Saturday, June 16, 2012

மறுபடியும் ஒரு காதல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitAUSb_bg4OW3XrH9_1ea7fNbQIOnxjOikUJrgTktnDTMjnA8saMxfFLHT4BggXPz__wBB2Vr8wTtUOk6ll4qCY3WbH-XsNgdxCvkiIyZZdR3x3fVO9H5J8ARWdgAckNOhp3-6Nk5xh1T_/s1600/marupadiyum-oru-kadhal-movie-posters-01.jpg

ஹீரோ இந்தியாவுல டாக்டர், ஹீரோயின் லண்டன்ல டாக்டர்.. 2 டாக்டர்ஸும் பேஷண்ட்டை கவனிக்காம ரேடியோ மிர்ச்சில, எஃப் எம் ல பாட்டுக்கேட்கறாங்க.. அதுல கேட்கற கேள்விக்கு பதிலை விமர்சனம் மாதிரி எழுதி அனுப்பறாங்க.. என்ன  ஒரு மெடிக்கல் மிராக்கிள் பாருங்க. 2 பேரும் முதல் பரிசுக்கு செலக்ட் ஆகறாங்க.. ஆனானப்பட்ட சன் டி வி யே ஏதாவது போட்டி வெச்சா 500 ரூபா செலவுல கிஷ்கிந்தா கூட்டிட்டு போறாங்க.. ஆனா இவங்க 2 பேரையும் லண்டன்ல ஒரு விழாவுக்கு கூப்பிடறாங்க..

2 பேரும் காதலர் தினம் படத்துல வர்ற மாதிரி மெயில் சேட்டிங்க்ல ஃபிரண்ட்ஸ் ஆகறாங்க.. காதல் கோட்டை மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டது இல்லை.. ஹீரோயின் அப்பா இந்தியா போகச்சொல்றாரு.. இந்த கேன ஹீரோயின் என்ன பண்ணுது.. ஹீரோ அனுப்பின கிரீட்டிங்க்ஸ், லெட்டர்ஸ்ட் எல்லாத்தையும் கிழிச்சுப்போட்டுட்டு அவனைப்பற்றின தகவல் அடங்கின பென் டிரைவை மட்டும் எடுத்துட்டு இந்தியா போகுது..

பில்லா படத்துல வர்ற மாதிரி அந்த பென் டிரைவை ஹீரோயின் தொலைச்சுடுது.. 2 பேரும் சந்திக்க முடியாத சூழல்.. எதேச்சையா ஹீரோ,ஹீரோயின் குடும்பம் 2ம் கோயில்ல சந்திச்சு நட்பாகறாங்க.. சம்பந்தம் பேசி முடிக்கறாங்க.. பெற்றோர்கள் வற்புறுத்தலால் 2 பேரும் மேரேஜ் பண்ணிக்கறாங்க.. ஆனா மற்றபடி கில்மா ஏதும் நடக்கலை.. 2 பேர் மனசிலயும் தங்கள் காதல் பற்றின ஏக்கம்,.,. பரஸ்பரம் காதலிச்ச நபரைத்தான் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்னு 2 பேருக்கும் தெரியலை.. இதுக்கு மேல என்ன ஆகுது என்பதுதான் மிச்ச சொச்ச கதை..

அகத்தியனின் காதல் கோட்டை, காதல் தேவதை, கதிரின் காதலர் தினம் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு கதையை டைரக்டர் ரெடி பண்ணி இருக்காரு.. காதலர்கள் பார்க்கற அளவு இருக்கு .

ஹீரோ அனிருத் ஆள் டீசண்ட்டா தான் இருக்கார்.. இவர் சாதாரணமா இருந்தா காலேஜ் ஸ்டூடண்ட், ஒரு பவர் கிளாஸ் போட்டா டாக்டர், ஒரு சரக்கு கிளாஸ்ட் அடிச்சா லவ் ஃபெயிலியர் ராமானுஜம்.. அவ்லவ் தான்.. ரொம்ப ஈஸி.. எதிர் காலம் உண்டு

ஹீரோயின் ஜோஸ்னா.. பேரே ஏதோ நாய்குட்டி மாதிரி இருந்தாலும் பாப்பா குதிரைக்குட்டி மாதிரி ஜைஜாண்டிக்கா இருக்கு.. பூப்போட்ட பாவாடையை மிடி மாதிரி போட்டுக்கிட்டு வெள்ளைக்கலர் பனியன் போட்டுக்கிட்டு அது ஸ்லோமோஷன்ல ஓடி வர்றப்போ அடடா.. துள்ளுவதோ இளமை.... பாட்டு மட்டும் தான் போடலை.. அழுகைக்காட்சிகள், காதல் காட்சிகளில் கன கச்சிதம் .. மாடர்ன் டிரஸ்ஸில் அசத்தும் அவர் சுமங்கலி பூஜை அன்று அக்மார்க் தமிழ்ப்பொண்ணாக பட்டுச்சேலையில் அசத்துவது அழகு.. கண்ணுக்குள் நிக்குது.

சுமன் இதுல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.. ஹீரோயின் அப்பாவாக அடக்கி வாசித்து இருக்கிறார்.. படத்தில் தனி காமெடி டிராக்காக வடிவேல் காமெடி ஓடுது.. ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் வந்த 17 ஜோக்ஸ்களை எடுத்து கொஞ்சம் பட்டி டிங்கரிங்க் பண்ணுனா காமெடி டிராக் ரெடி.. சில சிரிக்க வைக்குது.. பல கடுப்படிக்குது.. 

 http://kollywoodz.com/wp-content/uploads/2012/06/Marupadiyum-Oru-Kadhal-Movie-Stills04.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ, ஹீரோயின் செல்கஷன் கன கச்சிதம் அவர்களிடம் வேலை வாங்கியது எல்லாம் ரைட்.. ஒரு புது முக ஹீரோயினை எந்த அளவுக்கு எக்ஸ்போஸ் பண்ண வேண்டுமோ அந்த அளவு எக்ஸ்போஸ் பண்ணி யூஸ் பண்ணிக்கிட்டது சபாஷ்.. .

2. சலக்கு சலக்கு சிங்காரி குத்தாட்ட பாட்டு இசை, நடன அமைப்பு செம.. சி செண்ட்டர் ரசிகர்களை எழுந்து ஆடவைக்கும்..

3. படத்தில் வடிவேல் காமெடி ஒட்டாமல் இருந்தாலும் போஸ்டர்களில் , விளம்பரங்களில் மார்க்கெட்டிங்க்கு ரொம்ப யூஸ் ஆகுது..
http://haihoi.com/Channels/cine_gallery/marupadiyum_oru_kadhal_movie_latest_stills_13779_S_170.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1. ஹீரோ மருத்துவத்துறைல சாதனை செஞ்சதுக்கான பாராட்டு விழாவுல ஒரு நாட்டின் ஜனாதிபதி அப்படித்தான் டிராமா ஆர்ட்டிஸ்ட் மாதிரி கையை ஆட்டி ஆட்டி உணர்ச்சிவசப்படு பேசுவாரா?

2. கைதட்டும் ஆடியன்ஸ் ஏன் தலைக்கு மேலே கையை தூக்கி கைதட்டறாங்க? சினிமாவில் மட்டும் தான் அப்படி கிளாப்ஸ் பண்றாங்க.. எல்லா விழாக்கள்லயும் இயல்பா கையை மடுல வெச்சுத்தான் தட்றாங்க..

3. படத்தோட மெயின் KNOT ஹீரோயின் ஹீரோ பற்றின தகவல்களை மறப்பது, அந்த பென் டிரைவை தொலைப்பது.. நான் கேட்கறேன் உணத்தியா 2 பேரும் சேட் பண்ணாங்களே . அந்த மெயில் ஐடிக்கு மெயில் பண்ணி கேட்கலாமே?

4. ஒரு சீன்ல ஹீரோயின் ஃபிரண்ட்ஸ் கிட்டே தன் மெயில் பாஸ்வோர்டை மறந்துட்டதா ரொம்ப வருத்தப்பட்டு சொல்லுது.. ஏன்? பாஸ்வோர்டை மறந்துட்டா அதை ரெக்கவர் பண்ண ஒரு ஆப்ஷன் இருக்கே? அதை க்ளிக் பண்ணி மாத்திக்கலாமே?

5. ரேடியோவுல கேள்வி கேட்டதுக்கு 2 பேரும் வாசகர் கடிதம் மாதிரி எழுதறாங்க.. விமர்சனம்னும் சொல்லலாம்.. ஆனா அதை உங்க கவிதை சூப்பர்னு தொகுப்பாளர் அடிக்கடி சொல்றார். அது என்ன கவிதைப்போட்டியா?

6. ரேடியோ  ஆஃபீஸ்க்கு ஃபோன் போட்டு ஹீரோ அட்ரஸ் கேட்டா கொடுத்துட்டு போறாங்க.. ஏன் பாப்பா பம்முது?

7. காதலிக்கறவங்க கடைசி வரை காதலன் கொடுத்த க்ரீட்டிங்க் கார்டை சண்டை வந்தா தவிர மற்ர படி கிழிச்சு எல்லாம் போட மாட்டாங்க.. அந்த லூஸ் ஹீரோயின் ஏன் கிழிக்கனும்?

8. ஹீரோ ஹீரோயின் ஃபோட்டோவை ஆல்ரெடி பார்த்து இருக்கார்.. ஆனா கண்ணை மட்டும் மறைச்ச வாக்கு போஸ்ல.. ஹீரோயினை நேர்ல சந்திக்கறப்போ “உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?”ன்னு கேட்கறார்.. அதுவே “நீங்க ரேடியோ புரோகிராம்ல வந்த கவிதாயினியா?”ன்னு கேட்டிருந்தா அப்பவே படம் முடிஞ்சிருக்கும்.. . 


http://www.cinepicks.com/tamil/gallery/marupadiyum-oru-kadhal/marupadiyum-oru-kadhal-3113.jpg


9.ஒரு சீன்ல ஹீரோயின் தோழிகள் அட்வைஸ்படி ஹீரோ பேர் உள்ல 182 பேரை ஃபில்டர் பண்ணி நெட் மூலம் ஒரே க்ளிக்ல எஸ் எம் எஸ் அனுப்பற மாதிரி சீன் வருது.... ஆனா வே டூ எஸ் எம் எஸ் உட்பட எல்லா எஸ் எம் எஸ் சேனல்லயும் குரூப் மெசேஜ் ஒரு டைம்ல 25 பேருக்குத்தான் அனுப்ப முடியும்.. அப்புரம் 25 பேருக்கு அனுப்பலாம்.. ஒரே க்ளிக்ல 182 பேருக்கெல்லாம் அனுப்பவே முடியாது

10. ரேடியோ புரோகிராமர்க்கு ஒரு டைம் ஹீரோயின் ஹீரோ பற்றி தகவல் கேட்க 8 டைம் ஃபோன் பண்றாரு.. அவர் எடுக்கலை.. ஓக்கே , என்ன மேட்டர்னு ஒரு எஸ் எம் எஸ் பண்ணி இருக்கலமே?

11. ஹீரோ ஒரு டாக்டர் என்பது ஓக்கே.. ஆனா அவர் ஜனாதிபதிக்கு, அவர் குழந்தைக்கு சிகிச்சை அளிச்சு காப்பாத்தறது, அவர் அவார்டு வாங்கறது மட்டும் படத்துல 3 ரீல் சாப்பிடுது.. காதல் கதைல இந்த ஹீரோ பில்டப் எதுக்கு? அப்படி அவசியம்னா 1 ரீல்ல அதை சுருக்கி இருக்கலாம்..

12.  இந்தக்காலத்துல 5 வருஷம் லவ் பண்ணி அட்டாச்மெண்ட்டா இருக்கறவங்களே ஈசியா பிரியறாங்க.. ஆனா முன்னே பின்னே பார்க்காத ஜஸ்ட் 3 நாள் சேட்டிங்க்ல ஃபிரண்ட்ஸ் ஆகற பெண்ணுக்காக ஹீரோ சரக்கு அடிச்சு நடு ரோட்டில் தேவதாஸ் ஆவது எல்லாம் ஓவரோ ஓவர்.. அதுவும் ஒரு டாக்டர்......

13.. வடிவேல் காமெடி ரிலாக்ஸ்க்காக இருந்தாலும் படத்தோட சீரியஸ்சை அது பாதிக்குது.. உதாரணமா ஹீரோ ஹீரோயின் லவ் எபிசோடு சுவராஸ்யமா போறப்போ டக்னு வடிவேல் காமெடி வருது.. அடுத்த ஷாட்ல லவ்.. ஆடியன்ஸ் பேலன்ஸ் பண்ண ரொம்ப சிரமப்படுவாங்க..

14. ஹீரோ மேல ஒரு தலைக்காதல் வெச்சு போதைல அவன் பேரை சொல்லிக்கிட்டே வேற ஒருத்தனை கிஸ் பண்ற அந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் பாப்பா படத்துக்கு எதுக்கு சமப்ந்தமே இல்லாம..ஹீரோ ராமர்னு காட்டி பில்டப் ஏத்தவா?

15. திருமணத்துக்கு முன் பால் உறவு பற்றி அந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் கேர்ள் கருத்து கேட்பது, பின் அவரே அதே மெடிக்கல் காலேஜ்ல சேருவது இதெல்லாமே  கதைக்கு தேவை இல்லாத காட்சிகள்

http://nikhilscinema.com/wp-content/uploads/2012/06/Marupadiyum-Oru-Kadhal-Movie-Press-Meet-Photos-10.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ஏமாத்துற பொண்ணுங்க இருக்கற வரைக்கும்  எல்லா டாஸ்மாக்கும் எப்பவும் ஃபுல்லாத்தான் இருக்கும்..

2. ப்ரீ மேரிட்டல் செக்ஸ் பற்றி உங்க கருத்து என்ன? 


 அது தப்பே இல்லைங்க.. 

 இது உங்க சொந்தக்கருத்தா? 

 ம்ஹூம், குஷ்பூ சொன்னது .. ( குஷ்பூ  என்ற லைன் சென்சார் கட் )


3. விபச்சாரத்தை தொழிலா அங்கீகரிச்ச நாட்டை விட கற்பு , கலாச்சாரம்னு பேசிட்டு இருக்கற நம்ம நாட்ல தான் எய்ட்ஸ் அதிகமா பரவி இருக்கு..  ஏன்னா அது பற்றிய விழிப்புணர்வு நம்ம கிட்டே இல்லை.. 

4. பிஸ்னெஸ்ல புலியா இருக்கறவங்க கூட செண்ட்டிமெண்ட்ஸ்ல குழந்தையா இருப்பாங்க.. 


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/marupadiyum-oru-kadhal-02/wmarks/marupadiyum-oru-kadhal-0244.jpg


வடிவேல் காமெடி வசனங்கள்


1. டாக்டர். எனக்கு ட்ரீட்மெண்ட் தர்றப்ப ராவா சாப்பிடக்கூடாதுன்னு நீங்க தானே சொன்னீங்க.. அதனால தான் தண்ணி மிக்ஸ் பண்ணி சாப்பிடறேன்.. 

 சண்டாளப்பயலே... ஹாஸ்பிடலை கணநேரத்துல ஒயின்ஷாப் ஆக்கிட்டு பேச்சைப்பாரு.. 


2.. டாக்டர் டாக்டர்.. என் பொண்ணை பாம்பு போட்டுடுச்சு


 அடப்பாவி.. மாப்ளை என்ன பண்ணிட்டு இருந்தார்?


அவ்வ்வ்வ்வ் 


3. டாக்டர். உங்க ட்ரீட்மெண்ட் செம டேஸ்ட்..

 அடிப்பாவி.. பாம்பு உன் உதட்டுல கொத்துனதால உன் உதட்டை உறிஞ்சுனேன்.. அது உனக்கு டேஸ்ட்டா?


4. ஒவ்வொரு கேசையும் டீல் பண்றப்போ எல்லாம்  ஒரு சிக்கல்ல மாட்டிக்கறேனே?


5. மாமா.. பூ வாங்கிக்குடுங்க

 முன்னே பின்னே மேரேஜ் ஆகி இருந்தா இந்த டெக்னிக்கெல்லாம் தெரிஞ்சுருக்கும்.. எனக்கு ஏதாவது கப்பி ஃபிகர் மாட்டும்னு நினைச்சேன்.. ஆனா பப்பி ஃபிகர் மாட்டும்னு எதிர்பார்க்கலை


6. உங்க பர்ஃபார்மென்ஸ் ரொம்ப ஓவர்.. பிணத்தை படுக்க வெச்சு பிச்சை எடுக்கற மாதிரியே இருக்கு


7. யோவ் டாக்டரு.. மரியாதையா என் பொணத்தை திருப்பிக்கொடுத்துடுய்யா././ 


 சொன்னா நம்புங்க மேடம்.. பொணம் எந்திரிச்சு ஓடிடுச்சு


8. டாக்டர்.. பல் பிடுங்க எவ்ளவ்?


 50 ரூபான்னு நினைக்கிறேன்

என்னது? நினைக்கிறீங்களா?


9. அந்த பெனாயிலை எடு..

 என்னது?

 சாரி டெட்டாலை எடு.. 

 அம்மா.. 

 இருக்காங்களா?

 இல்லை..

 அப்புறம் ஏன் அவங்களை கூப்பிடறே.. ?


10. டாக்டர்.. என் நல்ல பல்லை ஏன் பிடுங்குனிங்க?


 சொத்தைப்பல்லை பிடுங்குனதுக்கு நீ கொடுத்த ஃபீஸ்க்கு மீதி சில்லறை இல்லை.. ஹி ஹி 


11.  டேய் டாக்டர்.. 


ஒண்ணு டாக்டர்னு கூப்பிடு, அல்லது டேய்னு கூப்பிடு.. ரெண்டையும் மிக்ஸ் பண்ணி கூப்பிட்டா கன்ஃபியூஸ் ஆகுதில்லை?


12. அல்சர்னு வந்த பேஷண்ட்டை படுக்க வெச்சு ஹல்மேட்டை வயிற்றில் வெச்சு தெச்சுட்டீங்க.. இப்போ நான் என்ன செய்ய?


 ஓஹோ , அதான் தையல் போடறப்போ பிரிஞ்சு பிரிஞ்சு வந்ததா?


13. டேய்.. நான் பேஷண்ட்டை பார்க்க வந்தவன்.. என்னை படுக்க வெச்சு உடம்பு பூரா கீறல் போட்டு எல்லா டெஸ்ட்டையும் எடுத்து உடம்பையே ரணகளம் ஆக்கிட்டீங்களெடா.. 

http://1.bp.blogspot.com/-8pJ_41qrbq0/T8aN2eMmprI/AAAAAAAABIE/AQYsCn3tO9A/s1600/Josna+Latest+Stills+(4).jpg



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


 சி.பி கமெண்ட் - வடிவேல் காமெடி க்ளிப்பிங்ஸ்ஸை சிரிப்பொலியிலும், படத்தை சன் டி வில போடும்போதும் பார்த்துக்கலாம்..


 ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்



http://2.bp.blogspot.com/-FcujuHtYUTo/T8aN3RgYtMI/AAAAAAAABIM/jsPkss9fjZk/s1600/Josna+Latest+Stills+(5).jpg

டிஸ்கி -

முரட்டுக்காளை - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/06/blog-post_2487.html

3 comments:

rajamelaiyur said...

படத்தை விட கடைசியில் உங்க கமென்ட் சூப்பர்

JR Benedict II said...
This comment has been removed by the author.
JR Benedict II said...

எனக்கு பிடித்த டாப் 10 பிளாக்குகள்
http://ideasofharrypotter.blogspot.com/2012/06/10_16.html