Thursday, July 19, 2012

THE HANG OVER -ஹாலிவுட் காமெடி சினிமா விமர்சனம்

The Hangover Movie Posterபிரமாச்சாரிகள் மேரேஜ் ஃபிக்ஸ் ஆனா தன் நண்பர்களுக்கு பார்ட்டி வைப்பாங்க இல்லையா? அந்த மாதிரி ஒரு பார்ட்டி.. 4 ஃபிரண்ட்ஸ்சும் கார்ல கிளம்பறாங்க கமலின் பஞ்ச தந்திரம் படத்துல பெங்களூர் போற மாதிரி வேகாஸ் போறாங்க. அங்கே போய் சரக்கு அடிச்சு மட்டை ஆகறாங்க.. 



விடிஞ்சு பார்த்தா ஏகப்பட்ட மாற்றங்கள்.. மாப்ளையை காணோம்.. பாத்ரூம்ல ஒரு புலி இருக்கு. விடுதலைப்புலி அல்ல, காட்டுப்புலி..  சோபாவுல ஒரு கைக்குழந்தை இருக்கு, ஒருத்தன் பாக்கெட்ல ரூ 80000 க்கு ஷாப்பிங்க் பண்ணுன டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பில் இருக்கு. ஒருத்தன் பல் உடைஞ்சு கிடக்கு. அவன் பல் டாக்டர் வேற.. யாருக்கும் ஒண்ணும் புரியல. நைட் என்ன நடந்ததுன்னு நினைவும் இல்லை



அதைக்கண்டுபிடிக்க மீதி இருக்கும் 3 பேரும் கிளம்பறாங்க.. போற வழில கார் டிக்கில ஒரு சத்தம் கேட்குது. திறந்து பார்த்தா யார்னே அறிமுகம் இல்லாத ஒரு ஆள் டிரஸ்சே இல்லாம கிடக்கான்.. எதுக்காக என்னை 4 பேரும் சேர்ந்து ரேப் பண்ணுனீங்க?ன்னு கேட்டுட்டு அவன் ஓடிடறான்.. இவங்க 3 பேரும் செம காண்ட் ஆகிடறாங்க..  அய்யய்யோ.. இதெல்லாம் வேற நடந்திருக்கா? இன்னும் என்ன என்ன ஆச்சோ? மாப்ளை உயிரோட இருக்கனா? யாராவது போட்டுத்தள்ளிட்டாங்களா?என்பதுதான் மிச்ச மீதிக்கதை..


திரைக்கதைல என்ன சுவராஸ்யம்னா  மர்மத்துக்கு விடை கண்டு பிடிக்கப்போன இடத்துல 4 பேர்ல ஒரு ஆள் ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி  மேரேஜும் பண்ணி இருக்கான்..  அந்த பொண்ணுக்குத்தான் 80000 டாலர் செலவு பண்ணி இருக்கான்.. இப்போ அந்த பணத்தை  மீட்க  சீட்டு ஆடி 82,400 டாலர் சம்பாதிக்கறாங்க


படத்துல முதல்ல நம்ம மனம் கவர்வது அந்த தாடிக்கார ஆள் தான்.. கஞ்சா கறுப்பு மாதிரி முணு முணுன்னு பேசறார்.. சந்தானம் மாதிரி கவுண்ட்டர் பஞ்ச் கொடுக்கறார்.. ஆரவாரம்./. படத்துல மாப்ளையா வர்றவர் தான் முறைப்படி ஹீரோ, ஆனா அவருக்கு காட்சிகள் கம்மிதான்.. அந்த தாடிக்காரர் குழந்தையை படுகர் இனத்தவர் போல் மார்போடு கட்டிக்கொண்டு அலைவது அழகு


http://free-linux-wallpapers.com/wp-content/themes/walltheme/timthumb.php?src=14389.jpg&h=280&w=370

மனம் கவர்ந்த வசனங்களில் நினைவில் நின்றவை


1. விடிஞ்சா மேரேஜ், மாப்ளை எங்கே?

இந்த மேரேஜ் நடக்காதுன்னு நினைக்கறேன்,மாப்ளையை காணோம்..

2. டேய்.. இந்த புக்ல குரூப்பா விளையாண்டா  ஜெயிக்கலாம்னு போட்டிருக்கு

அது இல்லீகல்

தப்பு, சுய உரிமை

3.  என்னது? நீ டாக்டரா? வெறும் பல்டாக்டர்தானே, ஓவரா சீன் போடாத..

4. சீஸர் பேலஸ்னு  (Caesars Palace.)இதை சொல்றங்களே? நிஜமா இதுல சீஸர் வாழ்ந்தாரா?

 நோ நோ 

எனக்குத்தெரியும், உனக்குத்தெரியுதா?ன்னு செக் பண்ணேன்


5. வெளீல வாங்கறதை விட நாம தங்கற ஹோட்டல்ல  எல்லாமே 4 மடங்கு விலை அதிகமா இருக்கும், அதனால எதுவும் வாங்கக்கூடாது


6. நானும், அவளும் 3 வருஷம் ஒண்ணா இருக்கோம்.. அவளை கல்யாணம் பண்ணிக்கப்போறேன்

 டேய், சொன்னாக்கேளு, அவ ஒரு ரூட்டு  ( பீட்ரூட்டா/)


7. உன் காதலி வேற ஒருத்தன் கூட படுத்து இருந்தது கூட பரவாயில்லை, போயும் போயும் ஒரு பார் அட்டெண்டர் கிட்டே படுத்ததை தான் எங்களால தாங்கிக்க முடியல..( தாங்கிக்க முடியாத அளவு அவ்ளவ் வெயிட் பார்ட்டியா?)



8.  தம்பி.. லிஃப்ட் மேலே போகுது...


 நாங்களும் தான்,. ஏன்? நாங்க மேலே போகமாட்டோமா?


9. நான் தனி ஆள்.. அதாவது தனிக்காட்டு ராஜா.. என் காட்டுக்குள்ள இன்னொரு ராஜா வந்தான்.. இப்போ 2 ராஜா.. அப்படியே 4 ராஜா ஆயாச்சு.. 4 ராஜாக்களும் இப்போ லாஸ் வேகாஸ் போகப்போறோம்..


10. எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.. இன்னைக்கு நைட் நடக்கப்போறதை இன்னையோட எல்லாரும் மறந்துடனும். அதான் எல்லாருக்கும் நல்லது.


http://mimg.ugo.com/201112/7/3/5/214537/cuts/hangover_528_poster.jpg


11. அட, குழந்தை புதுசா இருக்கே? யாருது?ன்னு தெரியலையே?

 சரி, விடு அது கிட்டேயே கேட்டிடுவோம்..  பாப்பா உன் மம்மி பேரு என்ன?


 டேய், நாயே, 7 மாசக்குழந்தை எங்காவது பேசுமா?


12. போலீஸ் காரை  லபக்கி திருட்டுத்தனமாக அதில் பயணிக்கும் 3 பேரும் வழியில் தென்படும் பெண்ணுக்கு கொடுக்கும் கமெண்ட் -

  மேடம், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..  இப்படியே மெயிண்ட்டெயின் பண்ணுங்க , ஹி ஹி


13.  போலீஸ் ஆஃபீசர்.. இந்த பணத்தை வாங்கிக்கிட்டு என்னை ஐ மீன் எங்களை விட்டுடுங்க..

 என் கை ரொம்ப சுத்தம்.. நீயே என் பாக்கெட்ல வெச்சு விடு.. ( அடேங்கப்பா  அம்புட்டு கறை படியாத கையா?)


14. டாக்டர்.. என்ன சொல்றீங்க? எங்களை யாராவது ரேப் பண்ணி இருப்பாங்களா?

 இருங்க , பார்த்து சொல்றேன்..  யாரோ உங்களுக்கு மருந்து கொடுத்திருக்காங்க. அதான் பழசை எல்லாம் மறந்துட்டீங்க>.


15. டாக்டர்... அந்த இடம் எங்கே இருக்கும்.. வழி காட்டுங்க ப்ளீஸ்..


 இப்படியே போனா ஒரு முட்டுச்சந்து வரும்.. அதுல முட்டி செத்துடு... ஐ ஆம் எ  டாக்டர்..  நாட் எ கைடு..  ஒரு மேப் வாங்கிக்குங்க, அப்புறம் தேடுங்க.. என்னை ஆளை விடுங்க..


16.  என் தாத்தாபோர்ல செத்தாரு..

 பெரிய படை வீரரா?


நோ நோ வேடிக்கைபார்க்கப்போன இடத்துல போட்டுத்தள்ளீட்டாங்க..



17. புலிக்கு பெப்பெர்னா பிடிக்கும்..

 அது உனக்கு எப்படித்தெரியும்?


 நேஷனல் ஜாக்ரஃபி சேனல்ல காட்னாங்க.


18.  அவ ஒரு பைலட் கூட படுத்தவ தானே?

 பார் அட்டெண்டர்னு எத்தனை டைம் சொல்றது?


19. டேய்.. டேய்.. பார்த்து பார்த்து.. அவ என் ஒயிஃப்டா.. நானே தூக்கிக்கறேன்.. கையைஎடு



20.. சரக்கு அடிக்கறதுக்கும் ரூஃப்னோல் ( ஒரு வகை போதை மருந்து) சாப்பிடறதுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

 அதெல்லாம் தெரியாது, சரக்கு அடிச்சா  ரோட்ல மண்லயே மல்லாந்துடுவேன், ரூஃப்னோ அடிச்சா மாடில வந்து மல்லாந்துடுவேன்


21.  ஹாய்.. ஸ்வீட்டி.. ஐ ஆம் கிளாடு டூ மீட் யூ..

 ஸோ வாட்?


 ஐ ஆல்சோ ஒர்க்டு அஸ் எ பார் டெண்டர், ப்ளீஸ் கிவ் மீ எ சான்ஸ்.. ஹி ஹி

 சக் த டிக்

 இருக்கட்டும் பரவால்ல ஹி ஹி


22. என் கணவர்ட்ட பேசனும், ஃபோனை அவர் கிட்டே குடு,.. அவர் எங்கே?

 பக்கத்துல தான்..  ஆனா ஃபோனை குடுக்க முடியாது,., ஏன்னா எங்களுக்குள்ள ஒரு கேம்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவங்கவங்க மனைவி கூட யாரும் பேசக்கூடாது.. நண்பர்கள்டதான் பேசனும் 


http://drop.ndtv.com/albums/ENTERTAINMENT/the-hangover-premiere/3.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. 4 பேர்ல ஒருத்தன் தன் மனைவி கிட்டே பேசறான்.. அப்போ போலீஸ் வருது.. நியாயமா செல்லை ஆஃப் பண்ணிட்டோ அல்லது கட் பண்ணிட்டோ தானே போலீஸ் கிட்டே யாரும் பேசுவாங்க.. எந்த லூஸாவது செல் ஃபோனை ஆன்ல வெச்சுக்கிட்டே அப்படி போலீஸ் கிட்டே பேசி சம்சாரம் கிட்டே மாட்டுவாங்களா?


2. குழந்தை காணோம்.. உடனே அந்த குழந்தையோட அம்மா இந்த 4 பேரில் ஒருத்தனுக்கு ஃபோன் போட்டு எங்கே இருக்கீங்க?ன்னு விசாரிக்க மாட்டாளா?



3. அவங்க காருக்குள்ளே ஒரு ஆள் கிடப்பது எப்படி தெரியாம போச்சு? அவன் உள்ளே தூங்கிட்டா இருப்பான்? டப டபன்னு பேனட்டை தட்ட மாட்டானா?



4. ஹோட்டல்ல ரூம்ல புலியை பார்த்தா உடனே ரூம் சர்வீஸ்க்கு ஃபோன் பண்ணி ஃபார்ஸ்ட் ஆஃபீசரை வரச்சொல்லி ஒப்படைச்சா வேலை முடிஞ்சது.. அதை விட்டுட்டு  புலிக்கு பர்கர் தர்றது, பயப்படறது எல்லாம் மொக்கை காமெடி


5.  படத்துல பல் டாக்டர் பற்றிய வசனங்கள்ல தேவை இல்லாம நக்கல்ஸ் ஜாஸ்தியா இருக்கு.. டாக்டர்னா உசத்தி, பல் டாக்டர்னா மட்டமா?


6.  ரூம்ல 4 பேரும் ஒரு டிக்கெட்டை கூட்டிட்டு வந்து நைட் மேட்டர் முடிச்சிருக்காங்க. விடிஞ்சதும் அது பாட்டுக்கு பொறுப்பில்லாம சொல்லாம கொள்ளாம கிளம்பிடுது.. பணத்துக்காக ஆசைப்பட்டு வர்ற பொண்ணுன்னா ரூம்ல எல்லாரும் மயக்கமா இருக்கறதைபயன் படுத்தி அங்கே இருக்கும் பணத்தை லவட்டிட்டு போய் இருக்கனும்.. அல்லது யோக்கியமான பொண்ணுன்னா அவங்க எல்லாரும், அல்லது யாராவது ஒருத்தர்  எந்திரிச்சதும் சொல்லிட்டு போய் இருக்கனும் ( அப்போ அவங்க குழப்பம் குறைஞ்சுருக்குமே?)



http://snarkerati.com/tv-news/files/2012/07/jamie-chung-mulan.jpg
 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. தெளிவான திரைக்கதை, இயல்பான காமெடி.. என்ன சொல்ல வந்தாரோ அதை நச்னு சொன்ன விதம்.. ஏகப்பட்ட அவார்டை அள்ளி இருக்கு..


2. நால்வரில் ஒருவரின் மனைவி அடிக்கடி ஃபோன் பண்ணி கிராஸ் செக் செய்வதும் அதுக்கு சமாளிக்கும் கணவரின் ரீ ஆக்‌ஷனும் செம காமெடி


3.  ஹோட்டல் ரூமில் புலி வருவது, அதை கொண்டு போய் சேர்ப்பது என்பதெல்லாம் லாஜிக் சொதப்பலாக இருந்தாலும் வாய் விட்டு சிரிக்கும் அளவு காமெடி சென்ஸுடன் தான் இருக்கு


4.  பின்னணி இசை.. என்னமோ நாமே அவங்களோட டூர் போற மாதிரி ஒரு  தோரணை.. ஃபீல்


சி.பி கமெண்ட் -  படத்துல ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் பேசறாங்க.. மற்றபடி காட்சி அமைப்பில் எந்த விரசமும் இல்லை.. செம ஜாலியான காமெடி ஃபிலிம்.. லேடீஸும் பார்க்கலாம்..  இந்தப்படத்தை பார்த்து ஓரளவு உல்டா செய்த படங்கள்  பஞ்ச தந்திரம், கோவா , ஹிந்தில ஜிந்தகி ந மிலேகி, மலையாளத்தில் சைனா டவுன் .. தகவல் உதவி 1., 2.  ,3. Rajessh Logharaj @IamRajessh, ஆன் லைனில் முழுப்படத்தையும் ஓ சி யில் பார்க்க -http://www.movie2k.to/The-Hangover-watch-movie-61564.html... இந்தப்படத்தின் சாயலில் வந்ததாக சொல்லப்படும்  மலையாளப்படம் விமர்சனம் -

சைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் 18 பிளஸ் http://www.adrasaka.com/2011/04/18_19.html

 



வாங்கிய அவார்ட்ஸ்
Award Category Recipient Result
American Cinema Editors Awards Best Edited Feature Film – Comedy or Musical Debra Neil-Fisher Won
American Film Institute Awards Top 10 Movies
Won
Broadcast Film Critics Association Awards Best Comedy Film
Won
British Academy Film Awards Best Original Screenplay
Nominated
Detroit Film Critics Society Best Ensemble
Won
Empire Awards Best Comedy
Nominated
Golden Globe Awards Best Motion Picture – Musical or Comedy
Won
Houston Film Critics Society Awards Best Performance by an Actor in a Supporting Role Zach Galifianakis Nominated
MTV Movie Awards Best Movie
Nominated
Best Breakthrough Performance Zach Galifianakis Nominated
Best Villain Ken Jeong Nominated
Best Comedic Performance Zach Galifianakis Won
Best Comedic Performance Bradley Cooper Nominated
Best WTF Moment Ken Jeong Won
People's Choice Awards Favorite Comedy Movie
Nominated
Favorite Movie
Nominated
Satellite Awards Best Actor – Motion Picture Musical or Comedy Bradley Cooper Nominated
Spike Guys' Choice Awards Guy Movie of the Year
Won
St. Louis Gateway Film Critics Association Awards Best Comedy
Won
Writers Guild of America Awards Best Original Screenplay
Nominated
டெக்னீஷியன் விபரங்கள்-
Directed by Todd Phillips
Produced by Todd Phillips
Daniel Goldberg
Written by Jon Lucas
Scott Moore
Starring Bradley Cooper
Ed Helms

Zach Galifianakis

Heather Graham

Justin Bartha

Jeffrey Tambor
Music by Christophe Beck
Cinematography Lawrence Sher
Editing by Debra Neil-Fisher
Studio Legendary Pictures
Distributed by Warner Bros.
Release date(s)
  • June 5, 2009
Running time 100 minutes[1]
Country United States
Language English
Budget $35 million[2]
Box office $467,483,912[3]   

5 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

வணக்கம் சி.பி.

என்னாது காட்சி அமைப்பில் விரசம் இல்லையா? Ending Credits ஓடும்போது எதுவும் பாக்கலயா?

Unknown said...

எப்போ வந்த படம் இது...ரொம்ப நாள் ஆச்சே பாத்து..ரெண்டாவது பாகம் கூட வந்திரிச்சே சார்!

Unknown said...

hmm...................

Mohammed Arafath @ AAA said...

intha padatha tamil la partha appadi than... english la partha than.. real fun...

English theriyalana PAAVAAM

balaperfect said...

Endha padam vandhathu 2009 la.. Aaana panchathanthiram 2002 la release aachu !!! Tamil padamnale ellarum copy adipanganu arthama !!