ஈரோடு புத்தக திருவிழா முகப்பு
ஈரோடு களை கட்டிடுச்சு.. நேத்து புக் ஃபெஸ்டிவல் ஸ்டார்ட் ஆகிடுச்சு.. இனி 12 நாள் கொண்டாட்டம் தான்.. மக்கள் சிந்தனைப்பேரவை ஸ்டாலின் குணசேகரன் தான் இதுக்கு இன்சார்ஜ்..
அ
இதில் கலெக்டர் சண்முகம், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், நந்தா கல்லூ£¤ தலைவர் சண்முகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு சி.எஸ்.ஐ. கல்லூரி அருகில் இருந்து தொடங்கிய ஓட்டப்பந்தயம் பிரப்ரோடு, சத்தி ரோடு வழியாக சி.என்.சி. கல்லூரியை சென்றடைந்தது.
சிக்ஸ்த் ஸெண்ஸ் பதிப்பகம் புக்ஸ் அடுக்கி வெச்சிருப்பதே தனி ஸ்டைல்
ஓட்டப்பந்தய தொடக்க விழாவில் நடிகர் கார்த்தியை பார்க்கும் ஆர்வத்தில் மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். மேடையை மாணவர்கள் சூழ்ந்து கொண்டதால் அவர் மாணவர்கள் பிடியில் இருந்து தப்பி காரில் சென்று ஏறினார். அங்கும் காரினை மாணவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அவர் நகர முடியாமல் தவித்தார். இதை தொடர்ந்து பாதுகாப்பில் இருந்த போலீசார் மாணவர்கள் கூட்டத்தினை கலைத்தனர். பின்னர் நடிகர் கார்த்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ராமாயணம் ஜஸ்ட் 49 ரூபா
320 பக்கம் பகவத் கீதை ஜஸ்ட் 10 ரூபா
ஈரோடு களை கட்டிடுச்சு.. நேத்து புக் ஃபெஸ்டிவல் ஸ்டார்ட் ஆகிடுச்சு.. இனி 12 நாள் கொண்டாட்டம் தான்.. மக்கள் சிந்தனைப்பேரவை ஸ்டாலின் குணசேகரன் தான் இதுக்கு இன்சார்ஜ்..
அ
ஈரோடு புத்தகத்திருவிழா நிகழ்ச்சி நிரல் -இலக்கியவாதிகள் ,பேச்சாளர்கள் பட்டியல் pic.twitter.com/vAbfrvLf
அ
a
ஈரோடு, ஆக.3: மனதைப் பதப்படுத்த புத்தகங்கள் அவசியம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஆர்.நடராஜ் கூறினார்.மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 8-வது ஆண்டு புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைத்து அவர் பேசியது
:பாரதியார் கடைசியாக உரையாற்றிய ஈரோட்டில் நின்றுகொண்டு பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். அடுத்தமுறை வரும்போது அவர் பேசிய இடத்தை நிச்சயம் பார்வையிடுவேன். கடலூர் சிறையில் பாரதியார் இருந்த இடத்தைப் பொதுமக்கள் பார்வையிடும் இடமாக மாற்றுவதற்காக, சிறைத்துறையில் இருந்தபோது பணிகளைத் தொடங்கினேன்;
நான் மாறுதலாகியதும் அப்பணி நின்றுவிட்டது. அதைப் பொதுமக்கள் பார்வையிடும் இடமாக மாற்ற வேண்டும்.முன்னோர்களைத் திரும்பிப் பார்க்கும்போதுதான் நமது கலாசாரம், பண்பாட்டை முழுமையாக அறிந்துகொள்ள முடியும். உலகமே ஒரு நூலகம். அதில் மனிதர் எல்லாம் புத்தகங்கள். பஞ்சு நூலாகி, ஆடையாகி மனிதனின் மானத்தைக் காப்பதுபோல, புத்தகங்கள் மனித மனத்தைப் பதப்படுத்துகிறது.வாசிப்பு பழக்கம் மிகவும் அவசியம்.
பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு லெனின் எழுதிய புத்தகத்தை வாசித்தார். உருது கவிஞரின் கவிதைகளைப் படித்த பின்னர்தான் வினோபா பாவேவுக்கு உருது மொழியைப் படிக்கும் எண்ணம் தோன்றியது. அண்ணாவுக்கு அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முயன்றபோது, தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடித்த பின்னர்தான் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென அழுத்தமாகக் கூறிவிட்டார்.
அப்படியென்றால் வாசிப்பு பழக்கம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.சிவானந்தன், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஸ்ரீதேவி, மாவட்ட நூலக அலுவலர் ஆர்.கோகிலவாணி, பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
நன்றி - தினமணி
மக்கள் சிந்தனை பேரவையின் ஈரோடு புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. இதையொட்டி கல்லூரி மாணவர்களின் மாரத்தான் ஓட்டப்பந்தம்நேற்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயத்தை நடிகர் கார்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் கலெக்டர் சண்முகம், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், நந்தா கல்லூ£¤ தலைவர் சண்முகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு சி.எஸ்.ஐ. கல்லூரி அருகில் இருந்து தொடங்கிய ஓட்டப்பந்தயம் பிரப்ரோடு, சத்தி ரோடு வழியாக சி.என்.சி. கல்லூரியை சென்றடைந்தது.
சிக்ஸ்த் ஸெண்ஸ் பதிப்பகம் புக்ஸ் அடுக்கி வெச்சிருப்பதே தனி ஸ்டைல்
ஓட்டப்பந்தய தொடக்க விழாவில் நடிகர் கார்த்தியை பார்க்கும் ஆர்வத்தில் மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். மேடையை மாணவர்கள் சூழ்ந்து கொண்டதால் அவர் மாணவர்கள் பிடியில் இருந்து தப்பி காரில் சென்று ஏறினார். அங்கும் காரினை மாணவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அவர் நகர முடியாமல் தவித்தார். இதை தொடர்ந்து பாதுகாப்பில் இருந்த போலீசார் மாணவர்கள் கூட்டத்தினை கலைத்தனர். பின்னர் நடிகர் கார்த்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
விவேகானந்தா பதிப்பகம் சிலை
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் புத்தகத் திருவிழா தொடக்க விழாவில் கலெக்டர் சண்முகம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் நடராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நன்றி - மாலை மலர்ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் புத்தகத் திருவிழா தொடக்க விழாவில் கலெக்டர் சண்முகம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் நடராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ராமாயணம் ஜஸ்ட் 49 ரூபா
320 பக்கம் பகவத் கீதை ஜஸ்ட் 10 ரூபா
நமீதா கெஸ்ட் டாக் அப்டிணா இப்படி இருக்குமா இந்த அரங்கம்?
2 comments:
photo super ...
படங்களோடு பதிவு - அருமை.
Post a Comment