பிரணா அப்டினு ஒரு மீன் இனம்.. நம்ம ஊரு கெளுத்தி மீன் சைஸ்ல தான் இருக்கு.. ஆனா சுறா மீன் மாதிரி கோரைப்பற்கள்.. மனிதனை உயிர் போகும் வரை கடித்துக்கொல்லும் வலிமை படைத்தவை.. இந்த மீன் வகை ஒரு ஏரில இருக்கு... அங்கே செத்துப்போன ஒரு எருமையை மாமிசத்துக்கு ஆசைப்பட்டு 2 பேரு ஏரில இறங்கி அதை அபேஸ் பண்ணப்பார்க்கும்போது அந்த மீன்கள் அவங்க 2 பேரையும் தாக்கி கொன்னுடுது.. இதுதான் படத்தோட ஓப்பனிங்க் ஷாட்..
அப்புறம் 2 லவ் ஜோடிங்க.. ஒரு லவ் ஜோடி சுற்று வட்டாரத்துல யாருமே இல்லைங்கற தைரியத்துல பூனம் பாண்டே போஸ்ல குளிக்கறாங்க.. இன்னும் 10 நிமிஷம் ஆகி இருந்தா சீன் பார்த்திருக்கலாம். அதுக்குள்ள இந்த மீன்க்கு பொறுக்கலை.. கடிச்சிடுது.. சீன் கட்.,ஆள் அவுட்..
இன்னொரு லவ் ஜோடி கடல்ல இறங்கறாங்க.... அவங்களுக்கும் இதே அனுபவம். ஆனா ஹீரோயின் எப்படியோ எஸ் ஆகி ஓடி வந்துடறா,...இந்த மீன்கள் இருக்கற ஏரிக்குப்பக்கத்துல ஒரு வாட்டர் தீம் பார்க் இருக்கு.. பார்க்ல அடுத்த நாள் ஷோ நடக்கப்போகுது... அந்த தீம் பர்க்குக்கு தண்ணீர் அந்த ஏரில இருந்துதான் எடுக்கனும்..
ஹீரோயின் போய் தீம் பார்க் ஓனர்ட்ட எச்சரிக்கை பண்றா.. அவன் கேட்கலை.. கோடிக்கணக்குல செலவு பண்ணி இருக்கேன்.. இதை எல்லாம் நம்ப மாட்டேன்.. எப்பவும் போல் திட்டமிட்டபடி ஷோ நடக்கும்கறான்..
அடுத்த நாள் ஷோ நடக்குது.. மீன் எல்லாம் வந்து கடிக்குது.. ஒரே ரனகளம்.. எல்லாம் அங்கே இங்கே ஓடறாங்க.. எத்தனை பேரு சாகறாங்க? யார் எல்லாம் எஸ் ஆகறாங்க.. மீன் எல்லாம் என்ன ஆச்சு? என்பதே மீதி கதை..
மொத்தப்படமே 83 நிமிஷம் தான்.. படம் பூரா கேர்ள்ஸ் எல்லாம் பே வாட்ச் ல வர்ற மாதிரி டூ பீஸ்.. கண்ணுக்கு குளிர்ச்சி.. மத்தபடி படத்துல சொல்லிக்க பெருசா எதுவும் இல்லை..
மனம் கவர்ந்த வசனங்கள்
1. ஏய்.. உனக்கு எப்படி இவ்ளவ் பணம் கிடைச்சது?
எல்லாம் உன் பாக்கெட் மணி தான்
2. என்னடி? பசங்களோட பழகனும்னாலே பால் குடிக்கத்தெரியாத பூனை போல் பம்மறாளே?
3. யோவ்.. இங்கே தான் யாருமே இல்லையே.. நாம நம்ம டிரஸ்சை கழட்டிப்போட்டுட்டு குளிக்கலாமா?
யா யா கரும்பு தின்னக்கூலியா?நான் ரெடி.. நீ ரெடியா?
ஆனா தேவை இல்லாத வேலை எதுவும் பண்னக்கூடாது.. ஓக்கேவா..
டீல்.. எல்லாமே தேவையான வேலைகள் தான் ஹி ஹி
4. பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே.. மேரேஜ்க்கு முன்னால தப்பு பண்றது எவ்ளவ் பெரிய தப்புன்னு எங்களுக்கும் தெரியும்..ப்ளீஸ் மன்னிச்சுடு ஹி ஹி .. வா வா தப்பு பண்ணலாம்..
5. ஏய்.. தண்ணிக்குள்ளேகுதின்னா ஏன் பம்மறே? பயமா?
பயம் எல்லாம் இல்லை.. எனக்கு நீச்சல் தெரியாது/.
6. நாம பேசித்தீர்க்க வேண்டிய விஷயம் இன்னும் நிறையா இருக்கு.. வா ஹி ஹி
7. எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.. சினிமால தான் நான் ஹீரோ.. நிஜ வாழ்க்கைல நான் ஜீரோ எதுவும் சாகசம் எல்லாம் பண்ண முடியாது.. ( பயணம் படத்துல இதே டயலாக்கை நாங்க கேட்டாச்சு )
8. தண்ணில இருக்கறவங்க எல்லாரும் வெளீல வந்துட்டா அந்த மீனுங்க எல்லாம் எதுவும் செய்ய முடியாது..
ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா? இவ்லவ் கூட்டத்தை எப்படி 5 நிமிஷத்துல வெளீயேத்த முடியும்?
9. என்ன , எனக்கு இப்படி மூச்சு வாங்குது? வயசாகிடுச்சோ?
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. பாத்டப்பில் லேடி தண்ணீரில் உடம்பை ஊறபோட்டு கண்ணை மூடிப்படுத்திருக்கும்போது.. பைப் வழியாக மீன்கள் வந்து ஒவ்வொண்ணா விழுந்து கடிக்கும் சீன்.. அதெப்பிடி பைப்ல இருந்து மீன் வர முடியும்?னு லாஜிக் கேள்வி கேட்கலாம்னு பார்த்தா அது கனவு சீன்.. ஆஹா.. பல்பு
2. படத்துல ரெண்டு மூணு லவ் ஜோடிங்க ஜாலியா இருக்கற மாதிரி சீனுக்கான லீடு வருது.. ஆனா சீன் இல்லை.. எஸ் ஜே சூர்யா பாணில சொன்னா இருக்கு ஆனா இல்லை.. ஆனா செம கிளு கிளு
3. காரில் சீண்டல்களில் இருக்கும் ஜோடி அப்படியே காரோடு ஏரியில் முழுகுவதும் அதைத்தொடர்ந்து மீனிடம் மாட்டிக்கொள்ளும் சீனும் பர பர என பற்றிக்கொள்ளும் சீன்கள்
4. கடைசி 20 நிமிடங்களில் அடல்ட்ஸ் POOL -ல் ( ஸ்விம்மிங்க் பூலில் அடல்ட்ஸ் மட்டும் ஜோடியாக குளிக்க இடம் பிரிச்சு வைப்பது தான் அடல்ட் பூல் )எல்லா கேர்ள்ச்சையும் டூ பீஸ் டிரஸ்சில் ஓட விடுவது..
5. பிரணா ரக மீனின் சுபாவத்தை காட்ட ஒரே தொட்டியில் ரெண்டு அறைகள் உருவாக்கி ஒரு அறையில் மீனுக்கு இரையாக ஒரு தவளையை விட்டு, இன்னொரு அறையில் மீனை விட்டு வேடிக்கை பார்க்க மீன் ஆக்ரோஷத்துடன் இரும்பு தகடை கிழித்து வரும் காட்சி.. பின்னணி இசை மிரட்டல்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஹீரோயினுக்கு பிரணா ரக மீன்களின் அபாயம் பற்றி தெரிய வந்ததும் ஏன் போலீஸ்ல சொல்லலை? அதுக்கான முயற்சியும் பண்ணலை?
2. தீம்ஸ் பார்க்கின் ஓனர் பிரணா ரக மீன் பற்றி நம்பலை.. ஹீரோயின் அவனுக்கு நம்பிக்கை ஏற்படுத்த மீனை காடி இருக்கலாமே? அட்லீஸ்ட் ஏதாவது ஒரு தீனியை தண்ணீல எறிஞ்சா அது சாப்பிட வரும்.. காட்டி இருக்கலாம்..
3. அவ்ளவ் சின்ன மீன் பல ஆட்களை கடிச்சுக்குதறி எலும்புக்கூடு ஆக்குவதெல்லாம் நம்பவே முடியலை.. சுறா மீனால் செய்யக்கூடியவை, எரா மீன் சைஸில் இருக்கறது செய்யுதே?அதுவும் குறுகிய கால அவகாசத்தில்
4. இந்தப்படம் ஒரு திகில் படம்.. ஆனா ரன களத்துலயும் ஒரு கிளுகிளுப்பு வேண்டி இருக்கு.. கவர்ச்சிக்காட்சிகள் வலிய திணிக்கப்பட்ட்டவை.. பெரிசா ரசிக்க முடியல...
5. க்ளைமாக்ஸ்ல ஒரே ஒரு பாம் போட்டு எல்லா மீனையும் அழிப்பது டுபாக்கூர் ஐடியா.. மக்களும் இருக்காங்க.. அவங்க பாதுகாப்பு பற்றி கவலைபட வேணாமா?
6. பொதுவா மீன்கள் சூடு தாங்காது.. தீம் பார்க்கில் உள்ள தண்ணீரை ஹீட்டரின் உதவியோடு சூடாக்கினால் மக்களும் சூடு தாங்காம டக்னு வெளியேறி இருப்பாங்க.. மீன்களும் செத்திருக்கும்..
7. படம் முடியறப்போ ஒரு திருப்தியே வர்லை... க்ளைமாக்ஸை இன்னும் பிரம்மாண்டமா பண்ணி இருந்திருக்கலாம்
சி.பி கமெண்ட் - படத்தை ஈரோடு தேவி அபிராமில பார்த்தேன்.TO C FULL MOVIEW http://www.youtube.com/watch? feature=player_embedded&v= 9zd3wxyoByY
டிஸ்கி - தியேட்டர்ல படம் பார்க்காதீங்க.. ஒரு சீன் கூட இல்லை.. இந்த லிங்க்ல பாருங்க , ஏகப்பட்ட சீன்ஸ் இருக்கு.. நண்பர் பெத்துசாமிக்கு நன்றி!
டிஸ்கி - தியேட்டர்ல படம் பார்க்காதீங்க.. ஒரு சீன் கூட இல்லை.. இந்த லிங்க்ல பாருங்க , ஏகப்பட்ட சீன்ஸ் இருக்கு.. நண்பர் பெத்துசாமிக்கு நன்றி!
5 comments:
சி பி அவர்களே piranha மீன்களைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைத்தேன் ஆனால் உங்களுடைய 3rd lagic குற்றச்சாட்டு, இந்த மீன்களைப் பற்றி உங்களுக்கு சரியாக தெரியாது என்பதை தான் காட்டுகிறது, piranha மீன்களைப் பற்றி youtube ல் பார்க்கவும், குறுகிய நேரத்தில் அதன் வீரியம் உங்களுக்கு புரியும்
விமரிசனம் சூப்பர்! இதுக்கு எதுக்கு 18+னு போட்டீங்கன்னுதான் புரியலை!
விமர்சனம் நகைச்சுவையுடன் நன்றாக இருந்தது :)
இந்த படம் பார்க்க நேத்துதான் ஆரம்பிச்சேன் பதினஞ்சு நிமிஷம் பாத்துட்டு இன்னைக்கு மீதம் பார்க்கணும். நான் பார்க்கிறது இன்டர்நெட்டில் என்பதால் சீனுக்கு உத்திரவாதம். கிளியர் பிரிண்ட் (என்னோட ஒரே கவலை நேத்து துவைச்சி போட்ட கைலி காஞ்சிடுச்சான்னு பார்க்கணும்)
HELLO SIBI SEE THIS FILM IN TORRENT.THEN U CAN WATCH WHAT U WANT SANKAR.M.TVL
Post a Comment