பிறவிக்கலைஞன் கமல் -ன் குணா படக்கதையை கொஞ்சம் ஆல்டர் பண்ணி பாசிடிவ் அப்ரோச் டைரக்டர் விக்ரமன் கிட்டே கொடுத்து திரைக்கதை அமைக்க சொல்லி அதை ஆண்ட்ரியா, சோனியா அகர்வால் ஜோடி சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவனை டைரக்ட் பண்ண சொல்லி இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் 18 வயசு.
ஹீரோ சின்ன வயசுல இருந்தே அப்பா செல்லம், அவங்கம்மா கேரக்டர் சரி இலை, எப்போ பாரு அப்பா கூட சண்டை.. வேற ஒரு ஆள் கூட தொடர்பு. மேட்டர் தெரிஞ்சு அப்பா தூக்கு மாட்டி தற்கொலை செஞ்சுக்கறார். அம்மா எப்பவும் போல கள்ளக்காதலனுடன் ஜாலியா இருக்கார்..
ஹீரோ இதனால மன நலம் பாதிக்கப்படறார்.. இவருக்கு வந்திருக்கும் வியாதிப்படி அருகில் ஏதாவது ஒரு மிருகத்தை பார்த்தா அந்த மிருகத்தின் குணநலன்கள் இவருக்கு வந்துடும்.. உதாரணமா நாயை பார்த்தா இவரும் வள் வள்னு குலைப்பார்..
ஹீரோவை நார்மல் ஆக்க அவர் ஃபிரண்ட் தன் லவ்வரோட தோழியை லவ் பண்ண சொல்றார்.. சொல்லி வருவதில்லை காதல் என்ற தியரிப்படி அது ஒர்க் அவுட் ஆகலை.. ஆனா ஹீரோயின் எதேச்சையா ஹீரோவை சந்திக்க காதல் ஸ்டார்ட் ஆகுது..
குணா கமல் போல் நம்ம ஹீரோ காட்டுக்கு போலாம், அங்கே தான் ஜாலின்னு கூப்பிடறார்.. அந்த பொண்ணும் ஓக்கே சொல்லுது.. இப்போ என்ன சிக்கல்னா ஹீரோவொட அம்மாவோட கள்ளக்காதலன் இத்தனை நாளா வெளில இருந்தே அப்பப்ப ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டவன் இனி பர்மனெண்ட்டா வீட்லயே தங்கி சாப்பிடலாம்னு வர்றான்.
ஹீரோ செம காண்ட் ஆகி அம்மாவையே கொலை பண்ணிடறார்.. அப்புறம் 2 ரீல் கழிச்சு அந்த கள்ளக்காதலனை.டமால் இது தெரிஞ்ச ஹீரோயின் பேக் அடிக்கறா,..போலீஸ் ஹீரோவை தேடுது. ஹீரோ போலீஸ் ஸ்டேஷன் பூந்து ஹீரோயினை கடத்திட்டு போறாரு, போலீஸ் துரத்துது.. என்ன ஆகுதுங்கறதுங்கறதுதான் கதை..
படத்தோட முதல் ஹீரோ ஹீரோவுக்கு வந்திருக்கும் புது மன நோய் தான்.. தமிழுக்கு புதுசு.. மாடு, நாய், பாம்பு போல் எல்லாம் உள்வாங்கி உரு மாறி ஜிம் கேரியின் சீரியஸ் கேரக்டரை ஹீரோ ஜானி செய்கையில் ரசிக்க முடிகிறது..
ஜானி உடல் மொழியில் பிரமாதப்படுத்துகிறார்.. ஆனால் முக பாவனைகளில் ஜஸ்ட் பாஸ் தான்.. எல்லா படங்களுக்கும் இது கை கொடுக்கும் என்று சொல்லி விட முடியாது, கவனம்..
ஹீரோயின் புதுமுகம் காயத்ரி.. ஐஸ்வர்யா ராயின் இடை, கன்னம், நந்திதாதாஸின் புன்னகை, கண்கள் மிக்ஸ் செய்த அழகிய கலவையாய் அவரைப்பார்க்க குளிர்ச்சியாய்த்தான் இருக்கு. டூயட் காட்சிகளீல் லேசா சூடு கிளப்பறார்.. 70 மார்க் ஃபிகர், தேறிடும். ஆனா காம்ப்ளான் ரெகுலரா குடிக்கனும்..
ஹீரோவுக்கு ஃபிரண்ட்டா வர்றவர் அச்சு அசல் நம்ம ராஜன் லீக்ஸ் மாதிரி இருக்கார் 6 சீனே வந்தாலும் நல்ல நடிப்பு. எதிர் காலம் இருக்கு.. அவரோட லவ்வரா வர்றவரும், தோழியா வரும் அட்டு ஃபிகரும் நல்ல நடிப்பு..
ஹீரோவின் அம்மா கேரக்டர் யுவராணி , சரி கட்டை.. மனோவியல் மருத்துவரா வரும் ரோஹினி கச்சிதமான நடிப்பு.
இன்ஸ்பெக்டராக வருபவர் அசத்தலான நடிப்பு.. தோரனை , மீசை எல்லாம் கன கச்சிதம்.. ஹீரோவின் மனநலம் குன்றிய நண்பராக வருபவர் நடிப்பு புதுசு.. சபாஷ்..
ஒளிப்பதிவு, கேமரா , இசை என தொழில் நுட்பங்களில் எல்லாம் எபவ் ஆவரேஜ்,.,.
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. எந்த உலகில் நீ இருந்தாய்? 2. எனக்கென நீயே பிறந்தாய், 3 போடி போடி பெண்ணே 4 திருநங்கை பாட்டு என 4 பாடல்களுமே நல்லாருக்கு.. படமாக்கப்பட்ட விதமும் மெத்த சரி
2. போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர், மன நிலை பாதிக்கப்பட்ட தோழன் கேரக்டர் இருவருக்குமான நடிகர் தேர்வு சூப்பர். கலக்கிட்டாங்க
3. ஹீரோ ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விலங்கு அல்லது பறவையின் குணநலன் கள் பெறுவது நல்ல கற்பனை. அதை காட்சிப்படுத்தியதும் ஓக்கே
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. தன் மகன் மேல் மனைவிக்கு பாசம் இல்லை என்பதை உணர்ந்தவர் மகனை அநாதையாக விட்டு தற்கொலை செய்ய முயல்வாரா?
2. குடும்பப்பெண் பட்டப்பகலில் தன் வீட்டின் வாசல் முன் கள்ளக்காதலனுடன் கை கோர்த்து கதை பேசிட்டு இருப்பாரா? அவர் என்ன மாமா பையனா? முறைப்பையனா? கள்ளக்காதல்னா ஒரு பதட்டம் வேணாம், ? ராஸ்கல்ஸ்.. தன் புருஷன், மகன் வீடு திரும்பும் நேரம்னு தெரிஞ்சும் அவர் அசால்ட்டா இருப்பது நம்ப முடியலை..
3. கள்ளக்காதலன் வெச்சிருக்கறவங்க பொதுவா உஷரா இருப்பாங்க. தன் ஃபோன் 5 மணி நேரம் பேட்டரி டவுன் என்பதை அவள் ஏன் தன் கள்ளக்காதலனுக்கு லேண்ட் லைன் ஃபோன்ல இருந்து தகவல் சொல்லலை? சொல்லி இருந்தா அவன் வீட்டுக்கு ஃபோன் பண்ணி மாட்ட வெச்சிருக்க மாட்டானே?
4. போலீஸ் திடீர்னு ஹீரோ ஹீரோயினை கூட்டிட்டு போற ஏரியாவை எபப்டி கண்டு பிடிக்கறாங்க?
5. மனநல மருத்துவரான ரோகினி எப்படி கரெக்டா அந்த இடத்துக்கு க்ளைமாக்ஸ்ல வந்து தடுக்க முடியுது?
6. க்ளைமாக்ஸ்ல 4 சப் இன்ஸ்பெக்டர், ஒரு இன்ஸ்பெக்டர் எல்லார் கைலயும் கன் இருக்கு, அது போக 9 கான்ஸ்டபிள் வேற. ஏன் யாருமே ஹீரோவை சுடலை? ஹீரோவை நேர்ல பார்த்தா சுட்டுட்டுத்தான் மறுவேலைன்னு கர்ஜிக்கும் இன்ஸ்பெக்டர் ஏன் அவரை ஷூட் பண்ணலை? தண்டமா ஃபைட் போட்டுட்டு இருக்காங்க?
7. விலங்குகளின் குணநலன் உள்ள மன நோயாளியா இருந்தாலும் உடல் பலம் சாதாரண மனிதனின் பலம் தான் இருக்கும்னு ஈரோடு டாக்டர் சொல்றார். ஆனா ஹீரோ ஆக்ரோஷமா 20 பேரை க்ளைமாக்ஸ்ல அதகளம் பண்றாரே> அதுவும் போலீஸ்ல ட்ரெயினிங்க் எடுத்தவங்களை. அது எப்படி?
8. மன நலம் பாதிக்கப்பட்ட ஆள் கிட்டே லோடட் கன்னை இன்ஸ்பெக்டர் எந்த நம்பிக்கைல தர்றார்? அவன் அவரையே திருப்பி சுட்டுட்டா என்ன பண்ண?னு யோசிக்க மாட்டாரா? ( அவன் அப்படித்தான் சுடறான் )
மனம் கவர்ந்த வசனங்கள்
1. அம்மா எவ்ளவ் சண்டை போட்டாலும் அப்பாவோட பொறுமை, புன்னகை,அமைதி எல்லாம் பார்த்து எனக்கும் அப்பா குணம் வந்துடுச்சு.
2. பொண்ணுங்க பக்கத்துல இருந்தா சந்தோஷம் தான் வரும், அழுகை எப்படி வரும் ?
3. அவ வந்தாளா? முத்தம் குடுத்து உன்னையும் ஏதாவது பண்ணச்சொன்னாளா?
ம், 150 ரூபாவுக்கு டாப் அப் பண்ணி விடசொன்னா.
4. நீ தானே வெயிட் பண்ணச்சொன்னே?
அதுக்காக நேத்து மத்தியானத்துல இருந்து இன்னைக்கு காலைல வரை தூங்காம, சாப்பிடமயா?
5. டேய், நீ எதுக்கு அவ வீட்டுக்கு போனே?
சார், இப்போ இதான் சார் ஃபேஷன். லிவிங்க் டுகெதர், மேரேஜ் ஆகாம ஒண்ணா இருப்பது
6. அழுகை ல பல வகை இருக்கு.லவ் பண்றவங்க மட்டும்தான் உள்ளுக்குள்ளே ஊமை அழுகை அழ முடியும#்
7. எந்த புருஷனும் தன் பொண்டாட்டி பேரை நெஞ்சுல சூடு போட்டுக்க மாட்டான்.காதலன் மட்டும்தான் காதலி பேரை சூடு போட்டுக்குவான்
8. சார், நான் இன்னும் சாகலை?
இனிமேத்தான் சாகப்போறே..
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - எல்லாரும் இந்தப்படத்தை ரசிச்சுட முடியாது. 30 வயசுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு. ஈரோடு அபிராமியில் ப்டம் பார்த்தேன்
9 comments:
Thanks
Senthil, Doha
good review
vaasikum podhu oruvela Vijay Antony nadicha Naan padam vimarasnama irukumo dbl chck panna vendi irundhuchu pa..
அப்போ படம் டவுன்லோட் பண்ணலாமா?
vikatan mark 39-40
இந்த படத்த ரெண்டு தடவ பாத்துட்டேன். நல்ல கதையை கெடுத்துட்டாங்க.. முடியலை.. காதல் வாழ்க நண்பர் நல்ல செலக்ஷன் ஆனால் ரொம்ப ஓவரா பேசியே கொள்ளுறார். இன்ஸ்பெக்டர் நல்ல செலக்ஷன் ஆனால் துப்பாக்கியை மனநலம் பாதிக்கப் பட்டவரிடம் கொடுப்பது கேவலமா இருக்கு. படம் விரும்பி பாக்கிற அளவுல இல்ல. ரொம்ப போர்.. தலைவலி. படத்தோட பெரிய ப்ளஸ் ஹீரோயின் செலக்ஷன் மற்றும் அவரோட கேரக்டர். படத்தில இருக்கிற எந்த கேரக்டர் மனசுல ஓட்டுதோ இல்லையோ. ஹீரோயின் சான்சே இல்ல... இடைவேளையின் போதும் அதற்க்கு பிறகும் ஏன் படம் முடிஞ்ச பிறகு கூட ஹீரோயின் கேரக்டர் என் மனசிலேயே வாழ்ந்துகிட்டு இருக்கு. அந்த ஒரு விஷயத்துக்காக இவ்வளவு பெரிய தலைவலியை தாங்கிகிட்டேன். இந்த படத்த முதல் தடவ பாக்கும் போது கடுப்பா இருந்தது, ஆனால் ரெண்டாவது தடவ பாக்கும் போது உண்மையிலேயே ரொம்ப என்ஜாய் பண்ணுனேன்.. அதற்கு முக்கிய காரணம் பாசிடிவ் கிளைமேக்ஸ்.
"ஹீரோவின் மனநலம் குன்றிய நண்பராக வருபவர் நடிப்பு புதுசு.. சபாஷ்.. "
தம்பி அவர் பேரை தெரிஞ்சிகிட்டு
அதை போடுற அளவுக்கு உமக்கு பொறுமை இல்லியோ . . .
Satyendhar . . .
சினிமாவின் உணமையான தோழர்
நெறைய படங்களில் சிறிய வேடங்களில் வந்தாலும்
இது அவருக்கு குறிப்பிடதகுந்த படம் . .
"சொல்லாமலே" படத்தில் ஓரளவுக்கு முக்கியமான
பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் . . .
லெனினின் Knockout குறும்படத்தில் நடித்தவர்
அண்ணன் நீங்க சொல்லிட்டிங்க...ரைட்டு படம் பார்க்கலாம்
http://dohatalkies.blogspot.com/2012/08/a-beautiful-mind.html
//1. எந்த உலகில் நீ இருந்தாய்? 2. எனக்கென நீயே பிறந்தாய், 3 போடி போடி பெண்ணே 4 திருநங்கை பாட்டு என 4 பாடல்களுமே நல்லாருக்கு.. படமாக்கப்பட்ட விதமும் மெத்த சரி
2. போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர், மன நிலை பாதிக்கப்பட்ட தோழன் கேரக்டர் இருவருக்குமான நடிகர் தேர்வு சூப்பர். கலக்கிட்டாங்க
3. ஹீரோ ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விலங்கு அல்லது பறவையின் குணநலன் கள் பெறுவது நல்ல கற்பனை. அதை காட்சிப்படுத்தியதும் ஓக்கே // Idhula edhuvumey enakku pidikkala... film sema mokka... theater la naasthi pannitanga ellarum... Hero and andha loosu friend romba over acting... Total waste... please stop to make "Guna" kind of films hereafter.. naanga niraya paathutom...
Post a Comment