ஹீரோயின் தினத்தூது என்ற பத்திரிக்கை ரிப்போர்ட்டர்.. சேரிப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் பெண் குழந்தைகளை 13 வயதில் இருந்தே பாலியல் தொழிலுக்கு தள்ளி விடுவதாக தகவல் கிடைக்குது..வறுமையின் காரணமாவும், வசதியா வாழ்ந்துடலாம்கற எண்ணமும் தான் பெற்றோரையே அப்படி சிந்திக்க வெச்சிருக்கு.. அவங்களைப்பற்றி ஒரு ஆர்ட்டிகிள் ரெடி பண்ண சேரில டேரா போடுது ஹீரோயின்..
அஸ் யூசுவல் ஹீரோ ஒரு அநாதை.. அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.ஆனாலும் பாருங்க ஒத்தைக்கையாலயே வில்லன்க கூட்டத்தை அடிச்சு விரட்டறார். ஊர்ல இருக்கற பெண் குழந்தைகளை எல்லாம் காப்பாத்தறார்.. கூட்டிக்கொடுக்கும் வில்லன் கூட்டத்தை போலீஸ்க்கு காட்டிக்கொடுக்கிறார்..
ஹீரோ காப்பத்துன ஒரு பொண்ணு படிச்சு பெரிய ஆளா வருது.. மேடைல பரிசி, விருது எல்லாம் வாங்கறப்போ உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் படத்துல வர்ற க்ளைமாக்ஸ் மாதிரி ஹீரோ கையால தான் அந்த விருது வாங்குவேன்னு சொல்றாரு.. அதை பார்த்த கலெக்டர் அந்த பொண்ணு மேல ஆசைப்படறார்.. மேரேஜ் பண்ணிக்கத்தான்..
அந்தப்பொண்ணு ஹீரோ மேல அட்டாச்மெண்ட்டோட இருக்கறதும், அஃபக்ஷனோட பழகறதும் அந்தப்பொண்ணோட அண்ணனுக்குப்பிடிக்கலை.. அந்தப்பொண்ணோட மேரேஜ் ஃபங்க்ஷன்ல ஹீரோ கலந்துக்கக்கூடாதுன்னு ஹீரோவை அடைச்சு வெச்சுடறான்..
இதுக்கு மேல என்ன ஆகுதுங்கறதை தில் உள்ளவங்க படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க... ஏன்னா அதுக்கு மேல பொறுக்க முடியாம நான் எந்திரிச்சு வந்துட்டேன்..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஹீரோ ஒரு மாற்றுத்திறனாளி என்று காட்டுவது எந்த வகையில் கதைக்கு யூஸ் ஆகுது? அவர் அப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன? அனுதாப ஓட்டு வாங்கவா? சுத்தமா எடுபடலை..
2. ஒரு புது முகத்துக்கு படத்தோட ஓப்பனிங்க்ல பாட்டு வைக்கலாமா? அவரே மக்களுக்கு அறிமுகம் ஆகாதவர்.. படம் போட்டு அரை மணி நேரம் கழிச்சாவது வைக்கலாம்
3.ஹீரோயினா படத்தோட முதல் பாதில வர்றவங்க.. சாரி நோ கமெண்ட்ஸ்.. அவங்க அக்காவா வர்றவங்க கூட ஓக்கே.. அவங்களையே ஹீரோயினா போட்டிருக்கலாம்.. படத்துக்கு சம்பந்தமே இல்லாம ஹீரோயினை பாதிலயே கழட்டி விட்டது ஏன்? கால்ஷீட் பிரச்சனையா?
4. ஒரு பெரிய பணக்கார ஆள் ஆட்டோல சேரிக்கு வர்ற மாதிரியும், 13 வயசுப்பொண்ணை ஆட்டோக்குள்லயே ( க்ளோஸ்டு ஸ்க்ரீன் தான் ) கில்மா பண்ணிட்டு போயிடற மாதிரி ஒரு சீன் வெச்சிருக்கீங்க.. அவ்வளவு மோசமான ஏரியாவுல ஒரு பணக்காரன் அந்த மாதிரி செய்வானா? மூடு வருமா? பேடு ஸ்மெல்லும், மோசமான சூழலும் இருக்கற அந்த சேரி ஏரியாவுல எப்படி பணக்காரன் கில்மா பண்றான்? அவ்வளவு காஞ்ச ஆளா?
5. படத்துல முதல் 3 ரீல்ல என்ன கதை சொன்னீங்களோ அதுதான் திரும்ப திரும்ப வருது.. திரைக்கதைன்னு ஒண்ணு இருக்கறதையே மறந்துட்டீங்களா?
6. ஹீரோ காப்பாத்தற பொண்ணு கிட்டத்தட்ட 16 வயசு தான் இருக்கும், ஹீரோ 30 வயசு ஆளு.. அந்தப்பொண்ணு கூச்சமே இல்லாம ஹீரோவை கட்டிக்க ஆசைப்படுதே.. எப்படி? தன்னைக்காப்பாத்துன அவரை அப்பா ஸ்தானத்துல இருக்கறப்போ எப்படி புருஷன் ஸ்தானத்துல பார்க்க முடியும்?
7. மினிஸ்டர் ஹீரோயின் மேல ஆசைப்படறதை, அவரோட தவறான எண்ணத்தை கடைசி வரை ஹீரோயின் ஹீரோ கிட்டே சொல்லவே இல்லையே?
8. இன்ஸ்பெக்டர் ஹீரோவை கைது பண்ண வருவதும் , அவர் ஆற்றிய உரையைக்கேட்டு அவருக்கு கை கொடுத்து பாராட்டி செல்வதும் படு செயற்கை.. அவர் என்ன கவர்மெண்ட் ஆஃபீசரா? எடுப்பார் கைப்புள்ளயா?
9. படம் ரொம்ப ட்ரை (dry) சப்ஜெக்ட்.. எப்போ பாரு சேரி, ரவுடிங்க, ரேப் அப்டினு போர் போர் செம போர்
10. டாக்குமெண்ட்ரியா 20 நிமிடங்கள் எடுக்க வேண்டிய படம் இது.. எந்த விதமான திருப்பு முனைகளோ, திரைக்கதை சுவராஸ்யமோ படத்துல கொஞ்சம் கூட இல்லை..
11. ரெண்டரை மணி நேரம் ஓடும் படத்தில் மனதில் தங்கும்படி ஒரு வசனம் கூட இல்லை.
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 30
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்
சி.பி கமெண்ட் - அய்யய்யோ போயிடாதீங்க, டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க.
இந்த டப்பாவை ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல பார்த்தேன்
1 comments:
விமர்சனம் கூட எழுத முடியாத படம் போல இருக்கு ....
Post a Comment