அம்மாவின் அழகு.... அப்பாவின் கம்பீரம்... இரண்டும் கலந்து வசீகரிக்கிறார் வரலட்சுமி சரத்! நீண்ட நாட்களாக சினிமா என்ட்ரி டிரைலர் காட்டிக்கொண்டே இருப்பவரிடம் பேசினால், இளமைப் பட்டாசுதான்...
''அறிமுகமாகும் 'போடா போடி’ படத்திலேயே அம்மா கேரக்டராமே.... செம ரிஸ்க் ஆச்சே?''
சி.பி - சிம்புவுக்கு அம்மாவாவா நடிக்கறார்? சிம்புவோட குழந்தைக்குத்தானே அம்மாவா நடிக்கறார்? அதனால ஒண்ணும் ரிஸ்க் இல்லை, சிம்பு கிட்ட மட்டும் கொஞ்சம் ரிஸ்க்..
''ஸோ வாட்? எனக்குக் குழந்தைன்னா ரொம்பப் பிடிக்கும். 'போடா போடி’ படம் 'அலைபாயுதே’ பட பாணியில் ஒரு க்யூட் லவ் ஸ்டோரி. ஸ்வீட் நத்திங்ஸ்ல ஆரம்பிச்சு, டீன் ஏஜ் காதல், பொசஸிவ்னெஸ்னு நிறைய ட்ரீட் இருக்கு. ஒரே படத்தில் காதல், குழந்தை, பாசம்னு நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர். அந்தப் படத்தில் நடிக்கலைன்னாதான் நிறைய மிஸ் பண்ணியிருப்பேன்!''
'' ஆனா, 'போடா போடி’யை விட்டுட்டு சிம்பு அடுத்தடுத்த படங்களுக்குப் போயிட்டார். உங்கள் முதல் படம் ரிலீஸ் ஆக இவ்ளோ லேட் ஆகுதே; ஏன் சிம்பு படத்துல கமிட் ஆனோம்’னு ஃபீல் பண்றீங்களா?''
சி.பி - இதுவரைக்கும் ஃபீல் பண்ணலையாம்.. இனிமே ஃபீல் பண்ணலாம்
''தினம் நல்லது நடக்கணும்னு ஆசைப்படறோம். ஆனா, அப்படியே நடக்குதா என்ன? பொறுமையாக் காத்திருக்கிறவங்களுக்கு நல்லது பெருசா நடக் கும்னு சொல்வாங்க. நான் பொறுமையா இருக் கேன். அப்புறம் சிம்பு... அவர் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். மியூஸிக், எடிட்டிங், கேமரானு எப்ப வும் அவருக்கு சினிமா சினிமா சினிமாதான். 'சல்சா’னு ஒரு டான்ஸ். எனக்கு நல்லாத் தெரியும். நான் ஸ்டெப்ஸ் போடறதைப் பார்த்துட்டு, எந்த அனுபவமும் இல்லாம அவரும் சூப்பர்பாஆடினார். ஐ ஃபீல் கம்ஃபர்ட்டபிள் வித் சிம்பு!''
''விஷாலுக்கும் உங்களுக்கும் காதல்னு சொன்னாங்களே?''
''அப்பா 'ஐ லவ் இந்தியா’ படத்துல நடிக்கும்போது நான் குட்டிப் பொண்ணு. அப்பவே எனக்கு விஷாலைத் தெரியும். இதுல மறைக்க எதுவும் இல்லை. விஷால் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். என் ஃபேமிலி ஃப்ரெண்ட்னுகூட சொல்லலாம். தட்ஸ் ஆல்!''
சி.பி - ஃபேமிலி ஃபிரண்ட்னா எப்படி? உங்க ஃபேமிலில இருக்கற எல்லாருக்கும் அவர் ஃபிரண்ட்டா? அவரோட ஃபேமிலில இருக்கற எல்லோரும் உங்க ஃபிரண்டா?
''நீங்க 'தட்ஸ் ஆல்’ சொல்றீங்க. ஆனா, விஷாலுக்காக உங்களுக்கும் த்ரிஷாவுக்கும் பயங்கரச் சண்டைன்னு பேசிக்கிறாங்க?''
சி.பி - ச்சே ச்சே த்ரிஷாவுக்கு ஆல்ட்டர்நேடிவ் அரேஞ்ச்மெண்ட்ஸா ஆர்யா இருக்கறதால பெரிய சண்டை வர வாய்ப்பில்லை
''அப்படியா என்ன? நான், த்ரிஷா, விஷால் மூணு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். வீட்ல இருந்தா சாட்டிங், போர் அடிச்சா மீட்டிங்னு ஊர் சுத்துவோம். எங்களுக்கு நடுவுல இப்படி ரூமர் கிளப்பிவிட்டது யாரோ, அவங்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!''
நன்றி - விகடன்
0 comments:
Post a Comment