கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தில் கதைதான் ஹீரோ என்று அப்படத்தின் நாயகன் ஹேமசந்திரன் கூறினார். சென்னையில் நடைபெற்ற எம்.பி.ஏ. மாணவர்களுக்கான மூவி மார்க்கெட்டிங் பற்றிய இருநாள் பயிலரங்கில் பங்கேற்று மாணவர்களின் கேள்விகளுக்கு ஹேமச்சந்திரன் பதில் அளித்தார்.
`புழல்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஹேமச்சந்திரனுக்கு கிருஷ்ணவேணி பஞ்சாலைதான் கதாநாயகனாக நடிக்கு முதல் படம். அதில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்ட ஹேமசந்திரனிடம் மாணவர்கள் கேட்டத் துடுக்கு கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்....
மாணவர் கேள்வி: எப்படி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க வந்திங்க...
ஹேமச்சந்திரன்: `புழல்` படத்தில் என்னுடன் நடித்த இந்தப் படத்தின் காஸ்டிங் இயக்குநர் சண்முகராஜாதான் `கிருஷ்ணவேணி பஞ்சாலை` படம் குறித்து சொன்னார். அவர்தான் என்னை படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் தனபால் பத்மநாபனிடம் அறிமுகம் செய்தார். அவரை சந்தித்து கதையைக் கேட்டவுடன் இந்தப் படத்தில் நமக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டேன் அவ்வளவு நல்ல கதை. எப்படியாவது இந்தக் கதையில் நடிக்கனும் என்ற ஆசை அதிகமானது.
தனபால் பத்மநாபன் எனக்கு ஓகே என்றார் `பை காட்ஸ் கிரேஸ்" படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல படத்தில் நடித்த திருப்தி ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கதைதான் உண்மையான ஹீரோ, நாங்கள் எல்லாம் அதில் பாத்திரங்கள்தான். இயக்குநரின் திறமைதான் இந்தப் படத்தின் வெற்றி. நல்ல கதையுள்ள இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்ததையே பெருமையாக நினைக்கிறேன்.
மாணவர்: நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள்..
ஹேமச்சந்திரன்: படத்திற்கு என்ற நடிப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. அதில் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் கேரட்டருக்குள் இன்வால்வாக வேண்டும் என்பதற்காக படத்தின் கதையைச் சொல்லியபின் ஒரு வாரம் நேரம் கொடுத்தார் இயக்குநர். சண்முகராஜாவின் நடிப்பு பட்டறையிலும் நிறைவே கற்றுக்கொண்டேன். அதை வைத்து நடித்தேன். சிறப்பாக வந்துள்ளது.
மாணவர்: இயக்குநரின் அணுகுமுறை எப்படி இருந்தது?
ஹேமச்சந்திரன்: மிக அமைதியானவர். தேவைப்படும் போது மட்டுமே பேசுவார். இப்போது மேடையில் அமர்திருப்பது போல் தான் அமைதியாக இருப்பார். படப்பிடிப்பின்போது தொடர்ந்து மில் சத்தத்திற்கு மத்தியில் நடிக்கும் போது கண்களினால் மட்டுமே சரியா என்று கேட்டு நடிப்பேன். தனபால் பத்மநாபன் வெரி வெரி ஜென்டில் மேன்.
மாணவர்: நடிப்பு, வசனம் தப்பாகி இயக்குநரிடம் அடி, திட்டு வாங்கியதுண்டா?
ஹேமச்சந்திரன்: வசனம் சரியாக பேச சொல்வார், வேறு மாதிரி அனுபவம் ஏதும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல மில் சத்தத்தில் கண்களில் நிறை ய பேசிக்கொண்டோம்.
மாணவி: ரொமான்ஸ் சீன் நடிக்கும் போது சங்கடம், கஷ்டம் இருந்ததா?
ஹேமச்சந்திரன்: கஷ்டமாக இருந்தது. டென்ஷனாக இருந்துச்சு, இயக்குநர் கூல் டவுன், டென்ஷன் ஆகாதீங்க என்று கூல் பண்ணுவார்.
மாணவி: காதல் காட்சிகளில் உண்மை காதலர்கள் போல இயல்பாக நடித்துள்ளார்கள் என்று டைரக்டர் சொன்னார், முன் அனுபவம் உண்டா?
ஹேமச்சந்திரன்: பொய் சொல்ல விரும்பவில்லை, முன் அனுபவம் உண்டு, இல்லை என்று சொல்ல முடியாது என்றார் ஹேமச்சந்திரன்.

நன்றி - தெனாலி
தனபால் பத்மநாபன் இயக்கத்தில் வெளிவர உள்ள திரைப்படம் கிருஷ்ணவேணி பஞ்சாலை. இப்படத்தில் கேரள நடிகையான நந்தனா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
கே: இப்படம் குறித்து..?
கிருஷ்ணவேணி பஞ்சாலை தமிழில் எனது முதல் படமாகும். இப்படத்தின் இயக்குனரான தனபால் பத்மநாபன் ரொம்ப யதார்த்தமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்.
கே: இப்படத்தில் உங்களது கேரக்டர் என்ன?
இப்படத்தில் எனது பெயர் பூங்கோதை. எனது தோழிகள் 'பூ' என்று கூப்பிடுவார்கள்.
கே: படத்தின் கதை என்ன?
சொல்லக் கூடாதுன்னு டைரக்டர் சொல்லி இருக்கார். பஞ்சாலையில் பணியாற்றும் மக்களின் யதார்த்தப் பதிவுதான் இப்படம். இதில் ஒரு காதல் கதையும் இருக்கு. இப்படத்தின் ஹீரோவான ஹேமச்சந்திரனுடனான லவ் கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்கு.
கே: இப்படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?
இப்படத்துல மொத்தம் 4 பாடல்கள். அதில் 'உன் கண்கள் கண்ணாடி' பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடலாகும்.
கே: இப்படத்தின் கதை கோவை, உடுமலை பகுதியில் என்பதால் டயலாக் எல்லாம் எப்படி பேசினீங்க?
டயலாக்ஸ் எல்லாம் கோவை ஸ்லாங்குல இருந்துச்சி. என்னால சரியாவே சொல்ல முடியல. ரொம்பவும் கஷ்டப்பட்டுத்தான் டயலாக் பேசினேன். நல்லவேளை நான் டப்பிங் பேசல. அதனால தமிழ் ஆடியன்ஸ் தப்பிச்சாங்க..!
பஞ்சாலைத் தொழிலாளர்களின் சுவாரசியமான உலகத்தைப் பதிவு செய்யும் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ திரைப்படத்தின் இசை 05.01.2012 முதல் விற்பனைக்கு வந்தது. இயக்குனர் மகேந்திரன் அவர்கள் வெளியிட மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
1957 முதல் 1990-கள் வரையிலான கோவை, உடுமலை வட்டார மில் தொழிலாளர்களின் வாழ்க்கையே இத்திரைப்படம். பஞ்சாலைகளை பின்னணியாக வைத்து ஓர் அழகான காதல் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

கேண்டீன் நேர சுவாரசிய பேச்சுகள், அனல் பறக்கும் கேட் கூட்டம், குடும்பங்களாக செல்லும் சுற்றுலா, தொழிற்சாலைக் குடியிருப்புகளில் உருவாகும் நட்பு என்று மற்றவர்களுக்கு வாய்க்காத சுவாரசியமான உலகங்களைக் கொண்டது மில் தொழிலாளர்களின் வாழ்க்கை. இன்றைய சாஃப்ட்வேர் இளைஞர்கள், யுவதிகளின் வாழ்க்கைமுறை எப்படி மற்றவர்களால் ஆர்வத்தோடு பார்க்கப்படுகிறதோ, அப்படி 1970களிலும் 80களிலும் இருந்தது மில் தொழிலாளர்களின் வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் சந்தோஷங்களையும் வலிகளையும் பதிவு செய்யும் படமே ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’.
‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’யின் நாயகனாக ஹேமச்சந்திரனும், நாயகியாக நந்தனாவும் நடிக்கிறார்கள். நந்தனாவிற்கு இது முதல் படம். மில் முதலாளியாக ராஜீவ் கிருஷ்ணா, சூப்பர்வைசராக சண்முகராஜா, யூனியன் தலைவராக எழுத்தாளர் அஜயன் பாலா, அம்மா வேடத்தில் ரேணுகா, மற்றும் பாலாசிங், பூவிதா, ஹேமலதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பாலுமகேந்திராவின் உதவியாளர் சுரேஷ் பார்கவ் ஒளிப்பதிவு செய்ய, ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்கு இசை அமைத்த என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். வைரமுத்து, தாமரை பாடல்களை எழுதியுள்ளனர். படத்தொகுப்பு மு.காசிவிஸ்வநாதன். மின்வெளி மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’யை எழுதி இயக்குகிறார் தனபால் பத்மநாபன். படத்தின் இணை தயாரிப்பு ‘சக்தி மசாலா’ டாக்டர் சாந்தி துரைசாமி மற்றும் ‘மாஃபா’ க.பாண்டியராஜன்.
சுவாரசியமான கதைக்களம், ரசனையான காட்சிப்பதிவுகள், மென்மையான காதல், இயல்பான நகைச்சுவை என்று ரசிகர்களின் இன்றைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இயல்பான திரைப்படங்களை ஆதரிக்கும் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இசை 05.01.2012 அன்று முதல் தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் விற்பனைக்கு உள்ளது.

நன்றி - மாலை மலர், தெனாலி
ரகுநந்தன் முதலில் இசை அமைத்த படம் இது. ஆனால், 'தென்மேற்குப் பருவக் காற்று’ முந்திக்கொண்டு பெயர் வாங்கிவிட்டது. ஹரிஷ் ராகவேந்திரா-சித்தாரா குரல்களில் 'ஆத்தாடி ஒரு பறவை பறக்குதா...’வைக் கேட்கும்போதே மனசு லேசாகிப் பறக்கத் தொடங்கிவிடுகிறது.
ஆல்பத்தின் இளமை ஊற்று தாமரையின் வரிகளில் ராமன் மஹாதேவன், ஸ்ரேயா கோஷல், ரெனினா ரெட்டியின் குரல்களில் ஒலிக்கும் 'உன் கண்கள்...’ பாடல். இதில் ஹிட் காலர் ட்யூன் அந்தஸ்து பெறுவதற்கான அறிகுறிகள் நிறைய தெரிகின்றன. ஆயுத பூஜை சூழலில் தாளம் போடவைக்கும் மெட்டு 'ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி’ பாடல். ஜாஸி கிஃப்ட்டின் உருமிக் குரலில் 'ரோஜா மலையே...’ வரிகளை விழுங்காத வசீகர மெட்டு!
கிருஷ்ணவேணி பஞ்சாலை’ திரைப்படத்தை குடும்பத்தினரோடு கண்டுகளிக்கலாம் என்று ‘யு’ சான்றிதழை வழங்கியிருக்கிறது தணிக்கைக்குழு.
அதேபோல சிறந்த தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் கலாசார ரசனை மிக்க படங்களுக்கு தமிழக அரசு வழங்கும் வரி விலக்கையும் இந்தப்படம் பெற்றிருக்கிறது.
வரி விலக்கிற்காக படம் பார்த்த அரசு அதிகாரிகள் படத்தின் முடிவில் நெகிழ்ச்சியோடு படக்குழுவினரைப் பாராட்டியதோடு இந்தப் படத்தின் தாக்கம் தங்களுக்கு இரண்டு நாட்களுக்காவது இருக்கும் என்று கூறியுள்ளனர்.
அதிகாரிகள் மட்டத்தில் கிடைத்திருக்கும் இந்த விமர்சனம் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படம் குறித்து சினிமா வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய ‘ஆலைக்காரி.. பஞ்சாலைக்காரி..’ பாடலும் தாமரை எழுதிய ‘உன் கண்கள் கண்ணாடி..’ பாடலும் தமிழகத்தின் தலைநகரம் முதல் கடைக்கோடி கிராமம் வரை ஒலிக்கின்றன.
வானொலிகளில் நேயர்களின் விருப்பமான பாடல்களாக இந்த இரண்டு பாடல்களும் இருக்கின்றன.
இன்னொரு பாடலான ‘ஆத்தாடி ஒரு பறவ பறக்குதா..’ தமிழகத்தில் ரசிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கடல்தாண்டி இலங்கையில் டாப் 10 பட்டியலில் ஏற்கனவே வந்துவிட்டது.
சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் வானொலி சேனல்களில் நேயர்கள் விரும்பிக் கேட்கும் பட்டியலில் முன்னணியில் உள்ளது ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ பாடல்கள்.
இந்தப் படத்தின் பாடல்கள் வெறுமே வார்த்தை ஜாலங்களாக இல்லாமல் கதையின் போக்கை உணர்த்தும் விதத்தில் இருப்பதே இதன் தனித்தன்மைக்கு காரணம் என்று பாடல்களைக் கேட்டவர்கள் சொல்லும் அளவுக்கு வரிகள் புரியும் வகையில் இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன்.
சமீபத்தில் கிருஷ்ணவேணி பஞ்சாலை குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புக்காக நிஜமான பஞ்சாலைக்கே சென்றிருந்தனர் படக்குழுவினர்.
அப்போது அவர்களை எதிர்கொண்ட மில் தொழிலாளிகள், ‘எங்கள் படத்தை எப்போது எங்களுக்குக் காட்டப் போகிறீர்கள்..?’ என்று உரிமையோடு கேட்க, சாதாரண வாழ்க்கை வாழும் மில் தொழிலாளிகள் இந்தப் படத்தை தங்கள் வாழ்க்கையைச் சொல்லும் படமாக ஏற்றுக் கொண்டிருப்பதை அறிந்து நெகிழ்ந்து நின்றிருக்கிறார்கள்.

1 comments:
theaterla thaan paakkalai. inge karuthu koodaya pathikkakkoodaathu?
Post a Comment