பெரம்பலூர்:கேரள மாநில சிறுமியை கற்பழித்து, கொலை செய்த வழக்கில், பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் உட்பட மூன்று பேரை, பெரம்பலூர் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், 46. இவர், தன் வீட்டு வேலைக்கு ஆள் தேவை என, தன் நண்பரான காரை அன்பரசனிடம் தெரிவித்தார். அன்பரசன், கேரள மாநிலத்தில் உள்ள புரோக்கர் பன்னீர்செல்வம் மூலம், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், லாட்ரக் எஸ்டேட் லட்சுமி கோவில் அருகே உள்ள பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன், 49, என்பவரின் மூன்றாவது மகளான மேகலா, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை, தான் சொந்த செலவில் படிக்க வைப்பதாக ஒப்புக்கொண்டார்.
கதறல்:கடந்த, ஜூன் 23ம் தேதி, ராஜ்குமாரின் நெருங்கிய கூட்டாளியான ஜெய்சங்கர், கார் டிரைவர் மகேந்திரன் ஆகிய இருவரும், இன்னோவா கார் மூலம் மேகலா மற்றும் அவரது தாய் சுசிலாவை கேரளாவிலிருந்து அழைத்து வந்து, ராஜ்குமார் வீட்டில் விட்டனர். சுசிலா, மேகலாவை, ராஜ்குமார் வீட்டில் விட்டு விட்டு கேரளா சென்றார்.கடந்த, 25ம் தேதி, மேகலா, தன் தாய் சுசிலாவை போனில் தொடர்பு கொண்டு, "என்னால் இங்கு இருக்க முடியவில்லை. உடனே வந்து அழைத்து செல்' என்று கூறியுள்ளார். அதற்கு, 29ம் தேதி வந்து அழைத்து செல்வதாக சமாதானம் கூறினார். அன்றைய தினமே மேகலாவின் பெற்றோர், கேரளாவிலிருந்து பெரம்பலூருக்கு வந்து கொண்டிருக்கும் போது, ஜெய்சங்கர், மேகலாவின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு, மேகலா உடல் நிலை சரியில்லாமல்,

தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார். மருத்துவமனையில் மேகலாவை பார்த்தபோது, அவர் சுயநினைவில்லாமல் இருந்தார். 30ம் தேதி ராஜ்குமார், ஜெய்சங்கர், மேகலாவின் பெற்றோர் ஆகியோர், திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் மேகலாவை சேர்த்தனர். பண வசதியில்லாததால், ஜூலை 4ம் தேதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, 6ம் தேதி, காலை 11.30 மணியளவில் மேகலா இறந்தார். இதுகுறித்து மேகலாவின் தந்தை சந்திரன் கொடுத்த புகார்படி, பெரம்பலூர் போலீசார், 7ம் தேதி, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, மேகலாவின் உடலை சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
சந்தேகம்:மேகலாவின் உடலை, கேரளாவுக்கு கொண்டு சென்று இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்த போது, மேகலாவின் உடலில் காயங்கள் இருந்ததால், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகசந்திரன், பீர்மேடு போலீசில் புகார் செய்தார். அங்கும் சந்தேக மரணம் என, வழக்கு பதிவு செய்யப்பட்டு, மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில், மேகலா கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் போலீசார், சந்தேக மரணம் என, பதிவு செய்த வழக்கை, ஆள் கடத்தல், கற்பழிப்பு, கொலை ஆகிய பிரிவின் கீழ் வழக்கை மாறுதல் செய்து, ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன், பாபு, பன்னீர்செல்வம் ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அன்பரசன் மற்றும் மகேந்திரனை கைது செய்தனர். இதையறிந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், பெரம்பலூர் போலீசில் சரணடைந்தார்.

ராஜ்குமார், அன்பரசன், மகேந்திரன் ஆகியோரை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஜெய்சங்கர், பாபு, பன்னீர்செல்வம் ஆகியோரை பிடிக்க, இன்ஸ்பெக்டர் கோபாலசந்திரன், எஸ்.ஐ., வெங்கடேஸ்வரன் உட்பட ஐந்து பேர் கொண்ட போலீஸ் தனிப்படை அமைத்து, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
நிரபராதி:ராஜ்குமார், சிறைக்குச் செல்லும் முன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகம் முழுவதும், தி.மு.க., நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு வழக்கு போடுவது போல், என்னை, சிறுமியை கற்பழித்து கொலை செய்ததாக, பொய்யான புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இந்த வழக்குக்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் நிரபராதி என்று நிரூபிப்பேன். விசாரணைக்கு அழைத்ததால் இரவு 9.00 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்தேன். மேல் இடத்திலிருந்து வந்த தகவலால், இரவு முழுக்க ஸ்டேஷனிலேயே தங்க வைக்கப்பட்டு, மீண்டும் மேலிடத்திலிருந்து தகவல் வந்ததாக தெரிவித்து, என்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.
திருச்சி ஏ.டி.எஸ்.பி., பெரோஸ்கான் கூறியதாவது:சிறுமி, ராஜ்குமாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மயக்கமடைந்து, பின்னர் அவர் மற்றும் அவர் கூட்டாளிகளான ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே, சிறுமியின் இறப்புக்கான காரணம் முழுமையாக தெரியவரும். மேலும், இச்சம்பவத்தில் யாரெல்லாம் காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவரும்.இவ்வாறு ஏ.டி.எஸ்.பி., கூறினார்.
நன்றி - தினமலர்
கொல்லம்: கேரள சிறுமி பாலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது மகள் மூளைக்காய்ச்சலால் தான் இறந்தாள் என்றும் அவளை யாரும் கொலை செய்யவில்லை என்றும் அந்த சிறுமியின் தந்தை தெரிவி்த்துள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சத்யா(15). அவர் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் திடீர் என்று மர்மமான முறையில் இறந்தார். உடல்நலக் குறைவால் சிறுமி இறந்ததாக ராஜ்குமார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தனது மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக சந்திரன் புகார் கூறினார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், டாஸ்மாக் ஊழியர் அன்பரசன், டிரைவர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனித்தனியாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ராஜ்குமார் உட்பட 4 பேரும் ஆண்மை உள்ளவர்கள்தான் என மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 4 பேரும் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பீர்மேடு சமூகநல அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சத்யாவி்ன் தந்தை சந்திரன், தாய் சுசீலா ஆகியோரிடம் கேரள குழந்தைகள் நல கமிட்டியினர் விசாரணை நடத்தினர். அப்போது சந்திரன் கூறுகையில், எனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. குழந்தைகளை படிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டேன். இந்நிலையில் எனது மகள் சத்யாவை பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி படிக்க வைக்கலாம் என்று கூறி பீர்மேட்டைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம், விஜயகுமார் ஆகியோர் கூறினர்.
இதையடுத்து நானும், எனது மனைவியும் மகள் சத்யாவை அழைத்துக் கொண்டு பெரம்பலூரில் உள்ள ராஜ்குமார் வீட்டில் விடுவதற்காக சென்றோம். அங்கு வைத்து எனது மகளை அவரது மகளுடன் சேர்த்து படிக்க வைப்பதாக ராஜ்குமார் கூறினார். மேலும் ரூ.5,000 பணம் தந்தார்.
நாங்கள் ஊருக்கு திரும்பிய மறுநாளே சத்யா எங்களுக்கு போன் செய்து எனக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை, என்னை உடனடியாக அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாள். அதற்கு மறுநாள் பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் சத்யாவை அனுமதித்திருப்பதாக போன் வந்தது.
இதையடுத்து நாங்கள் அங்கு சென்றபோது டாக்டர்கள் சத்யாவுக்கு மூளை காய்ச்சல் என்று கூறினர். அவளது நிலைமை மோசமானதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு தான் சத்யா இறந்தாள். எனது மகளை யாரும் கொன்றிருப்பார்கள் என நான் நம்பவில்லை என்றார்.
இது குறித்து குழந்தைகள் நல கமிட்டியின் செரியன் கு. குரியன் கூறியதாவது, சந்திரனும், சுசீலாவும் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார்கள். ராஜ்குமார் தனக்கு ரூ. 5,000 கொடுத்ததாக சந்திரன் கூறுகிறார். ஆனால் சுசீலா ரூ.3,000 கொடுத்தாகக் கூறுகிறார். இருவரது வாக்குமூலமும் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் மேலும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
thanx - thats tamil

'மூளைக்காய்ச்சலால் இறந்தாள்''...கேரள சிறுமி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்!

4 comments:
''மூளைக்காய்ச்சலால் இறந்தாள்''...கேரள சிறுமி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்!
http://tamil.oneindia.in/news/2012/07/22/india-new-twist-kerala-minor-murder-case-158140.html
இது,,,,,,,,,,?
தலைவர் இன்னும் மடவில்லையா......
சே! இவனுங்கள்ளாம் மனுசனா?
Post a Comment