம் கேட்டேன். 'குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி கூடுதல் விலைக்குத்தான் விற்கிறோம். மேலும், பணத்தைப் பங்குச் சந்தையில் போட்டு லாபம் பார்க்கிறோம். அந்த லாபத்தில் இருந்துதான் மாதம்தோறும் வட்டி தருகிறோம்’ என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
நானும் அதைநம்பி, எனக்குத் தெரிந்தவர்களை பணம் கட்டச் சொன்னேன். பஞ்சாயத்துத் தலைவர் என்பதால் என்னை நம்பி 800 பேருக்கும் மேல் இந்தத் திட்டத்தில் சேர்ந்தனர். எங்கள் பகுதியில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை மோசடி செய்து விட்டனர். இப்போது எல்லோரும், பணம் கேட்டு எனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்...'' என்றார் ஆதங்கத்துடன்.
ராஜா, மருது ஆகியோரைச் சந்தித்து விளக்கம் கேட்க முயன்றோம். நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இரண்டு மாதங்களுக்கு முன்னரே வீட்டையும் காலி செய்து விட்டார்களாம். அதனால், அவர்கள் சார்பில் பேசவும் யாரும் முன்வரவில்லை.
இந்த மோசடியை விசாரித்துவரும் பொருளாதாரக் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் பேசினோம். ''கோவையில் பாசி நிறுவனம் ஏமாற்றியதுபோல் தென் மாவட்டத்தில் ஆர்.எம்.டபிள்யு.சி. நிறுவனத்திடம் பலர் ஏமாந்துள்ளனர்.
இது தொடர்பாக நிறைய புகார்கள் வந்துள்ளன. சேர்மனாக ராஜாவும், எம்.டி-யாக மருதுவும் இருந்துள்ளனர். இயக்குனர்களாக மூன்று பேர் இருந்திருக்கிறார்கள். அந்த இயக்குனர்களை நம்பித்தான் பலர் முதலீடு செய்துள்ளனர். அந்த இயக்குனர்களும், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட் டதாகப் புகார் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ராஜா, மருது இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடிவருகிறோம். அவர்களுக்குச் சொந்தமான சொத்துக்களைக் கைப் பற்றி, முதலீட்டாளர்களின் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுப்போம்...'' என்றார்.
டெயில் பீஸ்: சாத்தூர் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் கல்யாணராஜ். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு ஊருக்குள் நல்ல மரியாதை. அதனால் இவரை இந்த நிறுவனத்தில் இயக்குனராக நியமித்து இருக்கிறார்கள். இவரை நம்பி பலரும் லட்சக் கணக்கில் முதலீடு செய்தனர்.
பந்தல்குடி அருகே ஒரு நிலத்தைக் காட்டி பணத்தை வசூல் செய்த விவகாரத்தில் நிர்வாகத்துடன் பிரச்னை வரவே, கல்யாணராஜை இயக்குனர் பதவியில் இருந்து கழற்றி விட்டனர். உடனே, போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, கடந்த 17-ம் தேதி ஒரு கும்பல் இவரது வீட்டுக்கு வந்து மிரட்டி இருக்கிறது. அதனால், மனஉளைச்சல்களுக்கு ஆளான கல்யாணராஜ், அன்று இரவே தோட்டத்தில், பன்றியைக் கொல்ல வைத்திருந்த விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம், ஏரியாவில் மேலும் கொதிப்பைக் அதிகரித்துள்ளது.
நன்றி - ஜூ வி
மோசடி செய்த நிறுவனத்தின் வெப் சைட்டில் வெளி வந்த விளம்பரம்
Contact Name : subbu 09790407098
1level- 5Members Rs. 500 Rs. 2500
மோசடி செய்த நிறுவனத்தின் வெப் சைட்டில் வெளி வந்த விளம்பரம்
GREAT OPPURTUNITY FOR MLM LEADERS AND NETWORKERS. RMWC
Contact Name : subbu 09790407098
Email ID : [email protected]
Website: www.rmwcindia.com
IT’S DEFINITE-
A DAY GETS DAWN....
ONLY YOU CAN...
Welcome to RMWC
Our organization has been started with appropriate recognition under the Indian Company Act, 1956. Through this business opportunity, we aspire to provide housing plots to the members of our RMWC family. Also we seek to provide Safety Policy Schemes to our members and their family. Our ultimate maxim is to create financial freedom to everyone, who adhere the business opportunity through our organization.
PRODUCTS
1) REAL ESTATE
2) INSURANCE
3) HOME APPLIANCE
OUR FUTURE VISION
Plan – I Products
Rs: 12,000(Minimum) (for one 1 id, you can get Home Appliances products worth Rs.12,000
Or
Plan – II Insurance Products
Insurance Products from Reliance or Bajaj worth Rs.12,000
Or
Plan-III Lands
If your investment is Rs: 50,000 to 1,00,00,000 You will get number of ids worth Rs. 12,000 you can calculate from that amount as divided by 12,000 (ex. amount Rs. 50000/12 = 4 ids)
INCOME RETURNS
1) Rs. 500/Monthly for one id
2) Binary Income Rs. 1000 for one pair match (1:1)
3) Matrix Income in Auto filling system
4) AWARDS & REWARDS
1) Rs. 500/Monthly for one id, Payment will be credited to your bank account
2) Binary Income Rs. 1000 for one pair match (1:1)
"Successful Auto Filling System,
1st time in World"
3) Matrix Income in Auto filling system
1level- 5Members Rs. 500 Rs. 2500
2level- 25Members Rs. 400 Rs. 10,000
3level- 125Members Rs. 200 Rs. 25,000
4level- 625Members Rs. 200 Rs. 1,25,000
5level- 3125Members Rs. 200 Rs. 6,25,000
6level- 15625Members Rs. 200 Rs. 31,25,000
TOTAL 19530Members Rs. 1700 Rs. 39,12,500
4) AWARDS & REWARDS
GREAT OPPURTUNITY FOR MLM LEADERS AND NETWORKERS. GET BRANDED PRODUCTS ON ENTRY AT MRP LIKE OTHER SHOPS.
RMWC INDIA(P)LTD
SAFE & SECURE PLANS
An ISO 9001:2008 Company,
Company Having 13,000 CRORE ASSETS
For the First Time in India, our RMWC (RM WEALTH CREATION INDIA PVT.LTD) organization introduces a innovative business plan "AUTO FILLING SYSTEM'. By joining in this AUTO FILLING SYSTEM, EVERYONE who joins RMWC gets confirmed income (Minimum Guarantee). As per the Income Chart (given below), you will get income through AUTO FILLING SYSTEM / INCOME SHARING PLAN when members join under you.
6 comments:
தகவலுக்கு நன்றி . ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் . மக்களே உஷார் .
உங்களின் தகவல் பகிர்வுக்கு நன்றி, மக்கள் பேராசை படும்வரை மோசடிகள் என்றும் இருக்கும். உங்களை என் வலைதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன், "விடை தேடும் காதல்" என் காதல் கவிதையை படித்து உங்களின் கருத்தை பதியவும். அன்புடன் ஆயிஷாபாரூக்..
இப்பவே க்ண்ண கட்டுதே
Poi poi ..namkku idam irukkuthu..eppadi eemaruvom?
This is not like emu form...when we give the money that same time we get the land..then after 2 r 3 years it will grow ..then what problem? So don't publish and disturb the business..
Yaaraithan namburathuney theriyala
Post a Comment