மைசூரு : ஓடும் ரயிலில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற, நான்கு பேர் கொண்ட கும்பல், அதற்கு அந்தப் பெண் மறுத்ததால், ரயிலில் இருந்து கீழே தள்ளியது. அதிர்ஷ்டவசமாக, வறண்ட ஆற்றில் விழுந்ததால், அப்பெண் உயிர் தப்பினார். இருப்பினும், தலை, கால், முதுகில் காயம் ஏற்பட்டது.
ரயிலில் பயணிக்கும் இளம் பெண்களை, பாலியல் பலாத்காரம் செய்ய முற்படுவது, சமீப நாட்களாக அதிக அளவில் நடந்து வருகிறது.
சி.பி - டெயிலி நைட் ஊர்ல போலீஸ் ரோந்து வர்ற மாதிரி ரயில்லயும் ரோந்து வர விடலாம், இதுல என்ன டேஞ்சர்னா ரோந்து வர்ற போலீஸ் ஒழுங்கா இருக்கனும்..அவரே பயிரை மேஞ்சுடக்கூடாது
கடந்த ஞாயிறன்று இரவு, திருவனந்தபுரம் - சென்னை மெயிலில் குடும்பத்துடன் பயணித்த இளம் பெண் ஒருவரை, அதே பெட்டியில் பயணித்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சத்யன் என்பவர், பலாத்காரம் செய்ய முயன்றார்.
சி.பி - மிலிட்ரி, போலீஸ் ஆட்கள்னாலே ஒரு மிதப்பு வந்துடுது.. நம்மை யாரும் ஏதும் கேள்வி கேட்கமாட்ட்டாங்கன்னு தெனாவெட்டு
அவரை, சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலத்திலும், ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சி.பி - நல்லா விசாரிங்க, அதே கும்பல்தான் இதே வேலையை செஞ்சிருக்கும், 2 பக்கமும் 4 பேர்.. 2 சம்பவமும் ரயிலில்..
கர்நாடக தலைநகர் பெங்களூரில் அனாதை விடுதியில் தங்கி, அங்குள்ள தனியார் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தையல் கலைஞராக பணியாற்றி வருபவர்சுஷ்மிதா, 19. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பாட்டி மைசூரில் வசிக்கிறார்.
அவரை பார்ப்பதற்காக, நிறுவனத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு, சுஷ்மிதா நேற்றுமுன்தினம் பெங்களூரில் இருந்து மைசூருக்கு, யஷ்வந்த்பூர் - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். ரயில் மத்தூர் அருகே செல்லும்போது, நான்கு பேர் கொண்ட கும்பல் சுஷ்மிதாவை பலாத்காரம் செய்ய முயன்றது. அவர்களிடம் இருந்து தப்பிக்க, சுஷ்மிதா முயற்சித்தார். அதற்குள் அக்கும்பல் அவளை ஓடும் ரயிலில் இருந்து, கீழே தள்ளியது.
அப்போது ரயில் ஷிம்சா ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்ததால், சுஷ்மிதா ஆற்றில் விழுந்தார். ஆற்றில் தண்ணீர் எதுவும் ஓடவில்லை, வறண்டிருந்தது. ரயில் சென்ற பாலத்திற்கும், அவர் விழுந்த இடத்திற்கும் இடையே, 25 அடி உயரம் உள்ளது. இதனால், கீழே விழுந்த சுஷ்மிதாவுக்கு தலை, முதுகு மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை சம்பவத்தை கவனித்த பயணி ஒருவர், மத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார், அப்பெண்ணை மீட்டு மாண்டியா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயமடைந்திருந்த அவர், நடந்த விவரங்களை கூறினார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக அக்பர், 24, இம்ரான், 21, ஆகியோரை உடனடியாக ரயில்வே போலீசார் கைது செய்தனர். சுபான், ரபீக் ஆகிய இருவரையும் பாண்டவபுரா ரயில் நிலையத்தில் கைது செய்தனர். இவர்கள் அனைவருமே மைசூருவிலுள்ள கல்யாண கிரியை சேர்ந்தவர்கள்.
போலீசாருக்கு தகவல் சம்பவம் நடந்த போது, பார்த்து கொண்டிருந்த மற்ற பயணிகள், அபாய சங்கிலியை இழுத்தால், குற்றவாளிகள் தப்பி விடுவர் என்ற காரணத்தால், மாண்டியா ரயில்வே நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்து, ரயில் பெட்டி எண்ணையும் குறிப்பிட்டதால், குற்றவாளிகளை மாண்டியா போலீசார் கைது செய்ய முடிந்தது என்று கூறப்படுகிறது.
சம்பவம் 2
தாம்பரம்: தனியார் பள்ளி பஸ் சீட்டில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து, பின் சக்கரத்தில் சிக்கி இரண்டாம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை எரித்ததோடு, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியல் செய்தனர்.
சென்னை, சேலையூர், இந்திரா நகரில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளிக்கு சொந்தமாக, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவற்றில் தினமும் மாணவர்களை அழைத்து வருவதும், விடுவதும் நடக்கிறது. இதற்காக, தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று மாலை வழக்கம் போல், முடிச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு, ஒரு பஸ் சென்றது.
விழுந்தது: இந்த பஸ்சில், டிரைவர் இருக்கைக்கு பின்னால் ஐந்தாவது இருக்கை அருகே பெரிய ஓட்டை இருந்தது. ஆனால், அதை சரி செய்யாமல் குழந்தைகளை ஏற்றிச் சென்றனர். நேற்று மாலை முடிச்சூர் பஸ் நிறுத்தம் அருகே வளைவில் திரும்பிய டிரைவர் சீமான் பஸ்சை நிறுத்தினார். அங்கு சில மாணவர்கள் இறங்கினர். பின், அங்கிருந்து பஸ் புறப்பட்ட சற்று நேரத்தில், ஐந்தாவது இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டாம் வகுப்பு மாணவி முடிச்சூர், பி.டி.சி., குடியிருப்பை சேர்ந்த சேதுமாதவன் மகள் ஸ்ருதி, 4, என்ற சிறுமி, ஓட்டை வழியாக விழுந்து, பஸ் பின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி இறந்தார்.
ஸ்ருதி ஓட்டை வழியாக விழுந்ததை பார்த்து, சக மாணவர்கள் சத்தம் போட்டனர். இதற்கிடையில் பஸ் அரை கி.மீ., தூரம் சென்று விட்டது. மாணவி பலியானதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை பின் தொடர்ந்து சென்று, மடக்கி, டிரைவரை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து அங்கு வந்த ஒரு போலீசும், பொதுமக்களிடம் இருந்து, டிரைவரை காப்பாற்ற முயன்றார். ஆனால், பொதுமக்கள் விடவில்லை. ஆத்திரம் குறையாத மக்கள், கம்பி, கல்லால் பஸ்சை அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முடிச்சூர் சாலையில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சமாதானம்: இதற்கிடையில், சிறுமி உடல் கிடந்த இடத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 40 நிமிடம் கழித்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள், பேருந்துக்கு தீ வைத்தனர். அது கொழுந்து விட்டு எரிந்ததால், பதட்டம் அதிகரித்தது. தாம்பரம், சேலையூர் உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பஸ்சின் டீசல் டேங்க் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால், அருகே இருந்த வீடுகளையும், கடைகளையும் பூட்டி விட்டு பொதுமக்கள் ஓடினர். முடிச்சூர் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் வேகமாக திரும்பிச் சென்றன. நீண்ட நேரம் கழித்து, அங்கு வந்த தீயணைப்பு படையினர், போராடி தீயை அணைந்தனர். இதில், பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. அதன் பின்னும் ஆத்திரம் குறையாக பொதுமக்கள், சீயோன் பள்ளி உரிமையாளரையும், பஸ்சிற்கு தகுதிச் சான்று வழங்கிய தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியல் செய்தனர்.
போலீஸ் தாமதம்: பொதுமக்கள் பஸ்சை மடக்கி, டிரைவரை தாக்கியவுடனேயே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் போலீசார் அங்கு வரவில்லை. அதன்பின் வந்த, ஒரு போலீசும் நிலைமை மோசமானதை அடுத்து, பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாததால், சென்று விட்டார்.
பஸ் பராமரிப்பில் அலட்சியம்: புறநகரில் உள்ள தனியார் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்தையும் தினசரி சோதனை செய்ய வேண்டும். ஆனால், ஒரு பள்ளியில் கூட, வாகனத்தை முறையாக பராமரிப்பதில்லை. தனியார் பஸ்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறவேண்டும். அதுபோன்ற நேரங்களில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வாகனங்களை முறையாக சோதனை செய்யாமல் சான்றிதழ் கொடுத்து விடுவதாக பொது மக்கள் புகார் கூறினர்.
அது எங்க பஸ் இல்லை: பள்ளி முதல்வர் மறுப்பு: பள்ளி பஸ்சில் ஓட்டை இருந்தது குறித்து சீயோன் பள்ளி முதல்வர் விஜயன் கூறியதாவது: சம்பவத்திற்கு உள்ளான பஸ், சீயோன் பள்ளிக்கு சொந்தமான பஸ் இல்லை. தனியார் டிராவல்ஸ் பஸ். தனியார் டிராவல்ஸ் பஸ்கள், பள்ளி மாணவர்களை அழைத்து வந்து, கொண்டு போய் விடுகின்றன. இதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த பஸ்களை பராமரிக்க வேண்டியது அவர்களுடைய பணி. பத்து நாட்களுக்கு முன்பு தான், தனியார் டிராவல்ஸ் பஸ் டிரைவர்களை அழைத்து, போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தினோம். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தனியார் டிராவல்ஸ் பஸ்களை ரத்து செய்வது குறித்த முடிவு செய்யப்படும். இவ்வாறு விஜயன் கூறினார்.
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பாப்பப்பசாமியிடம் கேட்டபோது, "தனியார் பள்ளி பஸ் ஒன்று, தகுதிச் சான்றிதழ் பெற வந்தால் பிளாட்பார்ம், புட்போர்ட், மர்காட் சரியாக இருக்க வேண்டும். இரண்டு கதவுகள் போடப்பட்டிருக்க வேண்டும். இடது, வலது ஜன்னல்களில் கம்பிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவசர கால வழி, டயர் மற்றும் மெக்கானிக்கல் நிலைமை சரியாக இருக்க வேண்டும். இதில், ஒன்று கூட சரியில்லை எனில் சான்றிதழ் தரப்படாது. குறிப்பிட்ட பஸ் எப்.சி.,க்கு வந்தபோது, ஓட்டை இருந்திருந்தால், கண்டிப்பாக சான்றிதழ் கொடுத்திருக்க மாட்டோம்,' என்றார்.
சி.பி - பள்ளிக்குழந்தைகள், மாணவ, மாணவிகள் அப்பப்ப் தங்கள் ஸ்கூல், காலேஜ், பஸ் இவற்றில் ஏதேனும் குறை இருந்தா பெற்றோரிடம் தெரிவிக்கனும்.. பஸ்ஸை எரிக்கும் மக்கள் பொறுப்பா தங்கள் குழந்தைகள் தினமும் பயணம் செய்யும் பஸ் பாதுகாப்பானதுதானா? என் செக் பண்ணி இருந்திருந்தா இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.. நம்ம குழந்தைகளை நாம தான் பார்த்துக்கனும்.. சம்பாதிக்கற நாய்ங்களுக்கு பொறுப்பு இருக்கனும், அவனுங்க ஃபீஸ் எப்படி கறக்கலாம்னு சிந்திக்கவே நேரத்தை செலவு பண்றானுங்க
நன்றி -தினமலர்
2 comments:
குறிப்பிட்ட பஸ் எப்.சி.,க்கு வந்தபோது, ஓட்டை இருந்திருந்தால், கண்டிப்பாக சான்றிதழ் கொடுத்திருக்க மாட்டோம்,' என்றார்.
>>>>
ஆனா,1000 ரூபாய் குடுத்தால் பெட்ரோக் டேங்கே இல்லைனாலும் கொடுப்போம்.
Post a Comment