எவ்ளவ் பெரிய அப்பாட்டேக்கரா இருந்தாலும், இண்டெலிஜெண்ட்டா இருந்தாலும் அவன் சரக்கு சங்கரலிங்கமா இருந்தா தேற மாட்டான் அப்டிங்கறதுதான் படத்தோட மெயின் KNOT.. மோகன்லால் மாதிரி ஒரு பெரிய ஹீரோ நடிக்காம சாதா ஆள் அல்லது புது முகம் நடிச்சிருந்தா 10 நாள் கூட ஓடாத படம்.. ஆனா மோகன் லால் நடிச்சதால தாக்குப்பிடிக்குது
ஹீரோ பேங்க் ஆஃபீசர்.. ஆனா ரொட்டீனா ஒரே மாதிரி டெயிலி வேலை செய்யறது அவருக்குப்பிடிக்கலை.. ரிசைன் பண்ணிட்டு வேற ஜாப் தேடறார்..பேங்க் ஆஃபீசரா இருந்தப்போ உலகம் சுற்றும் வாலிபனா இருந்ததால நல்ல நாலெட்ஜ் அவருக்கு..
விஜய் டி வி ல நீயா? நானா? டாக் ஷோ நடக்குதே அதே மாதிரி ஒரு டி வி சேனல்ல வேலைக்கு சேர்றார்.. Show the Spirit இதுதான் புரோகிராமோட டைட்டில்ல் படத்தோட டைட்டில் அதுல இருந்து தான் எடுத்திருக்காங்க.
ஹீரோ அதெல்லாம் போக ஒரு இங்க்லீஷ் நாவலும் எழுதறார். சாரு நிவேதிதா ரசிகர் போல ./. தமிழ்ல , மலையாளத்துல எழுதுனா டப்பு பார்க்க முடியாதே? ஹீரோவுக்கு ஃபேமிலி கிடையாது தனியா தான் இருக்கார். அவர் வீட்ல சாரி பங்களாவுல ஒரு விண்ட்டேஜ் மினி டாஸ்மாக் கலெக்சனே இருக்கு.. செம சரக்கு பார்ட்டி..
இவர் ஓவரா சரக்கு அடிச்சதால அவர் மனைவி டைவர்ஸ் பண்ணிட்டு வேற ஒரு புருசனை தேடிக்கறாங்க.. புருஷன் குடிகாரன்னா ஆளை மாத்துன்னா தமிழ் நாட்ல 97 % ஆட்களுக்கு பொண்டாட்டியே இருக்காது..
இதுல என்ன நம்ப முடியாத விஷயம்னா தன் முன்னாள் மனைவி வேற ஒருவனோட வாழ்றது ஹீரோவை எந்த விதத்திலும் பாதிக்கலை.. மனைவியின் கணவனை நண்பரா தான் நடத்தறார்..
ஹீரோவுக்கும், அவர் மனைவிக்கும் பிறந்த பையனை இந்நாள் கணவர் தான் பார்த்துக்கறார். அந்த பையனுக்கு காது கேட்காது, வாய் பேச வராது..
டாக் ஷோ ல ஒரு அரசியல்வாதியை போட்டு கிழி கிழின்னு கிழிச்சு ஓவர் நைட் ஃபேமஸ் ஆகிடறார் ஹீரோ.. என்னதான் அவர் ஃபேமஸ் ஆனாலும், குடிப்பழக்கம் அவரை மேலே வர விடாம பண்ணுது..
கனிகாவின் ரியல் மேரேஜ் ஃபோட்டோ
ஒரு ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ்.. அங்கே 2 பசங்க.. அவங்க என்ன பண்றாங்கன்னா போற வர்ற லேடீஸை இடிக்கறது. தொடக்கூடாத இடத்துல தொடுவது, படக்கூடாத இடத்துல படறது.. இதை எல்லாம் ஃபோன் கேமரா மூலம் வீடியோ எடுத்து வெச்சு ரசிப்பது.. ( அது என்ன தொடக்கூடாத இடம், படக்கூடாத இடம்னா மேரேஜ் பண்ணிக்காத , அல்லது காதலிக்காத , தனக்கு உரிமை இல்லாத எந்த ஒரு பெண்ணின் எல்லா பாகமும் அதுவே,.. )
அந்த காம்ப்ளெக்ஸ்க்கு ஒரு லேடி விஜயசாந்தி ஐ பி எஸ் மாதிரி போலீஸ் ஆஃபீசர் (லீனா அபிலேஷ்) பர்ச்சேஸ்க்கு வர்றாங்க.. போலீஸ்னு தெரியாம அவன் கை வைக்kக அவனை பிடிச்சு பின்னி பெடல் எடுக்கறாங்க.. அடுத்த நாள் மீடியா ஃபுல்லா அந்த லேடி போலீஸ் பற்றித்தான் பேச்சு..
ஹீரோ அவரை சீஃப் கெஸ்ட்டா கூட்டி வெச்சு பவர் ஸ்டாரை ஓவரா நக்கல் அடிச்சா மாதிரி கேள்விகளால் மடக்கறார்..
ஆனாலும் பின்னர் அவங்க ஃபிரண்ட் ஆகிடறாங்க.. அவங்க வீட்டுக்கு அடிக்கடி வரும் பிளம்ப்பர் ஒருத்தன் செம குடிகாரன்.. தண்ணியைப்போட்டுட்டு சம்சாரத்தை அடி அடினு அடிக்கறான்.. அதை ரகசியமா படம் பிடிச்சு டி வி ல டெலிகாஸ்ட் பண்ணி அவன் குடும்பத்துக்கு உதவறார்.. குடி குடியை கெடுக்கும் என்ர கான்செப்ட்டோட படம் முடியுது..
ஹீரோ மோகன்லால் கலக்கல் நடிப்பு.. டி வி ஷோல ஆக்ரோஷமான புலி மாதிரி ஆர்கியூ பண்ணும்போதும் சரி.. நண்பர்களிடம் சாந்தமா உரையாடும்போதும் சரி பின்னி பெடல் எடுக்கிறார்.. சரக்கு அடிச்சவன் முகம் எப்படி இருக்குமோ அது போல் 2 ம்டங்கு மப்பு காட்டுது அவர் கன்ன தசைகள்.. அப்படிய்யே நிஜ குடிகாரனாவே மாறிட்டார் போல. வெல்டன் ஆக்டிங்க்,,
ஹீரோயின் கனிகா . ஆஹா ... கொழுக் மொழுக்.. அவர் ஆல்வேஸ் ஸ்லீவ்லெஸ் சுடி, நைட்டில வர்றதும், ரம்பாமேனியாவால பாதிக்கப்பட்டவர் போல THIGH ஸ்பெஷலிஸ்ட்டா வர்றதும் செம கிளு கிளு.. பப்பாளி ஜூஸ் சாப்பிட்டே உடம்பை வளர்த்து இருப்பார் போல . தமிழ் சினிமா உலகம் ஃபைவ் ஸ்டார் படத்துக்குப்பிறகு இவரை சரியா உபயோகப்படுத்தாததில் நட்டம் அவருக்கல்ல.. 6 கோடி தமிழர்களுக்கே.. ( விட்ரா விட்ரா.. )
ஷங்கர் ராமகிருஷ்ணன் கனிகாவின் நிகழ்காலக்கணவரா வர்றார்.. பாந்தமான நடிப்பு.. அந்த பையன் நடிப்பில் அசத்துறான்.. சைகை மொழியில் மொழி ஜோதிகா லெவலில் நடிப்பு .. வந்தவரை கன கச்சிதம்..
போலீஸ் ஆஃபீசராக வரும் நடிகையின் நடிப்பும் ஆக்ரோஷம்.. இவர் ஹீரோவுக்கு ஜோடி ஆவார் என்று நினைத்தேன்.. நினைப்பில் வழக்கம் போல் மண்.
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. டி வி ஷோக்கள் 3 காட்சிகள் படத்தில் வருது.. 3 மே படத்தின் உயிர் நாடி. செம சூடு.. முதல்வன் படத்தின் அர்ஜூன், ரகுவரன் நினைவு வந்தாலும் முதல் பேட்டி அதகளம். அதே போல் 2வது பேட்டியும். 3 வது லைவ் டெலிகாஸ்ட் டிடெக்டிவ் ஸ்டோரி போல்..
2. கனிகாவின் பாத்திரப்படைப்பு தமிழுக்கு புதுசு.. கணவர் கண் முன்னால் வேறொரு கணவருடன் வாழ்வது.. அதுவும் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல்..
3. பிளம்பரின் மனைவி கல்பனாவை அவர் குடி போதையில் அடிப்பதை ஹீரோவின் ஆட்கள் படம் எடுப்பது செம நாசூக்கு + காமெடி
4. ஷாப்பிங்க் காம்ப்ளெக்சில் போலீஸ் ஆஃபீசரை கை வைக்க ட்ரை பண்ணும் டீன் ஏஜ் பசங்க மாட்டும் சீன் பரபரப்பான படப்பிடிப்பு
5. பிளம்பர் சரக்கு அடிக்க மிக்சிங்க்கிற்கு தண்ணீர் வீட்டில் இல்லை என்றதும் பாத்ரூமில் உள்ள பக்கெட் தண்ணீரையே எடுக்கும் அளவு குடி வெறியர் என காட்டும் பன்ச்சிங்கான சீன்..
6. பிரச்சார நெடி ஆங்கங்கே அடித்தாலும் டாக்டர் ராம்தாஸே வியக்கும் அளவுக்கு குடிகாரர்களுக்கு எதிரான ஒரு பிரச்சாரப்படமாக எடுத்தது பாராட்டுக்கு உரியது.
7. தீபாவளி அன்று வெடி வெடிக்கப்பயப்படும் சின்னப்பையன் போல ஹீரோ கேஸ் அடுப்பில் லைட்டர் மூலம் பற்ற வைக்க பம்மும் சீன்
8. பெரிய அரசியல் தலைவராக, வில்லனாக பார்த்துப்பழக்கப்பட்ட திலகன் இதில் சாதா தோற்றத்தில் வருவது.. ( சத்ரியன் - மறுபடி நீ ஏசி பன்னீர் செல்வமா வரனும் )
9. பேச முடியாத , காது கேளாத சிறுவனின் அங்க அசைவுகள், முக பாவனைகள் அருமை..
10. ரொம்ப முக்கியமான பிளஸ் படத்துல வர்ற 36 சீன்லயும் 42 ஐ முன்னிலைப்படுத்தி கனிகா டிரஸ் பண்ணிட்டு வருவது ,.. செம கிளு கிளு

இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி... அது ஒண்ணும் தேர்த்திருவிழா கூட்டம் போல ஓவர் ரஷ் உள்ள இடம் அல்ல. அங்கே ஒரு பையன் தெரியாம இடிப்பது போல் மேலே படலாம்.. ஆனா நேருக்கு நேரா மார்பு மேல் கை எல்லாம் போட முடியாது.. அப்படியா பட்டவர்த்தனமாய் ஒரு டீன் ஏஜ் பையன் பப்ளிக்கா செய்வான்?
2. ஹீரோ கலந்து கொள்ளும் டாக் ஷோ லைவ் ஷோ போல காட்டப்படுது.. எல்லாமே ரெக்கார்டு அண்ட் தென் டெலிகேஸ்ட் தான்.. பின்னே எப்படி ஒரு வாரம் ட்ரெய்லர் எல்லாம் போட முடியுது?
3. ஒரு நல்ல மனைவி படிச்ச , நல்ல ஸ்டேட்டஸ் உள்ள பணியில் இருக்கும் கணவனை கொண்டவள் அவனை திருத்தத்தான் பார்ப்பா.. ஒரு பையனும் பிறந்த பின் அப்படி அம்போன்னு விட்டுட்டு போகமாட்டா.. அப்படி ஒண்ணும் ஹீரோ கனிகாவை சித்திரவதை எல்லாம் செய்யலையே?
4. கனிகாவின் புதுக்கணவன் பல சமயங்கள்ல , பல சந்தர்ப்பங்கள்ல மோகன்லாலுடன் தனிமையில் பேசிட்டு இருப்பதை பார்க்கிறான்.. ஆனா பொஸசிவ்னெசே வர்லையே? ஏன்? ரொம்ப நல்லவனா இருந்தாலும் இந்த மேட்டர்ல டவுட் வராது?
5.. மோகன்லால் ஆட்கள் பிலம்ப்பரின் வீட்டை ஏதோ கம்பி நுழைச்சு திறக்கறாங்க.. அது ஓக்கே.. ஆனா உள்ளே போய் மறுபடி ரிட்டர்ன் வந்ததும் பழைய படி அதே கம்பியை யூஸ் பண்ணி பூட்டறாங்களே.. அது சாத்தியமா? சாவி இல்லாம ஒரு பூட்டை திறக்க முடியும், ஆனா சாவி இல்லாம ஒரு பூட்டை பூட்ட முடியாதுன்னு சொல்வாங்களே?

மனம் கவர்ந்த வசனங்கள் ( தோராயமான மொழி பெயர்ப்பு)
1. ஆம்பளைங்கற கர்வத்துல பொம்பளையை நடு ரோட்ல அடிக்கறதால ஒருத்தன் வீரன் ஆகிட முடியாது.. வீட்டுப்பிரச்சனையை 4 சுவத்துக்குள்ள வெச்சு தீர்ப்பவன் தான் ஆம்பளை
2. ஏய்.. பையன் என்னடி சொல்றான்?
சொந்தப்பையன் சொல்றதை புரிஞ்சுக்க பாஷை எதுக்கு?
3. நான் ஒரு நல்ல அப்பாவா?
நோ..
நல்ல கணவனா?
நோ.. ஜஸ்ட் நல்ல ஒர்க்கர் இன் யுவர் ஆஃபீஸ் ஒன்லி..
4. மிஸ்டர்.. போலீசையே எப்பவும் குறை சொல்லாதீங்க.. அக்யூஸ்ட் டிரக்ஸ் யூஸ் பண்ணி இருக்காங்களா? இல்லையா?ன்னு செக் பண்றது ஒரு போலீஸோட வேலை இல்லை.
ஓக்கே.. அப்போ போலீஸோட வேலை தான் என்ன?
5. சார்.. வண்டியை விட்டு இறங்குங்க.. டிரங்கன் டிரைவிங்கான்னு செக் பண்ணனும்
ஓக்கே என் ரத்தத்துல கொலஸ்ட்ரால் இருக்கா?ன்னு செக் பண்னனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன்.. நல்ல வேளை கவர்மெண்ட் செலவுல செக் பண்றேன்..
6. இண்ட்டெலிஜெண்ட்டா ஆள் இருந்தா போதும்.. அது ஆணா? பெண்ணா? என நான் பார்ப்பதே இல்லை..
7. ஒயின் ஈஸ் பாட்டில்டு - கவிதை
8. ஆயுசு முழுக்க எவ்ளவ் சரக்கு உனக்குத்தேவையோ துளி கூட மிச்சம் வைக்காம குடிச்சுக்கோ..
9. குடிகாரனை படம் எடுக்கறதா இருந்தாக்கூட அனுமதி வாங்கிட்டுதான் அதை செய்யனும்.. CAN I TAKE U A PICTURE? னு கேட்கனும்.. புரிஞ்சுதா?
10. சரக்கு என் ரத்தத்துல இரண்டற கலந்துடுச்சு .. இனி அடிச்சாலும், பிடிச்சாலும் ஒண்ணும் மாத்த முடியாது..
சி.பி கமெண்ட் - மோகன்லால் ரசிகர்கள், குடிகாரர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் கண்ணியமாக எடுக்கப்பட்ட படம் தான். ஈரோடு ஸ்ரீலட்சுமியில் படம் பார்த்தேன்

3 comments:
மாமு இன்னா தில்லு இருந்தா மோகன்லால் ரசிகர்கள் குடிகாரன்னு சொல்வ?உன்னோட மஞ்சா சோத்த எடுக்காம நாங்க ஓய மாட்டோம் நீ டார் தான்
என்னோட மலையாள நண்பர் பாத்துட்டு வந்து படம் அட்ட ப்ளாப் என்று புலம்பித் தீர்த்தார். நீங்க நல்லாயிருக்குன்னு சொல்றீங்க...
புருஷன் குடிகாரன்னா ஆளை மாத்துன்னா தமிழ் நாட்ல 97 % ஆட்களுக்கு பொண்டாட்டியே இருக்காது..
தம்பி இதெல்லாம் ரொம்பவே ஓவரு
Post a Comment