டைட்டிலே இது தி மு க வுக்கு எதிரானதுன்னு சொல்லிடுது.. இந்த கதைக்கு போறதுக்கு முன்னே நீங்க மனதளவில் ஸ்டாலினை அண்ணனாவும், அழகிரியை தம்பியாவும் கற்பனை பண்ணிக்குங்க. ஏன்னா நிஜ வாழ்வில் அண்ணன் அழகிரி, தம்பி ஸ்டாலின் .. ஆனா இந்தக்கதைல கொஞ்சம் மாத்தி இருக்காங்க..
ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு அரசியல் தலைவரை ஒரு கும்பல் ஃபோன்ல மிரட்டுது . உங்களை கொலை பண்ணப்போறோம். உங்க கூட இருக்கறவங்க தான் அதை செய்யப்போறாங்க.. அப்டினு..
அதே மாதிரி அவரை ஒரு ரூம்ல அடைச்சு வெச்சுட்டு பாஸ்க்கு ஃபோனை போடறாங்க.. அந்த பாஸ் வேற யாருமில்லை. அந்த அரசியல் தலைவரோட தம்பி தான். அண்ணனோட அரசியல் செல்வாக்கு பிடிக்காம அவருக்கு பிறகு தான் தான் வாரிசு ஆகனும்கற வெறில இந்த பிளான்.
இப்போ அரசியல்வாதி தன் சாணக்கியத்தனத்தை காட்ட தன்னை கொலை வந்த ஆட்கள்ட்டயே பேரம் பேசறார்.. ஒரு கோடி வாங்குன ஆட்கள் 10 கோடிக்கு ஆசைப்பட்டு பிளேட்டை திருப்பி போட்டுடறாங்க.
அரசியல் தலைவர் தன் தம்பியை போலீஸ்ல மாட்டி விட்டுடறார்.. அவ்ளவ் தான் கதை,.,.
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
படத்தில் பாராட்டுக்குரிய முதல் அம்சம் பின்னணி இசை. மிகச்சிறப்பா வந்திருக்கு.. படத்தோட விறு விறுப்புக்கு அது ரொம்ப உதவியா இருக்கு.
2 வது அம்சம் அண்ணன் , தம்பி கேரக்டர்ல நடிச்சிருக்கற 2 பேரும்.
அண்ணனா வர்றவர் ட்விட்டர் நண்பர் டி பி கேடி பெங்களூர்.. ஆள் நல்ல பாடியா இருக்கறதால அரசியல் தலைவர் கெட்டப் நல்லா சூட் ஆகுது.. அவரோட பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்புகள் எல்லாம் கன கச்சிதம்
தம்பியா வர்றவர் படத்தோட இயக்குநர். சிங்கம் சூர்யா மாதிரி கெட்டப்.. ஆள் நல்ல கலர்.. ஹீரோவா நடிக்க முயற்சி செஞ்சா கோடம்பாக்கத்தில் சான்ஸ் உண்டு.. ஆனா வசனம் பேசும்போது ,மட்டும் பல்லை கடிச்ச மாதிரி பேசறார்.. பல இடங்கள்ல செயற்கை தட்டுது..
மனம் கவர்ந்த வசனங்கள்
1. இவனுங்க பேச்சே இன்னைக்கு சரி இல்லையே? ஒருத்தன் முடிச்சுட்டுத்தான் போவேன்கறான்.. இன்னொருத்தன் இனி பார்ப்போமா? மாட்டோமா? அப்டினு சொல்றான்.. ம் ..
2. ஒரு கல்லுல 3 மாங்கா அடிச்சே எனக்கு பழக்கம்
3. நாளைக்கு தலைப்புச்செய்தி,.. நாளான்னைக்கு தலைவர் பதவி..
4. என்னது? 10 கோடியா? ஒரு கோடிதானே பேசுனது?
மாத்தி மாத்தி பேசறது அரசியல்வாதி நீங்க மட்டும் தானா? நாங்க பண்ணக்கூடாதா?
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. படத்துல வசன உச்சரிப்புல ஒரு நாடகத்தனம் தெரியுது.. எல்லாருமே தயங்கித்தயங்கித்தான் பேசறாங்க..
2. மஞ்சள் பனியன் போட்டு வர்றவர் ஆள் வில்லன் மாதிரி ஜைஜாண்டிக்கா இருந்தாலும் வில்லனுக்குரிய சீரியஸ்னெஸ் மிஸ்சிங்க்,.. போதாததுக்கு ஜோக் எல்லாம் அடிக்கறார். வில்லன்க்கு டார்க் கலர்ல தான் டிரஸ் போட வைக்கனும். காமெடி ஆள் தான் மஞ்சள் டிரஸ் போடனும்
3. கூலிங்க் கிளாஸ் கழட்டறது, அப்புறம் போடறது பஞ்ச் டயலாக் பேசறது எல்லாம் உயிர் பயத்துல இருக்கற ஆள் செய்ய மாட்டார்.. அவருக்கு உயிரை காப்பாத்தனும்கற டென்ஷன் தான் இருக்கும்.. ஸ்டைல் பண்றதுக்கோ, பந்தா காட்டவோ அப்போ தோணாது..
4. சி பி ஐ ஆ ஃபீசர் தம்பி கேரக்டர் கிட்டே பேசிட்டு அப்புறம் இப்போ இன்னொரு ஆஃபீசர் வருவார் பாருங்க , அப்டினு வர வைக்கறதும் நாடகத்தனமே.. ஏன் 2 பேரும் ஒண்ணா வர மாட்டாங்களா?
5. தன் தம்பி தான் தன்னை கொலை பண்ண ஆள் ரெடி பண்ணான் என்பது தெரிந்ததும் அண்ணன் ஷாக் ஆகறார், ஓக்கே அதை ஏன் 3 கட் ஷாட்ல காட்டனும்?முதல் டைம் காட்டறப்போ ஓக்கே, 3 டைமும் காட்டுவது போர்
6. கொலை முயற்சிக்கே கைதா? அப்டினு நக்கலா ஒரு வசனம் வருது. ஏன்? அட்டெம்ப்ட் மர்டர், அட்டெம்ப்ட் ரேப் எல்லா க்ரைம்க்கும் தனி தனி செக்ஷன் இருக்கே..
7. போதை மருந்து கடத்தல் ஐ விட்னசா வர்றவர் கிராமத்து தமிழ்ல பேசறது ரொம்பவே செயற்கை.. அதே போல் அவர் தன் முதலாளியை பார்த்ததுமே பணியாமல் அவரிடம் பேசும்போது தான் மடிச்சுக்கட்டிய லுங்கியை கீழே இறக்கி வசனம் பேசறார்..
8. க்ளைமாக்ஸ் ல பணத்துக்காக கொலை செய்யும் கும்பல்ட்ட அண்ணனா வர்ற டி பி கே டி பேசற செண்ட்டிமெண்ட் டயலாக்கும் தேவை இல்லாதது..
9. ஒரு சீன்ல இன்ஸ்பெக்டர் இளமாறன் அப்டினு கூப்பிடற மாதிரி ஒரு ஷாட் வருது.. அந்த சீன்ல 4 இன்ஸ்பெக்டர் இருந்தா அது ஓக்கே. இருக்கறதே ஒரு இன்ஸ்பெக்டர் தான்.. இன்ஸ்பெக்டர்னு தான் கூப்பிடுவாங்க..
10. பொண்டாட்டி சீரியஸ்னு ஒரே ஒரு பொய் தான் சொன்னேன், உடனே கபிலன் ஊருக்கு ஓடிட்டான்னு ஒரு டயலாக் வருது.. கபிலனோட பொண்டாட்டி சீரியசா இருக்கறது கபிலனுக்கே தெரியாம இவருக்கு எப்படி தெரியும்? அப்படியே இவர் சொன்னாலும் கபிலன் ஊருக்கு ஃபோன் பண்ணி விசாரிக்க மாட்டாரா?
11. கூலிங்க் கிளாஸ்ங்கறது பைக்ல வேகமா போறப்போ, வெய்யில்ல நடக்கறப்போ போடறது.. வீட்ல ஹால்ல தனிமைல இருக்கறப்போக்கூட கூலிங்க் கிளாஸா?
12. கதைல வர்ற அண்ணன்க்கு வயசு மீறி மீறிப்போனா அல்லது மீறாம போனா 40 தான் இருக்கும், ஆனா அவர் அரசியல் வாரிசை அறிவிக்கறாரு.. 89 வயசான கலைஞரே அதை இன்னும் செய்யலை... அவர் உடம்புக்கு எதுவும் ஆகலை.. அப்புறம் என்ன அவசரம்?
இப்போ கீழே உள்ள விபரங்கள் இயக்குநரின் வலைப்பூவில் இருந்து எடுக்கபட்டவை
அரவிந்த்
பலராமன்
சந்தோஷ்
ராஜேஷ்
லலிதா ராம்
மொகம்மெத் கஃபில்
தனசேகர்
சுப்பிரமணியன்
சரவணகுமார்
ஜெய் சங்கர்
கார்த்திக் அருள்
தொழில்நுட்ப வல்லுனர்கள்:
இசை, விளம்பரப்படம் வடிவமைப்பு – சாய் சுதர்ஷன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு – சரவண ராம் குமார்
ஒளிப்படங்கள் – கார்த்திகேயன்
ஒப்பனை – ஹரிஷ்
ஆங்கில அடிவரிகள் – அரவிந்த்
நட்புக்காக: கார்க்கியின் குரல்
1 comments:
nice
Post a Comment