ஒரு வித்தியாசமான க்ரைம் சப்ஜெக்ட் தான். ஏ செண்ட்டர் ரசிகர்களை மட்டுமே கவரும் என்றாலும் க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கவேண்டிய ஒரு படம் தான் இது.. சாலை விபத்து என்னும் போர்வையில் ஒரு அரசியல் தலைவர் கொலை செய்யப்படறார்.. அது பற்றிய போலீஸ் விசாரணைகள் தான் படம்.. ஹை கிளாஸ் ஆடியன்ஸ்க்கு புரிஞ்சா போதும்னு டைரக்டர் நினச்சதுதான் திரைக்கதையின் ஒரே மைனஸ்.. என்னால முடிஞ்சவரைக்கும் எளிமைப்படுத்தி கதை சொல்றேன்
ஐ ஏ எஸ் ஆஃபீசர் கிருஷ்ணன் ஐபிபி (IBP)யோட வைஸ் சேர்மேன் ((India Bane Pardes/ International Business Park).. பாரத் நகர்ங்கற இடத்துல ஒரு பிஸ்னெஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் நடக்கப்போகுதுன்னு அங்கே வர்றார்.. நாட்டின் முதல்வர் மற்றும் கட்சி ஆள்ங்க கிட்டே நல்ல பேரும், மதிப்பும் இருக்கறதால அவருக்கு பிரமோஷன் வரப்போற நேரம்..
ஹீரோயின் ஷாலினி ((Kalki Koechlin) ஃபாரீன்ல போய் படிச்சுட்டு வந்த பொண்ணு.. இவர் அப்பா ஒரு ஆர்மி ஆஃபீசர். IBP நிறுவனம் தான் நடத்தப்போகும் பிராஜக்ட்டுக்காக அந்த ஏரியா மக்களை அப்புறப்படுத்தப் பாக்குது.. அதை ஹீரோயின் எதிர்க்கிறார்,, இவர் ஒரு சமூக ஆர்வலரும் கூட .. ஹீரோயினோட முன்னாள் ஆசிரியரும், இந்த ஐ பி பி நிறுவனத்துக்கான எதிர்க்குழு தலைவருமான டாக்டர் அஹமத்(Dr. Ahemad )எதிர்ப்புப்பிரச்சாரத்துக்காக பாரத் நகர் வர்றாரு.
நம்ம ஊர்ல எப்படி அன்னா ஹசாரே ஊழலுக்கெதிரா தனி நபரா போராடுனாரோ, மக்கள் அபிமானத்தை பெற்றாரோ அந்த மாதிரி இவர் தன் பேச்சால் மக்களை எச்சரிக்கைப்படுத்தறார்.. அது பலருக்குப்பிடிக்கலை.. பல மிரட்டல்கள் வருது./. அதை அவர் பொருட்படுத்தலை.. போலீஸ் உதவியுடன், பல அரசியல் தலைவர்கள் சப்போர்ட்டோட அவர் தனது எதிர்ப்புப்பிரச்சாரத்தை பேசி முடிக்கறார்..
பேசி முடிச்சதும் அவர் ஒரு டாட்டா ஏஸ் மாதிரி ஒரு டெம்ப்போ வேனால் நட்ட நடு ரோட்ல மக்கள் பார்க்க பார்க்க அடிச்சுத்தூக்கி வீசப்படுறார்,, டெம்போ டிரைவர் போலீஸால் பிடிக்கபட்டு விசாரனைக்கு உட்படுத்தப்படறார் .. அப்போதான் ஹீரோ அறிமுகம். இவர் ஒரு வீடியோ கிராஃபர். கம் போர்னோ கிராஃபர். அவரும் இந்த கேஸ் துப்பறிதலில் ஹீரோயினுக்கு உதவியா இருக்கார்.. ஹீரோவோட வேலையே ஹீரோயினுக்கு உதவியா இருக்கறதுதானே?
ஐ ஏ எஸ் ஆஃபீசர் கிருஷ்ணன் இந்த கொலைக்கேஸ் கண்டுபிடிக்கும் குழுக்கு தலைவர்.. யார் அவரை கொலை செஞ்சாங்க? அந்த நகர் மக்கள் என்ன ஆனாங்க? ஹீரோயின் என்ன ஆனார்? என்பதெல்லாம் திரையில் காண்க..
படத்தோட ஓப்பங்க் சீன்லயே Prosenjit Chatterjee க்கும் ,ஹீரோயின் ((Kalki Koechlin)க்கும் ஒரு செம டீப் லிப் டூ லிப் சீன் இருக்கு. கமலுக்கே சவால் விடும் சீன் அது.. யோவ்.. ஒரு பெரிய மனிஷன் பண்ற வேலையா இது?ன்னெல்லாம் கேட்கப்படாது.. ஏன்னா இந்தக்காலத்துல பெரிய மனுஷனுங்க தான் சின்னத்தனமான வேலை எல்லாம் செய்யறாங்க.
ஹீரோயின் பற்றி ஒரு சின்ன விமர்சனம்.. பெண்ணியவாதிகள்.மாதர்சங்க மாதாக்கள் என்னை மன்னிக்க .. தமிழனுக்கு 1% கூட பிடிக்காத முக வெட்டு, ஹேர் ஸ்டைல். அவரோட உதடு.. கொங்கு மண்டல பாஷைல சொன்னா ஒப்பிட்டு வாய்.. அது என்ன புது பிட்டு?ன்னு கேட்கறவங்களுக்கு ஒப்புட்டு என்பதே பேச்சு வழக்கில் ஒப்பிட்டு ஆனது .. அது சப்பாத்தி போல் சைஸில் இருக்கும், இனிப்பானது..
அன்னா ஹசாரே மாதிரி விழிப்புணர்வு ஊட்டும் தலைவரா வந்து கிஸ் அடிச்சு கிளுகிளுப்புணர்வு ஊட்டிய சட்டர்ஜி படத்துல மொத்தமே 20 நிமிஷம் தான் வர்றார்.. ஆனாலும் மொத்தக்கதையும் இவரை சுத்தித்தான்
வீடியோகிராஃபரா வர்ற ஹீரோ (Emraan Hashmi) அக்மார்க் தமிழ் ஹீரோ மாதிரி.. அலட்சியம், தெனாவெட்டு, பெண்கள் என்றால் பம்முதல் டைம் கிடைக்கும்போது ஆக்ஷன். குறை சொல்ல முடியாத நடிப்பு.
ஐ ஏ எஸ் ஆஃபீசரா வர்றவர் டிரஸ்சிங்க் சென்ஸ், பாடி லேங்குவேஜ் கன கச்சிதம்.. செம நடிப்பு. படத்துல நடிப்பதற்கு முன் நிறைய ஹோம் ஒர்க் பண்ணி இருப்பார் போல
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. Vassilis Vassilikos -ன் இஜட் (Z) என்னும் நாவல் தான் படத்தின் திரைக்கதை என்பதை டைட்டிலிலேயே கவுரமாக ஒத்துக்கொண்டது.. ஏன்னா இப்போ வர்ற படங்கள் 70% தழுவலா இருந்தாலும் யாரும் அதை ஒத்துக்கறதில்லை
2. சாகப்போற கேரக்டருடன் ஹீரோயின் கில்மா, அப்புறம் ஒரு ஹீரோ அறிமுகம் தமிழுக்கு புதுசு.. ஐ மீன் தமிழனுக்கு புதுசு.
3. திரைக்கதை போர் அடிக்காமல் விறுவிறுப்பாக செல்வது.. ஒரு கொலைக்கேஸை , அதன் விசாரணையை நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத்தந்தது ( மலையாளத்தில் மம்முட்டி நடித்த சி பி ஐ டைரிக்குறிப்பு போல் )
4. படத்தில் வரும் பல கேரக்டர்களுக்கான ஆடை வடிவமைப்பு கன கச்சிதம். அப்புரம் பின்னணி இசை நச்..
5. ஹீரோவுடன் ஹீரோயின் டூயட் இன்ன பிற அபத்தங்கள் ஏதும் செய்யாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வது..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. படத்துல வர்ற அந்த அன்னா ஹசாரே பார்ட்டி ஹீரோயின் கூட கில்மா பண்ணாரா? இல்லையா?ங்கறதை தெளிவா சொல்லலை.. சென்சார் அனுமதி அளிச்ச வரை காட்டி இருக்கலாம்.. அல்லது சிம்பாலிக் ஷாட்டாவது வெச்சிருக்கலாம்.. ஏன்னா தமிழன் காலம் காலமா கில்மா நடந்துச்சா? இல்லையா? என்பதை தெரிஞ்சுக்க 1 கேமரா புலி மான் வேட்டையாடும் படம், 2ஃபேன் ஓடும்போது அதுல சேலை மாட்டுவது, 3.ஏதோ ஒரு பூவில் வண்டு மகரந்தம் உறிஞ்சுவது போல் சிம்பாலிக் ஷாட் பார்த்து பழக்கம் ஆகிடுச்சு.. சும்மா லிப் கிஸ் பண்ணினார்னு மட்டும் தான் காட்டி இருக்கீங்க
2. பொதுவா புகழ் பெற்ற தலைவர்களை கொலை பண்ண திட்டம் போடுறவங்க லாங்க் ஷாட்ல கன் மூலமா சுடுவாங்க அல்லது பாம் வெச்சு போட்டுத்தள்ளுவாங்க.. இப்படி கேனத்தனமா பப்ளிக் பார்க்கறப்ப 400 ரூபா வாடகைக்கு வந்த டெம்போ வேன்ல 45 கிமீ வேகம் மட்டுமே போகக்கூடிய வண்டில வந்து ஆக்சிடெண்ட் பண்ணுவாங்களா?
3. ஹீரோ ஒரு போர்னோகிராஃபர்.. அவர் தன் ரூம்ல கில்மா படம் ஷூட் பண்ணிட்டு இருக்கார்.. அப்போ ஹீரோயின் கதவைத்தட்டறாங்க..கில்மாபடத்துல நடிச்சுட்டு இருக்கற ஹீரோ & ஹீரோயின் டிரஸ் எல்லாம் எடுத்து போடறதுக்குள்ள ஹீரோ கதவைத்திறக்கறார். ஹீரோயின் அவங்களை பார்க்கறாங்க- இந்த சீன் படத்துல எதுக்கு? வழக்கமா ஹீரோயினுக்கு மூடு ஏத்த ஹீரோ இந்த மாதிரி ட்ரிக்ஸ் பண்ணுவாரு.. ஆனா இந்தப்படம் முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன்ல தான் போகுது... எதுக்கு அந்த சீன்? ஆடியன்ஸை உசுப்பேத்தவா?
4. விபத்து நடக்கும் ஷாட் ஒரு டைம் அல்லது 2 டைம் காட்டுனா ஓக்கே.. எதுக்காக படம் பூரா அடிக்கடி அது ரிப்பீட் ஆகுது?
சி.பி கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் கண்ணியமான காட்சி அமைப்புகள் தான்.. கொஞ்சம் பொறுமை வேண்டும்.. படத்தில் வசன ஆதிக்கம் அதிகம்.. ஹிந்தி தெரியாமல் படம் பார்ப்பவர்கள் சலிக்கும் அளவு வசனம் இருந்தாலும் காட்சி அமைப்புகள் காப்பாற்றிடும்.. ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்..
1 comments:
Thanks
Post a Comment