Tuesday, July 17, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 15

ட்விட்டர் நண்பர் அனுப்பிய மடல் - அண்ணே எனது கேள்விகள் (மெயில் அனுப்ப வழி இல்லை, அதான் இங்கே, கேள்விகளை எடுத்து கிட்டு இங்கே இருந்து அழிச்சிடுங்க) [Kannamoochi (Vijay) in Twitter]


இதுக்கெல்லாம் ... டக்கு டக்கு ன்னு ஒன்னு ரெண்டு வார்த்தைல பதில் சொல்லணும் ....

சி.பி - டக் டக் ( duck)னா வாத்து மாதிரி பதில் சொல்லனுமா?



1. ஆஸ்கர் அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போல நீங்கள் கொடுத்தால் என்ன பெயர் வைப்பீர்கள்?




வழக்கமா எனக்கு வாங்கித்தான் பழக்கம் , கொடுத்து பழக்கம் இல்லை.. இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொல்றேன் - அட்ராசக்க அட்ராக்‌ஷன் அவார்ட்ஸ்


2. உங்கள் முதல் திரைப்படத்தின் தலைப்பு என்று எதவாது யோசித்து வைத்துளீர்களா?


கதை, திரைக்கதை தயார்- கோவை ப்ரீத்தி கொலை வழக்கு - உண்மை சம்பவம்- அமரர் சுஜாதாவின் காயத்ரி நாவல் போல் சாயல் இருக்கும், ஆனால் 100% கோவையில் நடந்த உண்மைச் சம்பவம்.. சிறுகதையாக ஆல்ரெடி எழுதி இருக்கேன் http://www.adrasaka.com/2011/10/kovai-preethi-murder-case.html



3. ஈரோட்டில் உங்களுக்கு பிடித்த தியேட்டர்?


ஆனூர் தான். ஏன்னா ஏ சி போடும் ஒரே தியேட்டர் ஈரோட்ல அதுதான். அபிராமி முதல்ல சூப்பரா இருந்துச்சு. இப்போ நிர்வாகம் சரி இல்லை, ஏ சி போடுவதே இல்லை, அதே போல் ஃபேனை அடிக்கடி ஆஃப் பணிடுவாங்க. கேண்ட்டீனில் கொள்ளை லாபம் அடிக்கறாங்க 



நம்மூரு பேருந்து பயணத்தை கிண்டல் அடிப்பவர்கள் .... பாகிஸ்தான் நாட்டின் பாலைவனத்தில் பயணிகள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது .... நம்மூரு தேவலை என்று சொல்லாவிட்டால் ..... அவர்களை இந்த லாரியில் ஏற்றி அனுப்புவோமே.....


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
நம்மூரு பேருந்து பயணத்தை கிண்டல் அடிப்பவர்கள் .... பாகிஸ்தான் நாட்டின் பாலைவனத்தில் பயணிகள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது .... நம்மூரு தேவலை என்று சொல்லாவிட்டால் ..... அவர்களை இந்த லாரியில்  ஏற்றி அனுப்புவோமே.....


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....


4. தாங்கள் தியேட்டரில் பார்த்த முதல் திரைப்படம்?


எனக்கு சரியா நினைவில்லை, எங்கப்பா கிட்டே கேட்டபோது ஏதோ ஒரு எம் ஜி ஆர் படத்துக்குத்தான் கூட்டிட்டுப்போனதா சொன்னார்.. அநேகமா அது மலைக்கள்ளன் அல்லது மதுரை வீரன் என நினைவு. அப்புறம் வயசுக்கு வந்த பின் பார்த்த முதல் கில்மா படம் சென்னிமலை அண்ணமார் - பவுர்ணமி ராத்திரியில் ரதி தேவி ( அப்போ பகல்ல மூதேவியா?).. இந்தப்படத்துல இருந்துதான் கேரளா பெண்கள் குளீப்பதில் எவ்வளவு ஆர்வம் மிக்கவர்களாக இருக்காங்க என்ற ஜெனரல் நாலெட்ஜை அறிந்தேன், படத்துல செம சீன் இருந்துது






5. பிடித்த விளையாட்டு?



செஸ் தான். பாரதியார் யுனிவர்சிட்டி செஸ் சாம்ப்பியனாக 3 வருடங்கள் இருந்தேன்.. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் காலேஜ்க்கு போகும்போது என் கால்கள் முதலில் செல்வது விளையாட்டு மைதானம்.. அங்கே எப்பவும் ரெடியா 3 குரூப் செஸ் ஆடிக்கிட்டே இருப்பாங்க.. அங்கே போனா டைம் பாஸ் ஆவதே தெரியாது.. 12 பேர் சேர்ந்து ஆளாளுக்கு ஐடியா குடுப்பாங்க.. நான் ஒருத்தனே 12 பேர் ஐடியாவுக்கும்  யோசிக்கனும்././ நல்லா டெவலப் பண்ணி இருந்திருக்கலாம்.. எனக்கு செஸ் கேம் யோசிச்சு யோசிச்சு தலை ஹீட் ஆச்சு// அதனால அதை விட்டுட்டேன்././  இப்போ செஸ்க்கு பதிலா அதே அலைவரிசையில் உள்ள இன்னொரு விளையாட்டு அதுவும் இண்டோர் கேம் தான்.. ஐ மீன் கேரம்


6. நீங்கள் நன்றாக சமைக்க கூடிய உணவு?



தக்காளி சாதம், ஆனியன் தோசை .( வெங்காயத்தை முதல்லியே தாளிச்சு வெச்சுக்குவேன் ) சமையல்ல நான் ஸ்பெஷலிஸ்ட்.. அதே போல் ஒரு உணவை அல்லது சாம்பாரை ருசித்துப்பார்க்காமல் வாசம் நுகர்ந்தே அதுல உப்பு , உரைப்பு எல்லாம் சரியா இருக்கா? என்பதை உணர்வதில் திறமை  உண்டு.. எந்த ஹோட்டலுக்குப்போனாலும் உணவில் நிறை இருந்தால் அதை அனைவர் முன்னிலையில் மாஸ்டரை புகழ்ந்தும், குறை இருந்தால் அவரிடம் தனிமையில் அழைத்தும் சொல்வேன்..



7. வைரமுத்து / கண்ணதாசன் - உங்கள் சாய்ஸ் ?


நம்ம காலகட்டத்துக்கு வைரமுத்து ஒரு லெஜண்ட் என்றாலும் கண்ணதாசன் சாதனைகளை மறந்துவிடக்கூடாது.. எதுக்கு பிரிக்கனும்? நான் எல்லாரையும் ரசிப்பேன்.. எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என திறமை எங்கிருந்தாலும் அங்கே ரசிப்பு உண்டு.. வைரமுத்து பாட்டில் என்னை கவர்ந்தது - கண்ணுக்கு மை அழகு , கண்ணதாசன் - பார்த்தேன், சிரித்தேன், பக்கத்தில் அழைத்தேன்



8. நீங்கள் எதனை கண்டு அதிகம் பயப்படுவீர்கள்?


சாலை விபத்துக்கள் தான்.. ஏன்னா மனிதனின்  எதிர்பாராத மரணத்துக்கு சாலை விபத்துக்கள் தான் காரணம். நோய் மூலம் வரும் மரணத்துக்கு மனிதன் பொறுப்பாகிறான்.. குடி, புகை, பெண்கள் சகவாசம் என அவனும் அதற்கான காரணி ஆகிறான், தற்கொலை , கொலைக்கும் மனிதன் ஏதோ ஒரு வகையில் பொறுப்பாகிறான்.. வயோதிகத்தின் காரணமாக மரணம் வந்தால் நோ பிராப்ளம்.. அது இயற்கையின் நியதி.. 
 ஆனால் இந்த தவறுமே செய்யாமல் மற்றவர்கள் அஜாக்கிரதையால் விபத்து நிகழும்போது சம்பந்தமே இல்லாமல் நடக்கும் மரணங்கள் என்னை பாதிக்கின்றன, பயம் கொள்ளச்செய்கின்றன..


9. அரசியலில் நுழையும் எண்ணம்?

 சுத்தமா கிடையாது, இந்த விஷயத்தில் நான் துக்ளக் சோ போல் இருக்க ஆசைப்படறேன்.. மக்களுக்கு அரசியல்வாதிகளின் கறுப்புப்பக்கத்தை அவ்வப்போது அறிமுகம் செய்து வெச்சா போதும்.. ஆனா அவரைப்போல் பி ஜேபி , அதிமுக அனுதாபி அல்ல.




10. தாங்கள் மிகவும் எதிர்ப்பார்த்து ஏமாந்த திரைப்படம்?


ஆபாவானனின் மூங்கில் கோட்டை - வரும் வரும்னாங்க. வராமயே போயிடுச்சு.. ஊமை விழிகள் மெகா ஹிட்டின்  2ம் பாகமாக வந்திருக்க வேண்டியது, ஏதோ சில காரணங்களால் வராம போயிடுச்சு. மற்றபடி எந்த படத்தையும் அதிகமா எதிர்பார்ப்பதில்லை.. ஏன்னா தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் தோல்வியைத்தான் தழுவுகின்றன.. 



 டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை   
டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன்  :)   
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html    
டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html    
டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html  
 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html   டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html   டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html   டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html  
டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html   டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html   டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html   டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/06/12.html   டிஸ்கி -  15 -இதன் 13 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/13.html டிஸ்கி 16 -இதன் 14 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/14.html
ஒளியிலே தெரிவது..........? தேவதையா?????

6 comments:

ராஜி said...

சி.பி - டக் டக் ( duck)னா வாத்து மாதிரி பதில் சொல்லனுமா?
>>
( duck)னா வாத்துன்னு இத்தனை நாள் தெரியாம இருந்துச்சு. தெரிய வச்சதுக்கு நன்றி சிபி சார்.

ராஜி said...

உங்க பேட்டிக்கான எனது கேள்விகள்
1. எனக்கு கோவமே வராது. எஹ்டையும் கூலாவே எடுத்துப்பேன்ன்னு நீங்க ரீல் விட்டு சாரி பதிவுல போட்டு பார்த்திருக்கேன். டென்ஷனாகி கோவப்படாத மனிதனே இல்லை. அப்படி, நீங்க டென்ஷனாகும் விஷயம் எது?

2.முன்னனி நட்சத்திரம் நடிச்ச ஒரு படம் ரிலீஸ் ஆகுது. அன்னிக்குன்னு பார்த்து ஈரோடுல தியேட்டர்லாம் பந்த். என்ன பண்ணுவீங்க?

3. நல்ல பசையுள்ள தயாரிப்பாளர் கிடைச்சு நீங்க படம் டைரக்‌ஷன் பண்ணும் வாய்ப்பு கிடைத்தால் யார் ஹீரோ, ஹீரோயின், இசை,வில்லன்?

4. ஏண்டா இந்த படத்துக்கு போனோம்ன்னு நொந்த அனுபவம் உண்டா?

5. நீங்க படம் பார்க்க போய், தியேட்டர்ல நடந்த காமெடியான நிகழ்ச்சி சொல்லுங்களேன்.

6. 18+ படத்துக்கு போய்,உங்க மரியாதைக்குரியவங்க( டீச்சர், மாமா, சித்தப்பா..., இப்படி) முன்னாடி வழிஞ்ச சம்பவம் எதாவது இருக்கா?
7.

Unknown said...

நீங்க இந்த மொக்கை கேள்வி பதிலை எப்ப நிறுத்துவிங்க......?

இதுவும் கேள்விதான் டக்..டக்...அப்படின்னு சொல்லனும்....

காட்டான் said...

@வீடு சுரேஸ்குமார் ஏன்யா நிறுத்தனும் நல்லாதானே இருக்கு ;-))

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

கேள்வி எண் 8க்கான பதில் அருமை...உண்மையான வரிகளும் கூட

mohan baroda said...

Chess and Carrom - you said they are in the same wavelength - Please explain. There is also one more game which is almost in the same wavelength and also an indoor game in which you must be more interested.