பரீட்சார்த்தமான முயற்சிகளை எடுப்பதிலும்,தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவதிலும் கமல் ஒரு நல்ல கலைஞர்.அவரது சினிமா உலக சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.. அதுவும் நாயகன் படத்தில் இயக்குநர் மணி ரத்னத்துடன் இணைந்து பணி ஆற்றிய பின் அவரது கலை தாகம் அதிகரித்தது. ஒவ்வொரு படத்துக்கும் புதிய கெட்டப், கேரக்டருக்காக தன் உடலை, முகத்தை மாற்றிக்கொள்வது என பயணப்பட்டார்.. அப்படிப்பட்ட உன்னத கலைஞனின் உலகப்படம் தான் பேசும் படம்.,.
டைட்டிலில் தான் பேசும் படம் ,படத்தில் வசனங்களோ, பாடல்களோ இல்லை, சில காட்சிகளில் மட்டும் ரேடியோ வாசகங்கள் வந்தன,.. ஆனால் பக்கம் பக்கமாக வசனம் பேசி புரிய வைக்க முடியாததை காட்சிகள் மூலமாகவே புரிய வைக்க முடியும்,மக்களை ரசிக்க வைக்க முடியும் என நிரூபித்தவர் சிங்கீதம் சீனிவாசராவ்.
கன்னடத்தில் புஷ்பக விமான , தெலுங்கு, மலையாளத்தில் புஷ்பக், தமிழில் பேசும் படம் என ரிலீஸ் ஆச்சு
படத்தோட கதை என்ன? ஹீரோ வேலை வெட்டி இல்லாத வெட்டாஃபீஸ்.. இண்ட்டர்வியூவுக்கெல்லாம் போய்ட்டு இருக்கார்.. ஹீரோயின் ஒரு மேஜிக் மேன் உடைய பொண்ணு.. 2 பேரும் சந்திக்கறாங்க. அன்பை பரிமாறிக்கறாங்க.
ஒரு கோடீஸ்வரர் , சரியான தண்ணி வண்டி.. சரியா தன் சம்சாரத்தை கவனிக்காம எப்போ பாரு பிஸ்னெஸ் பிஸ்னெஸ்னு சுத்திட்டு இருக்கார்.. அதனால அவர் சம்சாரம் டிராக் மாறிடுது. அவர் மனைவியின் கள்ளக்காதலன் கோடீஸ்வரரை கொலை பண்ணிட்டா இந்த சொத்துக்களை எல்லாம் ரூட் விட்டுடலாம்னு மூணாறுத்தனமா திட்டம் போடறாரு.. அதுக்கு ஒரு ஆளை நியமிக்கறாரு..
அந்த கோடீஸ்வரர் ஒரு ஹோட்டல்ல தங்கறார்.. ஏதோ வேலையா வெளீல போறப்போ மப்பு ஜாஸ்தி ஆகி ரோட்டோரம் விழுந்து கிடக்காரு விக்கி மாதிரி.. அந்த வழியா வந்த ஹீரோ அவர் பேண்ட் பாக்கெட்ல ஹோட்டல் சாவி பார்த்து ஒரு திட்டம் போடறார்.. அதன் படி அவரை தன் ரூம்க்கு கொண்டு போய் கட்டில்ல கட்டி வெச்சுட்டு அவர் ஹோட்டல் ரூமுக்கு போறார். ஆள் மாறாட்டம்.. ஹோட்டல் ரூம்ல லட்சக்கணக்குல பணம்.. ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு இருக்கார்..
அந்த வாடகைக்கொலையாளி ஹீரோவை கோடீஸ்வரர்னு நினைச்சு கொலை பண்ண முயற்சி பண்றாரு.. அதுல இருந்து ஹீரோ எப்படி தப்பிக்கறாரு? க்ளைமேக்ஸ்ல என்ன நடந்தது?இதெல்லாம் படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க.
படத்தோட முதல் ஹீரோ இயக்குநர் தான்.. படத்துல வசனம் இல்லைன்னு முடிவு பண்ணுனதுமே டிஸ்கஷன்ல எப்படி எல்லாம் காட்சிகள் வெச்சா போர் அடிக்காம போகும்? ஆடியன்சுக்கு புரியும்? சிரிக்க வைப்பது எப்படி? என்று ஹோம் ஒர்க் பக்காவா பண்ணிட்டு படத்தை எடுத்ததுக்கு.. சரியான பாத்திரத்தேர்வுக்கு ஒரு சபாஷ்..
அடுத்து கமல். பிச்சைக்காரனிடம் அவமானப்படும் சீன், மீண்டும் கைக்கு பணம் வந்ததும் முதல் வேலையாக பிச்சைக்காரனிடம் அதை காட்ட முனைவது, காதலியிடம் சைகை மூலமே உரையாடுவது என பல காட்சிகள் சபாஷ் போட வைக்கின்றன..இந்தப்படத்தில் ஹிந்திப்பட ஹீரோக்களுக்கு சவால் விடும் பர்சனாலிட்டி..
அமலா.. ஏசியில் வைத்த ரோஸி மாதிரி இவர் கண்களும் , கலரும் கலக்கல்.. அசால்ட்டான நடிப்பு. கமல் கடையில் இருக்கும்போது கம்மல் வாங்கி தன் காதில் வைத்து ஓக்கே? என கண்களாலேயே கேட்பதும் பின் அவர் பார்க்கும்போது யதேச்சையாக மரைப்பது போல் தன் கூந்தல் இழைகளால் காதுகளை மறைத்து வெட்கப்படுவதும் ஆஹா!!!
கொலையாளி வில்லனாக டினு ஆனந்த் , காமெடி வில்லன்,, வந்த வரை ஓக்கே. கோடீஸ்வரராக வரும் சமீர்க்கு நடிக்க அதிக வாய்ப்பு இல்லை.. ஆனாலும் படத்தில் பாதி நேரம் இவரை காட்டித்தான், கட்டிப்போட்டுத்தான் கதையே நகருது.
கோடீஸ்வரரின் மனைவியாக வரும் ரம்யா கிருஷ்ணன், கள்ளக்காதலனாக வரும் பிரதாப் போத்தன் என எல்லாருக்கும் நடிக்க கொஞ்சம் கொஞ்சமே வாய்ப்பு.. 4 காட்சிகளில் வந்தாலும் பிச்சைக்காரராக வரும் பி எல் நாராயணா கலக்கிட்டார்.. படத்தின் டர்னிங்க் பாயிண்ட் கேரக்டர் வேற..
அந்த கிளு கிளு கில்மா வேலைக்காரி என்னா தெனாவெட்டு?
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல வேலைக்காரி கேரக்டரையும், ரேடியோ வாசகத்தையும் மேட்ச் பண்ணி எடுக்கப்பட்ட புத்திசாலித்தனமான காட்சி அமைப்பு..
2. ஹீரோ ரூமுக்கு வரும் முன் சாவித்துவாரம் வழியே வேலைக்காரி நோட்டம் இடுவதும், கில்மா புக்ஸை பார்த்து ஹீரோவுக்கு தெரியாமல் ரசிப்பதும்..
3. முதன் முதலாக ஏகப்பட்ட பணத்தை பார்த்ததும் ஹீரோ அந்த பணக்கட்டின் மேல் படுத்துக்கொள்ளும் சீன்..
4. மேஜிக் கலைஞரான அமலாவின் அப்பா தன் மனைவிக்கு டிமிக்கு கொடுத்து சரக்கு அடிக்கும் லாவகம்.. அது போக படம் பூரா ஆங்காங்கே மேஜிக்கை உபயோகித்துகொண்ட விதம்..
5. ஹீரோவிடம் சுத்தமா பணம் இல்லை என தெரிந்து பிச்சைக்காரன் நக்கலாக தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக்காட்டி ஹீரோவை வெறுப்பேற்றுவது.. அதே ஆள் இறந்த பின் மக்கள் அவனை கண்டுக்காம பணத்தை பங்கு போட அடிச்சுக்குவதைப்பார்த்து ஹீரோ மனம் மாறுவது சினிமாத்தனம் என்றாலும் நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி
6. வில்லன் உபயோகிக்கும் ஐஸ் கத்தி செம ஐடியா. எனக்குத்தெரிஞ்சு எந்த படத்திலும் வர்லை.. ( பேசிக் இன்ஸ்டிங்க்ட்ல அப்படி ஒரு சீன் லைட்டா வரும். )
7. அமலா பின்னால் நிற்கும் சின்னப்பையன் ஐஸ் கட்டியை அவர் முதுகில் போட்டுட்டு ஓடி விட கமல் தான் அதைச்செய்தார் என அவர் மேல் அமலா கோபப்படுவதும், பின் உண்மை உணர்ந்து வெட்கப்படுவதும் ரொமாண்டிக் காட்சிகள்
இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1. ஒரு ஆளை கொலை செய்யனும்னா முதல் வேலை அவன் ஃபோட்டோவை கொலையாளியிடம் காட்டனும், அல்லது நேர்ல லாங்க் ஷாட்லயாவது இவன் தான் நீ கொலை பண்ண வேண்டிய ஆள்னு சொல்லனும்.. இதுதான் நடை முறை, இதை விட்டுட்டு ஹோட்டல் ரூம் நெம்பர் சொல்லி அங்கே தங்கி இருக்கறவன் தான் கொலை செய்யப்பட வேண்டிய ஆள்னு மொட்டையா சொன்னா எப்படி?அப்போதான் ஆள் மாறாட்டக்காமெடி வரும்னாலும் வேற மாதிரி திங்க் பண்ணி இருக்கனும்
2. ஹீரோ அந்த கோடீஸ்வரரை கை காலை கட்டி கட்டிலில் போட்டுட்டு வெளீல போயிடறார்.. அது டேஞ்சர் ஆச்சே? அவர் அப்படியே ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி வந்து கதவு அருகில் வந்து தட தடன்னு தட்டுனா என்ன ஆகி இருக்கும்? ( ஆனா அவர் அபப்டி செய்யலை)
3. அடை பட்ட கைதி நெம்பர் 1 , நெம்பர் 2 போக அவனை பாத்ரூம் போக விட்டா வேலை முடிஞ்சது. அதை விட்டுட்டு காமெடி பண்றதா நினைச்சுட்டு ஹீரோ பண்ற சீனெல்லாம் உவ்வே,,
4, முதன் முதலா பிரதாப் போத்தனும், டினு ஆனந்த்தும் டீலிங்க் பேச ஹோட்டல் ல சந்திக்கறாங்க. அப்போதான் கொலை பற்றியே பிளான் வருது.. எதுக்கு சம்பந்தமே இல்லாம ஃபிளாஸ்க்கும் கையுமா அவர் வரனும்?கொலை செய்யப்போகும்போதுதானே ஐஸ் கத்தி வைக்க ஃபிளாஸ்க் தேவை?
5. கொலையாளி டினு ஆனந்த் ஹோட்டல்ல நைட் டைம்ல கூட கூலிங்க் கிளாசோட சுத்துவது ஏன்?
6. ஹீரோ, ஹீரோயினை சந்திக்கறார், பழகறார்.. அப்பவெல்லாம் விட்டுட்டு ஹீரோயின் திடீர்னு கிளம்பறப்போ அட்ரஸ் கேட்பதும், அவர் வீசி எறியும் அட்ரஸ் பேப்பர் தொலைவதும் வலியத்திணிக்கப்பட்ட மென் சோகம்
7. கோடீஸ்வரர் மனைவி மனம் மாறுவது ஏன்? என்பதற்கு அழுத்தமா சீன் வைச்சிருக்கனும்.. அவர் திடீர்னு மனம் மாறுவது கமல் மனம் மாறுவது போல் மனதில் பதிவது இல்லை...
8, க்ளைமாக்ஸ்ல ஹீரோ மனம் திருந்துனதும் கோடீஸ்வரர் கண் விழிச்ச பின் அவர்ட்டயே உண்மையை சொல்லிட்டா வேலை முடிஞ்சது.. அதை விட்டுட்டு எங்கே அவரைப்பார்த்தாரோ அதே இடத்தில் விட்டு வந்தால் அவரை மாதிரியே இன்னொருத்தன் அவரை மிஸ் யூஸ் பண்ண சான்ஸ் இருக்கே?
9. ஹீரோ வேலை இல்லா பட்டதாரி , அவரை வறுமையின் நிறம் சிவப்பு கமல் மாதிரி ஓப்பனிங்க்ல காட்டி இருக்கனும், அப்புறமா அவர் பணக்காரர் கெட்டப் காட்டி இருந்தா பார்க்க நல்லாருக்கும்.. ஆனா ஓப்பனிங்க்லயே அவர் கெட்டப் ஜமீன் தாரர் மாதிரி காட்டிட்டாங்க.
10. தன்னைக்கொலை செய்ய வந்த டினு ஆனந்த்தை ஹீரோ. போலீஸ்ல காட்டிக்குடுக்கவே இல்லை..
11.திரைக்கதைல தொய்வு விழும் இடமே கமல்- கோடீஸ்வரர் சம்பந்தபப்ட்ட காட்சிகள் தான், அதனால கோடீஸ்வரர் மனைவியை கடத்தற மாத்தி எடுத்திருந்தா இன்னும் கிளுகிளுப்பு கூடி இருக்கும்
படத்தில் வசனம் இல்லை என்றாலும் சைகை மூலம், ரேடியோ மூலம் காட்சியால் இயக்குநர் உணர வைத்த வசனங்கள் ( விட மாட்டோமில்ல)
1. வேலைக்காரி ஒரு திமுசுக்கட்டை ( திமுக கட்டை என படிச்சுடாதிங்க, வேற ஒரு பிராப்ளம் வந்துடும்).. அவர் குனிஞ்சு கூட்டும்போது ஒரு பெருசு ஜொள் விட்டுட்டே வேடிக்கை பார்க்குது, அப்போ ரேடியோவில் -
பின்னோக்கி செல்லும் இந்தியாவை முன்னோக்கி கொண்டு வர நாம் பாடுபடுவோம்.சமூகத்தில் ஏற்ற இறக்கங்களை சரி செய்து மேடு பள்ளங்கள் இல்லாத சம தளமாய் அனைத்தையும் சரி செய்வோம்
2. இந்தக்கமமல் நல்லாருக்கா?
ம்ஹூம்
இது?
ம்ஹூம், உவ்வே
அட போப்பா எதை காட்னாலும் குறையே சொல்லிட்டு..
ஆஹா.. இது சூப்பர்..
3. ஹீரோயின் - எங்கம்மா , அப்பா எல்லாம் வெளீல போறாங்க வர 2 மணி நேரம் ஆகும், நாம மீட் பண்ணலாமா?.
எங்கே?
கோயில்ல
ம், ஓக்கே
4. உங்கம்மா என்ன பண்றாங்க?
ஹவுஸ் ஒயிஃப்
அப்பா?
மேஜிக் மேன்.. சரி உங்கம்மா?
அவங்க மேலே போய் இருக்காங்க..
மொட்டை மாடிக்கா?
அடங்கோ, அவங்க இறந்துட்டாங்க..
அப்பா?
போய்ட்டாரு
யூ மீன், அம்மா மாதிரியே அவரும் செத்துட்டாரா?
ம்ஹூம், எங்களை எல்லாம் விட்டுட்டு வேற ஒரு பொண்ணை கூட்டிட்டு ஓடிப்போய்ட்டார்.
ஓ! சாரி..
இட்ஸ் ஓக்கே./.
4. ஹீரோ - உங்க ஃபேஸ் செமயா இருக்குங்க..
ஹீரோயின் - உங்க கார் கூட நல்லா இருக்கு ( ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் வித்தியாசம் பாருங்க. ஹீரோ முகத்தை பார்த்து ரசிக்கறப்ப ஹீரோயின் காரை ரசிக்குறா..)
அய்யோ, அது என் காரு இல்லைங்க, சும்மா நிக்கறேன்.. பக்கத்துல
சி.பி கமெண்ட் - சமீபத்தில் கலைஞர் டி வியில் படம் போட்டாங்க பார்த்தேன் (14.7.2012 மதியம் 1.30 மணிக்கு ) சான்ஸ் கிடச்சா டோண்ட் மிஸ்.. நல்ல படம்.. பார்க்க வெண்டிய படம். டைட்டிலுக்கான விளக்கம், ஹீரோ தங்கும், ஆள் மாறாட்டம் செய்யும் ஹோட்டல் பெயர் புஷ்பக்.இந்தப்படத்திற்கு நான் பரிந்துரைக்கும் அல்லது தேர்வு செய்யும் டைட்டில் - ஐஸ் கத்தி
- National Film Award
- Best Popular Film Providing Wholesome Entertainment
Actor/Actress | Character |
---|---|
Kamal Haasan | Unemployed youth |
Amala | Magician's daughter |
Tinu Anand | Killer |
P. L. Narayana | Beggar |
Farida Jalal | Magician's wife |
Sameer Khakhar | The millionaire |
Ramya Krishnan | Millionaire's wife |
Loknath | Hotel owner |
K. S. Ramesh | Magician |
Prathap K. Pothan | The lover |
Official DVD cover | ||||||||||||||||||
Directed by | Singeetham Srinivasa Rao | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Produced by | Shringar Nagaraj | |||||||||||||||||
Written by | Singeetham Srinivasa Rao | |||||||||||||||||
Starring | Kamal Haasan Amala Tinu Anand Farida Jalal P. L. Narayana K.S Ramesh Pratap Pote Loknath | |||||||||||||||||
Music by | Vaidhyanathan | |||||||||||||||||
Release date(s) | September 10, 1987 | |||||||||||||||||
Running time | 131 min | |||||||||||||||||
Language | Silent Film |
7 comments:
பேச்சே இல்லாத 'பேசும் படம்' தான் சரியான தலைப்பு CP !
கமல் ............... விஸ்வருபம்
கமல் ............... விஸ்வருபம்
அருமை.....பேசும் படம் விமர்சனம் கூட...விடல போல..
பார்த்தேன் பாஸ்...வேலைக்காரியும் ரேடியோ நியூசும்! :-))
We too saw this movie in kalaignar tv last week..
புதிய படத்தின் விமர்சினம் போல் இருந்தத்து... அருமை
Post a Comment